வினோபா பாவே

காந்தியவாதி

வினோபா பாவே (Vinoba Bhave, விநாயக் நரகரி பாவே, செப்டம்பர் 11, 1895 - நவம்பர் 15, 1982) ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண் கொடை இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரே காந்தியின் ஆன்மீக வாரிசாக கருதப்படுபவர்[1].

வினோபா பாவே
Vinoba Bhave
பிறப்பு(1895-09-11)11 செப்டம்பர் 1895
இந்தியா
இறப்பு15 நவம்பர் 1982(1982-11-15) (அகவை 87)
புதுதில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
சமயம்இந்து
வலைத்தளம்
http://vinoba.in http://www.vinobabhave.org

வாழ்க்கைப்பின்னணி

தொகு

இவர் மராட்டிய மாநிலம் மும்பைமாவட்டம் கொலபா எனும் கிராமத்தில் கொங்கணஸ்த் பிராமணர் குலத்தில் நரசிம்மராவ் பாவே–ருக்மணிதேவி தம்பதியருக்கு பிறந்த மகனாவார். தாய்மொழி:கொங்கணி/மராத்தி இவரின் சகோதரர்கள் பாலகிருஷ்ணா பாவே, சிவாஜி பாவே இருவரும் சமூக சேவகர்கள். வினோபா பாவே சிறந்த இந்து ஆன்மீக போதகர், இந்திய விடுதலை போராளியும் ஆவார்.

இந்தியவிடுதலைஇயக்கம்

தொகு

மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார்.

பூமிதான இயக்கம்

தொகு

இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை 1951 ம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.

வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன.[2]

13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தைத் இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்[3].

கீதை பேருரை

தொகு

பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போரில் கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்த பகவத் கீதைக்கு வினோபா பாவே உரை எழுதினார்.

கருத்துவேற்றுமை

தொகு

இந்தியப் பிரதமர் திருமதி இந்திர காந்தியின் அவசரகால பிரகடனம் , சர்வாதிகார போக்கை கண்டித்தார்.

இவற்றையும் பார்க்க

தொகு

தொடர்ந்து இயங்கினார் வினோபாவே. எட்டு மொழிகளைக் கற்று அந்தந்த ஊரின் மக்களின் மொழியில் உரையாடி பங்காற்றினார் அவர். மொத்தமாக அவர் வாழ்நாளில் ஒன்றரை லட்சம் கிராமங்களில் நாற்பது லட்சம் ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டு இருந்தது. இதில் இத்திட்டம் மிகச் சிறப்பாகப் பீகாரில் ராஜேந்திர பிரசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது [4].

பாரதரத்னா விருது

தொகு

வினோபா பாவேயின் மிகச்சிறந்த தேசிய சேவைகளை பாராட்டி அவரது மறைவுக்கு பின் 1983ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The King of Kindness (Vinoba Bhave, Bhoodan, Gramdan, Sarvodaya, Gandhi Movement)". Archived from the original on 2010-01-14. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
  2. "Vinoba Bhave legacy under threat The Hindu". Archived from the original on 2011-09-16. பார்க்கப்பட்ட நாள் 2011-12-14.
  3. எஸ், ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக், 146: விகடன் பிரசுரம்.{{cite book}}: CS1 maint: location (link)
  4. http://www.vikatan.com/news/coverstory/34850.html நவம்பர் 15: ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே நினைவு தின சிறப்பு பகிர்வு

5. கல்வியில் மலர்தல் - வினோபா பாவே (தன்னறம் வெளியீடு)

6. கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா பாவே (தன்னறம் வெளியீடு)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோபா_பாவே&oldid=3686039" இலிருந்து மீள்விக்கப்பட்டது