சங்கர்சிங் வகேலா
சங்கர்சிங் வகேலா (Shankersinh Vaghela) (பிறப்பு: 21 சூலை 1940) இந்தியாவின் குஜராத் மாநில முதலமைச்சராகவும், குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.
சங்கர்சிங் வகேலா | |
---|---|
![]() | |
குஜராத்தின் 12வது முதலமைச்சர் | |
பதவியில் 23 அக்டோபர் 1996 – 27 அக்டோபர் 1997 | |
முன்னவர் | சுரேஷ் மேத்தா |
பின்வந்தவர் | திலீப் பரிக் |
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | கபத்வஞ்சு |
குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 25 டிசம்பர் 2012 | |
முன்னவர் | சக்திசிங் கோகில் |
தொகுதி | கபத்வஞ்சு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூலை 21, 1940 வாசன், காந்திநகர், குஜராத் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (1970 - 1996) இராஷ்டிரிய ஜனதா கட்சி (1996 - 1998) இந்திய தேசிய காங்கிரசு (1998-முதல்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | குலாப் பாய் |
பிள்ளைகள் | 3 மகன்கள் |
இருப்பிடம் | காந்திநகர் |
சமயம் | இந்து சமயம் |
இணையம் | Shankersinh Vaghela |
As of 25 பிப்ரவரி, 2006 Source: [1] |
அரசியல்தொகு
துவக்கத்தில் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியில் செயல்பட்ட சங்கர்சிங் வகேலா, பின்னர் இராஷ்டிரிய ஜனதா கட்சியை நிறுவி, இந்திய தேசிய காங்கிரசு ஆதரவுடன் குஜராத் மாநில முதலமைச்சராக 1996 முதல் 1997 முடிய ஒராண்டு காலம் ஆட்சி செய்தவர். பின்னர் தான் நிறுவிய ராஷ்டிரிய ஜனதா கட்சியை இந்திய தேசியக் காங்கிரசு கட்சியுடன் இணைத்து விட்டார்.
இந்திய நாடாளுமன்றத்தின் 6, 9, 10, 13 மற்றும் 14வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். மன்மோகன் சிங்கின் முதல் அமைச்சரவையில் ஜவுளித் துறை அமைச்சராக 2004 – 2009 வரை செயல்பட்டார்.
தற்போது கபத்வஞ்சு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, குஜராத் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]
உள்கட்சி அரசியல் பிணக்குதொகு
1995-இல் பாரதிய ஜனதா கட்சியின் சங்கர்சிங் வகேலா, குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேலுக்கு எதிராக 47 சட்டமன்ற உறுப்பினர்களுடன் குரல் கொடுத்ததால், கேசுபாய் படேல் மாற்றப்பட்டு சங்கர்சிங் வகேலாவின் ஆதரவாளரான சுரேஷ் மேத்தா, குஜராத் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார்.[2]
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Official biographical sketch in Parliament of India website பரணிடப்பட்டது 2008-04-17 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Nag, Kingshuk (2013). The NaMo Story - A Political Life. Roli Books. பக். 62-65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8174369383.