பண்டைய உலக அதிசயங்கள்
பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் (Seven Wonders of the Ancient World) மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பின்னணி
தொகுதுவக்கத்தில் "அதிசயங்கள்" என்பதற்குப் பதிலாக, பண்டைய கிரேக்கர்கள் "தீமட்டா" (θεάματα) என்ற சொல்லைப் பயன்படுத்தினர், அதற்கு "காட்சிகள்", என்று பொருளாகும். வேறுவிதமாகக் கூறினால், "பார்க்க வேண்டியவை" (Τὰ ἑπτὰ θεάματγα τῆς οῆς οῼκ heptà theámata tēs oikoumenēs [gēs] ) என்று பொருள்படும்.பின்னர், "ஆச்சரியம்" ("தௌமடா" θαύματα, "அதிசயங்கள்") என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்தப் பட்டியல் பண்டைய உலகின் பயண வழிகாட்டி புத்தகத்தின் இணையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1]
பண்டைய உலக ஏழு அதிசயங்கள்
தொகுதற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.
- கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.
- ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.
- ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.
- மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.
- ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.
- அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.
இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Seven Wonders of the Ancient World". பார்க்கப்பட்ட நாள் 2009-09-14.