ரொஜர் பெடரர்

(ரொஜர் ஃபெடரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரோஜர் ஃபெடரர் (பிறப்பு - ஆகத்து 8, 1981) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிசு வீரர். 20 கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளார். மேலும், மொத்தம் 302 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தவராகவும், தொடர்ச்சியாக 237 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தமையும் இவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும்.

ரொஜர் பெடரர்
2009 அனைவருக்குமான ஆத்திரேலிய டென்னிசு போட்டியில் பெடரர்
நாடு சுவிட்சர்லாந்து
வாழ்விடம்பாட்மின்ஜென், சுவிட்சர்லாந்து
உயரம்1.85 மீ
தொழில் ஆரம்பம்1998
விளையாட்டுகள்வலதுகை ஆட்டக்காரர், பின்கையாட்டம் ஒருகை கொண்டு ஆடவல்லவர்
பரிசுப் பணம்அமெரிக்க டாலர்130,594,339
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்1251–275 (82 %)
பட்டங்கள்103
அதிகூடிய தரவரிசை1 (பெப்ரவரி 2, 2004)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (2004, 2006, 2007, 2010, 2017, 2018)
பிரெஞ்சு ஓப்பன்W (2009)
விம்பிள்டன்W (2003, 2004, 2005, 2006, 2007,2009, 2012,2017)
அமெரிக்க ஓப்பன்W (2004, 2005, 2006, 2007, 2008)
ஏனைய தொடர்கள்
Tour FinalsW (2003, 2004, 2006, 2007, 2010, 2011)
ஒலிம்பிக் போட்டிகள்2ம் இடம் (2012)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்131–93
ஒலிம்பிக் போட்டிகள் Gold Medal (வார்ப்புரு:OlympicEvent)
இற்றைப்படுத்தப்பட்டது: சூலை 5, 2009.

இவர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட் சிலாம் (6 ஆத்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்சு ஓப்பன், 5 அமெரிக்க ஓப்பன், 8 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். தவிர நான்கு (ஆத்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற எட்டு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 29 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோசர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும். மேலும் தொடர்ச்சியாக 23 முறை கிராண்ட்சிலாம் போட்டிகளின் அரையிறுதியில் விளையாடியதும் இவரது முக்கியச் சாதனைகளுள் ஒன்றாகும். அதாவது 2004 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியின் அரையிறுதி முதல் 2010 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் போட்டி வரை தொடர்ச்சியாக 23 கிராண்ட்சிலாம் அரையிறுதிகளில் அவர் விளையாடியுள்ளார். அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 2005 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டி முதல் 2008 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் வரை நடந்த 19 கிராண்ட்சிலாம் போட்டிகளில் 18 போட்டிகளின் இறுதியாட்டத்தில் பெடரர் விளையாடியுள்ளார். இவ்வரியசெயல்களால் அவரை டென்னிசு உலகின் முடிசூடா மன்னனாக விளங்கச் செய்கின்றன. பெட் எக்ஸ்பிரசு என்றும், சுவிசு மேசுட்ரோ' என்றும் அவர் புகழப்படுகிறார்.

குழந்தைப் பருவமும் சொந்த வாழ்க்கையும்

தொகு

பெடரர் சுவிட்சர்லாந்தின் பேசல் நகரின் அருகில் உள்ள பென்னிஞ்சேன் ஊரில் சுவிட்சர்லாந்து குடிமக்களாகிய ராபர்ட் பெடரெர் - லிநெட் டு ராண்ட் (தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்)தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெடரெர் சுவிட்சர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் பிரான்சிய-இடாய்ச்சுலாந்திய எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள முன்சென்சுட்டைன், பேசலுக்கு அருகிலுள்ளது, புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார். பெடரெர் சுவிசு-இடாய்ச்சு, இடாய்ச்சு, பிரரன்சியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். அனைத்து சுவிட்சர்லாந்து ஆண் குடிமக்களைப் போலவே ரோச்யர் பெடரெரும் சுவிட்சர்லாந்து படைத்துறையில் (இராணுவத்தில்) பணியாற்றினார். ஆயினும் 2003-ஆம் வருடம் அவரது முதுகு வலியின் காரணமாகப் படைப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

திருமணமும் குடும்பமும்

தொகு

பெடரெர், முன்னாள் பெண்கள் டென்னிசுக் கூட்டமைப்பின் ஆட்டக்காரியான மிர்கா வாவ்ரிநெக்கை மணம் புரிந்துள்ளார். இருவரும் 2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காக விளையாட சென்ற பொது சந்தித்துக் கொண்டனர். வாவ்ரிநேக் 2002-ஆம் ஆண்டு கால் காயம் காரணமாக ஒய்வு பெற்றார். அப்போதிலிருந்து பெடரெரின் பொதுத் தொடர்பு மேலாளராக இருந்து வருகிறார். இருவரும் ஏப்பிரல்-11,2009, அன்று நண்பர்களும் குடும்பத்தாரும் சூழ பேசலில் மணம் புரிந்தனர். மிர்கா சூலை-23,2009, அன்று, மைலா ரோசு, சார்லின் ரிவா எனும் இரட்டை பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தார்.

தொண்டும் சிறப்பும்

தொகு

பெடரெர் பல்வேறு வித தொண்டூழியப் பணிகளைச் செய்து வருகிறார். அவர் 2003-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் அறநிறுவனத்தை அமைத்து பொருளாதாரத்தில் பின்பற்றிய மக்களுக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். 2005-ஆம் வருடம் காத்ரீனா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் விதமாக அவ்வாண்டு யுஎசு ஓபன் போட்டியில் பயன்படுத்திய மட்டைகளை ஏலம் விட்டார். 2004—ஆம் வருடம் யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பின், அவர் இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பாதித்த தமிழ்நாட்டின் பகுதிகளை பார்வையிட்டார். மேலும் யூனிசெப்பால் நடத்தப்பட்ட எய்ட்சு விழிப்புணர்வு கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 2010-ஆம் வருடம் ஃகையிட்டி (Haiti) நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் அவ்வாண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பயிற்சி ஆட்டங்களின் கடைசி நாளன்று, ஃகிட் ஃபார் ஃகையிட்டி (Hit For Haiti) எனும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். அதில் அவருடன் உடன்பணியாற்றும் வீரர் வீராங்கனைகளான ரபேல் நடால், நோவக் ஜோகோவிச், ஆண்டி ராடிக், லெயுட்டன் ஹெவிட், கிம் கிளைஸ்டர்ஸ், செரீனா வில்லியம்ஸ் மற்றும் சமந்தா ஸ்டோசர் ஆகியோர் பங்கேற்ற ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் ஃகையிட்டி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

டென்னிசு வாழ்க்கை

தொகு

1998-க்கு முன்: இளநிலை ஆண்டுகள்

தொகு

பெடரெர் விம்பிள்டனில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை ஒரே வருடத்தில்(1998) வென்றார். ஒற்றையர் பட்டத்தை இரக்லி லபத்ஃசு எனும் வீரரை 6-4,6-4 எனும் தொகுப்பு கணக்கில் வென்றார். இரட்டையரில் ஆலிவர் ரோகசுடன் இணண சேர்ந்து ஆண்டி ராம்- மைக்கேல் லொட்ற இணையை 6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கில் வென்றனர். மேலும் அவ்வாண்டு அமெரிக்க ஒப்பனிலும் இளநிலை போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்றார். இறுதி ஆட்டத்தில் டேவிட் நல்பாந்தியனிடம் 3-6,5-7 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார்.மேலும் 4 ITF இளநிலை ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். அதில் மிகவும் புகழ் பெற்ற ஆரஞ்சு கிண்ணமும்(Orange Bowl) அடங்கும். அதன் இறுதிப் போட்டியில் அவர் கில்லர்மோ கொரியா-வை 7-5,6-3 என்ற தொகுப்பு கணக்கில் வென்றார். 1998-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் உலக அளவில் இளநிலை பிரிவில் முதன்மை ஆட்டக்காரராக முடித்தார்.

1998-2002:ஏடிபியில் ஆரம்ப வருடங்கள்

தொகு
 
பெடரர் 2002-ஆம் வருட யூ.எஸ். ஓப்பன் போட்டியில்

தொழில் முறை ஆட்டக்காரராக ரோஜெர் பெடரெர் பங்கேற்றது 1998-இல். அவ்வாண்டு Gstaad-இல் நடைபெற்ற போட்டியில் லூகாசு அர்னால்ட் கேர்-ஐ சந்தித்தார். முதல் போட்டியான அதில் 4-6,4-6 என்ற தொகுப்பு கணக்கில் தோல்வி அடைந்தார். ரோஜெர் பெடரெர் எட்டிய முதல் இறுதிப் போட்டி மார்செஇல் ஓப்பன் (2000-ஆம் வருடம்) போட்டியாகும். இறுதி ஆட்டத்தில் சக சுவிட்சர்லாந்து வீரரான மார்க் ரோசட்டிடம் 6-2,3-6,6-7(5) என்ற தொகுப்பு கணக்கில் தோற்றார். 2001-ஆம் ஆண்டு மார்டினா ஃகிங்கிச்சுடன் இணை சேர்ந்து ஃகாப்மேன் கோப்பையை சுவிட்சர்லாந்து சார்பில் வென்றார். அவரின் முதல் தொழில்முறை தனிநபர் கோப்பை 2001-ஆம் ஆண்டு மிலன் உள்விளையாட்டரங்க போட்டியில் பெற்றார். அவர் இறுதி ஆட்டத்தில் சூலியன் போட்டேரை 6-4,6-7(7),6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். 2002-ஆம் ஆண்டு அவர் பிரெஞ்சு ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். விம்பிள்டனில் பீட் சாம்ப்ராசை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இக்காலகட்டத்தில் அவர் தகுதி பெற்ற மிக முக்கியமான இறுதி சுற்று ஆட்டம் 2002-ஆம் வருட மியாமி மாசுட்டர்சு (கடின ஆடுகளம்) போட்டியாகும். அதில் அவர் அமெரிக்க நாட்டவரான ஆந்த்ரே அகாசியிடம் 3-6,3-6,6-3,4-6 என்ற தொகுப்பு கணக்கில் தோற்றார். மேலும் அவ்வாண்டு ஃகேம்பர்க் மாசுட்டர்சு (களிமண் ஆடுகளம்) போட்டியில் மாரட் சபினை 6-1,6-3,6-4 என்ற தொகுப்பு கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். அப்போட்டியில் வென்றதன் மூலம் தரவரிசைப் பட்டியலில் முதல் 10-க்குள் புகுந்தார். பெடரெர் இக்கால கட்டத்தில் ஒற்றையர் 10 இறுதி ஆட்டங்களில் பங்கேற்று 4-இல் வெற்றியும் 6-இல் தோல்வியும் கண்டார்.

2003-2006:முன்னாண்மை

தொகு

2003-ஆம் ஆண்டு ரோஜெர் பெடரெர் தனது முதல் கிராண்டு சிலாம் பட்டத்தை விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மார்க் பிலிப்போசிசை 7-6(5),6-2,7-6(3) என்ற தொகுப்புக் கணக்கில் வென்று கைப்பற்றினார்.[1] பெடரெர் தனது முதல் மற்றும் ஒரே இரட்டையர் மாசிட்டர்சு பட்டத்தை அவ்வாண்டு நடைபெற்ற மியாமி மாசிட்டர்சு-1000 போட்டியில் வென்றார். அதில் அவர் மாக்ஃசு மிர்நியுடன் இணை சேர்ந்து ஆடினார். மேலும் அவ்வாண்டு ரோம் மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டியையும் எட்டினார். 2003-ஆம் வருடம் ரோச்யர் பெடரெர் ஒன்பது ஏ.டி.பி இறுதிப் போட்டிகளை எட்டி அதில் ஏழு போட்டிகளை வென்றார். அவற்றுள் துபாய்-500, வியன்னா-500 போட்டிகளும் அடங்கும். மேலும் வருடக் கடைசி ஏ.டி.பி போட்டியை ஆந்த்ரே அகாசியைத் தோற்கடித்து வென்றார்.

2004-ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரே ஆண்டில் மூன்று கிராண்டு சிலாம் பட்டங்களை வென்றார். இதற்கு முன் இச்சாதனையை மாட்ஃசு விலாண்டர் 1988-ஆம் ஆண்டு எட்டினார். 2004-ஆம் ஆண்டு ஆத்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் மாரட் சபினை 7-6(3),6-2,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். அவ்வாண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 4-6,7-5,7-6(3),6-4 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூஎசு ஓப்பன் இறுதிப் போட்டியில் லெயுட்டன் ஃகெவிட்டை 6-0,7-6(3),6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து பட்டங்களைக் கைப்பற்றினார். மேலும் அவ்வாண்டு மூன்று ஏடிபி 1000 பட்டங்களையும் துபாய் ஏடிபி-500 பட்டத்தையும் ஆண்டிறுதி ஏடிபி பட்டதையும் கைப்பற்றினார்.

 
2005 விம்பிள்டன் சுற்றுப்போட்டியில் பெடரர், இதன்போது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பட்டம் வென்றார்

2005-ஆம் ஆண்டு ரோஜெர் பெடரெர் முதல் இரண்டு கிராண்டு சிலாம் பட்டங்களின் இறுதி போட்டிகளை எட்டத் தவறினார். ஆத்திரேலிய ஓப்பன் அரை இறுதிப் போட்டியில் மாரட் சபினிடமும் பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடமும் வீழ்ந்தார். ஆயினும் புல்தரை ஆடுகளத்தில் தன்னுடைய முன்னாண்மையை விம்பிள்டன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றதன் மூலம் நிறுவினார். அதில் ஆண்டி ராடிக்கை 6-2,7-6(2),6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். யூஎசு ஓப்பன் இறுதிப் போட்டியில் ஆந்த்ரே அகாசியை 6-3,2-6,7-6(1),6-1 என்ற தொகுப்புக் கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும் அவ்வாண்டு 4 ஏடிபி மாசிட்டர்ஸ்-1000 பட்டங்களையும், 2 ஏடிபி-500 பட்டங்களையும் வென்றார். ஆனால் ஆண்டிறுதி ஏடிபி இறுதிப் போட்டியில் டேவிட் நல்பந்தியனிடம் தோல்வியுற்றார்.

2006-ஆம் ஆண்டு மூன்று கிராண்டு சிலாம் பட்டங்களை வென்றார். மேலும் பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டிவரை முன்னேறினார். அதில் ரபேல் நடாலிடம் 1-6,6-1,6-4,7-6(4) என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். இருவரும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மீண்டும் சந்தித்தனர். அதில் ரோஜெர் பெடரெர் 6-0,7-6(5),6-7(2),6-3 என்ற தொகுப்புக் கணக்கில் வெற்றி கண்டார். இவ்வருடம் தான் பெடரேருக்கும் நடாலுக்கும் இடையேயான போட்டாபோட்டி வலுப்பெற்றது. ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மார்க்ஸ் பாக்தாதிசை 5-7,7-5,6-0,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 6-2,4-6,7-5,6-1 என்ற தொகுப்புக் கணக்கிலும் வென்று பட்டங்களைக் கைப்பற்றினார். அவ்வாண்டு 6 ஏடிபி மாஸ்டர்ஸ்-1000 இறுதிப் போட்டிகளை எட்டினார். அவற்றில் 4 கடின ஆடுகளப் போட்டிகளை வென்றார். 2 களிமண் ஆடுகள இறுதிப் போட்டிகளை ரபேல் நடாலிடம் தோற்றார். மேலும் ஒரு ஏடிபி-500 போட்டியையும் (டோக்யோ) ஆண்டிறுதி ஏடிபி இறுதிப் போட்டியையும்(மூன்றாம் முறையாக) வென்றார்.

2007-முதல் இன்று வரை: சாதனைகள் படைத்தலும் மேன்மை அடைதலும்

தொகு

2007-ஆம் ஆண்டு 4 கிராண்டு சிலாம் போட்டிகளிலும் இறுதிப் போட்டியை எட்டி அவற்றுள் மூன்றை வென்றார். ஆத்திரேலிய ஓப்பனில் பெர்னாண்டோ கோன்சாலேசை 7-6(2),6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கிலும் விம்பிள்டனில் ரபேல் நடாலை 7-6(7),4-6,7-6(3),2-6,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் யூ.எசு. ஓப்பனில் நோவாக் சோகோவிச்சை 7-6(4) ,7-6(2),6-4என்ற தொகுப்பு கணக்கிலும் வெற்றி கண்டார். பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6-3,4-6,6-3,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் இவ்வாண்டு 5 ஏடிபி மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டிகளை எட்டி அவற்றில் இரண்டை(ஃகாம்பர்கு, மாட்ரிட்) வென்றார். துபாய் ஓப்பன் போட்டி மற்றும் ஆண்டிறுதி ஏடிபி போட்டிகளையும் வென்றார்.

 
2008 ஒலிம்பிக் போட்டியில் பெடரர், இங்கே இவர் இரட்டையரில் தங்கம் வென்றார்

2008-ஆம் வருடம் ரோஜர் பெடரர் ஒரே ஒரு கிராண்ட் ஸ்லாம் கோப்பையை மட்டுமே கைப்பற்றினார். அது யூ.எசு. ஓப்பன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆண்டி முர்ரேவை 6-2,7-5,6-2 என்ற தொகுப்பு கணக்கில் தோற்கடித்து வென்றார். இவ்வாண்டு பிரெஞ்சு ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் ரபேல் நடாலிடம் முறையே 6-1,6-3,6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் 6-4,6-4,6-7(5),6-7(8),9-7 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். ஆத்திரேலிய ஓப்பன் அரை இறுதி ஆட்டத்தில் நோவாக் சோகொவிச்சிடம் வீழ்ந்தார். மேலும் இரண்டு ஏடிபி-1000 இறுதி ஆட்டங்களில் நடாலிடம் தோல்வியுற்றார். ஆயினும் இரண்டு ஏடிபி-250 கோப்பைகளை (எசுட்டோரில், ஃகேல்) கைப்பற்றினார். ஒரு ஏடிபி-500 கோப்பையை பேசல் போட்டியில் கைப்பற்றினார். இவ்வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சக நாட்டவரான தனிசுலாசு வாவ்ரின்காவுடன் இணண சேர்ந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

2009-ஆம் வருடம் ரோஜெர் பெடரர் இரண்டு கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளைக் கைப்பற்றினார். பிரெஞ்சு ஒப்பன் இறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கை 6–1, 7–6(1), 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 5–7, 7–6(6), 7–6(5), 3–6, 16–14 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து கோப்பைகளைக் கைப்பற்றினார். மேலும் ஆஸ்திரேலிய ஒப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 7–5, 3–6, 7–6(3), 3–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூ.எஸ். ஒப்பன் இறுதிப் போட்டியில் டெல் போட்றோவிடம் 3–6, 7–6(5), 4–6, 7–6(4), 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். மற்றும் இரண்டு கோப்பைகளையும் இவ்வருடம் பெடரர் கைப்பற்றினார். மாட்ரிட் மாஸ்டர்ஸ்(களிமண் ஆடுகளம்) இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை 6–4, 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ்(கடின ஆடுகளம்) இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை 6–1, 7–5 என்ற தொகுப்புக் கணக்கிலும் வெற்றிகொண்டு கோப்பைகளைக் கைப்பற்றினார். இருப்பினும் பேசல் கோப்பையில் ஜோகொவிச்சிடம் 6–4, 4–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார்.

2010-ஆம் வருடம் பெடரர் மேலும் பல சாதனைகளையும் டென்னிசு மைல்கல்களையும் எட்டினார். இவ்வாண்டு ஆஸ்திரேலிய ஒப்பன் கோப்பையை ஆண்டி முர்ரேவை 6–3, 6–4, 7–6(11) என்ற தொகுப்புக் கணக்கில் வென்று கைப்பற்றினார். ஆனால், பிரெஞ்சு ஒப்பன் போட்டியில் காலிறுதியோடு வெளியேறினார். 2004-பிரெஞ்சு ஒப்பனுக்கடுத்து இம்முறையே கிராண்ட் சலாம் போட்டியில் அரையிறுதியை எட்டாமல் வெளியேறினார். இதற்குள் 23 கிராண்ட் சலாம் போட்டிகளில் தொடர்ச்சியாக அரையிறுதிகளை எட்டியுள்ளார். இருப்பினும் தனது 700-வது டென்னிஸ் போட்டியையும் 150-வது களிமண் ஆடுகள போட்டியையும் வென்றார். பிரெஞ்சு ஒப்பன் காலிறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கிடம் 3–6, 6–3, 7–5, 6–4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விம்பிள்டனிலும் காலிறுதியோடு தோற்று வெளியேறினார். தாமஸ் பெர்டிச்சிடம் 6–4, 3–6, 6–1, 6–4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். தனது 200-வது கிராண்ட் சலாம் தனிநபர் போட்டியை வென்றாலும் காலிறுதியில் தோற்றதால் தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஒருவாறாக அமெரிக்க ஓபனில் சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறிய அவர் முன்னணி வீரரான செர்பியாவின் நொவாக் சோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.மேலும் மாட்ரிட் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6–4, 7–6 என்ற தொகுப்புக் கணக்கிலும் டொராண்டோ மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடமும் தோல்வியுற்றார். ஆனால் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் கோப்பையை கைப்பற்றி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு கோப்பையை வென்றார். அதன் பின் பெடரர் ஒரு ஏடிபி-250,ஒரு ஏடிபி-500 கோப்பைகளை வென்றுள்ளார். இதன் மூலம் 64 பட்டங்கள் வென்றிருந்த பீட் சாம்ப்ராசின் சாதனையை விஞ்சினார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடம் தோல்வியுற்றார். பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் அரை இறுதிப் போட்டியில் கைல் மான்பில்சிடமும் தோற்றார். ஆண்டிறுதி ஏடிபி கோப்பை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை 6-3,3-6,6-1 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவரது 66-வது வெற்றிக் கோப்பையாகும்.

2012 ஆண்டின் விம்பிள்டன் ஆட்டத்தில் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற தொகுப்புக் கணக்கில் எடுத்துth தன்னை எதிராக ஆடிய ஆண்டி முர்ரேயைத் தோற்கடித்தார். 2012 இல் இவர் பெற்ற இந்த வெற்றி அவரது ஏழாவது விம்பிள்டன் பட்டமாகும். இப்பட்டத்தினால் டென்னிசு ஆட்டக்காரர்களின் உலகத்தரப் பட்டியலில் முதலாம் இடத்தை தொடர்ந்து 286 ஆவது வாரமாகத் (ஜூலை 8 ஆம் தேதியில் தொடங்கும் வாரம்) தக்கவைத்துக் கொண்டுள்ள பெருமைக்குரியவராகிறார்.[2] 2017 ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3  என்ற செட் கணக்கில் நடாலை வென்றுள்ளார் ஃபெடரர்.[3]

விளையாடியதின் புள்ளிவிவரம்

தொகு

கிராண்ட் சிலாம் காலக்கோடு

தொகு
கோப்பை 1998 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 SR வெ - தோ வெற்றி %
ஆசுத்திரேலிய ஓப்பன் -- ததோ 3சு 3சு 4சு 4சு வெ அஇ வெ வெ அஇ வெ அஇ அஇ அஇ அஇ 3சு அஇ வெ வெ 6 / 19 94–13 87.9
பிரெஞ்சு ஓப்பன் -- 1சு 4சு காஇ 1சு 1சு 3சி அஇ வெ காஇ அஇ காஇ 4சு காஇ பபெ பபெ 1 / 17 65–16 80.25
விம்பிள்டன் -- 1சு 1சு காஇ 1சு வெ வெ வெ வெ வெ வெ காஇ காஇ வெ 2சு அஇ வெ 8 / 19 91–11 89.22
யூ.எசு. ஓப்பன் -- ததோ 3சு 4சு 4சு 4சு வெ வெ வெ வெ வெ அஇ அஇ காஇ 4சு அஇ பபெ காஇ 5 / 16 78–11 87.64
வெற்றி-தோல்வி 0–0 0–2 7–4 13–4 6–4 13–3 22–1 24–2 27–1 26–1 24–3 26–2 20–3 20–4 19–3 13–4 19–4 18–4 10–2 14–0 7-0 19 / 70 321–51 86.29
  • ததோ = தகுதிச்சுற்றில் தோல்வி
  • பபெ = பங்குபெறவில்லை
Finals: 30 (20-10)
முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
வெற்றியாளர் 2003 விம்பிள்டன் புற்றரை   மார்க் பிலிக்போசிசு 7–6(7–5), 6–2, 7–6(7–3)
வெற்றியாளர் 2004 ஆசுதிரேலிய ஓப்பன் செயற்கைத்தரை   மாரட் சவின் 7–6(7–3), 6–4, 6–2
வெற்றியாளர் 2004 விம்பிள்டன் (2) புற்றரை   ஆண்டி ரோடிக் 4–6, 7–5, 7–6(7–3), 6–4
வெற்றியாளர் 2004 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை   லையிடன் எவ்விட் 6–0, 7–6(7–3), 6–0
வெற்றியாளர் 2005 விம்பிள்டன் (3) புற்றரை   ஆண்டி ரோடிக் 6–2, 7–6(7–2), 6–4
வெற்றியாளர் 2005 யூ.எசு. ஓப்பன் (2) செயற்கைத்தரை   அன்ட்ரே அகாசி 6–3, 2–6, 7–6(7–1), 6–1
வெற்றியாளர் 2006 ஆசுதிரேலிய ஓப்பன் (2) செயற்கைத்தரை   மார்க்கோசு பகடடிசு 5–7, 7–5, 6–0, 6–2
இரண்டாமிடம் 2006 பிரெஞ்சு ஓப்பன் களிமண்   ரஃபேல் நடால் 6–1, 1–6, 4–6, 6–7(4–7)
வெற்றியாளர் 2006 விம்பிள்டன் (4) புற்றரை   ரஃபேல் நடால் 6–0, 7–6(7–5), 6–7(2–7), 6–3
வெற்றியாளர் 2006 யூ.எசு. ஓப்பன் (3) செயற்கைத்தரை   ஆண்டி ரோடிக் 6–2, 4–6, 7–5, 6–1
வெற்றியாளர் 2007 ஆசுதிரேலிய ஓப்பன் (3) செயற்கைத்தரை   பெர்னான்டோ கான்சாலசு 7–6(7–2), 6–4, 6–4
இரண்டாமிடம் 2007 பிரெஞ்சு ஓப்பன் (2) களிமண்   ரஃபேல் நடால் 3–6, 6–4, 3–6, 4–6
வெற்றியாளர் 2007 விம்பிள்டன் (5) புற்றரை   ரஃபேல் நடால் 7–6(9–7), 4–6, 7–6(7–3), 2–6, 6–2
வெற்றியாளர் 2007 யூ.எசு. ஓப்பன் (4) செயற்கைத்தரை   நோவாக் ஜோக்கொவிச் 7–6(7–4), 7–6(7–2), 6–4
இரண்டாமிடம் 2008 பிரெஞ்சு ஓப்பன் (3) களிமண்   ரஃபேல் நடால் 1–6, 3–6, 0–6
இரண்டாமிடம் 2008 விம்பிள்டன் புற்றரை   ரஃபேல் நடால் 4–6, 4–6, 7–6(7–5), 7–6(10–8), 7–9
வெற்றியாளர் 2008 யூ.எசு. ஓப்பன் (5) செயற்கைத்தரை   ஆண்டி முர்ரே 6–2, 7–5, 6–2
இரண்டாமிடம் 2009 ஆசுதிரேலிய ஓப்பன் செயற்கைத்தரை   ரஃபேல் நடால் 5–7, 6–3, 6–7(3–7), 6–3, 2–6
வெற்றியாளர் 2009 பிரெஞ்சு ஓப்பன் களிமண்   ராபின் சாடர்லிங் 6–1, 7–6(7–1), 6–4
வெற்றியாளர் 2009 விம்பிள்டன் (6) புற்றரை   ஆண்டி ரோடிக் 5–7, 7–6(8–6), 7–6(7–5), 3–6, 16–14
இரண்டாமிடம் 2009 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை   யுவான் மார்ட்டின் டே போட்ரோ 6–3, 6–7(5–7), 6–4, 6–7(4–7), 2–6
வெற்றியாளர் 2010 ஆசுதிரேலிய ஓப்பன் (4) செயற்கைத்தரை   ஆண்டி முர்ரே 6–3, 6–4, 7–6(13–11)
இரண்டாமிடம் 2011 பிரெஞ்சு ஓப்பன் களிமண்   ரஃபேல் நடால் 5–7, 6–7(3–7), 7–5, 1–6
வெற்றியாளர் 2012 விம்பிள்டன் (7) புற்றரை   ஆண்டி முர்ரே 4–6, 7–5, 6–3, 6–4
வெற்றியாளர் 2017 ஆசுதிரேலிய ஓப்பன் (5) செயற்கைத்தரை   ரஃபேல் நடால் 6–4, 3–6, 6–1, 3–6, 6–3
வெற்றியாளர் 2017 விம்பிள்டன் (8) புற்றரை   மரின் சிலிச் 6-3,6-1,6-4
வெற்றியாளர் 2018 ஆசுதிரேலிய ஓப்பன் (6) செயற்கைத்தரை   மாரின் சில்லிக் 6–2, 6–7(5–7), 6–3, 3–6, 6–1

ஒலிம்பிக் போட்டி

தொகு
இறுதி ஆட்டம்: 2 (1 தங்க பதக்கம், 1 வெள்ளி பதக்கம்)

ஒற்றையர்: 1 (0–1)

தொகு
முடிவு ஆண்டு ஒலிம்பிக் நடந்த இடம் தரை எதிராளி புள்ளிகள்
இரண்டாமிடம் 2012 இலண்டன் புற்றரை   ஆண்டி முர்ரே 2–6, 1–6, 4–6

இரட்டையர்: 1 (1–0)

தொகு
முடிவு ஆண்டு ஒலிம்பிக் நடந்த இடம் தரை இணை எதிராளிகள் புள்ளிகள்
வெற்றியாளர் 2008 பெய்ஜிங் செயற்கைத்தரை   வாவ்ரின்கா   சிம்சன் ஆசுப்பெலின்
  தாமசு சான்சன்
6–3, 6–4, 6–7(4–7), 6–3

பிற செயல்பாடுகள்

தொகு

பெடரர் எனும் டென்னிஸ் நாயகனைத்தாண்டி அவர் ஒரு இணையிலா மனிதர். பியட்ரிஸ் டிநோகோ என்றொரு பதினேழு வயது பெண். கேன்சரால் இறந்து கொண்டிருந்தாள். பெடரரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை என எழுதிப்போட பிறந்தநாள் அன்று பெடரர் அவளை சந்தித்தார். ஒரு ஹாய் சொல்லிவிட்டு போனால் போதும் என்று சொல்லி இருந்தார்கள், பெடரர் வந்தார்,உள்ளுக்குள் கண்ணீர் முட்டுகிறது. சிரித்துக்கொண்டே அந்த தேவதையிடம் முழுதாக பதினைந்து நிமிடம் பேசுகிறார். ஒரு அணைப்பு,நெற்றியில் ஒரு முத்தம். பின்னர் அவர் ஆடும் போட்டியை காண கூட்டிப்போகிறார். மதிய உணவுக்கு கூட போகாமல் அவளுக்கு,அவளின் தோழிகளுக்கு கையெழுத்து போட்டு தந்து கொண்டே இருக்கிறார். நான்கு ஸ்நாப்கள்,எக்கச்சக்க சந்தோசம் என்று அந்த பெண்ணை மகிழ்வித்து விட்டு தான் களத்துக்கு போகிறார்.[4]

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Roger Federer
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

தன்விவரக்குறிப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ATP. "Roger Federer Playing Activity 2003". பார்க்கப்பட்ட நாள் 2010-02-16.
  2. The Hindu, நாள்: 8, ஜுலை,2012
  3. http://www.vikatan.com/news/sports/79088-roger-federer-beats-rafael-nadal-and-wins-australian-open-title.art
  4. "ஆகஸ்ட் 8: தனித்துவமான நாயகன் ரோஜர் பெடரர் பிறந்த தின சிறப்பு பகிர்வு". Vikatan. 15 September 2014. http://www.vikatan.com/news/coverstory/31086.html. பார்த்த நாள்: 16 February 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொஜர்_பெடரர்&oldid=3861865" இலிருந்து மீள்விக்கப்பட்டது