மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014

(2014 மேற்கு ஆபிரிக்கா எபோலா திடீர்ப் பரவல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எபோலா தீநுண்ம கொள்ளைநோய் சில மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வருகின்றது. துவக்கத்தில் மார்ச்சு 2014இல் இந்தக் கொள்ளைநோய் கினியில் துவங்கியது.[2] தொடர்ந்து, இத்தீநுண்மம் லைபீரியா, சியேரா லியோனி, நைஜீரியா நாடுகளுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் உயிரிழப்புக்களைக் கொண்டு இந்த திடீர்ப்பரவல் மனித வரலாற்றுக்காலத்திலேயே மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] உலக சுகாதார அமைப்பு (WHO) as of 4 ஆகத்து 2014 அறிக்கைகளின்படி மொத்தம் 1711 ஐயப்படக்கூடிய பாதிப்புகளும் 932 இறப்புகளும் நேர்ந்துள்ளன; இவற்றில் 1070 பாதிப்புகளும் 603 இறப்புகளும் மருத்துவ ஆய்வகங்களால் எபோலாவினால் ஏற்பட்டவையாக உறுதி செய்யப்பட்டவை.[4] மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், ஐக்கிய அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள், ஐரோப்பிய ஆணையம் போன்ற அமைப்புகள் இந்த நோய்ப்பரவலை எதிர்கொள்ள நிதி வழங்கியும் மருத்துவப் பணியாளர்களை அனுப்பியும் உதவி புரிகின்றன. எல்லைகளற்ற மருத்துவர்கள், செஞ்சிலுவை இயக்கம்,[5] மற்றும் சாமரிடன்சு பர்சு போன்ற தொண்டு நிறுவனங்களும் இப்பகுதிகளில் உதவி புரிந்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா தீநுண்மத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக வங்கி ரூ.1,200 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது.[6]இந்நோய் தொற்றினைத் தவிர்க்க ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் நோய்வாய்ப்புள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.[7]இப் பரவலின் காரணமாக மேற்கு ஆப்ரிக்காவில் எதிர்வரும் மாதங்களில் உணவு தானிய அறுவடை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் எனவும் இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகளவு உயரும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு செப்டம்பர் 2014இல் எச்சரித்தது .[8]

மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014
திடீர்ப் பரவலின் நிலப்படம்: 2014 கோடைக்காலம்
நாள்பெப்ரவரி 2014–இன்றுவரை
அமைவிடம்கினி, லைபீரியா, சியேரா லியோனி, நைஜீரியா
உயிர்ச்சேதங்கள்
1013 இறப்புகள் / 1848 பாதிப்புகள் (as of 9 ஆகத்து 2014)[1]

நோய்ப் பரவலின் காலக்கோடு

தொகு

கீழே தரப்பட்டுள்ள காலக்கோட்டில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளும்[9] உலக சுகாதார அமைப்பின் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1] எபோலாவினால் ஏற்பட்டவை என உறுதி செய்யப்படாத ஐயுறும் பாதிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இங்கு தரப்பட்டவைத் தவிர, ஆகத்து 1 அன்று மொராக்கோவில் லைபீரியக் குடிமகன் ஒருவர் இறந்துள்ளார்;[10] ஆகத்து 5இல் எசுப்பானிய பாதிரி ஒருவர் இறந்துள்ளார்.[11]

 
மொத்த பாதிப்புகள்/இறப்புக்களின் வளர்முகம்.
அறிக்கை நாள் மொத்தம் கினி லைபீரியா சியெரா லியோன் நைஜிரியா
பாதிப்புகள் இறப்புகள் பாதிப்புகள் இறப்புகள் பாதிப்புகள் இறப்புகள் பாதிப்புகள் இறப்புகள் பாதிப்புகள் இறப்புகள்
4 ஆக 2014 1711 932 495 363 516 282 691 286 9 1
1 ஆக 2014 1603 887 485 358 468 255 646 273 4 1
30 சூலை 2014 1440 826 472 346 391 227 574 252 3 1
27 சூலை 2014 1323 729 460 339 329 156 533 233 1 1
23 சூலை 2014 1201 672 427 319 249 129 525 224
20 சூலை 2014 1093 660 415 314 224 127 454 219
18 சூலை 2014 1048 632 410 310 196 116 442 206
15 சூலை 2014 964 603 406 304 172 105 386 194
10 சூலை 2014 888 539 409 309 142 88 337 142
8 சூலை 2014 844 518 408 307 131 84 305 127
2 சூலை 2014 759 467 413 303 107 65 239 99
24 சூன் 2014 599 338 390 270 51 34 158 34
18 சூன் 2014 528 337 398 264 33 24 97 49
10 சூன் 2014 474 252 372 236 13 9 89 7
5 சூன் 2014 438 231 344 215 13 9 81 7
2 சூன் 2014 354 208 291 193 13 9 50 6
27 சூன் 2014 309 200 281 186 12 9 16 5
23 சூன் 2014 270 181 258 174 12 9
14 மே 2014 245 164 233 157 12 9
5 மே 2014 243 162 231 155 12 9
30 ஏப் 2014 233 153 221 146 12 9
23 ஏப் 2014 220 143 208 136 12 9
21 ஏப் 2014 215 136 203 129 12 9
17 ஏப் 2014 209 129 197 122 12 9
10 ஏப் 2014 169 108 157 101 12 9
7 ஏப் 2014 163 102 151 95 12 7
2 ஏப் 2014 135 88 127 83 8 5
1 ஏப் 2014 130 82 122 80 8 2
31 மார் 2014 114 70 112 70 2 0
27 மார் 2014 103 66 103 66
26 மார் 2014 86 60 86 60
25 மார் 2014 86 59 86 59

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Disease Outbreak News". 18 July 2014 இம் மூலத்தில் இருந்து 24 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150424072105/http://www.afro.who.int/en/clusters-a-programmes/dpc/epidemic-a-pandemic-alert-and-response/outbreak-news.html. 
  2. Roy-Macaulay, Clarence (31 July 2014). "Ebola Crisis Triggers Health Emergency". Drug Discov. Dev.. Associated Press (Highlands Ranch, Colorado, United States: ஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்)). http://www.dddmag.com/news/2014/07/ebola-crisis-triggers-health-emergency. பார்த்த நாள்: 3 August 2014. 
  3. "Chronology of Ebola Hemorrhagic Fever Outbreaks". Centers for Disease Control and Prevention. 24 June 2014. பார்க்கப்பட்ட நாள் 25 June 2014.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-08. பார்க்கப்பட்ட நாள் 2014-08-07.
  5. Nossiter, Adam (28 July 2014). "Fear of Ebola Breeds a Terror of Physicians". The New York Times. http://www.nytimes.com/2014/07/28/world/africa/ebola-epidemic-west-africa-guinea.html. பார்த்த நாள்: 29 July 2014. 
  6. "எபோலா வைரஸை கட்டுப்படுத்த உலக வங்கி ரூ.1200 கோடி நிதி". தி இந்து - தமிழ். ஆகத்து 6, 2014. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2014.
  7. "எபோலா நோய் பாதித்த பகுதிகளுக்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் : சுகாதாரத்துறை அமைச்சர்". ஒன் இந்தியா. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2014.
  8. 7 (3 செப்டம்பர் 2014). "உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் எபோலா:ஐ.நா எச்சரிக்கை". தீக்கதிர் தமிழ் நாளிதழ். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2014. {{cite web}}: |author= has numeric name (help); Check date values in: |accessdate= and |date= (help)
  9. "Outbreak of Ebola in Guinea and Liberia". Centers for Disease Control and Prevention.
  10. Liberian dies in Morocco of Ebola - Internal Affairs Minister discloses பரணிடப்பட்டது 2014-08-05 at the வந்தவழி இயந்திரம், Heritage, n.d. Accessed 2014-08-02
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-07. பார்க்கப்பட்ட நாள் 2014-08-07.

வெளி இணைப்புகள்

தொகு