தரம்சிங்
தரம்சிங் நாராயன் சிங்[1] (25, திசம்பர் 1936 - 27 சூலை 2017) கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். 2004[2]-2006[3] வரை முதல்வராக இருந்த இவர், கர்நாடகாவின் 17ஆவது முதல்வர் ஆவார். இவர் 7 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். பதினான்காவது மக்களவையில் உறுப்பினராகவும் இருந்தார்.
பிறப்புதொகு
தரம்சிங், குல்பர்கா மாவட்டத்திலுள்ள செவர்கி தாலுக்காவின் நெலோகி கிராமத்தில் பிறந்தார்.[1] இவர் தனது முதுகலை மற்றும் சட்டப்படிப்பை ஐதராபாத்திலுள்ள ஓசுமானியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
அரசியல்தொகு
- 1960: குலபர்கா நகராட்சி உறுப்பினர்
- 1978–2008: கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
- 1999-2004: பொதுத்துறை அமைச்சர், கர்நாடகா
- 2004-2006: கர்நாடக முதல்வர்
- 2006-2007: எதிர்க்கட்சித் தலைவர்.
- 2009-2014: மக்களவை உறுப்பினர்
இறப்புதொகு
2017ஆம் ஆண்டு சூலை 27ஆம் நாள் பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார்.[4]
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 "Invicible Dharam Singh". Karnataka.com. 2007-08-10 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ S. Rajendran. "Dharam Singh, Siddaramaiah sworn in". The Hindu. 27 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dharam Singh resigns as Karnataka CM". Rediff.com. 28 Jan 2006. 27 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கர்நாடகா முன்னாள் முதல்வர் தரம்சிங் மாரடைப்பால் காலமானார்". 28 சூலை 2017. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=322750. பார்த்த நாள்: 27 சூலை 2017.