போகோ அராம் (Boko Haram, "மேற்கத்திய கல்வியே ஒரு பாவச்செயல்" எனப் பொருளாகும்[3]) என்ற அமைப்பு நைஜீரியா முழுமையும் சாரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று போராடும் ஓர் நைஜீரிய இசுலாமியக் குழுவினர் ஆகும்.[4] இந்தக் குழுவினருக்கு தற்போது எவ்வித தலைமையும் ஒழுங்கமைப்பும் இல்லை.[5] இந்த அமைப்பின் அலுவல்முறையான பெயர் ஜமாது அலிஸ் சுன்னா லிட்டாவதி வல்-ஜிகாத். இது அராபிய மொழியில் "நபிகள் நாயகத்தின் உரைகளையும் ஜிகாத்தையும் பரப்பிட அர்ப்பணித்தவர்கள்" எனப் பொருளாகும்[6] மேலும் இவ்வமைப்பு இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகத் துணைநிற்போம் என அறிவித்துள்ளது.[7]

போகோ ஹராம்
Boko Haram
(ஜமாது அலிஸ் சுன்னா லிட்டாவதி வல்-ஜிகாத்)
{{{war}}}
இயங்கிய காலம் 2002-
கொள்கை இசுலாமியம்
தலைவர்கள் முகமது யூசஃப்  
மல்லம் சன்னி உமரு[1][2]

அபு தர்தா
அபு சையது - பொதுத்தொடர்பாளர்[2]

தலைமையகம் கனம்மா, நைஜீரியா
செயற்பாட்டுப்
பகுதி
வட நைஜீரியா
Strength 9000
எதிராளிகள் நைஜீரிய அரசு
சண்டைகள்/போர்கள் நைஜீரியாவின் இன வன்முறைகள்
இஸ்லாமியச் சட்ட முறைமையை செயல்படுத்தும் நைஜீரிய மாநிலங்களைக் குறிக்கும் நிலப்படம்

தாக்குதல்கள்

தொகு
  • 2009 முதல் இது நைஜீரியாவில் இன வன்முறையை கையாளும் அமைப்பாக பன்னாட்டளவில் அறியப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் "கூடிய வன்முறை மற்றும் மதிநுட்பமிக்க தாக்குதல்களுக்கு" பொறுப்பானதாகவும் நவம்பர் 6,2011 வரை குறைந்தது 327 நபர்கள் கொல்லப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் அறிவிக்கின்றன.[8]
  • இந்த அமைப்பின் தீவிரவாதிகள் வடகிழக்கு நைஜீரியாவின் மாய்டுகுரி (Maiduguri) நகரின் அருகேயுள்ள கிராமத்தில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தியதி பொதுமக்கள் 45 பேரை ஒரே இடத்தில் கூடச்செய்து படுகொலை செய்துள்ளனர்.[9] 2014 ஆம் ஆண்டின் ஜூன் மாத முதல் வாரத்தில் மட்டும் 200 பொது மக்களைக் கொன்றுள்ளனர்.[9]
  • நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தாக்குதல் நடத்தி 24 பேரைக் கொன்றனர்.[10]

கடத்தல்

தொகு
  • ஆங்கில பள்ளிக்கூடத்தில் தங்கிப் படிக்கும் 223 நைஜீரிய இக்போ பழங்குடி வளர்இளம் பருவ மாணவிகளை, போக ஹராம் மத அடிப்படைவாத தீவிரவாதிகள் 14-04-2014-இல் கடத்தி சென்று விட்டனர். இதுவரை கடத்தப்பட்ட மாணவிகளைப் பற்றிய செய்திகள் எதுவும் கிட்டவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் நைஜீயாவின் அன்னடை நாடுகள் கடத்தப்பட்ட மாணவிகளை தேடி வருகின்றனர்.[11].[12]
  • 10 ஜூன் 2014 அன்று மீண்டும் 20 நைஜீரியப் பெண்களை இவ்வமைப்பினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.[13][14]
  • வடக்கு நைஜீரியாவில் 40 சிறார்களை இவ்வமைப்பு கடத்திச் சென்றது.[15]
  • பெண்களை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்தல்.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. allafrica.com
  2. 2.0 2.1 The Abuja Bomber | The News Nigeria
  3. Boko Haram is battle for 2015, says Chukwumerije பரணிடப்பட்டது 2012-01-01 at the வந்தவழி இயந்திரம் By Ogbonnaya Obinna . The Nation . 29/09/2011
  4. allAfrica.com: Nigeria: We Are Responsible for Borno Killings, Says Boko Haram
  5. "Terrorism in Nigeria: A dangerous new level". The Economist. 2011-09-03. http://www.economist.com/node/21528307. பார்த்த நாள்: 2011-09-07. 
  6. "Nigeria policemen in court trial for Boko Haram killing". BBC News. 2011-07-13. http://www.bbc.co.uk/news/world-africa-14136185. 
  7. "ஐஎஸ் அமைப்புக்கு போகோஹாரம் ஆதரவு". 'தி இந்து' தமிழ் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. GAMBRELL, JON (2011-11-5). "Nigeria: Boko Haram Suicide Attack Killed Dozens". Huff Post World. http://www.huffingtonpost.com/2011/11/05/nigeria-boko-haram-suicide-attack_n_1077595.html. பார்த்த நாள்: 2011-11-05. 
  9. 9.0 9.1 http://www.bbc.com/news/world-africa-27716898
  10. "நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி, பலர் படுகாயம்". மாலைமலர் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. http://www.dinamani.com/latest_news/2014/05/15/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5/article2225992.ece
  12. http://www.bbc.co.uk/tamil/global/2014/05/140512_nigeriabokoharam.shtml
  13. http://www.bbc.com/news/world-africa-27774239
  14. http://www.dawn.com/news/1111790/nigeria-gunmen-kidnap-20-women-in-northeast
  15. http://www.dawn.com/news/1154851/boko-haram-seizes-40-boys-men-in-northern-nigeria-witnesses
  16. http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150123_bokoharam_rape

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகோ_அராம்&oldid=3252713" இலிருந்து மீள்விக்கப்பட்டது