ஆனந்த் பக்சி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஆனந்த் பக்சி (Anand Bakshi, 21 சூலை, 1930 - 30 மார்ச், 2002) என்பவர் இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஆவார்.
ஆனந்த் பக்சி | |
---|---|
பிறப்பு | இராவல்பிண்டி, பாக்கித்தான் | 21 சூலை 1930
இறப்பு | 30 மார்ச்சு 2002 மும்பை, இந்தியா | (அகவை 71)
பணி | பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1945–2002 |
உறவினர்கள் | ஆதித்யா தத் (பேரன்)[1] |
பிறப்பு
தொகுபாக்கித்தானின் இராவல்பிண்டி நகரில் 1930 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் பிறந்தார்.
படிப்பும் பணியும்
தொகுஇவரது படிப்பு பாதியிலேயே நின்றது. இந்திய கடற்படையில் 2 ஆண்டுகளும் ராணுவத்தில் 6 ஆண்டுகளும் பணியாற்றினார். இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் லக்னோ வந்தார். அங்கு டெலிபோன் ஆப்ரேட்டராக பணியாற்றினார். பின்னர் டெல்லி சென்று மோட்டார் மெக்கானிக் வேலை செய்தார். சிறுவயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். இவரது கவிதைத் தொகுப்புகள் இந்திய ராணுவத்தின் சைனிக் சமாசார் என்ற பத்திரிகையில் வெளிவந்தன. [சான்று தேவை]
திரையுலக பயணம்
தொகுராணுவத்திலிருந்து வெளிவந்த பின்னர் பம்பாயில் இந்தித் திரையுலகில் வாய்ப்புத் தேடி அலைந்தார். நல்ல குரல் வளம் கொண்ட இவர் முதன் முதலாக மோம் கீ குடியா என்ற படத்தில் பாடினார். அடுத்து பாகோம் மே பஹா அயி என்ற பாடலை பாடினார். தன் பலா ஆத்மி திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. 1965 ல் வெளிவந்த ஜப் ஜப் ஃபுல் கிலே என்ற படத்தில் இவர் இயற்றிய பாடல்களின் வெற்றியால் தான் இவருக்கு இந்தித் திரையுலகில் ஒரு அடையாளம் கிடைத்தது. பாடல்கள் எழுதுவதிலும் பின்னணி பாடுவதிலும் இந்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி சூழலையும் ஆழ்ந்த உணர்வையும் வெளிப்படுத்தினார்.
பாடல் எழுதிய திரைப்படங்களில் சில
தொகு- அமர் அக்பர் அந்தோனி
- ஏக் தூஜே கே லியே
- அமர் பிரேம்
- ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
- தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே போன்றவை வெற்றிப் படங்களாக அமைந்தன.
விருதுகள்
தொகுசுமார் 600 படங்களில் 4000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 3 முறை (1982, 1996, 2000) பிலிம் பேரின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளைப் பெற்றார்.
மறைவு
தொகுஆனந்த் பக்சி 2002-ஆம் ஆண்டு தமது 72 வது வயதில் மறைந்தார். இவர் இறந்தபின் வெளியான மெகபூபா திரைப்படத்தில் இவருடைய பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Taran Adarsh (26 May 2005). "Anand Bakshi's grand-son turns director". BH News Network. Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.