வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜூலை 2008
- ஜூலை 29: ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து 30 மைல் கிழக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நிகழ்ந்தது. (ஏபிசி)
- ஜூலை 28: ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தமிழரான நவநீதம் பிள்ளை ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ராய்ட்டர்ஸ்)
- ஜூலை 27: இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 16 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூலை 26: 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூலை 25:
- 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்: பெங்களூரில் இடம்பெற்ற ஏழு குண்டுவெடிப்புகளில் 2 பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- லண்டனில் இருந்து 365 பயணிகளுடன் மெல்பேர்ண் சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமானத்தில் ஏற்பட்ட துளை ஒன்றை அடுத்து அது மணிலாவில் அவசரமாகத் தரையிறங்கியது. (ஏஎஃப்பி)
- ஜூலை 22: இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கைத் தீர்மான இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு 19 வாக்குகளால் வெற்றி பெற்றது. (த டைம்ஸ்)
- ஜூலை 21:
- 12 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்த யூகொஸ்லாவியாவின் முன்னாள் அரசுத் தலைவர் ரடோவான் கராட்சிச் சேர்பியாவில் கைது செய்யப்பட்டார். (பிபிசி)
- நேபாளத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராம் பரன் யாதவ் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். (சீனா டெய்லி)
- அமெரிக்க வான்படையின் பி-52 குண்டுவீச்சு விமானம் குவாமுக்கு அருகில் மேற்கு பசிபிக் கடலில் வீழ்ந்தது. (ஏபி)
- ஜூலை 19:
- கம்போடியாவின் இந்துக் கோயில் பிரசாத் பிரா விகார் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடக்க ஆயிரக்கணக்கான தாய் மற்றும் கம்போடியப் படையினர் தத்தமது எல்லைகளில் குவிக்கப்பட்டனர். (பிரான்ஸ் 24)
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 10 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- சிட்னியில் இடம்பெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வில் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த மதகுருக்களினால் கடந்த காலங்களில் பாலியல் துன்புறுத்தலுக்காளான சிறுவர்களுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார். (பிபிசி)
- ஜூலை 16:
- மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பில் கைது செய்யப்பட்டார். (ஏபி)
- ஜூலை 15:
- பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் கலந்து கொள்ளும் உலக இளையோர் நாள் 2008 நிகழ்வுகள் சிட்னியில் ஆரம்பமாயின. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- கிரேக்கத்தில் ரோட்ஸ் தீவில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். (ஏபி)
- ஜூலை 14:
- தார்ஃபூர் போர் - டார்பூரில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் அம்மன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.(பிபிசி)
- மாக்கிமாக்கி ஒரு புதிய குறுங்கோளாக (dwarf planet) அறிவிக்கப்பட்டது. (யுனிவேர்ஸ் டுடே)
- ஜூலை 13: உலக இளையோர் நாள் 2008 நிகழ்வுகளில் கலந்து கொள்ளவென பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் சிட்னி வந்துசேர்ந்தார். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- ஜூலை 12: அலாஸ்காவின் உம்னாக் தீவில் உள்ள ஒக்மொக் மலை வெடித்ததில் தீவின் கிழக்குப் பகுதி மக்கள் வெளியேறினர். (ராய்ட்டர்ஸ்)
- ஜூலை 11: ஐநா பாதுகாப்பு அவையில் சிம்பாப்வே மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தடுத்து நிறுத்தின. (பிபிசி)
- ஜூலை 9:
- அணுக்கரு ஆற்றல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உடன்படிக்கை வரைவு வெளியிடப்பட்டது. (வாஷிங்டன்போஸ்ட்)
- நீண்ட நடுத்தர இலக்குகளை தாக்கியழிக்கும் வீச்சை கொண்ட சஹாப் 3 உட்பட ஒன்பது ஏவுகணை சோதனைகளை ஈரான் மேற்கொண்டது. (ராய்ட்டர்ஸ்)
- ஜூலை 8:
- 2050 ஆம் ஆண்டளவில், புவியை வெப்பமடையச் செய்யும் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 50 வீதத்தால் குறைக்க வேண்டும் என்று டோக்கியோவில் கூடியுள்ள ஜி8 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். (பிபிசி)
- செக் குடியரசில் ஐக்கிய அமெரிக்காவின் ஏவுகணை தற்காப்புக் களம் ஒன்றை நிறுவுவதற்கு இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தன. (ஏபி)
- ஜூலை 7:
- பிரசாத் பிரா விகார் என்ற கம்போடியாவின் 11ம் நூற்றாண்டு இந்துக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. (தி ஐலண்ட்)
- 2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியத் தூதரகத்துக்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர். (ஹிண்டு)
- ஜூலை 6:
- இந்தியத் துடுப்பாட்ட அணியை 100 ஓட்டங்களால் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. (தினக்குரல்)
- விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரஃபயெல் நடால் சுவிட்சர்லாந்தின் ரொஜர் ஃபெடரரை 6-4, 6-4, 6-7 (5), 6-7 (8), 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதற்தடவையாக விம்பிள்டன் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றார். (பிபிசி)
- டோக்கியோவில் இடம்பெறவிருக்கும் ஜி8 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவென உலகத் தலைவர்கள் ஜப்பான் வந்தடைந்தனர். (ரொய்ட்டர்ஸ்)
- பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செம்மசூதிக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். (கார்டியன்)
- ஜூலை 5: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அவரது சகோதரி செரீனா வில்லியம்சை 7-5, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஐந்தாவது தடவையாக விம்பிள்டன் வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார். (பிபிசி)
- ஜூலை 2:
- 31 ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 விண்கலம் சூரியனின் அதிர்ச்சி அலைகள் குறித்து தகவல்களை அனுப்பியது. (டெய்லி டெலிகிராப்)
- கொலம்பியாவில் கொலம்பிய புரட்சி இராணுவப் படையினரால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட அரசியல்வாதி இங்கிறிட் பெட்டன்கோர்ட், மூன்று அமெரிக்கர்கள் உட்பட 14 பேர் கொலம்பிய அரசு அதிரடித் தாக்குதல் நடத்தி விடுவித்தது. (பிபிசி)
- ஜூலை 1: மங்கோலியாவில் தேர்தல்களை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து அங்கு அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. (பிபிசி)