பாண்டியன் (நடிகர்)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பாண்டியன் (Pandiyan; 5 சனவரி 1959 – 10 சனவரி 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மண்வாசனை திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1]
பாண்டியன் | |
---|---|
பாண்டியன் | |
பிறப்பு | மதுரை, இந்தியா | 5 சனவரி 1959
இறப்பு | 10 சனவரி 2008 மதுரை, இந்தியா | (அகவை 49)
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1983-2008 |
வாழ்க்கைத் துணை | இலதா |
பிள்ளைகள் | இரகு |
மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்றவை இவருக்கு பெயர் பெற்று தந்தன.
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1983 | மண்வாசனை | வீரண்ணா | அறிமுகம் |
மனைவி சொல்லே மந்திரம் | பரதன் | ||
1984 | குவா குவா வாத்துகள் | பாண்டியன் | |
நான் பாடும் பாடல் | செல்வம் | ||
வேங்கையின் மைந்தன் | வேங்கை | ||
வாழ்க்கை | கண்ணன் | ||
புதுமைப்பெண் | இராமச்சந்திரன் | ||
சிறை | முத்து | ||
மண்சோறு | |||
சுக்ரதிசை | கண்ணன் | ||
என் உயிர் நண்பா | ஆனந்த் | ||
நேரம் நல்ல நேரம் | |||
தலையணை மந்திரம் | இராஜா | ||
பொண்ணு புடிச்சிருக்கு | |||
நிச்சியம் | |||
1985 | மண்ணுக்கேத்த பொண்ணு | மருதன் | |
நவக்கிரக நாயகி | மாயாண்டி / மகேந்திர பூபதி | ||
மருதாணி | மாணிக்கம் | ||
பட்டுச்சேலை | அழகு | ||
ராஜ கோபுரம் | ரங்கா | ||
ஆண்பாவம் | பெரிய பாண்டி | ||
1986 | கரிமேடு கருவாயன் | ||
கடைக்கண் பார்வை | பாபு | ||
ஜோதி மலர் | பாண்டியன் | ||
முதல் வசந்தம் | பொன்னுசாமி | ||
தாய்க்கு ஒரு தாலாட்டு | இரமேஷ் | ||
கோவில் யானை | இராஜா | ||
மண்ணுக்குள் வைரம் | பூமி | ||
1987 | திருமதி ஒரு வெகுமதி | கிரிஷ்ணன் | |
தாயே நீயே துணை | பாண்டியன் | ||
ஒரே ரத்தம் | பொன்னான் | ||
கூலிக்காரன் | கைதி | விருந்தினர் தோற்றம் | |
இனி ஒரு சுதந்திரம் | பாண்டியன் | ||
ஆண்களை நம்பாதே | முத்துப்பாண்டி | ||
ஊர்க்காவலன் | பாண்டியன் | ||
பரிசம் போட்டாச்சு | இராமு | ||
ஆயுசு நூறு | சுப்பிரமணி | ||
அருள் தரும் ஐயப்பன் | சங்குசாமி | ||
1988 | காலையும் நீயே மாலையும் நீயே | செல்வா | விருந்தினர் தோற்றம் |
வீடு மனைவி மக்கள் | அடியாள் | ||
குரு சிஷ்யன் | மனோகரன் | ||
இரயிலுக்கு நேரமாச்சு | அலுவலர் | ||
பூந்தோட்ட காவல்காரன் | முத்து பாட்சா | ||
தங்கக்கலசம் | அருண் | ||
மேளம் கொட்டு தாலி கட்டு | மச்சக்காளை | ||
தென்பாண்டிச் சீமையிலே | வேலு | ||
1989 | காதல் என்னும் நதியினிலே | ரங்கநாதன் | |
கருங்குயில் குன்றம் | |||
சோலை குயில் | காளி | ||
சகலகலா சம்மந்தி | வசந்தன் | ||
சங்கு புஷ்பங்கள் | மருத்துவர் | ||
வலது காலை வைத்து வா | இரமேஷ் | ||
1990 | பெண்கள் வீட்டின் கண்கள் | ஜீவா | |
பந்தயக் குதிரைகள் | |||
சாத்தான் சொல்லைத் தட்டாதே | மூர்த்தி | ||
1991 | கும்பக்கரை தங்கய்யா | கங்கைய்யா | |
எம். ஜி. ஆர். நகரில் | சிவா | ||
அன்புள்ள தங்கச்சிக்கு | சின்னதுரை | ||
தாயம்மா | பாண்டியன் | ||
1992 | நாடோடித் தென்றல் | பூங்குருவி உறவினர் | |
1993 | கிழக்குச் சீமையிலே | சின்ன கருப்பு | |
பாரம்பரியம் | சேகர் | ||
பெற்றெடுத்த பிள்ளை | குமரனின் தந்தை | ||
1994 | மைந்தன் | ஆய்வாளர் விஜய் | |
பெரிய மருது | பாண்டியன் | ||
அத்த மக ரத்தினமே | மைனர் இராஜபாண்டி | ||
வா மகளே வா | கல்யாணியின் கணவர் | விருந்தினர் தோற்றம் | |
1995 | படிக்கிற வயசுல | ||
1996 | திரும்பிப் பார் | அசோக் | |
புருஷன் பொண்டாட்டி | நடராஜன் | ||
1997 | பெரிய இடத்து மாப்பிள்ளை | பாண்டியன் | |
1998 | உதவிக்கு வரலாமா | பால்ராசு | |
உன்னுடன் | இரசீது ஆய்வாளர் | விருந்தினர் தோற்றம் | |
2001 | சிட்டிசன் | வாப்பா | |
2003 | அன்பே உன்வசம் | புலனாய்வாளர் | விருந்தினர் தோற்றம் |
2006 | கை வந்த கலை | கௌசல்யாவின் தந்தை | |
2008 | புதுசு கண்ணா புதுசு | இராக்கி |
தொலைக்காட்சித் தொடர்
தொகுஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1999 | பிளாஸ்டிக் விழுதுகள் | ||
2001-2002 | கேளுங்க மாமியாரே நீங்களும் மருமகள் தான் | ஆர்.கே |
இறப்பு
தொகுநோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் 2008 சனவரி 10 அன்று மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48-ஆவது வயதில் காலமானார். இவருக்கு இலதா என்ற மனைவியும், இரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, S. R. Ashok (16 July 2011). "A new effort". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2231514.ece.
- ↑ https://timesofindia.indiatimes.com/india/Tamil-actor-Pandian-dead/articleshow/2690377.cms