உலக சுற்றுச்சூழல் நாள்

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

உலகச் சுற்றுச்சூழல் நாள்
அதிகாரப்பூர்வ பெயர்ஐ நா (UN ) உலகச் சுற்றுச்சுழல் நாள்
பிற பெயர்(கள்)சூழல் நாள் / சுற்றுச்சூழல் நாள்/ WED
வகைபன்னாட்டுவகை
நாள்5 ஜூன்
நிகழ்வுஆண்டுதோறும்

நோக்கம்

தொகு

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும்,வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

வரலாறு

தொகு

இது ஐநாவின் பொது அவையினால் 1972 ஆம் ஆண்டில்[1] மனித சூழலுக்கான ஐநா மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாடாட்டின் தொடக்க நாளான சூன் 5 ஐ உலக சுற்றுச் சூழல் நாளாக ஐ.நா சபையால் அனுசரிக்கபடுகிறது.[2]

உலகச் சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சிகள்

தொகு

பணியிடத்தில் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க தனி ஒவ்வொருவருக்கும் ஊக்கமூட்ட 2007இல் இருந்து சிங்கப்பூரில் சூழல் செயற்பாட்டு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.[3]

2015 சூன் 5ஆம் நாளன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி புதுதில்லி, பந்தயச் சாலை, 7ஆம் எண்ணிட்ட தம் இல்லத்தில் ஒரு மரக்கன்றை நட்டார்.[4][5]

உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடல்

தொகு

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the continents and the oceans of the world
united we stand as flora and fauna

புடவியின் பேரழகுக் கோளே!
அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!
ஒன்றிவாழ்வோம் ஒருநிரை யாக
கண்டங்களும் கடல்களும் களித்துயிர் களோடே!

united we stand as species of one earth
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

புவியில் வாழும் உயிரினங் களோடும்
கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ
மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.
மாந்தர் நாமே நம்குடில் பூமி!

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe

புடவிப் பெருவெளிப் பேரழகுக் கோளே!
அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!

all the people and the nations of the world
all for one and one for all
united we unfurl the blue marble flag
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

உலக நாட்டு இணைந்த மக்கள்யாம்
எலாமொருவருக்கு;ஒருவரெலார்க்கும்
நீலப் பளிங்குக்கொடி நெடிதுயர்த்தினோம்
கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ
மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.
மாந்தர் நாமே நம்குடில் பூமி! .

"புவிப் பண்" இயற்றியது: அபே கே
[6]

"புவிப் பண்" அபே கே என்பவரால் எழுதப்பட்டு 2013 சூன் மாதத்தில் உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இந்திய அமைச்சர்கள் கபில் சிபல், சசி தரூர் ஆகியோரால் புதுதில்லியில் வெளியிடப்பட்டது.[7] ஐநா பொது அவையின் அலுவல் மொழிகளான அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் ஆகிய ஆறு மொழிகளில் புவியின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.[8] அவற்றைவிட இந்தி, நேபால மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

கருப்பொருள்கள்

தொகு

ஒவ்வோராண்டும் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கும் ஒரு தனியான முழக்கத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட்டது.இந்த முழக்கங்களைப்போலவே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு கருப்பொருளும் உண்டு. 2009-2015 வரை பரப்பிய கருப்பொருள்கள் கீழே தரப்பட்டுள்ளன.

’ஏழு பில்லியன் கனவுகள்;ஒரே கோள்; விழிப்போடு நுகர்’.

கருப்பொருள்:-'சிறு தீவுகளும் காலநிலை மாற்றமும்',
முழக்கம்:-'குரலை உயர்த்து, கடல் மட்டத்தையல்ல.

 
2011 சுற்றுச்சூழல் நாள்: பிரான்டென்போர்க் வாயில்.
 
2011: தோனெத்ஸ்க், உக்ரைன்
 
2012: எத்தியோப்பியா, கோன்சோ நகரில் மரநாட்டு நிகழ்வு.

2013இன் கருப்பொருள் சிந்தி. உண். சேமி.[9]

பரப்புரை ஒவ்வோராண்டும் பேரளவில் வீணாக்கப்படும் உணவுப் பொருள்களின்பால் கவனத்தைக் குவித்தது. இந்த உணவு சேமிக்கப்பட்டால்,ஏராளமானோர்க்கு உணவு வழங்கி கரிமக் கால்தடத்தையும் குறைக்கமுடியும். உணவுப் பொருளை விரயமாக்கும் வாழ்முறைமை உள்ள நாடுகளின்பால் குறிப்பான கவனம் திருப்பப்பட்டது. உலகளாவிய உணவு விளைச்சலால் சூழலின் மீது ஏற்படும் ஒட்டுமொத்தத் தாக்கத்தைக் குறைக்க மக்கள் உண்ண விரும்பும் உணவின் தேர்வை அறிவிக்கும் உரிமையைப் பெறவைக்கும் குறிக்கோளையும் முன்வைத்தது.[9]

2012 உலகச் சுற்றுச்சூழல் நாள் கருப்பொருள் பசுமைப் பொருளாதாரம்: நீயும் உள்ளாயா?[10]

இந்த கருப்பொருள் மக்களை தம் செயல்பாடுகளையும் வாழ்க்கைப்பாணியையும் சீர்தூக்கிப் பார்த்து பசுமைப் பொருளாதாரத்தில் அவை எப்படி பொருந்துகின்றன எனக் கருதுமாறு கேட்டுக்கொள்ளச் செய்கிறது. இந்த ஆண்டின் விழாக்கலை விருந்தோம்பிய நாடு பிரேசில் அகும்.[10]

2011இன் கருப்பொருள் காடுகள்-உன் சேவையில் இயற்கை. கடற்கரைத் தூய்மிப்பு, கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள், சமுதாய நிகழ்ச்சிகள், மேடைஇசைக் கொண்டாட்டங்கள் என பல்லாயிரம் செயற்பாடுகள் உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிகழ்ச்சியைப் பரந்து விரிந்த இந்தியா முன்னின்று நடத்தியது. உயிரியற் பல்வகைமை.[11]

'பல உயிரினங்கள்; ஒரேகோள்; ஒரே எதிகாலம்.', என்பதே 2010இன் கருப்பொருள்.

2010 உலக [[உயிர்ப்பன்மைய ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. சமுதாய நிகழ்ச்சிகள், மேடைஇசைக் கொண்டாட்டங்கள் என பல்லாயிரம் செயற்பாடுகள் உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் நிகழ்ச்சியை ருவாண்டா முன்னின்று நடத்தியது.[12]

2009இன் உலகச் சுற்றுச்சூழல் நாளின் கருப்பொருள் || 'உன்கோள் உன்னைக் கேட்கிறது – காலநிலை மாற்றத்தை மாற்ற இணை ', உலகச் சுற்றுச்சூழல் நாள் பாடலாக மைக்கேல் ஜாக்சனின் ’புவிப் பாடல்’ அறிவிக்கப்பட்ட்து. '.இது மெக்சிகோவில் நடத்தப்பட்டது..[13]

விருந்தோம்பிய நகரங்கள்

தொகு

உலகச் சுற்றுச்சூழல் நாட்கள் உலகெங்கும் கீழ்வரும் நகரங்களில் தொடர்ந்து கொண்டாடப்பட்டன.:[14]

ஆண்டு கருப்பொருள் ஓம்பு நகரம்
1974 ஒரே புவி எக்ஸ்போ '74 ஸ்போக்கேன், ஐக்கிய அமெரிக்கா
1975 மாந்தர் குடியேற்றம் டாக்கா, வங்காளதேசம்
1976 நீர்: வாழ்வின் அமுதம் கனடா
1977 ஓசோன் படலம் சுற்றுச்சூழல் அக்கறை; நிலங்கள் இழப்பும் மண் தரக்குறைவும் சில்ஹெட், வங்காளதேசம்
1978 அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட், வங்காளதேசம்
1979 குழந்தைகட்கான ஒரே எதிர்காலம் – அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட், வங்காள தேசம்
1980 புதிய பத்தாண்டுக்கான புதிய சவால்: அழிவில்லா வளர்ச்சி சில்ஹெட், வங்காள தேசம்
1981 நிலத்தடி நீர்; மாந்த உணவுத் தொடரில் நச்சு வேதிமங்கள் சில்ஹெட், வங்காள தேசம்
1982 ஸ்டாக்கோல்முக்குப் பின் பத்ஹ்தாண்டுகள் (சுற்றுச்சூழல் அக்கறைகளைப் புதுப்பித்தல்) டாக்கா, வங்காள தேசம்
1983 தீங்கான கழிவுகளை மேலாளலும் கழித்தலும்: அமில மழையும் ஆற்றலும் சில்ஹெட், வங்காள தேசம்
1984 பாலையாக்கம் ராஜ்சாகி, வங்காள தேசம்
1985 இளைஞர்: மக்கள்தொகையும் சுற்றுச்சூழலும் பாக்கித்தான்
1986 அமைதிக்கான தரு ஒன்ராறியோ, கனடா
1987 சுற்றுச்சூழலும் வாழிடமும்: கூரையினும் பெரிது நைரோபி, கென்யா
1988 மக்கள் சுற்றுச்சூழலை முதலில் வைத்தால் வளர்ச்சி என்றும் நீடிக்கும் பாங்காக், தாய்லாந்து
1989 புவி சூடாதலுக்கானஉலக எச்சரிக்கை பிரசெல்சு,பெல்ஜியம்
1990 சிறுவரும் சுற்றுச்சூழலும் மெக்சிக்கோ நகரம்,மெக்சிகோ
1991 காலநிலை மாற்றம். உலகப் பங்கேற்பின் தேவை சுடாகோல்ம், சுவீடன்
1992 ஒரே பவி, அக்கறையோடு பகிர்ந்திடு இரியோ டி செனீரோ, பிரேசில்
1993 ஏழ்மையும் சுற்றுச்சூழலும் – சுழல்வட்டம் உடைப்போம் பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
1994 புவியெல்லம் ஒரே குடும்பம் இலண்டன், ஐக்கிய நாடுகள்
1995 புவிச்சூழல் பேண ஒருங்கிணைந்த மாந்தர் யாம் பிரிட்டோரியா, தென் ஆப்பிரிக்கா
1996 நம்பூமி, நம் வாழிடம், நம் குடில் இசுதான்புல், துருக்கி
1997 புவியில் உயிர் தழைக்க சியோல், தென் கொரியா
1998 புவி உயிர் தழைக்க, கடல்களைக் காப்போம் மாஸ்கோ, உருசியா
1999 புயொன்று – எதிர்காலம் ஒன்று – காப்பாற்றுவோம்.! டோக்கியோ, நிப்பான் (ஜப்பான்)
2000 சுற்றுச்சூழல் ஆயிரமாண்டு –செயற்படுதருணம் அடிலெய்டு, ஆசுத்திரேலியா
2001 உயிர்வைய விரிவலையில் இணை துரின், இத்தாலி; அவானா, கியூபா
2002 புவிக்கொரு வாய்ப்பு ஈவோம் சென்சென், மக்கள் சீனக் குடியரசு
2003 நீர் –இதற்காக இரு பில்லியன் மக்கள் சாகின்றனர்! பெய்ரூத், இலெபனான்
2004 தேவை தானே! கடல், பெருங்கடல்கள் – உயிரோடா, இல்லாமலா? பார்செலோனா,எசுப்பெயின்
2005 பசுமை நகரங்களே நம் கோளின் திட்டம்! சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா
2006 பாலையும் பாலையாக்கமும் –வன்புலம் அகலாதே! அல்ஜியர்சு, அல்ஜீரியா
2007 உருகும் பனிக்கட்டி – சூடான தலைப்பு தான்? இலண்டன், இங்கிலாந்து
2008 பழக்கத்தை மாற்றுt – தாழ் கரிமப் பொருளாதாரம் நோக்கி வெலிங்டன், நியூசிலாந்து
2009 உன்கோள் உன்னைக் கேட்கிறது – காலநிலை மாற்றத்தை மாற்ற இணை மெக்சிகோ நகரம், மெக்சிகோ
2010 பல உயிரினங்கள்; ஒரே கோள்; ஒரே எதிர்காலம். ராங்பூர், வங்காளதேசம்
2011 காடுகள்: உன் சேவையில் இயற்கை புதுதில்லி, இந்தியா
2012 பசுமைப் பொருளாதாரம்:அது உன்னை உள்ளடக்குகிறதா? பிரேசில்
2013 சிந்தி. உண். சேமி. காலடித் தடம் குறை மங்கொலியா
2014 குரலை உயர்த்து, கடல் மட்டத்தையல்ல. பார்படோசு,
2015 ஏழு பில்லிஅன் கனவுகள்; ஒரே கோள்; விழிப்புடன் நுகர். இத்தாலி
2016 பந்தயத்தில் இணை; உலகை நல்லிடமாக்க முனை. சவூதி அரேபியா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை Session -1 Resolution 2994. United Nations Conference on the Human Environment A/RES/2994(XXVII) page 1. 15 டிசம்பர் 1972. Retrieved 22 ஆகத்து 2008.
 2. http://timesofindia.indiatimes.com/world-environment-day/eventcoverage/87223
 3. the red dot: Eco Action Day launches in Singapore[தொடர்பிழந்த இணைப்பு] Eco-Business.com, 4 May 2014
 4. [1] பரணிடப்பட்டது 2016-08-18 at the வந்தவழி இயந்திரம் World Environment Day June 5
 5. Read: Prime Minister of India Narendra Modi planted a sapling பரணிடப்பட்டது 2016-08-18 at the வந்தவழி இயந்திரம் 5 June 2015
 6. Download Earth Anthem Earth Anthem Website, 27 April 2014
 7. Indian Diplomat pens an anthem for Earth,The New Indian Express, 5 June 2013
 8. Earth Anthem sung by Nepali Singer Shreya Sotang, ANI,4 June 2013
 9. 9.0 9.1 ""Think.Eat.Save" World Environment Day 5 June". World Environment Day. United Nations Environment Programme. 5 June 2013. Archived from the original on 5 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 June 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 10. 10.0 10.1 Times News Network (31 May 2012). "World Environment Day 2012: Let's pledge to make earth a better place". Times of India : Environment. Bennett, Coleman & Co. Ltd. Archived from the original on 9 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
 11. "World Environment Day – Raise Your Voice, Not the Sea Level". Archived from the original on 2016-04-11. பார்க்கப்பட்ட நாள் 2015-06-09.
 12. "World Environment Day 2010". Archived from the original on 2010-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-06-09.
 13. "WED That Was – 2009". Archived from the original on 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2013-08-14.
 14. World Environment Day 5 June 2008 – UNEP பரணிடப்பட்டது 2008-06-11 at the வந்தவழி இயந்திரம், accessed 6 June 2008

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சுற்றுச்சூழல்_நாள்&oldid=4014610" இலிருந்து மீள்விக்கப்பட்டது