2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் (2008 Ahmedabad bombings) என்பது ஜூலை 26, 2008 மாலை 6:45 மணிக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாதில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். 70 நிமிடங்களில் மொத்தத்தில் 17 தொடர் குண்டுகள் வெடித்து 56 பேர் உயிரிழந்தனர்.[2][3] மேலும் 246 பேர் படுகாயம் அடைந்தனர். [4]

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்
இடம்அகமதாபாது, குசராத்து, இந்தியா
நாள்26 சூலை 2008; 16 ஆண்டுகள் முன்னர் (2008-07-26)
18:45 – 19:55 (IST)
தாக்குதல்
வகை
வெடிகுண்டு[1]
இறப்பு(கள்)56[2]
காயமடைந்தோர்200[3]
தாக்கியோர்இந்தியன் முஜாகிதீன்
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி

இந்திய முஜாஹிதீன் என்ற தீவிர குழுமம் இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக தமக்கு மின்னஞ்சல்கள் கிடைத்ததாக பல இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன[5]

2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த அடுத்த நாள் இத்தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் நகரம் குஜராத் மாநிலத்தினதும் இந்தியாவின் மேற்குப் பகுதியின் ஒரு முக்கிய கலாசார, வர்த்தக மையமாகத் திகழ்கிறது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் வன்முறைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

வழக்கும் தீர்ப்பும்

தொகு

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 2009 முதல் விசாரணை செய்தது. 18 பிப்ரவரி 2022 அன்று சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பில் தொடர்புடைய 38 இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையும், 11 பேர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ahmedabad blasts claim two more victims". தி இந்து. 1 August 2008. Archived from the original on 10 August 2008. பார்க்கப்பட்ட நாள் 1 August 2008.
  2. 2.0 2.1 "Gujarat police release three sketches". தி இந்து. Kasturi & Sons Ltd. 6 August 2008. Archived from the original on 4 October 2008. பார்க்கப்பட்ட நாள் 6 August 2008.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. 3.0 3.1 "Death toll in Ahmedabad serial blasts rises to 55". Khabrein.info. 1 August 2008. Archived from the original on 4 October 2008. பார்க்கப்பட்ட நாள் 1 August 2008.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை
  5. "E-mail threat: Police raid Navi Mumbai residence". India Today Group. [Living Media. 27 July 2008. Archived from the original on 3 August 2008. பார்க்கப்பட்ட நாள் 27 July 2008.
  6. 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு
  7. அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு தண்டனை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

வெளி இணைப்புகள்

தொகு