சசி தரூர்
சசி தரூர் (Shashi Tharoor) (பிறப்பு 9 மார்ச் 1956) இந்தியாவின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் முன்னர் ஐ.நாவின் துணை பொதுசெயலராக (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர்.[2] இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர். பல உதவி நிறுவனங்களில்,பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவற்றில், அறிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
சசி தரூர் | |
---|---|
சசி தரூர் | |
இந்திய மனித வள மேன்பாட்டுத் துறை அமைச்சர் | |
பதவியில் 28 அக்டோபர் 2012-26 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | டக்குபட்டி புரந்தேசுவரி |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
முன்னையவர் | இரவீன்திரன் |
தொகுதி | திருவனந்தபுரம் |
இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் | |
பதவியில் 28 மே 2009 – 18 ஏப்ரல் 2010 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | ஆனந்த் சர்மா |
பின்னவர் | இ. அகமது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 மார்ச்சு 1956 இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
துணைவர்(கள்) | திலோத்தமா முகர்ஜி (மணமுறிவு) கிறிஸ்டா கைல்சு (மணமுறிவு) சுனந்தா புஷ்கர் (2010–2014, மரணம்)[1]. |
பிள்ளைகள் | இசான், கனிசுக் |
வாழிடம் | புது தில்லி/திருவனந்தபுரம் |
முன்னாள் கல்லூரி | புனித இசுடீபன் கல்லூரி, தில்லி இளங்கலை) டஃப்ட்சு பல்கலைகழகம் (முதுகலை, சட்ட மேற்படிப்பு, முனைவர்) |
வேலை | எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி |
இணையத்தளம் | tharoor.in |
2009 இந்திய மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார். 2009, 2014-ஆம் ஆண்டுகளில் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[3]
பிறப்பு,ஆரம்ப வாழ்க்கை
தொகுசந்திரன் தரூர் மற்றும் லில்லி தரூர் தம்பதியினருக்கு 1956ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்தார். இளமையும் கல்வியும் ஏற்காட்டிலும் கொல்கொத்தாவிலும் மும்பையிலும் கழிந்தது.
தொழில்முறை வாழ்க்கை
தொகு1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார். 2014இல் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து புகழ்ந்து வந்ததாக வந்த தகவல்களை அடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பு வகிப்போர் பட்டியலில் இருந்து இவர் பெயர் நீக்கப்பட்டது.
சசி தரூரின் புத்தகங்கள்
தொகுஇவர் கீழ்க்காணும் நூல்களை எழுதியுள்ளார்.[3]
புனைவு
தொகு- ரயட் (Riot) (2001)
- ஷோ பிசினஸ் (Show Business)(1992)
- பைவ் டாலர் ஸ்மைல் மற்றும் பிற கதைகள்(The Five Dollar Smile and Other Stories) (1990)
- தி கிரேட் இந்தியன் நாவல் (1989)
புனைவு
தொகு- ஷேடோ அக்ராஸ் த பிளேயிங்க் ஃபீல்ட்: அறுபது ஆண்டுகள் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் (Shadows Across the Playing Field: Sixty Years of India-Pakistan Cricket)[with Shaharyar Khan] (2009)
- யானை,புலி மற்றும் கைபேசி:21ஆம் இந்தியா எண்ணங்கள் (The Elephant, the Tiger and the Cell Phone: Reflections on India in the 21st Century)(2007)
- புக்லெஸ் இன் பாக்தாத் Bookless in Baghdad(2005)
- நேரு:இந்தியாவின் கண்டுபிடிப்பு( Nehru: The Invention of India)(2003)
- இந்தியா:நடு இரவிலிருந்து ஆயிரவாண்டு வரை (India: From Midnight to the Millennium)(1997)
- ரீசன்ஸ் ஆப் ஸடேட் (Reasons of State)(1982)
மேலும் அறிய
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் - காவல்துறை
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-22. பார்க்கப்பட்ட நாள் 2009-07-25.
- ↑ 3.0 3.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4569 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இன்ஸ்ட்டாகிராமில் Shashi Tharoor
- Dr Shashi Tharoor Official bio-data at Lok Sabha, Parliament of India
- Cabinet of Prime Minister Manmohan Singh Prime Ministers Office, Archived
- Shashi Tharoor at United Nations
- Shashi Tharoor collected news and commentary at தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
- Why Is PM Narendra Modi 'The Paradoxical Prime Minister'? | The Interview With Shashi Tharoor.ET Now.
- Appearances on C-SPAN
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சசி தரூர்
- Works by சசி தரூர் at திற நூலகம்
- Globalization and the Human Imagination Opening speech of the 3. international literature festival berlin