வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மே 2009
- மே 31: தெற்கு ஒசேத்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. (அல்ஜசீரா)
- மே 30: பாகிஸ்தான் இராணுவம் சுவாட் பள்ளத்தாக்கில் மின்கோரா நகரை தலிபான்களிடம் இருந்து கைப்பற்றியது. (ஏபி)
- மே 29:
- மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பதவியேற்றார். (த ஸ்டேட்ஸ்மன்)
- சோயுஸ் விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. (பிபிசி)
- மே 28:
- ஹொண்டுராசின் வளைகுடாப் பகுதியில் 7.1-அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. (பிபிசி)
- ஈரானின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷியாக்களின் முக்கிய மசூதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டு, 60 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (தினக்குரல்)
- மே 27:
- ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது. (ராய்ட்டர்ஸ்)
- பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டு 300 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- மே 26: வட கொரியா மேலும் இரண்டு குறுந்தூர ஏவுகணைகளைப் பரிசோதித்தது. (பிபிசி)
- மே 25:
- வெற்றிகரமான அணுகுண்டுப் பரிசோதனையொன்றை நடத்தியதாக வட கொரியா அறிவித்தது. (தினக்குரல்)
- வங்காளதேசம், மற்றும் இந்தியாவின் வடபகுதியைத் தாகிய சூறாவளி ஐலா 212 பேரைக் கொன்றது. (டைம்ஸ்)
- மே 24: நாசாவின் அட்லாண்டிஸ் விண்ணோடம் பூமி திரும்பியது. (நாசா)
- மே 23:
- நேப்பாளத்தின் பிரதமராக மாதவ் குமார் நேப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். (சீஎனென்)
- ஊழல்களில் தொடர்பு கொண்டிருந்த தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ-இயூன் தற்கொலை செய்து கொண்டார். (ஏபி)
- மே 22: இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாகப் பதாவியேற்றார். (ராய்ட்டர்ஸ்)
- மே 21: இந்தியாவின் நாக்பூர் நகருக்கு அருகில் மாவோயிசத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 16 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மே 20: இந்தோனீசியாவின் ஜாவாவில் வான்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 98 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- மே 2: பசிபிக் தீவுகளின் ஒன்றியத்தில் இருந்து பிஜியின் உறுப்புரிமை காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டது. (சின்குவா)
- மே 1: பன்றிக் காய்ச்சல் நோய்க் கிருமிகள் 16 நாடுகளில் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)