ஜூன் 2007
ஜூன் | ||||||
தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
ஜூன் 2007 2007 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஜூன் 17 இல் வைகாசி மாதம் முடிவடைகிறது. ஜூன் 18இல் ஆனி மாதம் ஆரம்பமாகிறது.
சிறப்பு நாட்கள்
தொகு- ஜூன் 2 - திருஞான சம்பந்தர் குருபூசை
- ஜூன் 2 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூசை
- ஜூன் 4 - சங்கடகர சதுர்த்தி
- ஜூன் 5 - அரசியலமைப்பு நாள் (டென்மார்க்)
- ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் நாள் (ஐக்கிய நாடுகள் அவை)
- ஜூன் 12 - கழற்சிங்க நாயனார் குருபூசை
- ஜூன் 18 - சதுர்த்தி நோன்பு
- ஜூன் 22 - ஆனி உத்தரம்
நிகழ்வுகள்
தொகு- ஜூன் 1 - அம்பாறையில் இருந்து பொத்துவில் பகுதிக்குச் சென்ற இலங்கை இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் இரு முச்சக்கர வாகனங்கள் பதுங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (புதினம்) பரணிடப்பட்டது 2007-06-03 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 2 - வவுனியா பம்பைமடுவில் இராணுவத்தினரின் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஆயுதக்கிடங்கு ஒன்று வெடித்துச் சிதறியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். (தமிழ்நெட்), (சண்டே டைம்ஸ்) பதிவு பரணிடப்பட்டது 2007-06-06 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 2 - இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் குர்ஜார் இன மக்கள் தம்மை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக்கோரியதை அடுத்து அவர்களுக்கும் "மீனா" இனத்தவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரங்களில் பலர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளனர். (தினமலர்) பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 3 - வவுனியா பம்பைமடு இராணுவ பீரங்கி தளத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தி, ஆயுதத் தளபாடங்களையும் இராணுவ கவச வாகனங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகப் புலிகள் கூறியுள்ளனர். (பிபிசி)
- ஜூன் 3 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் இரத்தினபுரியில் மீட்கப்பட்டன. (தமிழ்நெட்)
- ஜூன் 3 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.(ஏபிசி)
- ஜூன் 5 - மெல்பேர்ணுக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்து ஒன்று கெராங்க் என்னுமிடத்தில் பார ஊர்தி ஒன்றுடன் மோதியதில் 8 பேர் பலியாயினர். 50 பேர்களுக்கு மேல் காயமடைந்தனர். (தி ஏஜ்)
- ஜூன் 7 - கொழும்பு, வெள்ளவத்தையில் விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர். (பிபிசி)
- ஜூன் 8 - புத்தளம், வென்னப்புவவில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (தமிழ்நெட்)
- ஜூன் 8 - ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் பலியாயினர். (ஏபிசி)
- ஜூன் 8 - அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது. (பிபிசி)
- ஜூன் 10 - ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கார்சாய் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார். (ஏபீ) பரணிடப்பட்டது 2007-06-12 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 11 - வங்காள தேசத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் 118 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்) பரணிடப்பட்டது 2007-06-24 at the வந்தவழி இயந்திரம், (தினமலர்) பரணிடப்பட்டது 2007-06-14 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 11 - தெற்கு சீனாவில் வெள்ளம் காரணமாக 66 பேர் பலியாயினர். 600,000 பேர் வீடுகளை இழந்தனர். (பிபிசி)
- ஜூன் 13 - திருகோணமலையில் மெர்சி கோர்ப்ஸ் என்ற அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டார். (பிபிசி), (புதினம்) பரணிடப்பட்டது 2007-06-16 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 13 - உலக அகல வலையை (world wide web) உருவாக்கிய சேர் டிம் பேர்ணேர்ஸ்-லீ இரண்டாம் எலிசபெத் மகாராணியால் கௌரவிக்கப்பட்டார். (பிபிசி)
- ஜூன் 13 - 2002 பாலி குண்டுவெடிப்பை அடுத்துத் தேடப்பட்டு வந்த ஜெமா இஸ்லாமியா அமைப்புத் தலைவர் அபு டுஜானா இந்தோனீசிய காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். (பிபிசி)
- ஜூன் 14 - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. (சிஎன்என்)
- ஜூன் 14 - பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அமைச்சரவையைக் கலைத்து நாட்டில் அவசரகாலநிலையை அமுல் படுத்தியுள்ளார். (ஏபிசி)
- ஜூன் 15 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது. (பிபிசி)
- ஜூன் 15 - தெற்கு தாய்லாந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 18 - அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 9 தீயணைக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 19 - தமிழ்நெட் இணையத்தளத்தை இலங்கை அரசு தடை செய்தது. (புதினம்) பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 20 - கிழக்கு இலங்கையில் தாம் 30 விடுதலைப் புலிகளைக் கொன்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். (பிபிசி)
- ஜூன் 21 - யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். (புதினம்) பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 22 - வவுனியாவில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். (புதினம்) பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 22 - அட்லாண்டிஸ் விண்கப்பல் கலிபோர்னியாவில் உள்ள வான்படையினரின் எட்வேர்ட்ஸ் தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. முன்னராக புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இறங்கவேண்டியிருந்தது, சீரற்ற காலநிலை காரணமாக கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது. (ஏபிசி)
- ஜூன் 24 - சதாம் ஹுசேனின் ஆட்சிக்காலத்தில் 180,000 குர்தீஷ் இனத்தவர் படுகொலை நிகழ்வுக்குக் காரணகர்த்தாவாக இருந்த சதாமின் உறவினரான அலி ஹசன் அல்-மஜீத் (Chemical Ali) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)
- ஜூன் 24 - கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். (ஐடிவி) பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 25 - கம்போடியாவில் PMTair விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 27 - டோனி பிளேர் பதவி துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார். (ரொய்ட்டர்ஸ்)
- ஜூன் 28 - அம்பாறை, திருக்கோவில் பிரதேச சபைத் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தில்லைநாதன் உதயகுமார் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டார். (புதினம்) பரணிடப்பட்டது 2007-07-01 at the வந்தவழி இயந்திரம்
- ஜூன் 29 - ஐவரி கோஸ்டின் பிரதமர் கில்லாமி சோரோ (Guillaume Soro) கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினார். (ப்ளூம்பேர்க்)
- ஜூன் 29 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்