ஆ. ப. வெங்கடேசுவரன்
ஆயிலம் பஞ்சாபகேசன் வெங்கடேசுவரன் (Ayilam Panchapakeshan Venkateswaran, ஆகத்து 2, 1930 - செப்டம்பர் 3, 2014) இந்தியத் தூதுவரும், முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலரும்,[1] பெங்களூர் ஆசிய நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2] இவர் இந்திய வெளியுறவுச் செயலர்களில் மிகவும் திறமை வாய்ந்தவராகக் கணிக்கப்பட்டார்.[3] 1987 ஆம் ஆண்டில் இவர் தனது பதவியில் இருந்து விலகியமை அக்காலத்தில் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது[4][5][6][7][8][9]
ஏ. பி. வெங்கடேசுவரன் A. P. Venkateswaran | |
---|---|
பிறப்பு | ஆகத்து 2, 1930 பிரம்மபூர், ஒடிசா, இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 3, 2014 பெங்களூர் | (அகவை 84)
பணி | தூதுவர் |
பெற்றோர் | ஏ. எஸ். பஞ்சாபகேச ஐயர் வேதநாயகி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | உஷா |
பிள்ளைகள் | கல்பனா |
வாழ்க்கைச் சுருக்கம்தொகு
வெங்கடேசுவரன் கேரள மாநிலத்தில் பாலக்காட்டுக்கு அருகே உள்ள ஆயிலம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தந்தை பஞ்சாபகேச ஐயர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றியவர்.[10] பின்னர் அரச அதிகாரியாகப் பணியாற்றியவர். ஒடிசாவில் இவர் பணியாற்றும் போது அங்கு பிறந்தவரே வெங்கடேசுவரன்.[10] வெங்கடேசுவரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று அறிவியல், பொருளியல், அரசறிவியல் ஆகியவற்றில் பட்டப்பின் படிப்பை முடித்தார்.[11] 1952 ஏப்ரல் 2 இல் தனது 22வது அகவையில் இந்திய வெளியுறவுத்துறையில் சேர்ந்தார்.[10][12] பணியில் இருந்த காலத்தில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழ்கத்தில் பன்னாட்டு சட்டம் (1952-53) பயின்றார்.
சர்ச்சைதொகு
வெங்கடேசுவரன் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்ட சில காலத்தில், 1986 டிசம்பரில் இசுலாமாபாதில் இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில், வெங்கடேசுவரன் உரையாற்றுகையில், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பாக்கித்தான் உட்பட சார்க் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளுவார் எனக் கூறியிருந்தார். இது குறித்து புதுதில்லியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் பாக்கித்தான் செய்தியாளர் ஒருவர் ராஜீவ் காந்தியிடம் கேட்ட போது, ராஜிவ் காந்தி பின்வருமாறு பதிலளித்தார்:[4] "மிக விரைவில், நீங்கள் ஒரு புதிய வெளியுறவுச் செயலருடன் உரையாடலாம்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த வெங்கடேசுவரன்,[3] தனது பதவி விலகல் கடிதத்தை உடனடியாகவே பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.[10] இது உலக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.[4][6][13][14] பல ஆண்டுகளின் பின்னர், "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது மிகப் பெரிய தவறு என்றும், இதுவே இறுதியில் ராஜீவ் காந்தி படுகொலைக்கு வழிவகுத்தது," என வெங்கடேசுவரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.[15]
பதவிகள்தொகு
வெஙகடேசுவரன் தென்னமெரிக்கா தவிர்த்து, உலகின் பல இடங்களிலும் இந்திய வெளியுறவுப் பணியகங்களின் பணியாற்றியிருந்தார்.[10] அமெரிக்கா, சீனா, சிரியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.[10] ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியப் பிரத்நிதியாகப் பணியாற்றிய பின்னர் 1986 இல் இந்தியா திரும்பினார். 1986 இல் இவர் வெளியுறவுச் செயலராக ராஜீவ் காந்தியினால் நியமிக்கப்பட்டார்.[10]
பணியகம் | நிலை | காலம் |
---|---|---|
பிராகா தூதரகம் | அதிகாரி | 1955 - 1957 |
நியூயார்க் துணைத்தூதரகம் | துணைத்தூதர் | 1957 - 1959 |
அடிஸ் அபாபா தூதரகம் | செயலாளர் | 1959 - 1962 |
வெளியுறவு அமைச்சு, புதுதில்லி | துணைச் செயலர் | 1962 - 1964 |
மாஸ்கோ தூதரகம் | செயலர் | 1964 - 1967 |
பான் துணைத்தூதரகம் | துணைத்தூதர் | 1967 - 1969 |
பிஜி தூதரகம் | தூதர் | 1969 - 1971 |
தொழிற்துறை மையம் - ஹார்வர்டு பல்கலைக்கழகம் | Fellow | 1974 - 1975 |
வாசிங்டன், டி. சி. தூதரகம் | தூதர் | 1975 - 1976 |
திமிஷ்கு தூதரகம் | தூதர் | 1976 - 1977 |
ஐக்கிய நாடுகள் அவை | பிரதிநிதி | 1980 - 1982 |
பெய்ஜிங் தூதரகம் | தூதர் | 1982 - 1986 |
இந்திய அரசு | வெளியுறவுச் செயலர் | 1986 - 1987 |
1987 இல் அரசுப் பணியில் இருந்து பதவி விலகிய பின்னர், பெங்களூரில் ஆசிய மையம் என்ற பெயரில் தூதுவர்களுக்கும் அறிவாளிகளுக்குமான நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
இவற்றையும் பார்க்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Former Foreign Secretary A P Venkateswaran passes away". United News of India. 04 செப்டம்பர் 2014. 2014-09-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 செப்டம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ "Asia Centre". website. Asia Centre. 2014. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Former foreign secretary Venkateswaran cremated in Bangalore". The New Indian Express. 4 September 2014. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 4.2 Express News Service (29 September 2013). "History repeats itself, says former foreign secy". 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ S. R. Maheswari (01 January 2001). Indian Administration. Orient Blackswan. பக். 237 of 666 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8125019886. http://www.amazon.in/Indian-Administration-S-R-Maheshwari/dp/812501988X/ref=sr_1_2?s=books&ie=UTF8&qid=1409801865&sr=1-2&keywords=indian+administration.
- ↑ 6.0 6.1 Steven R Weisman (February 8, 1987). "Gandhi Actions Stir Strong Criticism". New York Times. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Telegraph". The Telegraph. 26 May 2010. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Associated Press". The Associated Press. January 20, 1987. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jayanta Bandyopadhyaya (2003). The Making of India's Foreign Policy. Allied Publishers. பக். 270 of 310 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788177644029. http://catalogue.nla.gov.au/Record/1040461.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 "Manorama Online". web article. Manorama Online. 04 September 2014. 4 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ "Madras Christian College - Some Outstanding Alumni of the College". website. Madras Christian College. 2014. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Profile". Jagaranrosh.com. 03 September 2014. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ "Associated Press". Associated Press. January 20, 1987. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "An avoidable blunder". India Today. February 15, 1987. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ P. C. Vinoj Kumar (04 November 2006). "I am not sure if Prabhakaran ordered Rajiv's assassination". Tehelka. 4 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)
வெளி இணைப்புகள்தொகு
- "Profile on Zoom Info". Zoom Info. 2014. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- P. C. Vinoj Kumar (04 November 2006). "I am not sure if Prabhakaran ordered Rajiv's assassination". Tehelka. 4 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - "List of Articles on India - Sri Lanka relationship". Sangam.org. 4 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ஜயந்தா பந்தோபாத்யாயே (2003). The Making of India's Foreign Policy. Allied Publishers. பக். 270 of 310 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788177644029. http://catalogue.nla.gov.au/Record/1040461.