தேசிய போர் நினைவகம் (கனடா)
தேசிய போர் நினைவகம் (National War Memorial, அல்லது The Response) கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் கூட்டமைப்புச் சதுக்கத்தில் வெங்கலச் சிற்பங்களுடன் கூடிய கருங்கல் வெறுங்கல்லறை ஆகும்; இது கனடாவின் கூட்டரசு போர் நினைவகமாக விளங்குகிறது.[1]
தேசிய போர் நினைவகம் Monument commémoratif de guerre | |
---|---|
கனடா | |
![]() | |
அனைத்துப் போரிலும் மடிந்த கனடியர்கள் | |
திறப்பு | 21 மே 1939
|
அமைவிடம் | |
வடிவமைப்பு | வெர்னான் மார்ச்சு |
துவக்கத்தில் முதல் உலகப் போரை நினைவுறுத்துவதற்காக கட்டப்பட்ட இக்கல்லறை 1982இல் இரண்டாம் உலகப் போர், கொரியப் போர்களில் மடிந்தவர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. 2000இல், இவ்வளாகத்தில் அடையாளம் காணா வீரர்களுக்கான கனடிய கல்லறையும் எழுப்பப்பட்டது. இதன்மூலம் இந்த நினைவகம் கனடாவிற்காக மடிந்த அல்லது வருங்காலத்தில் உயிர் துறக்கவுள்ள அனைத்து கனடியர்களையும் கௌரவிக்கின்றது.
மேற்சான்றுகள்தொகு
- ↑ "ottawakiosk.com". பார்த்த நாள் 8 January 2008.