தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து 2004 இல் பிரிந்து சென்ற கேணல் கருணாவினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு.
இந்த அமைப்பானது மட்டக்களப்பில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பிற்கு வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் நகரப்பகுதியில் முகாம்கள் உள்ளன இது தவிர ஓர் அரசியல் அலுவலகத்தை கொழும்பு கிருலப்பனை அந்தரவத்தைப் பகுதியில் அலுவலகம் ஒன்றையும் கொண்டுள்ளனர். பொலநறுவையில் இவர்கள் இலங்கை இராணுவத்தின் வெலிகந்தவில் இலங்கை அரசின் 23 ஆம் படையணியின் ஆதரவுடன் ஒரு பயிற்சி முகாமையும் வைத்துள்ளனர்[சான்று தேவை].
மனித உரிமைகள்
தொகுதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் இருந்து 142 இற்கும் மேற்பட்ட ஏழைச்சிறார்களைப் பலவந்தாகக் கடத்தி வந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் [1]. இதை அதன் தலைவரான கருணாவும் இலங்கை அரச பாதுகாப்புச் செயலாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் மறுத்துள்ளபோதும் [2]ஐக்கிய நாடுகளின் தலைவரான பான் கீ மூன் சிறுவர்களைச் போரிற்காகச் சேர்பதைக் கைவிடுமாறு இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளார் [3]. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் அமைப்பானது கருணா குழுவினர் தம்மால் சேர்க்கப்பட்ட சிறார்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.[4]
உசாத்துணைகள்
தொகு- ↑ கருணா குழுவினர் சிறுவர்களை யுத்ததிற்காகக் கடத்துகின்றனர் - மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை அணுகப்பட்டது ஜனவரி 27, 2007(ஆங்கில மொழியில்)
- ↑ போர்ப்படையில் சிறாரைச் சேர்ப்பதாக மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு பிபிசி அணுகப்பட்டது ஜனவரி 27, 2007 (தமிழில்)
- ↑ சிறார்களைப் போரிற்குச் சேர்பதைக் கைவிடவும் - ஐக்கிய நாடுகள் பிபிசி அணுகப்பட்டது ஜனவரி 27, 2007 (ஆங்கில மொழியில்)
- ↑ கருணா குழுவினர் சிறுவர்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுவதில்லை பரணிடப்பட்டது 2007-05-01 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது ஏப்ரல் 28, 2007
வெளி இணைப்புகள்
தொகு- http://www.tmvp.net/ பரணிடப்பட்டது 2007-03-07 at the வந்தவழி இயந்திரம் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்