அமேசான் மழைக்காடு

காடு

அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.

அமேசான் மழைக்காடு
Forest
அமேசான் மழைக்காடுகள், பிரேசில்
நாடுகள் பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்குவாடோர், பொலிவியா, கயானா, சுரிநாம், பிரான்சு (பிரெஞ்சு கயானா)
பகுதி தென் அமெரிக்கா
ஆறு அமேசான் ஆறு
பரப்பு 55,00,000 கிமீ² (21,23,562 ச.மைல்)
அமேசான் மழைக்காடுகள், நாசாவின் செய்மதி படம்
அமேசான் மழைக்காடுகள், நாசாவின் செய்மதி படம்
அமேசான் மழைக்காடுகள், நாசாவின் செய்மதி படம்

சிறப்புகள் தொகு

  • உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. [1]
  • உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும்.
  • அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.
  • 2.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவு கொண்ட அமேசான் வடிநிலம், தென் அமெரிக்காவின் 40% ஆகும்.

பல்லுயுரியம் தொகு

உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது.[2] உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 16,000 தாவரவகைகளுக்கும்,39,000 கோடி மரங்களுக்கும் , ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்கும் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Facts of Amazon
  2. The Amazon Rainforest: The World's Largest Rainforest
  3. South American palaeobotany and the origins of neotropical rainforests

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்_மழைக்காடு&oldid=3639066" இலிருந்து மீள்விக்கப்பட்டது