தார்ஃபூர் போர்

தார்ஃபூர் பிரச்சினை அல்லது தார்ஃபூர் போர் (War in Darfur), அமெரிக்காவால் குறிப்பிட்ட தார்ஃபூர் இனப்படுகொலை, சூடானின் மேற்கில் தார்ஃபூர் பகுதியில் நடக்கும் இராணுவ பிரச்சினையாகும். இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போருக்கு வேறுபடியான இந்தப் போர் இனங்களுக்கு இடையில் உள்ளது; வேறு சமய மக்களின் இடையில் இல்லை. சூடானிய இராணுவமும் ஜஞ்சவீட் படை அணி பல போராளி அணிகளுக்கு எதிராக இப்போர் நடைபெறுகிறது. இந்த போராளிகளின் முக்கியமான அணிகள் சூடானிய விடுதலை இயக்கமும் நீதி மற்றும் சமத்துவம் இயக்கமும் ஆகும். சூடானிய அரசு ஜஞ்சவீடை ஆதரவு செய்யவில்லை என்று கூறியுள்ளது, ஆனால் ஜஞ்சவீடுக்கு நிதியுதவி செய்து சூடானிய இராணுவம் சில இடங்களில் ஜஞ்சவீடுடன் சேர்ந்து தாக்குதல் செய்துள்ளது.

தார்ஃபூர் போர்
War in Darfur
Darfur refugee camp in Chad.jpg
சாடில் தார்ஃபூர் அகதி முகாம்
நாள் 2003–இன்று
இடம் தார்ஃபூர்,  சூடான்
முடிவு தொடர்ந்து நடக்கின்றது
பிரிவினர்
JEM படைகள்
சூடான் NRF கூட்டணி
 சாட் நாட்டு இவர்களை நிதியுதவி செய்கிறது என்று குற்றங்கூறப்பட்டுள்ளது
ஜஞ்சவீட்
 சூடான்
SLM (மினாவி படை)
தளபதிகள், தலைவர்கள்
இப்ராகிம் கலீல்
சூடான் அஹ்மத் திரேஜ்
சூடான் ஓமார் அல்-பஷீர்
சூடான் மினி மினாவி
பலம்
தரவுகள் இல்லை தரவுகள் இல்லை
இழப்புகள்
200,000-400,000 பேர் உயிரிந்தனர்
(மதிப்பீடு)
2,500,000 பேர் வெளியேறினர்

வறட்சி, பாலைவனமாக்கம், மிகுதியான மக்கள்தொகை ஆகிய காரணங்களால் இப்போர் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் மதிப்பின் படி இப்போரில் 400,000 மக்கள் சண்டையினால் அல்லாமல் நோயால் உயிரிழந்தனர். ஐக்கிய அமெரிக்கா இப்பிரச்சனையை இனப்படுகொலை என்று கூறியுள்ளது, ஆனால் ஐக்கிய நாடுகள் அவை இப்படி குறிப்பிடவில்லை. சூடானிய அரசு இப்பிரச்சனையின் உயிரிழந்த மக்களை கீழ்மதிப்பு செய்து சாட்சிகளை கொலை செய்து செய்தியாளர்களை கைது செய்து இப்பிரச்சனையுடைய விளைவை மறைக்கப்பட்டது.

ஜூலை 14, 2008 பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் இப்பிரச்சினையில் சூடானிய அரசு செய்த குற்றங்கள் காரணமாக சூடானியத் தலைவர் ஓமார் அல்-பஷீருக்கு கைது ஆணைப்பத்திரத்தை வெளியிட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்ஃபூர்_போர்&oldid=3186129" இருந்து மீள்விக்கப்பட்டது