ரொசெட்டா விண்கலம்

ரொசெட்டா (Rosetta) என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு 2004 மார்ச் 2 இல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்ணுளவி ஆகும். இதனுடன் இணைக்கப்பட்டிருந்த பிலே தரையிறங்கியுடன் ரொசெட்டா 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ (67பி) என்ற வால்வெள்ளியை மிக விரிவாக ஆராய்ந்தது.[5][6] வால்வெள்ளியை நோக்கிய இதன் பயணத்தின் போது, செவ்வாய்க் கோள், மற்றும் 2867 இசுட்டெயின்சு (2008 செப்டம்பர்), 21 லுத்தேசியா (2010 சூலை) ஆகிய சிறுகோள்களை அணுகிச் சென்றது.[7][8][9]

ரொசெட்டா
Rosetta
ரொசெட்டா விண்கலம்
திட்ட வகைவால்வெள்ளியை சுற்றிவந்து தரையிறங்கள்
இயக்குபவர்ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
காஸ்பார் குறியீடு2004-006A
சாட்காட் இல.28169
இணையதளம்www.esa.int/rosetta
திட்டக் காலம்முடிவு: 12 ஆண்டுகள், 6 மாதங்கள், 28 நாட்கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புஆஸ்ட்ரியம்
ஏவல் திணிவுவிண்சுற்றுக்கலன்: 2,900 kg (6,400 lb)
தரையிறங்கி: 100 kg (220 lb)
உலர் நிறைவிண்சுற்றுக்கலன்: 1,230 kg (2,710 lb)
ஏற்புச்சுமை-நிறைவிண்சுற்றுக்கலன்: 165 kg (364 lb)
தரையிறங்கி: 27 kg (60 lb)
பரிமாணங்கள்2.8 × 2.1 × 2 m (9.2 × 6.9 × 6.6 அடி)
திறன்850 வாட்டுகள் (3.4 வாஅ)[1]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்2 மார்ச் 2004, 07:17 ஒசநே
ஏவுகலன்ஆரியான் 5G+ V-158
ஏவலிடம்கயானா வான் மையம்
ஒப்பந்தக்காரர்ஆரியான்ஸ்பேஸ்
திட்ட முடிவு
கழிவு அகற்றம்சுற்றுப்பாதையில் இருந்து விலக்கம்
கடைசித் தொடர்பு30 செப்டம்பர் 2016, 10:39 ஒசநே
தரையிறங்கும் இடம்மா'ட் பிராந்தியம்
செவ்வாய்-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்25 பெப்ரவரி 2007
தூரம்250 கிமீ
2867 இசுட்டெயின்சு-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்5 செப்டம்பர் 2008
தூரம்800 km (500 mi)
21 லுட்டேசியா-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்10 சூலை 2010
தூரம்3,162 km (1,965 mi)
67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்6 ஆகத்து 2014, 09:06 ஒசநே[2]
Transponders
Bandஅலைக்கற்றை எஸ். பாண்ட்
எக்சு பட்டை
பட்டையகலம்7.8 பிட்/செ (S பட்டை) முதல்[3]
91 கிபிட்/செ வரை (X பட்டை) வரை[4]

சூரியனில் இருந்து மிக நீண்டளவு தூரத்தில் இது நிலை கொண்டிருந்தமையால், இதன் சூரியக் கலங்கள் மிகவும் குறைந்தளவு சூரிய ஆற்றலைக் கொண்டிருந்தன. இதனால் விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்னாற்றல் போதாமையாக இருந்ததால் அதனை 31 மாதங்களுக்கு தூக்கத்தில் வைப்பதற்கு அதன் கட்டுப்பாட்டாளர்கள் முடிவெடுத்தனர். 2011 சூன் 8 ஆம் நாள் இவ்விண்கலம் ஆழ்ந்த தூக்கத்துக்கு அனுப்பப்பட்டது[10]. இது மீண்டும் 2014 சனவரி 20 இல் தான் விழித்துக் கொண்டதாகப் பூமிக்குக் குறிப்பை அனுப்பியது.[11] தொடர்ந்து அது வால்வெள்ளியை நோக்கிப் பயணித்தது.[12][13] அடுத்தடுத்த மாதங்களில், 67பி இன் சார்பாக ரொசெட்டாவின் வேகத்தை மட்டுப்ப்படுத்துவதற்காக சில அமுக்கி எரிப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து 2014 ஆகத்து 6 இல் அது 67பி வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.[14]

2014 நவம்பர் 12 இல், இதன் பிலே தரையிறங்கி வெற்றிகரமாக வால்வெள்ளியில் இறங்கியது.[15] ஆனாலும், இதன் மின்கலங்கள் இரண்டு நாட்களில் செயலிழந்தன.[16] 2015 சூன் மற்றும் சூலை மாதங்களில் பிலேயுடனான தொடர்புகள் குறுகிய நேரங்களுக்கு மீள்விக்கப்பட்டன. ஆனாலும், சூரிய ஆற்றல் இழப்புக் காரணமாக, 2016 சூலை 27 இல் தரையிறங்கியுடனான ரொசெட்டாவின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.[17] 2016 செப்டம்பர் 30 இல், ரொசெட்டா விண்கலம் வால்வெள்ளியின் மா'ட் பிராந்தியத்தில் மோதி அதன் திட்டத்தை நிறைவு செய்து கொண்டது.[18][19]

இவ்விண்கலத்திற்கு பண்டைய எகிப்தியத் தூண்களின் ஒன்றான ரொசெட்டாக் கல்லின் நினைவாக ரொசெட்டா எனப் பெயரிடப்பட்டது. தரையிறங்கிக்கு கிரேக்க, எகிப்திய படுகைத் தளக்குறியீடு பொறிக்கப்பட்ட பெலே சதுரக்கூம்பகத்தூணின் நினைவாக பிலே எனப் பெயரிடப்பட்டது.[20][21]

திட்டக் காலக்கோடு

தொகு
2004
2005
  • 4 சூலை – டீப் இம்பாக்ட் விண்கலத்தின் தாக்கியுடனான டெம்பெல் 1 வால்வெள்ளியின் மோதலை அவதானித்தது.[22]
2007
  • 25 பெப்ரவரி – செவ்வாய்க் கோளை அணுகல்[23]
2008
  • 5 செப்டம்பர் – 2867 இசுட்டெயின்சு சிறுகோளை அணுகல். விண்கலம் சிறுகோள் படையை 800 கிமீ தொலைவில் 8.6 கிமீ/செ வேகத்தில் கடந்தது.[24]
2010
  • 16 மார்ச் – பி/2010 ஏ2 என்ற சிறுகோளின் தூசியுடனான வால்பகுதியை அவதானித்தது.[25]
  • 10 சூலை – 21 லுத்தேசியா சிறுகோளை அணுகி அதனைப் படம் பிடித்தது.[26]
2014
 
10கிமீ தூரத்தில் 67பி வால்வெள்ளி
  • 14 சூலை – 67பி வால்வெள்ளியின் சீரற்ற மேற்பரப்பின் படங்களை அனுப்பியது.[27][28]
  • 6 ஆகத்து – ரொசெட்டா 67பி வால்வெள்ளியை 100 கிமீ தொலைவில் அடைந்தது.[29][30][31]
  • 12 நவம்பர் – பிலே 67பி வால்வெள்ளியின் தரையில் இறங்கியது.[15]
2015
  • 14 ஏப்ரல் – வால்வெள்ளியின் கருவில் காந்தப் புலம் எதுவும் இல்லை என அறிவியலாளர்கள் அறிவித்தனர்.[32]
  • 11 ஆகத்து – 2015 சூலை 29 இல் வால்வெள்ளியில் இடம்பெற்ற ஒரு திடீர்வெடிப்பின் படங்கள் வெளியிடப்பட்டன.[33]
  • 28 அக்டோபர் – 67பி வால்வெள்ளியைச் சுற்றிலும் அதிக அளவு மூலக்கூற்று ஆக்சிசன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.[34][35]
2016
  • 2 செப்டம்பர் - பிலே தரையிறங்கியை முதல்தடவையாக ரொசெட்டா படம் பிடித்தது.[36]
  • 30 செப்டம்பர் 2016 - ரொசெட்டா விண்கலம் வால்வெள்ளியின் 425 அடி அகலக் கிடங்கு ஒன்றில் மெதுவாகத் தரையிறங்கி தனது திட்டத்தை நிறைவு செய்து கொண்டது.[18][19][37]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rosetta at a glance – technical data and timeline". DLR. Archived from the original on 8 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 8 January 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "Rosetta timeline: countdown to comet arrival". European Space Agency. 5 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2014.
  3. "No. 2 — Activating Rosetta". European Space Agency. 8 மார்ச் 2004. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "We are working on flight control and science operations for Rosetta, now orbiting comet 67P, and Philae, which landed on the comet surface last week. Ask us Anything! AMA!". Reddit. 20 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2014.
  5. Agle, D. C.; Brown, Dwayne; Bauer, Markus (30 சூன் 2014). "Rosetta's Comet Target 'Releases' Plentiful Water". நாசா. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2014.
  6. Chang, Kenneth (5 ஆகத்து 2014). "Rosetta Spacecraft Set for Unprecedented Close Study of a Comet". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/08/06/science/space/rosetta-spacecraft-set-for-unprecedented-close-study-of-a-comet.html. பார்த்த நாள்: 5 ஆகத்து 2014. 
  7. Bibring, Jean-Pierre; Schwehm, Gerhard (25 பெப்ரவரி 2007). "Stunning view of Rosetta skimming past Mars". European Space Agency. http://www.esa.int/About_Us/ESOC/Stunning_view_of_Rosetta_skimming_past_Mars. பார்த்த நாள்: 21 சனவரி 2014. 
  8. Auster, H. U.; Richter, I.; Glassmeier, K. H.; Berghofer, G.; Carr, C. M.; Motschmann, U. (சூலை 2010). "Magnetic field investigations during Rosetta's 2867 Šteins flyby". Planetary and Space Science 58 (9): 1124–1128. doi:10.1016/j.pss.2010.01.006. Bibcode: 2010P&SS...58.1124A. 
  9. Pätzold, M.; Andert, T. P.; Asmar, S. W.; Anderson, J. D.; Barriot, J.-P. et al. (அக்டோபர் 2011). "Asteroid 21 Lutetia: Low Mass, High Density". Science 334 (6055): 491–492. doi:10.1126/science.1209389. Bibcode: 2011Sci...334..491P. 
  10. "Rosetta comet probe enters hibernation in deep space". ESA. சூன் 8, 2011. http://www.esa.int/esaMI/Rosetta/SEM38RJ4LOG_0.html. பார்த்த நாள்: சூன் 8, 2011. 
  11. இரண்டரை ஆண்டுகளாக உறக்கத்தில் இருந்த 'ரொசெட்டா' விண்கலம் விழித்தெழுந்தது, விக்கிசெய்திகள், சனவரி 23, 2014
  12. Jordans, Frank (20 சனவரி 2014). "Comet-chasing probe sends signal to Earth". Excite News. Associated Press. http://apnews.excite.com/article/20140120/DABEMKSO3.html. பார்த்த நாள்: 20 சனவரி 2014. 
  13. Morin, Monte (20 சனவரி 2014). "Rise and shine Rosetta! Comet-hunting spacecraft gets wake-up call". Los Angeles Times. http://www.latimes.com/science/sciencenow/la-sci-sn-rosetta-comet-probe-20140120,0,7672325.story. பார்த்த நாள்: 21 சனவரி 2014. 
  14. "Rosetta arrives at comet destination". European Space Agency. 6 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2014.
  15. 15.0 15.1 Beatty, Kelly (12 நவம்பர் 2014). "Philae Lands on Its Comet – Three Times!". Sky & Telescope. http://www.skyandtelescope.com/astronomy-news/philae-lands-three-times-111220143/. பார்த்த நாள்: 26 நவம்பர் 2014. 
  16. Beatty, Kelly (15 நவம்பர் 2014). "Philae Wins Race to Return Comet Findings". Sky & Telescope. http://www.skyandtelescope.com/astronomy-news/philae-lander-success-11152014/. பார்த்த நாள்: 2 நவம்பர் 2015. 
  17. Mignone, Claudia (26 சூலை 2016). "Farewell, silent Philae". European Space Agency. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2016.
  18. 18.0 18.1 Aron, Jacob (30 செப்டம்பர் 2016). "Rosetta lands on 67P in grand finale to two year comet mission". New Scientist. https://www.newscientist.com/article/2107585-rosetta-lands-on-67p-in-grand-finale-to-two-year-comet-mission/. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2016. 
  19. 19.0 19.1 Gannon, Megan (30 செப்டம்பர் 2016). "Goodbye, Rosetta! Spacecraft Crash-Lands on Comet in Epic Mission Finale". Space.com. http://www.space.com/34254-rosetta-crash-lands-on-comet-mission-ends.html. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2016. 
  20. Sharp, Tim (15 January 2014). "Rosetta Spacecraft: To Catch a Comet". Space.com. http://www.space.com/24292-rosetta-spacecraft.html. பார்த்த நாள்: 25 சனவரி 2014. 
  21. "Unlocking the secrets of the universe: Rosetta lander named Philae". European Space Agency. 5 பெப்ரவரி 2004. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Unlocking_the_secrets_of_the_universe_Rosetta_lander_named_Philae. பார்த்த நாள்: 25 சனவரி 2014. 
  22. Schwehm, Gerhard (4 சூலை 2005). "Rosetta camera view of Tempel 1 brightness". European Space Agency. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Rosetta_camera_view_of_Tempel_1_brightness. பார்த்த நாள்: 21 சனவரி 2014. 
  23. Schwehm, Gerhard (25 பெப்ரவரி 2007). "Rosetta successfully swings-by Mars – next target: Earth". European Space Agency. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Rosetta_successfully_swings-by_Mars_next_target_Earth. பார்த்த நாள்: 21 சனவரி 2014. 
  24. "Encounter of a different kind: Rosetta observes asteroid at close quarters". European Space Agency. 6 செப்டம்பர் 2008. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Encounter_of_a_different_kind_Rosetta_observes_asteroid_at_close_quarters. பார்த்த நாள்: 29 மே 2009. 
  25. Snodgrass, Colin; Tubiana, Cecilia; Vincent, Jean-Baptiste; Sierks, Holger; Hviid, Stubbe et al. (October 2010). "A collision in 2009 as the origin of the debris trail of asteroid P/2010 A2". Nature 467 (7317): 814–816. doi:10.1038/nature09453. பப்மெட்:20944742. Bibcode: 2010Natur.467..814S. 
  26. Chow, Denise (10 சூலை 2010). "Mysterious Asteroid Unmasked By Space Probe Flyby". Space.com. http://www.space.com/8740-mysterious-asteroid-unmasked-space-probe-flyby.html. பார்த்த நாள்: 10 சூலை 2010. 
  27. "The twofold comet: Comet 67P/Churyumov-Gerasimenko". Astronomy.com. 17 சூலை 2014. http://www.astronomy.com/news/2014/07/the-twofold-comet-comet-67pchuryumov-gerasimenko. பார்த்த நாள்: 18 July 2014. 
  28. Temming, Maria (17 July 2014). "Rosetta's Comet has a Split Personality". Sky & Telescope. http://www.skyandtelescope.com/astronomy-news/rubber-ducky-space-07172014/. பார்த்த நாள்: 18 சூலை 2014. 
  29. ESA Operations (6 ஆகத்து 2014). "Thruster burn complete". Twitter.com. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2014.
  30. Scuka, Daniel (3 சூன் 2014). "The Big Burns – Part 2". European Space Agency. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014.
  31. Rkaina, Sam (6 August 2014). "Rosetta probe: Recap updates after spacecraft successfully reached deep space comet orbit". Daily Mirror. http://www.mirror.co.uk/news/technology-science/science/rosetta-probe-live-updates-spacecraft-3996770. பார்த்த நாள்: 6 August 2014. 
  32. Bauer, Markus (14 ஏப்ரல் 2015). "Rosetta and Philae Find Comet Not Magnetised". European Space Agency. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Rosetta_and_Philae_find_comet_not_magnetised. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2015. 
  33. "PIA19867: Rosetta Comet In Action (Animation)". நாசா. 11 August 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகத்து 2015.
  34. "Abundant molecular oxygen in the coma of comet 67P/Churyumov–Gerasimenko". நேச்சர் 526: 678–681. 29 அக்டோபர் 2015. doi:10.1038/nature15707. 
  35. "Comet gives clues to Earth's beginning". Radio New Zealand. 28 அக்டோபர் 2015. http://www.radionz.co.nz/news/world/288301/comet-gives-clues-to-earth%27s-beginning. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2015. 
  36. Amos, Jonathan (5 செப்டம்பர் 2016). "Philae: Lost comet lander is found". BBC News. http://www.bbc.com/news/science-environment-37276221. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2016. 
  37. Chang, Kenneth (26 செப்டம்பர் 2016). "For Rosetta, a Landing and an Ending on a Comet". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2016/09/27/science/rosetta-spacecraft-comet-mission-end.html. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016. 
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரொசெட்டா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொசெட்டா_விண்கலம்&oldid=3575836" இலிருந்து மீள்விக்கப்பட்டது