விண்ணோடம் 2

ஸ்பேஸ்ஷிப்டூ (SpaceShipTwo) என்பது விண்வெளிச் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்ட துணை விண்வெளிப் பாதை வான் செலுத்தி விண்ணூர்தி ஆகும்.

ஸ்பேஸ்ஷிப் டூ
ஸ்பேஸ்சிப் டூ அதனை சுமந்து செல்லும் ஒயிட் நைட் டூ இணைக்கப்பட்டுள்ளது.
வகை பயணிகள் விண்வெளி விமானம்
உற்பத்தியாளர் விண்வெளி கப்பல் கம்பெனி
முதல் பயணம் 10 அக்டோபர் 2010 (முதல் சறுக்கு விமானம்)

29 ஏப்ரல் 2013 (முதல் விமானம் இயங்கும்)

தற்போதைய நிலை ஆற்றல்மிக்க விமான சோதனை திட்டம் நடைபெறுகிறது.
பயன்பாட்டாளர்கள் Virgin Galactic
முன்னோடி ஸ்பேஸ்சிப் ஒன்

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் வர்ஜின் குழுமம் பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் விமான சேவைகள் நடத்தி வருகிறார். இவர் விண்வெளிச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறார். இதற்காக 150 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொருவரிடமும் வசூலித்து வருகிறார்.[1]

விமானம் தொகு

இதற்காக '‘ஒயிட் நைட் டூ’' என்ற விமானத்தைப்பயன்படுத்த முடிவு செய்துள்ளார். ஒயிட் நைட் டூ கொண்டுசெல்லும் ஸ்பேஸ்ஷிப் டூ என்ற குட்டி விமானத்தை விண்வெளியில் அது பறக்க விடும் என்று கூறப்பட்டுள்ளது.[2] ஸ்பேஸ்ஷிப் டூ எனப்படும் இந்தகுட்டி விமானம் ஒயிட் நைட்டின் கீழ்ப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும், இதில் தான் விண்வெளி சுற்றுலா போகும் பயணிகள் இருப்பார்கள் இது சுமார் 52 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் சக்திகொண்டது. ஒயிட்நைட்டில் இருந்து விடுபட்டு அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் எழும்ப மட்டுமே ஒயிட் நைட் டூ உதவி தேவை கீழே தானாக இறங்கும் வசதி உள்ளது.[3]

பயணம் தொகு

இதன் பயணம் மொத்தம் இரண்டரை மணி நேரம் தான், அதிலும் விண்வெளியில் இருக்கும் நேரம் 6 நிமிடங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

 
ஒய்ட் நைட்டின் கட்டமைப்புடன் சேர்ந்து ஸ்பேஸ்ஷிப் டூ உள்ள படம், அக்டோபர் 2010 ல் அமெரிக்காவின் விண்வெளித்தள ஓடுபாதை அர்ப்பணிப்பின் போது. VMS Eve எடுக்கப்பட்ட படம்.VSS Enterprise.

சோதனை ஓட்டம் தொகு

2014ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி நடந்த சோதனை ஓட்டம் தோழ்வியில் முடிந்தது[4]

மேற்கோள் தொகு

  1. விண்வெளிக்கு திகில் பயணம்
  2. [1]
  3. "Virgin Galactic. 8 October 2012. Retrieved 6 July 2013". Archived from the original on 21 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. http://online.wsj.com/articles/virgin-galactic-crash-probe-focuses-on-possible-structural-failure-1414972644

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
White Knight Two
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இதையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்ணோடம்_2&oldid=3591963" இலிருந்து மீள்விக்கப்பட்டது