இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது பொதுமக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக பன்னாட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தினார். (தமிழ்வின்)
பா. நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை சன்டே டைம்ஸ் செய்தியில் மேரி கொல்வின் விபரமாகக் கூறியுள்ளார். (த டைம்ஸ்)
மே 23: ஐநா செயலாளர் பான் கீ மூன் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட முகாம்களுக்குச் சென்றனர். மோதல் நடைபெற்ற வலயத்திற்கு மேலாக விமானத்தில் சென்று பார்த்தார். (தமிழ்வின்)
நான்காம் கட்ட ஈழப்போரில் மொத்தம் 6,261 படையினர் உயிரிழந்ததாகவும், 30 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் இலங்கை இராணுவம் அறிவித்தது. (ராய்ட்டர்ஸ்)
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்களை, 6 மாதங்களுக்குள் மீள்குடியமர்த்த திட்டமிட்டிருப்பதாக இந்தியாவிடம் இலங்கை அரசு தெரிவித்தது. (தமிழ்வின்)
வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகவும், பல மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவ்வியக்கத்தின் பன்னாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ. பத்மநாதன் தெரிவித்தார். (தமிழ்வின்)
பயங்கரவாதத்திற்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போர் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக இலங்கைப் படைத்துறை ஜனாதிபதியிடம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. (தமிழ்வின்)
விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பா. நடேசன், புலித்தேவன், ரமேஷ், மற்றும் தலைவரின் மகன் சார்ல்ஸ் அந்தனி ஆகியோரது உடலங்களை படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. (தமிழ்வின்)
முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழின அழிப்பின் இறுதிக் கட்டப் போரை இலங்கைப் படையினர் நடத்தினர். (தமிழ்நெட்)
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகளின் பன்னாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ. பத்மநாதன் தெரிவித்தார். (தமிழ்வின்)
வன்னியில் விடுதலைப்புலிகளினால் போர் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 7 படையினர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டனர். (தமிழ்வின்)
துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தனர். (தமிழ்வின்)
72 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து கடைசி 50,000 பொதுமக்கள் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். (தமிழ்வின்)
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் அங்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த ஆறு மருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தனர். (தமிழ்நெட்)
26 ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறினார். (தமிழ்வின்)
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட 3,000 வரையிலான பொதுமக்களின் உடலங்கள் அந்தப் பகுதிகளில் பரவலாக சிதறிக் கிடப்பதாக மருத்துவத் தொண்டர் ஒருவர் கூறினார். (தமிழ்வின்)
இலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (தமிழ்வின்)
வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்தில் வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட 150 பொதுமக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
மே 14: தொடர்தாக்குதலால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மூடப்பட்டு மருத்துவர்கள் பதுங்குகுழிக்குள் தஞ்சமடைந்தனர். கடந்த 48 மணி நேரத்திற்குள் 1700 பேர் வரையில் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்), (தமிழ்வின்), (தமிழ்வின்)
மே 13: இலங்கையின் வட போர் முனையில் இலங்கை படையினர் தொடர்ந்தும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்தார். (தமிழ்வின்)
மே 12: முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டு 56 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
மட்டக்களப்பில் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட எட்டு வயது மாணவி தினுஷிக்கா படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
இங்கிலாந்து பிரதமர் நியமி்த்துள்ள சிறப்பு தூதரான டெஸ் பிரவுன் உள்ளிட்டோர் அடங்கிய நாடாளுமன்றக் குழு ஒன்று கொழும்பு வந்தது. (தமிழ்வின்)
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் இரண்டு நீரூந்து விசைப்படகுகளும், இராணுவத்தினரை தரையிறக்குவதற்கு முற்பட்ட அரோப் படகு ஒன்றும் கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. (தமிழ்வின்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டு 87 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை காணாமல் போயிருந்த மாணவி சதீஸ்குமார் தினுசிக்கா (வயது 8) கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். (தமிழ்வின்)
முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 172 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
வன்னியில் இருந்து உயிர் தப்பிக்க இராமேஸ்வரம் வந்த அகதிகளின் படகு நடுக்கடலில் திசைமாறியதால் 10 தமிழர்கள் இறந்தனர். (தமிழ்வின்)
இலங்கை இராணுவத்தினரின் உத்தியோக பூர்வ இணையத்தளம், மற்றும் லங்காபுவத் என்பன தமிழீழ ஆதரவாளர்கள் சிலரால் இந்த இணையத்தளம் முடக்கப்பட்டு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள இனப்படுகொலை சம்பவங்களை அதில் வெளியிட்டனர். (தமிழ்வின்)