வி. வி. கிரி

இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி & அறிவியலாளர்
வி. வி. கிரி
பிறந்த நாள்: 10 ஆகஸ்ட் 1894
இறந்த நாள்: 24 ஜூன் 1980
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவி வரிசை: 4 ஆவது குடியரசுத் தலைவர்
தற்காலிகமாக
பதவி ஏற்பு: 3 மே 1969
பதவி நிறைவு: 20 ஜூலை 1969
முன்பு பதவி வகித்தவர்: ஜாகீர் உசேன்
அடுத்து பதவி ஏற்றவர்: முகம்மது இதயத்துல்லா
தேர்ந்தெடுக்கப்பட்ட காலம்
பதவி ஏற்பு: 24 ஆகத்து 1969
பதவி நிறைவு: 24 ஆகத்து 1974
முன்பு பதவி வகித்தவர்: முகம்மது இதயத்துல்லா
அடுத்து பதவி ஏற்றவர்: பக்ருதின் அலி அகமது

வராககிரி வேங்கட கிரி (Varahagiri Venkata Giri) ஓர் இந்திய அரசியல்வாதியும் செயற்பாட்டாளரும் ஆவார். 1894 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1969 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் தேதி முதல் 1974 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் தேதி வரை இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். 1967 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி முதல் 1969 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் தேதி வரை இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார். ஒரு சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி என்ற சிறப்பு இவருக்கு உரியதாகும்.[1] இவருக்குப் பின் 1974 ஆம் ஆண்டில் பக்ருதின் அலி அகமது குடியரசுத் தலைவரானார்.[2] முழு பதவிக்காலம் முடிந்ததும், கிரிக்கு 1975 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. கிரி 24 ஜூன் 1980 ஆம் ஆண்டு சூன் மாதம் 24 ஆம் தேதியன்று இறந்தார்.

பிறப்பு முதல் பட்டம் வரை

தொகு

முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி .இன்னகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது. இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.

1913-ஆம் ஆண்டு டுப்ளின்-இல் உள்ள உநிவர்சிட்டி கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார்.ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்து -இல் உள்ள சின் பியன் இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஈடுபட்டால் அவருக்கு எமன் தே வலேரா , மைகேல் கோல்லின்ஸ்,பாட்றிக் பியர்ஸ் , தேச்மொண்டு பித்ச்கரல்து ,எஒஇன் மச்நேஇல் ,ஜேம்ஸ் காங்நோல்லி மற்றும் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

தொழில்

தொகு

தாயகம் திரும்பியதும் , அவர் தொழிலாளர் இயக்கத்தில் பொது செயலராக பெரிதும் ஈடுபட்டார். பின்பு அகில இந்திய தொடர்வண்டிதொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழில்சங்க அவையின் அதிபராக இருமுறை பதவி வகித்தார்.

கிரி பேரரசுக்குரிய சட்டபேரவையில் 1934-ஆம் ஆண்டு உறுப்பினரானார்.

1936-ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் , கிரி காங்கிரஸ் வேட்பாளராக போப்பிளியின் ராஜாவை எதிர்த்து போப்பிளியிலே போட்டியிட்டு வென்றார். மதராஸ் பிராந்தியத்தில் சி. ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ் அரசில் 1937-ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.1942-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்குதுக்கே திரும்பினார் . ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.

இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் , அவர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் . அதன் பின் 1952- ஆம் ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.முதல் லோக் சபாவிற்கு பதபத்னம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.1954-ஆம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார்.

உத்தர பிரதேசம்(1957-1960) , கேரளா(1960-1965) மற்றும் மைசூர் (1965-1967)மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.

1967-ஆம் ஆண்டு இந்தியாவின் துணை-சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக சனாதிபதி ஆனார். சனாதிபதி பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா காந்தியின் அரசோ நீளம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது , எனினும் இந்திரா காந்தி அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை சனாதிபதியாக பணியாற்றினார்.

இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி.

கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Saubhadra Chatterji (26 April 2017). "NDA vs Oppn: India might to witness tightest presidential poll since 1969". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 21 June 2018.
  2. "Gallery of Indian Presidents". Press Information Bureau. Government of India. Archived from the original on 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 21 June 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வி._கிரி&oldid=4102130" இலிருந்து மீள்விக்கப்பட்டது