எலன் ஜான்சன் சர்லீஃப்
எலன் ஜான்சன் சர்லீஃப் (Ellen Johnson Sirleaf, பிறப்பு: 29 அக்டோபர் 1938) லைபீரிய அரசியல்வாதியும் லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவராக 2006 முதல் 2018ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் ஆவார். இவரே ஆப்பிரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசத்தலைவர் ஆவார்.
எலன் ஜான்சன் சர்லீஃப் | |
---|---|
லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் 16 சனவரி 2006 – 22 ஜனவரி 2018 | |
துணை அதிபர் | ஜோசஃப் போகாய் |
முன்னையவர் | குயூடெ பிரியண்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 29, 1938 மொன்ரோவியா, லைபீரியா |
அரசியல் கட்சி | ஒற்றுமைக் கட்சி |
முன்னாள் கல்லூரி | கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்) விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்) |
தொழில் | பொருளியலாளர் வர்த்தகர் செயல்முனைப்பாளர் |
இவர் 1979ஆம் ஆண்டு முதல் 1980 வரை நிதி அமைச்சராகப் பணிபுரிந்தவர். இராணுவப் புரட்சியை அடுத்து லைபீரியாவை விட்டு வெளியேறினார். வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு தேர்தல்களில் இரண்டாவதாக வந்தார். 2005ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சனவரி 16, 2006இல் ஆபிரிக்காவின் முதலாவதும் மற்றும் இன்றுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் லேமா குபோவீ மற்றும் தவக்குல் கர்மானுடன் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.[1]
12 செப்டம்பர் 2013 அன்று அமைதிக்கான "இந்திரா காந்தி அமைதிப் பரிசினை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முக்கர்ஜி இவருக்கு வழங்கினார்.
டிசம்பர் 2021 இல், எலன் சர்லீஃப்பின் மகன்களில் ஒருவரான ஜேம்ஸ் சர்லீஃப் லைபீரியாவில் உள்ள அவரது இல்லத்தில் அறியப்படாத சூழ்நிலையில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Nobel Peace Prize 2011 - Press Release". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.
வெளியிணைப்புகள்
தொகு- Liberia Executive Mansion official government website
- Truth and Reconciliation Commission of Liberia பரணிடப்பட்டது 2009-07-29 at the வந்தவழி இயந்திரம் includes final report
- [1] "Sirleaf an example for African women: Pranab Mukherjee"13.09.2013
- மேடைப்பேச்சுக்கள்
- Address to US Congress in Joint Session 15 March 2006 TXT[தொடர்பிழந்த இணைப்பு] PDF[தொடர்பிழந்த இணைப்பு]
- Sirleaf Speaks at U.S. Institute of Peace பரணிடப்பட்டது 2006-03-21 at the வந்தவழி இயந்திரம் 21 March 2006 (audio archive available)
- Liberian President Speaks to Georgetown Community பரணிடப்பட்டது 2007-01-17 at the வந்தவழி இயந்திரம் 17 October 2006
- அறிமுகங்களும் நேர்காணல்களும்
- Profile: Liberia's 'Iron Lady' on BBC News Online, 23 November 2005
- Iron Ladies of Liberia, Independent Lens on PBS, 2007
- Follow the Leader பரணிடப்பட்டது 2011-10-04 at the வந்தவழி இயந்திரம், interview with Ellen Johnson Sirleaf by the International Museum of Women, April 2008
- The 'Remarkable Life' Of Liberia's 'Iron Lady', Dave Davies, interview on Fresh Air, April 2009
- Top 100 Women in Politics: Ellen Johnson-Sirleaf, Ermine Saner, தி கார்டியன், 8 March 2011