ஐரோப்பிய நாடாளுமன்றம்

ஐரோப்பிய நாடாளுமன்றம் (European Parliament, EP) ஐரோப்பிய ஒன்றியத்தின் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற அமைப்பாகும். ஐரோப்பிய ஒன்றியப் பேரவை, ஐரோப்பிய அணையத்துடன் ஒருங்கிணைந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவாக்கச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. இந்த நாடாளுமன்றத்தில் 751 (முன்னதாக 766) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்; இந்திய நாடாளுமன்றத்தை அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரும் வாக்காளர்களைக் கொண்ட மக்களாட்சி அமைப்பாகவும் நாட்டு எல்லைகளைக் கடந்த மிகப் பெரிய மக்களாட்சி அமைப்பாகவும் விளங்குகின்றது; தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 2009இல் 375 மில்லியனாக இருந்தது.[3][4][5]

ஐரோப்பிய நாடாளுமன்றம்
8வது ஐரோப்பிய நாடாளுமன்றம்
Coat of arms or logo
தலைமை
தலைவர்
மார்ட்டின் சுல்ட்சு
1 சூலை 2014
துணைத்தலைவர்கள்

1 சூலை 2014
மிகப் பெரும்பான்மைக் கட்சியின்
தலைவர்
மான்பிரெட் வெபர், ஐரோப்பிய மக்கள் கட்சி
4 சூன் 2014
இரண்டாவது மிகப்பெரும் கட்சியின்
தலைவர்
கியான்னி பிட்டெல்லா, எஸ் & டி
1 சூலை 2014
கட்டமைப்பு
உறுப்பினர்கள்751 ஐ.நா.உ
European Parliament as of June 2015.svg
அரசியல் குழுக்கள்
Commission Majority[1] (472)
  •      EPP (214)
  •      S&D (189)
  •      ALDE (69)

Opposition and Non-Aligned (276)

Vacant (3)
செயற்குழுக்கள்
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தேர்தல்கள்
Party list, STV and First-past-the-post[2]
அண்மைய தேர்தல்
22–25 May 2014
அடுத்த தேர்தல்
2019
கூடும் இடம்
European Parliament, Plenar hall.jpg
1st: Louise Weiss: ஸ்திராஸ்பூர்க், France (image)
2nd: Espace Léopold: பிரசெல்சு, Belgium
Secretariat: Luxembourg & Brussels
வலைத்தளம்
europarl.europa.eu
பிரசெல்சிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடம்
"ஐரோப்பிய நாடாளுமன்றம்" ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவல்முறை மொழிகளில் (பிரெசலில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில்)

1979ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பொது வாக்குரிமை மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இருப்பினும், ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான வாக்காளர் பங்கேற்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது; 1999 முதல் இது 50%க்கும் குறைவாக இருந்து வருகின்றது. 2014ஆம் ஆண்டில் 42.54% வாக்காளர்களே வாக்களித்தனர்.[6]

குறிப்புகள்தொகு

  1. Participates in Commission but considers itself non-aligned.

மேற்சான்றுகள்தொகு

  1. Even if the European Commission lacks some characteristics of a normal Government, there is an agreement between the main Pro-European forces in the EP on supporting the European Executive. This could be seen as an informal Grand Coalition. See: http://www.alde.eu/nc/press/press-and-release-news/press-release/article/epp-sd-and-alde-to-form-a-stable-majority-in-the-ep-for-the-next-european-commission-43155/
  2. A single constituency, the German-speaking electoral college in Belgium, also uses First-past-the-post to elect its single MEP
  3. Brand, Constant; Wielaard, Robert (8 June 2009). "Conservatives Post Gains In European Elections". The Washington Post. Associated Press. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/06/07/AR2009060702402.html. பார்த்த நாள்: 17 August 2010. 
  4. Ian Traynor (7 June 2009). "Misery for social democrats as voters take a turn to the right". The Guardian (UK). http://www.guardian.co.uk/politics/2009/jun/07/eu-elections-social-democrats. பார்த்த நாள்: 17 August 2010. 
  5. "18 new MEPs take their seats". European Parliament. 10 January 2012. 11 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Results of the 2014 European elections". European Parliament. 2021-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-30 அன்று பார்க்கப்பட்டது.