ஜனவரி 29 - மன்னார் மாவட்டம்தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டு, மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
ஜனவரி 25 - கிளிநொச்சியில் விவேகானந்த நகரில் இலங்கை விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்தன. (தமிழ்நெட்)
ஜனவரி 21 - மொனறாகலை மாவட்டத்தில் தனமன்வில பகுதியில் அமைந்திருந்த காவல்துறைக் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
ஜனவரி 17 - மொனறாகலை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இரவு இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்)
ஜனவரி 17 - கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் பாடசாலை மற்றும் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இலங்கை வானூர்திகள் 20-க்கும் அதிகமான குண்டுகளை வீசியதில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்தனர். 8 வீடுகள் முற்றாக அழிந்தன. (புதினம்)
ஜனவரி 14 - மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் இலங்கைப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கையில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)