ஆல்பர்ட் லுத்துலி
தென்னாப்பிரிக்க அரசியல்வாதி
ஆல்பர்ட் ஜான் லுத்துலி (Albert John Lutuli) அல்லது சுலு மொழியில் முவும்பி (Mvumbi, 1898 - 21 சூலை 1967) தென்னாப்பிரிக்காவின் அரசியல்வாதி ஆவார். ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தென்னாப்பிரிக்காவின் வெள்ளியின சிறுபான்மை அரசு ஆட்சிக் காலத்தில் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசின் தலைவராக இருந்தவர். தென்னாப்பிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிராக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக இவருக்கு 1960 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரே ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு வெளியே இருந்து முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.[1]
ஆல்பர்ட் லுத்துலி Albert Luthuli | |
---|---|
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் | |
பதவியில் 1952–1967 | |
முன்னையவர் | ஜேம்சு மொரோக்கா |
பின்னவர் | ஒலிவர் தம்போ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1898 புலவாயோ, தெற்கு ரொடீசியா |
இறப்பு | குவாசூலு-நத்தால், தென்னாப்பிரிக்கா | 21 சூலை 1967
அரசியல் கட்சி | ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் |
துணைவர் | நொக்குகானியா பெங்கு |