<< ஏப்ரல் 2009 >>
ஞா தி செ பு வி வெ
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30
 
MMIX

ஏப்ரல் 2009, 2009 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 14 இல் தொடங்கி மே 14 வியாழக்கிழமை இல் முடிவடையும்.

சிறப்பு நாட்கள்

தொகு

நிகழ்வுகள்

தொகு
செய்திகள்
ஈழப்போர் பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு மேலதிக ஈழபோர்ச் செய்திகளை
 • ஏப்ரல் 24:
 • ஏப்ரல் 23:
  • வன்னிப் போரில் சிக்கியுள்ள பொதுமக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு மனிதாபிமானப் பணியாளர்களின் குழு ஒன்றை அனுப்பிவைக்கப்போவதாக ஐநா செயலாளர் பான் கி மூன் அறிவித்தார். (புதினம்)
  • புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மூன்று நாட்களில் மொத்தம் 103,143 பொதுமக்கள் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்தது. (தமிழ்வின்)
 • ஏப்ரல் 22:
  • படையினர் அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் மக்கள் வாழ்விடங்கள் மீது செறிவான ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களை நடத்தியதில் 324 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
  • விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. (பிபிசி)
  • விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் படையினரிடம் சரணடைந்ததாக படையினர் அறிவித்தனர். (தமிழ்வின்)
  • வலைஞர்மடம் தேவாலயப்பகுதியை நோக்கி படையினர் வீசிய ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை வண. பிதா ஜேம்ஸ் பத்திநாதர் படுகாயமடைந்தார். (தமிழ்நெட்)
 • ஏப்ரல் 21:
  • பாதுகாப்பு வலயத்தில் படையினர் நடத்திய தாக்குதலில் மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
  • புதுமாத்தளன் மருத்துவமனை பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (தமிழ்வின்)
 • ஏப்ரல் 20:
  • புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. (தமிழ்வின்)
  • வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, தாக்குதலில் ஈடுபட்டபோது 476 சிறுவர்கள் உட்பட 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 19: முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் 'பாதுகாப்பு வலயம்' மீது படையினர் நடத்திய தாக்குதல்களில் 178 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 18:
  • இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. (தமிழ்வின்)
  • புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் நடத்திய தாக்குதல்களில் 169 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 234 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 17:
 • ஏப்ரல் 16:
 • ஏப்ரல் 15: புதுக்குடியிருப்பு பாதுகாப்பு வலயத்தின் மீது படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் பீரங்கி, வான், மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 219 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 14: புத்தாண்டுக்காக 48 மணிநேர போர் நிறுத்தத்தை அரசு அறிவித்தது. (தமிழ்வின்)
 • ஏப்ரல் 13: இலங்கை அமைதி நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி வந்த நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து இலங்கை அரசு நீக்கியது. (தமிழ்வின்)
 • ஏப்ரல் 8:
  • நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இலண்டனில் பரமேஸ்வரன், சிவா என்ற இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். (தமிழ்வின்)
  • வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 129 பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் 100 சிறுவர்கள் உட்பட 282 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 7: வன்னியில் படையினர் நடத்திய எறிகணை, வான் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ட்தனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 6:
  • போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வரும் வரை ஓய்வு ஒளிச்சலற்ற, தொய்வு அற்ற போராட்டங்கள் பல நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலண்டன் நாடாளுமன்றத்தை சூழ பல்லாயிரக்கணக்கான தழிழ் மக்கள் அலை அலையாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (தமிழ்வின்)
  • புதுக்குடியிருப்பு மோதலில் புதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதலை படையினர் நடத்தி பல நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 5:
  • வன்னியில் படையினர் நடத்திய எறிகணை மற்றும் உலங்குவானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
  • இலங்கையின் வடபகுதியில் நடந்த கடும் சண்டையில் 250 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. மேலும் புலிகள் கைவசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்தது. (தமிழ்வின்)
 • ஏப்ரல் 4:
  • வன்னியில் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழின அழிப்புத் தாக்குதலில் 29 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
  • அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் தமிழ்மக்கள் மேற்கொண்ட மகிழுந்து பேரணி மீது சிங்கள மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து தமிழர்கள் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 3:
  • வன்னியில் படையினர் நடத்திய எறிகணை, தொலைதூர துப்பாக்கிச் சூடு மற்றும் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 28 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
  • அம்பாறை மாவட்டம் பாணமைபிரதேச லகுகல என்ற இடத்தில் 13 தமிழ் இளைஞர்களை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 2: வன்னியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 56 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
 • ஏப்ரல் 1:

இறப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்ரல்_2009&oldid=1462205" இலிருந்து மீள்விக்கப்பட்டது