பேச்சு:பாரத ரத்னா

பாரத ரத்னா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு தொகு

ஒவ்வொரு மொழிக்கும் அததற்கே உரித்தான தனிச் சிறப்புகள் பல இருக்கலாம். எமது தமிழ் மொழிக்கும் அங்ஙனமே. பிறமொழிப் பெயர்களைத் தமிழாக்கும் போது எந்நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் எங்ஙனம் தமிழ்ப்படுத்த வேண்டுமென்றும் எமது இலக்கண நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. இங்கே பாரத ரத்னா என்று வடமொழிச் சொல்லை அப்படியே ஒலிபெயர்ப்பது இலக்கணத்துக்குப் புறம்பானதும் தமிழைக் கொச்சைப்படுத்திச் சீரழிப்பதும் ஆகும். ஒன்றில் இப்பெயர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பில் இருக்க வேண்டும். கட்டுரையில் இந்திய மாமணி என்று மொழிபெயர்ப்பு வடிவம் வழங்கப்பட்டிருக்கிறது. அன்றேல் தமிழில் இலக்கணத்தை எதிர்த்துச் சிதைக்காமல் முறையாக பாரதவிரத்தினம் என்றோ பாரத இரத்தினம் என்றோ ஒலிபெயர்க்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமக்கு நினைத்தவாறெல்லாம் ஒலிபெயர்க்கவும் மொழிபெயர்க்கவும் முயலாமல், எம் வரலாற்றுச் சான்றோர் காட்டிய முறையில் எழுதும் போது எம் இனிய தமிழ் மொழி மெருகேறிச் செழிப்பாக வாழும்.--பாஹிம் (பேச்சு) 10:50, 4 சனவரி 2022 (UTC)Reply

  விருப்பம்--A-wiki-guest-user (பேச்சு) 10:09, 11 சனவரி 2022 (UTC)Reply
பாரத ரத்னா - என்பது பொது வழக்கு. பாரதம் என்பதை இந்திய என மாற்றுவது தமிழ்ப்படுத்துதல் ஆகாது என்பது எனது கருத்து. இலக்கணப் பிழையை நீக்க வேண்டுமென்றால் பாஹிம் கூறியபடி பாரத இரத்தினம் என மாற்றலாம். --சத்தியராஜ் (பேச்சு) 05:41, 1 பெப்பிரவரி 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாரத_ரத்னா&oldid=3880383" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாரத ரத்னா" page.