விடுதலைச் சிலை
சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்,
விடுதலைச் சிலை | |
---|---|
அமைவிடம் | விடுதலைத்தீவு மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், ஐ. அ.[1] |
உயரம் |
|
அர்ப்பணிக்கப்பட்டது | அக்டோபர் 28, 1886 |
மீட்டெடுப்பு | 1938, 1984–1986, 2011–2012 |
சிற்பி | Frédéric Auguste Bartholdi |
பார்வையாளர்களின் எண்ணிக்கை | 3.2 மில்லியன் (in 2009)[2] |
நிர்வகிக்கும் அமைப்பு | ஐ. அ. தேசிய பூங்கா சேவையகம் |
வகை | கலாச்சாரம் |
வரன்முறை | i, vi |
தெரியப்பட்டது | 1984 (8 ஆம் அமர்வு) |
உசாவு எண் | 307 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பகுதி | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
அலுவல் பெயர் | விடுதலைச் சிலை தேசிய நினைவுச்சின்னம், இலிஸ் தீவு மற்றும் விடுதலைத்தீவு (Statue of Liberty National Monument, Ellis Island and Liberty Island) |
தெரியப்பட்டது | அக்டோபர் 15, 1966[3] |
உசாவு எண் | 66000058 |
தெரியப்பட்டது | அக்டோபர் 15, 1924 |
அளித்தவர் | கால்வின் கூலிஜ்[4] |
வகை | தனித்துவம் உடையது |
தெரியப்பட்டது | செப்டம்பர் 14, 1976 |
வரலாறு
தொகுஅமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்தச் சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.
ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர்.
1875-ஆம் ஆண்டு இந்த சிலையின் கட்டுமானம் தொடங்கியது. 1884-ஆம் ஆண்டு இச்சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு இந்தச் சிலை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.
சிலையின் அமைப்பு
தொகுசுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போரின் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர் ஆகும். சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன் ஆகும். [5]
உசாத்துணை
தொகு- ↑ Statue of Liberty National Monument
- ↑ Statue of Liberty-Ellis Island Foundation
- ↑ Soleia Company Preserved and repurposes artifacts from the centennial restoration of the Statue of Liberty National Monument
- ↑ Views from the webcams affixed to the Statue of Liberty
- ↑ தொகுத்தவர் பா. தனுஷ் (16 சூலை 2014). "சுதந்திர தேவி சிலை யார் தந்த பரிசு?". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2017.
வெளி இணைப்புகள்
தொகு- Statue of Liberty National Monument
- Statue of Liberty-Ellis Island Foundation
- Soleia Company Preserved and repurposes artifacts from the centennial restoration of the Statue of Liberty National Monument.
- "A Giant's Task – Cleaning Statue of Liberty", Popular Mechanics (February 1932)
- Views from the webcams affixed to the Statue of Liberty
- Made in Paris The Statue of Liberty 1877-1885 - many historical photographs
- Statue of Liberty at Structurae