நானாஜி தேஷ்முக்
நானாஜி தேஷ்முக் அல்லது சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக் (Chandikadas Amritrao Deshmukh Nanaji Deshmukh) (11 அக்டோபர் 1916 – 27 பிப்ரவரி 2010), இந்தியாவின், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் ஒருவர். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தவர். 1999ஆம் ஆண்டில் பத்மவிபூசன் விருது பெற்றவர்.[1][2] 1937இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்து[3]ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக உத்தரப்பிரதேசத்தில் சமூகப் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மழலைப் பள்ளியான சரசுவதி மழலையர் பள்ளியை (சரஸ்வதி சிசு மந்திர்) கோராக்பூரில் துவக்கினார்.[4] [5]
நானாஜி தேஷ்முக் | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக் 11 அக்டோபர் 1916 |
இறப்பு | 27 பெப்ரவரி 2010 | (அகவை 93)
தேசியம் | இந்தியன் |
வாழ்க்கை துணைவர்(கள்) | மணமாகதவர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சனாதன தர்ம கல்லூரி, கான்பூர் |
தொழில் | சமூக ஆர்வலர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சி நிறுவனர் |
சமயம் | இந்து சமயம் |
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இராஷ்டிர தர்மம் , பாஞ்சஜன்யம் போன்ற மாத இதழ்களுக்கும், சுதேசி என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்டவர்.
விருதுகள்தொகு
- பாரத ரத்னா (2019)[6]
மேற்கோள்கள்தொகு
- ↑ Utilise human resources judiciously: Kalam
- ↑ http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf
- ↑ "Deendayal Upadhyaya". Bharatiya Janata party. பார்த்த நாள் 2014-09-12.
- ↑ Jaffrelot 2011, பக். 193.
- ↑ http://saraswatishishumandir.com/index.php
- ↑ பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது
- Jaffrelot, Christophe (2011). Religion, Caste, and Politics in India. C Hurst & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1849041386.