யூரேசிய ஒன்றியம்
யூரேசிய ஒன்றியம் (Eurasian Union) பெலருஸ், கசக்கிசுத்தான், கிர்கிசுதான், உருசியா, தாஜிக்ஸ்தான்[1][2][3] ஆகிய நாடுகளையும் பிற சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடுகளையும் வாய்க்குமெனில் பின்லாந்து, அங்கேரி, செக் குடியரசு, பல்கேரியா மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகளையும்.[4] பொருளாதார மற்றும் அரசியல் வகைகளில் ஒன்றிணைத்து ஒர் பெரிய நாட்டமைப்பாக மாற்றிடும் திட்டமாகும். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கத்தை யொட்டி எழுந்த இத்தகைய கருத்தாக்கத்தை கசக்கிசுத்தான் அரசுத்தலைவர் நூர்சுல்தான் நசர்பயேவ் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றில் 1994ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருந்தபோதும்[5] அக்டோபர் 2011இல் உருசியாவின் பிரதமர் விளாடிமிர் பூட்டின் உலகளவில் அறியச் செய்தார்.[3][6] நவம்பர் 18, 2011இல் பெலருஸ், கசக்கிசுத்தான் மற்றும் உருசியா அரசுத்தலைவர்கள் 2015க்குள் யூரேசியன் ஒன்றியத்தை உருவாக்கிட இலக்கு குறிப்பிட்டு உடன்பாடு கொண்டனர்.[7] இந்த உடன்பாடு ஐரோப்பிய ஆணையத்தினை ஒத்த யூரேசிய ஆணையத்தை நிறுவவும் யூரேசிய பொருளாதாரவெளியை சனவரி 1, 2012 முதல் நிறுவிடவும் வருங்காலத்தில் ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களையும் உள்ளடக்கி உள்ளது.[7][8]
யூரேசிய ஒன்றியம் Евразийский Союз | |
---|---|
பரிந்துரைக்கப்பட்ட உறுப்பு நாடுகள் | பெலருஸ் கசக்கஸ்தான் உருசியா கிர்கிசுத்தான் தஜிகிஸ்தான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Putin calls for Eurasian union". B92. RIA Novosti. 4 October 2011 இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111006012254/http://www.b92.net/eng/news/world-article.php?yyyy=2011&mm=10&dd=04&nav_id=76700. பார்த்த நாள்: 4 October 2011.
- ↑ "Putin calls for 'Eurasian Union' of ex-Soviet republics". BBC News. 4 October 2011. http://www.bbc.co.uk/news/world-europe-15172519. பார்த்த நாள்: 4 October 2011.
- ↑ 3.0 3.1 Bryanski, Gleb (3 October 2011). "Russia's Putin says wants to build "Eurasian Union"". Yahoo! News. Reuters இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111006174652/http://news.yahoo.com/russias-putin-says-wants-build-eurasian-union-222139037.html. பார்த்த நாள்: 4 October 2011.
- ↑ "Moscow fleshes out 'Eurasian Union' plans". EurActiv. 17 November 2011 இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121205235235/http://www.euractiv.com/europes-east/moscow-fleshes-eurasian-union-pl-news-509042. பார்த்த நாள்: 19 November 2011.
- ↑ "Kazakhstan welcomes Putin's Eurasian Union concept". த டெயிலி டெலிகிராப். 6 October 2011. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/kazakhstan/8808500/Kazakhstan-welcomes-Putins-Eurasian-Union-concept.html. பார்த்த நாள்: 8 October 2011.
- ↑ "Новый интеграционный проект для Евразии — будущее, которое рождается сегодня" (in Russian). Izvestia. 3 October 2011. http://www.izvestia.ru/news/502761. பார்த்த நாள்: 4 October 2011.
- ↑ 7.0 7.1 "Russia sees union with Belarus and Kazakhstan by 2015". BBC News. 18 November 2011. http://www.bbc.co.uk/news/world-europe-15790452. பார்த்த நாள்: 19 November 2011.
- ↑ "Евразийские комиссары получат статус федеральных министров" (in Russian). Tut.By. 17 November 2011 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191009110040/https://news.tut.by/politics/259307.html. பார்த்த நாள்: 19 November 2011.