கேணல் சூசை என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் தில்லையம்பலம் சிவநேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளின் தலைவராக இருந்தவராவார். இவர் அக்டோபர் 16,1963 [2] அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார்.1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடற்புலிகள் அமைப்பின் விசேட கடற்புலிகளின் கட்டளை அதிகாரியாக இருந்தார். அச்சமயம் கடற்புலிகளின் தலைவராக பணியாறிய "கங்கை அமரன்" இலங்கைக் கடற்படையினருடனான சண்டையின் போது கொல்லப்பட்டதை அடுத்து தலைமைப் பொறுப்பு சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொட்டு அம்மானுடன் சூசையும் இன்று புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவராக விளங்குகின்றார். இவரை சர்வதேச காவல் துறை (இன்டர்போல்) "பயங்கரவாதி"யாக அறிவித்து பிடியாணையொன்றை விடுத்துள்ளது.[3]

தில்லையம்பலம் சிவநேசன்
Sea Tiger Colonel Soosai.JPG
கேணல் சூசை புலிகளின் அதிவேக தாக்குதல் களத்தில், 2003.
பிறப்புஅக்டோபர் 16, 1963(1963-10-16)
வல்வெட்டித்துறை
இறப்புமே 18, 2009(2009-05-18) (அகவை 45)
முல்லைத்தீவு, இலங்கை
தேசியம்இலங்கை
மற்ற பெயர்கள்சூசை
கேணல் சூசை
இனம்தமிழ்
பணிதமிழ் போராளிகள்
அறியப்படுவதுகடற்புலி
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சத்வதேவி[1]
பிள்ளைகள்சுரேஷ்
மதி

சூசையின் மகன் அதிவேகப் படகு ஒன்றை வெள்ளோட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு விடுதலைப் புலி உறுப்பினருடன் மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.lankaweb.com/news/items/2009/05/16/sea-tiger-chief-soosai%E2%80%99s-wife-son-and-daughter-caught-escaping-with-other-civilians/ Sea Tiger leader Soosai's wife, son and daughter flee with other civilians
  2. "சூசையின் பிறப்பு". 2007-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-10-10 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. "சூசைக்கெதிரான இன்டர்போல் பிடியாணை". 2007-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-10-10 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. வான்படை கண்ட முதற் தமிழன்தான் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் கேணல் சூசையில் உரை. புதினம் இணையத்தளம், அணுகப்பட்டது 13 அக்டோபர், 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசை&oldid=3555269" இருந்து மீள்விக்கப்பட்டது