சூலை 21
நாள்
(ஜுலை 21 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 21 (July 21) கிரிகோரியன் ஆண்டின் 202 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 203 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 163 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
- 230 – முதலாம் அர்பனுக்குப் பின்னர் போந்தியன் 18-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- 365 – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில், லிபியா, அலெக்சாந்திரியாவில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 905 – இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார்.[1]
- 1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின.
- 1718 – உதுமானியப் பேரரசு, வெனிசுக் குடியரசு, ஆத்திரியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- 1774 – உருசியாவும் உதுமானியப் பேரரசும் தமது ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.
- 1798 – நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன.
- 1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார்.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.
- 1907 – கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் சான் பெத்ரோ கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.
- 1919 – வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
- 1925 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி சப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகத்து 10 இல் இது நிறைவடைந்தது).
- 1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இட்லரை கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் பெர்லினில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1952 – கலிபோர்னியாவின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
- 1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- 1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். உலக நாடொன்றின் முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.
- 1961 – மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார்.
- 1964 – சிங்கப்பூரில் மலாய் மற்றும் சீனர்களுக்கிடையே கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.
- 1969 – நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.
- 1970 – 11 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது.
- 1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் ஐரியக் குடியரசுப் படையினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.
- 1976 – அயர்லாந்துக்கான பிரித்தானியத் தூதுவர் ஐரியக் குடியரசுப் படையினரால் கொல்லப்பட்டார்.
- 1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.
- 1983 – குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை −89.2 °C (−128.6 °F) அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.
- 1995 – சீனக் குடியரசின் வடக்குப் பக்கக் கடற்பகுதி மீது மக்கள் விடுதலை இராணுவம் எறிகணைகளை வீசியது.
- 2001 – சப்பான், ஒக்கூராவில் பாதசாரிகளின் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.
- 2008 – ராம் பரன் யாதவ் நேப்பாளத்தின் முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2011 – நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.
பிறப்புகள்
- 1515 – பிலிப்பு நேரி, இத்தாலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595)
- 1620 – ழீன் பிக்கார்டு, பிரான்சிய வானியலாளர் (இ. 1682)
- 1654 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்கர், மறைபணியாளர் (இ. 1672)
- 1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
- 1911 – எஃப். எக்ஸ். சி. நடராசா, ஈழத்து எழுத்தாளர்
- 1917 – க. சண்முகம்பிள்ளை, ஈழத்து மிருதங்கக் கலைஞர் (இ. 2010)
- 1929 – செமியோன் ரூதின், சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (இ. 1973)
- 1930 – ஆனந்த் பக்சி, இந்தியக் கவிஞர் (இ. 2002)
- 1934 – சந்து போர்டே, இந்தியத் துடுப்பாளர்
- 1940 – சங்கர்சிங் வகேலா, இந்திய, குஜராத் அரசியல்வாதி
- 1944 – ஜோன் அட்டா மில்ஸ், கானாவின் 3வது அரசுத்தலைவர் (இ. 2012)
- 1947 – சேட்டன் சவ்ஹான், இந்தியத் துடுப்பாளர்
- 1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக நடிகர் (இ. 2014)
- 1957 – இசுடீவன் இலோவென், சுவீடனின் 33வது பிரதமர்
- 1960 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (இ. 1988)
- 1971 – ஆர். கண்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
- 1975 – ரவீந்திர புஸ்பகுமார், இலங்கைத் துடுப்பாளர்
- 1978 – ஜஸ்டின் பர்தா, அமெரிக்க நடிகர்
- 1978 – ஜோஷ் ஹர்த்நேட், அமெரிக்க நடிகர்
- 1978 – டாமியன் மார்லி, யமெய்க்கா பாடகர்
- 1984 – பரத், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
- 1796 – இராபர்ட் பர்ன்சு, இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)
- 1889 – வேதநாயகம் பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1826)
- 1899 – இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1833)
- 1920 – பியம்மேத்தா வில்சன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1864)
- 1929 – ஓ. தணிகாசலம் செட்டியார், நீதிக்கட்சித் தலைவர், வழக்குரைஞர் (பி. 1874)
- 1967 – ஆல்பர்ட் லுத்துலி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1898)
- 1984 – டி. வி. இராமசுப்பையர், தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர் (பி. 1908)
- 1998 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1923)
- 2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)
- 2006 – எல். எம். நர்துக்கி, இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா் (பி. 1942)
- 2007 – சு. ஜெயலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1920)
- 2009 – கங்குபாய், இந்துத்தானிப் பாடகி (பி. 1913)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (குவாம், 1944)
- இன நல்லிணக்க நாள் (சிங்கப்பூர்)
மேற்கோள்கள்
- ↑ Previté Orton, p. 337. The Gest Berengarii