மாவை சேனாதிராஜா

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

மாவை சேனாதிராஜா
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
10 அக்டோபர் 2000 – மார்ச் 2020
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
செப்டம்பர் 7, 1999 – 2000
முன்னையவர்நீலன் திருச்செல்வம்
பதவியில்
1989–1994
முன்னையவர்அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 27, 1942 (1942-10-27) (அகவை 82)
மாவிட்டபுரம், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)241/5, டபிள்யூ. ஏ. சில்வா ஒழுங்கை, வெள்ளவத்தை, இலங்கை
முன்னாள் கல்லூரிஇலங்கைப் பல்கலைக்கழகம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.[1][2] வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,[2] இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]

அரசியலில்

தொகு

சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.[2] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.[2] 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.[2] 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.[2] 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]

சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.[3][4] ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[5] 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.[5][6]

2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.[8][9] 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[10] 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12][13][14]

செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.[15]

தேர்தல் வரலாறு

தொகு
தேர்தல் தொகுதி / மாவட்டம் கட்சி வாக்குகள் முடிவு
1989 நாடாளுமன்றத் தேர்தல்[4] யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 2,820 தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றத் தேர்தல்[7] யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 10,965 தெரிவு
2001 நாடாளுமன்றத் தேர்தல்[10] யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 33,831 தெரிவு
2004 நாடாளுமன்றத் தேர்தல்[11] யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 38,783 தெரிவு
2010 நாடாளுமன்றத் தேர்தல்[12] யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 20,501 தெரிவு
2015 நாடாளுமன்றத் தேர்தல்[16] யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 58,782 தெரிவு
2020 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 20,358 தெரிவு செய்யப்படவில்லை

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Members: Mavai S. Senathirajah". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L. 9th Parliament of Sri Lanka (PDF). Associated Newspapers of Ceylon Limited. p. 306. Archived from the original (PDF) on 2015-06-23.
  3. "Result of Parliamentary General Election 1989" (PDF). Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L. 9th Parliament of Sri Lanka (PDF). Associated Newspapers of Ceylon Limited. p. 182. Archived from the original (PDF) on 2015-06-23.
  5. 5.0 5.1 Jeyaraj, D. B. S. (20-11-2005). "Terror unleashed on Tiger supporters in North-East". Transcurrents. Archived from the original on 2009-11-10. பார்க்கப்பட்ட நாள் 2012-12-21. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "Senathirajah - new TULF MP". தி ஐலண்டு (இலங்கை). 15-08-999. Archived from the original on 2008-10-01. பார்க்கப்பட்ட நாள் 2012-12-21. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. 7.0 7.1 "General Election 2000 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-08-26.
  8. டி. பி. எஸ். ஜெயராஜ். "Tamil National Alliance enters critical third phase - 1". The Daily Mirror இம் மூலத்தில் இருந்து 4-04-2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html. 
  9. "Tamil parties sign MOU". தமிழ்நெட். 20-10-2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400. 
  10. 10.0 10.1 "General Election 2001 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. 11.0 11.1 "General Election 2004 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. 12.0 12.1 "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror. 19-08-2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  15. "இலங்கை வடக்கு மாகாணம் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தேர்வு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 8 செப்டம்பர் 2014. p. 3. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  16. Jayakody, Pradeep (28-08-2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror. http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவை_சேனாதிராஜா&oldid=3918635" இலிருந்து மீள்விக்கப்பட்டது