தெய்ன் செய்ன்

2011 முதல் 2016 வரை பதவி வகித்த மியான்மரின் 8வது ஜனாதிபதி

தெய்ன் செய்ன் (Thein Sein, பிறப்பு: ஏப்ரல் 20, 1945) மியான்மரின் (பர்மா) அரசுத்தலைவர் ஆவார். இவர் அரசுத்தலைவராக 2011, பெப்ரவரி 4 இல் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டார். ஏப்ரல் 2007 இல் இருந்து நாட்டின் இடைக்காலப் பிரதமராக இராணுவ ஆட்சியாளரால் நியமிக்கப்பட்டவர்[2]. அப்போதைய பிரதமராக இருந்த சோயி வின் மருத்துவ சிகிச்சைக்காக சென்றதை அடுத்து தெய்ன் செய்ன் பிரதமராக்கப்பட்டார்[3][4]. 2007 அக்டோபர் 24 இல் சோயி வின் இறந்ததை அடுத்து நிரந்தரப் பிரமரானார்[5].

தெய்ன் செய்ன்
Thein Sein
மியான்மரின் அரசுத்தலைவர்
பதவியில்
பெப்ரவரி 2011
பிரதமர்அறிவிக்கப்படவில்லை
Succeedingதான் சுவே
மியான்மரின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 அக்டோபர் 2007
பதில்: ஏப்ரல் 2007 – 24 அக்டோபர் 2007
தலைவர்தான் சுவே
முன்னையவர்சோயி வின்
பின்னவர்அறிவிக்கப்படவில்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1945 (1945-04-20) (அகவை 79)[1]
அரசியல் கட்சிஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுக்கான முன்னணிக் கட்சி(2010–இன்று)
பிற அரசியல்
தொடர்புகள்
அரசு சமாதான மற்றும் மேம்பாட்டு அவை (2010 இற்கு முன்னர்)
துணைவர்கின் கின் வின்

ஆளும் இரானுவ ஆட்சிக் கட்சியின் முதல் செயலராக தெய்ன் செய்ன் பணியாற்றியிருந்தார். வங்காளதேசத்திற்கும், கம்போடியாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியிருந்தார்[4].

இவர் பிரதமரான பின்னர், இராணுவத்தில் லெப். ஜெனரல் பதவியில் இருந்து முழுமையான ஜெனரல் பதவிக்குத் தரம் உயந்த்தப்பட்டார்[6]. பிரதமராக இருந்த போது லாவோஸ், வியட்நாம், மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உயர்மட்டப் பேச்சுக்களில் பங்குபற்றியிருந்தார்[7][8][9].

20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2010 நவம்பரில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் ஆளும் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, 2011, பெப்ரவரியில் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் எதிர்க்கட்சி இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived (PDF) from the original on 2011-04-28. பார்க்கப்பட்ட நாள் 2011-04-28.
  2. Countries Me-My
  3. Burmese junta choose stand-in PM, BBC, retrieved 2007-05-20.
  4. 4.0 4.1 Burmese Junta Tips New Prime Minister பரணிடப்பட்டது 2007-05-20 at the வந்தவழி இயந்திரம், retrieved 2007-05-20.
  5. Myanmar appoints new PM, Xinhua; retrieved 2007-10-24
  6. Myanmar PM to visit Laos, Vietnam, Xinhua; retrieved 2007-11-07
  7. Burma's PM visits Vietnam, Associated Press via The Age; retrieved 2007-11-11
  8. Laos, Myanmar set to enhance relations, Xinhua; retrieved 2007-11-11
  9. "Myanmar's prime minister visits Cambodia to garner support against sanctions". Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்ன்_செய்ன்&oldid=3575410" இலிருந்து மீள்விக்கப்பட்டது