நுவான் சியா

நுவான் சியா (Nuon Chea), சூலை 7, 1926)[3] – 4 ஆகத்து 2019)[4] சில நேரங்களில் லாங் புன்ருயாட் (Long Bunruot), கம்போடியாவின் முன்னாள் பொதுவுடமை அரசியல்வாதியும் கெமர் ரூச்சின் முன்னாள் முதன்மை கருத்தாளரும் ஆவார். 1975-1979 ஆண்டுக்காலத்தில் கம்போடியப் படுகொலை நடந்த போல் போட் ஆட்சியில் இரண்டாமிடத்தில் இருந்த இவர் பொதுவாக "உடன்பிறப்பு இரண்டு" என்று அறியப்பட்டார். நுவான் சியா இந்தப் படுகொலையில் பங்குபெற்றதற்காக ஐக்கிய நாடுகள் நடத்தும் குற்றவிசாரணையை எதிர்கொண்டார்.[5] 2014 ஆகத்து 7 இல் இவருக்கும், இவருடன் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்த கியூ சாம்பான் என்பவருக்கும் ஐக்கிய நாடுகள் நீதிமன்றம் ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.[6]

நுவான் சியா
2013 இல் நுவான் சியா
கம்பூச்சியா மக்கள் பேரவையின்
அமர்வுக்குழுத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 13, 1976 – சனவரி 7, 1979
துணை கம்பூச்சியா மக்கள் பேரவையின் அமர்வுக்குழுத் துணைத்தலைவர் இங்குவான் காங்
சனநாயக கம்பூச்சியாவின் பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 27, 1976 – அக்டோபர் 25, 1976
முன்னவர் போல் போட்
பின்வந்தவர் போல் போட்
தனிநபர் தகவல்
பிறப்பு (1926-07-27)27 சூலை 1926
பட்டம்பங், பிரெஞ்சு இந்தோசீனா
இறப்பு 4 ஆகத்து 2019(2019-08-04) (அகவை 93)
நோம் பென், கம்போடியா
அரசியல் கட்சி கம்பூச்சியா பொதுவுடமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லை கிம்செங்[1]
பிள்ளைகள் நுவான் சே,[2] மேலும் 2 பிள்ளைகள்[1]

தொடர்புடைய திரைப்படம் தொகு

  • எனிமீஸ் ஆஃப் தி பீப்பிள்

மேற்கோள்கள் தொகு

  • Lynch, David J. (March 21, 2005). "Cambodians hope justice will close dark chapter". USA Today, p. 14A - 15A
  • Watkin, Huw (December 30, 1998). "Guerillas 'sorry' for genocide". The Australian, p. 8

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவான்_சியா&oldid=3359773" இருந்து மீள்விக்கப்பட்டது