ராம் பரன் யாதவ்
மருத்துவர் ராம் பரன் யாதவ் (Dr. Ram Baran Yadav; நேபாள மொழி: रामवरण यादव) (பதவிக் காலம்: 2008–2015) நேபாளத்தின் முதலாவதும் தற்போதைய அதிபரும் ஆவார். இவர் நேப்பாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்[1]. ஜுலை 21, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யாதவ் சட்டசபையின் 590 உறுப்பினர்களில் 308 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார்[2].
ராம் பரன் யாதவ் Ram Baran Yadav रामवरण यादव | |
---|---|
![]() | |
2008 இல் யாதவ். | |
நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் 23 சூலை 2008 – 29 அக்டோபர் 2015 | |
பிரதமர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரசந்தா மாதவ் குமார் நேபாள் சாலா நாத் கனால் |
துணை குடியரசுத் தலைவர் | பார்மானந்த் ஜா |
முன்னவர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா (தற்காலிகம்) |
பின்வந்தவர் | வித்யா தேவி பண்டாரி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 4 பெப்ரவரி 1948 சப்பாகி, நேபாளம் |
அரசியல் கட்சி | நேப்பாளி காங்கிரஸ் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கல்கத்தா பல்கலைக்கழகம் |
சமயம் | இந்து |
2008 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் யாதவ் தனுசா மாவட்டத்தில் போட்டியிட்டு 10,932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்[3]. 1999 இல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்[4][5]. இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி ஆவார்.
வெளிநாட்டுப் பயணம் தொகு
யாதவ், 2010இல் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கும் சண்டிகருக்கும் சென்றார். சண்டிகரில் தான் படித்த முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.[6] மார்ச் 26, 2015 அன்று, சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாகச் சென்றார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ http://news.xinhuanet.com/english/2008-07/19/content_8574431.htm
- ↑ http://big5.xinhuanet.com/gate/big5/news.xinhuanet.com/english/2008-07/19/content_8574860.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.election.gov.np/reports/CAResults/reportBody.php.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.myanmargeneva.org/99NLM/n991016.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.nepalnews.com.np/contents/englishweekly/awake/1-83/f-pagers.htm.
- ↑ "Nepal President arrives on a ten-day state visit to India" (in en-US). https://news.yahoo.com/news/news/nepal-president-arrives-ten-day-state-visit-india-20110127-074604-891.html.