வாருங்கள்!

வாருங்கள், Raj.sathiya, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:02, 1 ஆகத்து 2014 (UTC)

வரவேற்பிற்கு நன்றி தமிழ்க்குரிசில். Raj.sathiya (பேச்சு) 07:17, 1 ஆகத்து 2014 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Raj.sathiya!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 11:40, 4 ஆகத்து 2014 (UTC)

ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்தொகு

  ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்
சேலம் மாவட்டத்தைப் பற்றிய பல கட்டுரைகளை உருவாக்கி, மேம்படுத்தி வருகிறீர்கள். என் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். :) உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி இந்த பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி! :)

--தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:28, 4 ஆகத்து 2014 (UTC)

வாழ்த்துக்கள்... தொடர்ந்தது பங்களியுங்கள். உதவி தேவை எனில் தயங்காமல் கேட்கலாம். உதவக் காத்திருக்கிறோம். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:47, 4 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம் வாழ்த்துக்கள் தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள். நன்றி!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:07, 13 ஆகத்து 2014 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், Raj.sathiya!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 19:31, 1 நவம்பர் 2014 (UTC)

  விருப்பம் நன்றி :) :) -- சத்தியராஜ் (பேச்சு)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Raj.sathiya!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:10, 30 திசம்பர் 2014 (UTC)

தலைப்புதொகு

கட்டுரைகளை நகர்த்து முன் முடியுமானவரை உரையாடுங்கள். இயலுமானவரை கிரந்தப் பாவனை தவிர்க்கப்படுகிறது. கிரந்தச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உள்ளன. எ.கா: "சஞ்சய் கிஷன் கவுல்" என்பதை "சஞ்சய் கிசன் கவுல்" எனவும் எழுதலாம். --AntonTalk 07:49, 7 ஏப்ரல் 2015 (UTC)

சரி Anton. இனி செய்யும் மாற்றங்களில் பின்பற்றுகிறேன். ஆனால் பல இடங்களில் ஒருவர் பெயரினைக் குறிப்பிடுகையில் கிரந்தம் பயன்படுத்தப்பட்டுள்ளதே! அவற்றை ஒவ்வொன்றாக திருத்தம் செய்யலாமா?
-- சத்தியராஜ் (பேச்சு) 08:02, 7 ஏப்ரல் 2015 (UTC)
இது தொடர்பில் பல வாதப் பிரதி வாதங்கள் நடந்துள்ளன. அவற்றை மேலும் நாம் சிக்கலாக்க வேண்டாம். ஏற்றுக் கொள்ளக்கூடிய, சிக்கலற்ற திருத்தங்கள் செய்யுங்கள். இயலுமானால், பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்துங்கள். தற்போதைக்கு இருப்பவற்றை அப்படியே விடுவது நல்லது என்பது என் தனிப்பட்ட எண்ணம். --AntonTalk 08:08, 7 ஏப்ரல் 2015 (UTC)
:) :) சரி. சத்தியராஜ் (பேச்சு) 08:34, 7 ஏப்ரல் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015தொகு

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 07:16, 9 சூலை 2015 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கிக்கு பல சிறந்த கட்டுரைகள் உருவாக்குவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.  மாதவன்  ( பேச்சு  ) 10:15, 31 திசம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி மாதவன். -- சத்தியராஜ் (பேச்சு) 10:21, 31 திசம்பர் 2015 (UTC)

  விருப்பம் வாழ்த்துகள்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:34, 31 திசம்பர் 2015 (UTC)

வார்ப்புருக்கள்தொகு

{{Country data China}} என்ற வார்ப்புரு சில பக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான வார்ப்புருக்களை பிரதான வார்ப்புருக்களுக்கு வழிமாற்றாக்கி விடுங்கள். --AntanO 04:52, 9 பெப்ரவரி 2016 (UTC)

{{flagdeco}} என பயன்படுத்தியிருக்கிறார்களே அது என்ன?? முதன்முறையாகக் காண்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு)
இது நாட்டுத் தகவல் வார்ப்புருவிலும் standard syntax ஆக இல்லையே! --சத்தியராஜ் (பேச்சு) 05:02, 9 பெப்ரவரி 2016 (UTC)
en:Wikipedia:WikiProject Flag Template - இங்கு நாட்டுத் தகவல் தொடர்பான வார்ப்புருக்கள் பலவற்றையும் அவை பயன்படுத்தப்படும் முறைகளையும் காணலாம். நாட்டுத் தகவல் வார்ப்புருவில் இல்லாவிட்டாலும், வேறு வார்ப்புருக்களில் பயன்படுத்தப்படலாம். --AntanO 05:08, 9 பெப்ரவரி 2016 (UTC)
@AntanO: நன்றி. சில தகவல்களை இங்கு கண்டேன். இந்த வார்ப்புரு தமிழுக்குத் தகுந்தபடி மாற்றப்படவில்லையோ?? --சத்தியராஜ் (பேச்சு) 05:13, 9 பெப்ரவரி 2016 (UTC)
மாற்றியுள்ளேன். தேவைப்படும் இடங்களில் உரிய மாற்றம் செய்துவிடுங்கள். --AntanO 05:16, 9 பெப்ரவரி 2016 (UTC)
மிக்க நன்றி. தேவைப்படும் இடங்களில் திருத்தங்களைச் செய்கிறேன். இனி ஆங்கிலத்திலுள்ள நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் (எ.கா.: வார்ப்புரு:Country data China) நீக்கிவிடலாம். --சத்தியராஜ் (பேச்சு) 05:20, 9 பெப்ரவரி 2016 (UTC)

நன்றி...தொகு

தேர்தல் தொடர்பான தங்களின் தொகுப்புகளுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:51, 20 மே 2016 (UTC)

மாவட்ட அளவில் நோட்டா வாக்களித்தோர் விவரம் தங்களிடம் இருந்தால், இங்கு பதிவு செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 23 மே 2016 (UTC)

@Selvasivagurunathan m: இந்திய தேர்தல் ஆணையத்தின், 2016 தமிழக சட்டசபை தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளின் முடிவுகள் தெரிந்தபின் வெளியிடுவார்கள் போல. அது வந்தால் தான் அனைத்து புள்ளிவிபரங்களும் எளிதாகக் கிடைக்கப்பெறும். தற்போதைக்கு ஒவ்வொரு தொகுதியாகத்தான் சோதித்து இற்றைப்படுத்துகிறேன்.

சிரமப்பட வேண்டியதில்லை; பொறுமையாகச் செய்யுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:43, 23 மே 2016 (UTC)

தற்காவல்தொகு

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும்.--நந்தகுமார் (பேச்சு) 09:48, 22 அக்டோபர் 2016 (UTC)

@Nan: நன்றி :) --சத்தியராஜ் (பேச்சு) 05:18, 24 அக்டோபர் 2016 (UTC)

உதவி...தொகு

வணக்கம்! Indian 500-rupee note [1], Indian 2000-rupee note [2] ஆகிய கட்டுரைகளை தமிழில் எழுதி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:17, 15 நவம்பர் 2016 (UTC)

@Selvasivagurunathan m: முயற்சிக்கிறேன். நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 08:51, 15 நவம்பர் 2016 (UTC)

  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:42, 15 நவம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பைதொகு

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:32, 8 திசம்பர் 2016 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

ஒரு வரிக் கட்டுரைகள் வேண்டாமேதொகு

வணக்கம் , நீண்ட நாளுக்குப் பிறகு தாங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் தற்போது உருவாக்கியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஒரு வரி கொண்டைவையாக உள்ளது. அவை நீக்கப்படலாம். மேலும் இது போன்ற ஒரு வரிக் கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை விரிவாக்கிய பின்னர் அடுத்த கட்டுரையினைத் துவங்கவும். @Nan: கவனத்திற்கு நன்றி ஸ்ரீ (✉) 11:37, 7 திசம்பர் 2020 (UTC)

அக்கட்டுரைகளை விரிவாக்கம் செய்யவுள்ளேன் ஸ்ரீ. அறிவுறுத்தியதற்கு நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 07:50, 8 திசம்பர் 2020 (UTC)
விரிவாக்கம் செய்துள்ளமைக்கு வாழ்த்துகள். நன்றி ஸ்ரீ (✉) 15:35, 18 திசம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Raj.sathiya&oldid=3090014" இருந்து மீள்விக்கப்பட்டது