விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் 100

குறுக்கு வழி:
WP:100

விக்கித் திட்டம் 100 என்பது

தமிழ் விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு மாதமும் 100க்கும் மேற்பட்ட தொகுப்புகளை மேற்கொள்ளும் 100 முனைப்பான பங்களிப்பாளர்களைப் பெறுவதற்கான திட்டம்.
கால இலக்கு: பிப்ரவரி 2013 முதல் 100 வாரங்கள்.

ஏன்?

தொகு

வரப்புயர நீர் உயரும் - நீர் உயர நெல் உயரும் என்பது போல, ஒரு விக்கிப்பீடியாவின் வளர்ச்சி அதன் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு சில தொகுப்புகளை மட்டும் செய்வோரின் ஒட்டு மொத்தப் பங்களிப்பு ஒரு நீண்ட வாலாகத் திகழும் அதே வேளை, தொடர்ந்து இயங்கி, பல திட்டங்களை வகுத்துச் செயற்படக்கூடிய முனைப்பான பங்களிப்பாளர்களே அவ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் உறுதி செய்ய இயலும். தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்த வரை, ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொடங்கப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை என்பது தோராயமாக முனைப்பான பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை அளவை ஒத்திருப்பதும் ஒரு விந்தையான போக்கு. எனவே, கட்டுரை எண்ணிக்கை, பரப்பு, தரம் ஆகியவற்றைக் கவனித்துச் செயற்படுவது ஒரு புறம் என்றால், இன்னும் முனைப்பான பல முனைப்பான பங்களிப்பாளர்களைப் பெறுவது இந்த நோக்கங்களைத் தானாகவே எட்டச் செய்யும்.

இயலுமா?

தொகு

இது வரை ஆகக் கூடுதலாக ஒரே மாதத்தில் 24 முனைப்பான பங்களிப்பாளர்களைப் பெற்றுள்ளோம். 1000 கட்டுரைகளைத் தாண்டிய விக்கிப்பீடியாக்களின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கருதும் போது, தமிழ் விக்கிப்பீடியா 37ஆவது இடத்தில் உள்ளது.

மார்ச்சு 2010ல் 7 ஆக இருந்த எண்ணிக்கை, மார்ச்சு 2011ல் 20ஆக உயர்ந்தது. இது கிட்டத்தட்ட 200%க்கும் மிஞ்சிய வளர்ச்சி. நாம் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு 100% வளர்ச்சியையை எட்டினாலே 100 முனைப்பான பங்களிப்பாளர்கள் என்ற குறிக்கோளை எட்டலாம். (2013 இலக்கு: 24*2 = 48; 2014 இலக்கு: 48*2=96)

உலக விக்கிப்பீடியாக்களை எடுத்துக் கொண்டால், 14 விக்கிப்பீடியாக்கள் மட்டுமே ஒவ்வொரு மாதமும் 100 முனைப்பான பங்களிப்பாளர்கள் என்ற இலக்கைத் தாண்டியுள்ளன. நாம் மக்கள் தொகை அடிப்படையில் மொழிகள் பட்டியலில் முதல் 20 இடத்தில் இருக்கிறோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.!

எப்படி??

தொகு

இதற்கு இரண்டு அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம். சிறப்பாக ஏதும் செய்யாமலேயே தற்போது உள்ள நடவடிக்கைகளையே தொடர்வது. பக்கப் பார்வைகள் கூடக் கூட பங்களிப்பாளர்களும் எப்படியாவது தாமாகவே கூடுவர் என்று எதிர்நோக்குவது. ஆனால், இது அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஏனெனில், ஒவ்வொரு மாதமும் 60 இலட்சம் பக்கப் பார்வைகள் கிடைத்தாலும் ஆகக் கூடுதலாக 25 பேர் தான் முனைப்பான பங்களிப்பாளர்களாக உள்ளனர். இன்னும் 75 பேரைப் பெற இன்னும் எத்தனை இலட்சம் பார்வைகள் தேவை? :) இதே வேறு நோக்கில், ஒவ்வொரு கோடித் தமிழர்களின் சார்பாக 3.6 பேர் மட்டுமே முனைப்பான பங்களிப்பாளர்களாக உள்ளோம். இன்னும் 75 பேரைப் பெற இன்னும் எத்தனைக் கோடித் தமிழர்கள் தேவை?

ஆகவே, பெறுகிற ஒவ்வொரு இலட்சம் பக்கப் பார்வைக்கும் இன்னும் கூடுதலான பங்களிப்பாளர்களைப் பெறுவது எப்படி என்று சிந்திப்பதே திறன் வாய்ந்த வழி

குறிப்பு: மலையாள விக்கிப்பீடியர்கள் நம்மை விட இரு மடங்கு பங்களிப்பாளர்களை ஈர்க்க வல்லவர்களாக இருக்கிறார்கள்.

பங்கேற்பைக் கூட்டுவதற்கான சில வழிகள்:

  • பங்களிப்பு மைல்கற்களைப் பற்றிய நினைவூட்டல்கள், பதக்கங்கள்  Y ஆயிற்று
  • கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி போன்ற முயற்சிகள்  Y ஆயிற்று
  • தொடர் ஊடக அறிமுகங்கள்  Y ஆயிற்று
  • சமூக வலைத்தளங்கள் உள்ளிடவற்றில் திட்டமிட்ட பரப்புரை அணுகுமுறை.  Y ஆயிற்று
  • தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகங்கள் போன்ற முயற்சிகள்
  • பங்களிப்புகளைத் தூண்டுவதற்கான சிறப்பான வருகைப் பக்க வடிவமைப்பு
  • புதுப்பயனர்களுக்கான இன்னும் சிறப்பான வழிகாட்டல், தொடர் ஒத்தாசை, உதவிப் பக்கங்கள்.
  • இது வரை பங்களித்தவர்களுக்கான நன்றி அறிவிப்புகள்
  • விக்கி மின்மினிகள்
  • புதிய பதக்கங்களை உருவாக்குதல்

(விரியும்..)

பங்கேற்கும் பயனர்கள்

தொகு

--இரவி (பேச்சு) 21:35, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

துறப்பு: இது ஒட்டு மொத்த தமிழ் விக்கிப்பீடியர்களுக்குமான வியூகத் திட்டமிடல் அன்று. ஆனால், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் சொல்லலாம் ;) ஆர்வமுள்ள பயனர்கள் திட்டத்தில் இணைந்து உத்திகளை வகுக்க, கருத்துகளை வழங்க, பணியாற்ற வரவேற்கிறோம்.

--மதனாகரன் (பேச்சு) 02:27, 4 பெப்ரவரி 2013 (UTC)
--இராஜ்குமார் (பேச்சு) 08:09, 18 ஏப்ரல் 2013 (UTC)
--கிரேச் குமார் 9:57, 24 மே 2013 (IST)
--மயூரநாதன் (பேச்சு) 08:58, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
-- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 09:19, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இவற்றையும் காணவும்

தொகு