இசுடீவன் இலோவென்
இக்யெல் இசுடீபன் இலோவென் (Kjell Stefan Löfven, பிறப்பு: 21 சூலை 1957) சுவீடிய அரசியல்வாதியும் தற்போது சுவீடனின் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளவரும் ஆவார். 2012 முதல் சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் சுவீடிய எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தமது வாழ்க்கையை ஓர் பற்ற வைப்போராகத் துவங்கிய இலோவென் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்று விரைவிலேயே சுவீடனின் தொழிற்சங்க அமைப்பான ஐஎஃப் மெட்டலுக்குத் தலைவரானார்; 2006 முதல் 2012 வரை இப்பொறுப்பில் இருந்தார்.[1][2]
இசுடீவன் இலோவென் | |
---|---|
33வது சுவீடன் பிரதமர் அறிவிப்பு | |
பதவியில் அக்டோபர் 2014 | |
Succeeding | பிரெடெரிக் ரீன்பெல்ட் |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 சனவரி 2012 | |
பிரதமர் | பிரெடெரிக் ரீன்பெல்ட் |
முன்னையவர் | ஆகன் யுகோல்ட் |
பின்னவர் | அறிவிக்கப்படவில்லை |
தலைவர், சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 சனவரி 2012 | |
முன்னையவர் | ஆகன் யுகோல்ட் |
ஐஎஃப் மெட்டல் தொழிற்சங்கத் தலைவர் | |
பதவியில் 1 சனவரி 2006 – 27 சனவரி 2012 | |
முன்னையவர் | புதிய அலுவலகம் |
பின்னவர் | ஆன்டெர்சு பெர்பெ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூலை 1957 ஸ்டாக்ஹோம், சுவீடன் |
அரசியல் கட்சி | சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி |
துணைவர் | உல்லா இலோவென் |
முன்னாள் கல்லூரி | உமீயா பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தாம் முன்னின்று வழிநடத்திய சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு 31.3% வாக்குகள் கிடைத்த நிலையில் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். சுவீடனின் பசுமைக் கட்சியினருடனும் மற்றபிற "இனவாத-எதிர்ப்பு" கட்சிகளுடனும், கூட்டணி அமைத்து அரசு அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Ordförandens sida" (in Swedish). IF Metall. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2012.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Trade Union leader new chairman of the Social Democrats - Stockholm News". Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)