லோ.ஸ்ரீகர்சன்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
பதிவேற்றிய படிமங்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்
பதிவேற்றிய படிமங்கள் உருவாக்கிய வார்ப்புருக்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்


Dialog-information on.svg
என் பேச்சுப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்
Crystal Project 2downarrow.png

துரிதமாகக் கீழே செல்ல

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புதொகுவிக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

அனைவரும் வருக

வணக்கம் Shrikarsan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:08, 30 திசம்பர் 2014 (UTC)
உதவும் கரங்களுக்கு, நன்றி அண்ணா....... --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:15, 30 திசம்பர் 2014 (UTC)
வணக்கம் சிறீகர்சன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:47, 16 சனவரி 2015 (UTC)

பதக்கம்தொகு

Editors Barnstar Hires.png விக்கிப்புயல் பதக்கம்
பிலிப்பீன்சு கட்டுரைக்காக. சிறிய திருத்தம் செய்யவே எனக்கு நேரம் பிடித்ததே, எப்படி தான் எழுதினீர்களோ! பாராட்டுகள்!! குறும்பன் (பேச்சு) 18:06, 4 சனவரி 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

என்னுடைய விக்கியன்பு ஒழுங்காக வேலை செய்யவில்லை விக்கிபுயல் என்பதற்கு பதிலாக சிகரம் தொட்ட பதிவர் என்ற பதக்கமே சரி. தகவற்சட்டத்தை சரிபார்க்கவும் குறிப்பாக பரப்பளவு ஏன் 3 என்று காட்டுகிறது எனத் தெரியவில்லை --குறும்பன் (பேச்சு) 18:13, 4 சனவரி 2015 (UTC)

குறும்பன்அவர்களே நன்றி:) உங்களதும் ஏனைய விக்கி அன்பர்களதும் பரிபூரண ஒத்துழைப்பே கட்டுரை மெருகேற உதவியது. உங்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து பங்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையைச் சொன்னால் கட்டுரைகளை விரிவாக எழுத என்னைத் தூண்டியது நீங்கள் தான். கட்டுரைப் போட்டியில் விரிவாக எழுதி என்னைக் கவர்ந்தீர்கள். பின்னர் நானும் விரிவாக எழுதி விரிவான கட்டுரைக்கான வாகையர் பட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். பிலிப்பீன்சு கட்டுரையும் கட்டுரைப் போட்டியின்போது ஏப்ரல் மாதம் நான் விரிவாக்கிய கட்டுரைதான்.
நீங்கள் பிரதானமுதன்மை , விமானம்வானூர்தி போன்ற சில சொற்பதங்களை மாற்றும் போது தான் அவை அச்சொற்களுக்குரிய சரியான தமிழ்ப்பதம் என்பதை அறிந்துகொண்டேன். பரப்பளவு மொத்தம் 3,00,000 கிமீ² 120,000 சது. மை என்று இருக்க வேண்டியது பரப்பளவு மொத்தம் 3 கிமீ² 120 சது. மை என்று இருப்பதற்கு formatnum இருமுறை பயன்படுத்தப்பட்டதே காரணம் தற்போது வார்ப்புருவில் சரிசெய்துவிட்டேன். உங்கள் ஆதரவிற்கும் உதவிகளுக்கும் நன்றி. தொடர்ந்தும் விக்கிக்கு எம்மாலான பங்களிப்புக்களை வழங்குவோம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:09, 5 சனவரி 2015 (UTC)
வாழ்த்துக்கள் அண்ணா, அந்தக் கட்டுரையைப் பார்த்தாலே தல தல சுத்துது. சிறக்க வாழ்த்துக்கள். முடியும்போது நானும் திருத்தம் செய்து உதவுகிறேன். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:18, 5 சனவரி 2015 (UTC)
நன்றி ஆதவன்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:23, 5 சனவரி 2015 (UTC)
வாழ்த்துக்கள் சகோதரா! தங்கள் பணி என்றென்றும் தொடரட்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:06, 7 சனவரி 2015 (UTC)
வாழ்த்துகள் ஸ்ரீகர்சன் ! தங்கள் முனைப்பு நீடித்திருக்க வேண்டுகின்றேன் !! --மணியன் (பேச்சு) 10:35, 7 சனவரி 2015 (UTC)
நன்றி ஸ்ரீஹீரன், நன்றி மணியன் அவர்களே! பாடசாலைக் கல்விக்கிடையில் தொடர்ந்து கட்டுரைகளை விரிவாக எழுதுவது கடினம்:( க.பொ.த சா/த மற்றும் க.பொ.த உ/த பரீட்சைகளும் நெருங்குகின்றன. காலம் இருக்கின்றது! முடியும்போதெல்லாம் விரிவாக எழுதுகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:01, 7 சனவரி 2015 (UTC)
ஸ்ரீகர்சன் பிரபல என்பதற்கு பதில் புகழ் பெற்ற, புகழ்வாய்ந்த (இடம் பொருத்து) என்ற சொற்களை பயன்படுத்துங்கள். கௌரவம்- சிறப்பு --குறும்பன் (பேச்சு) 19:34, 10 சனவரி 2015 (UTC)
நன்றி குறும்பன் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்களைக் கருத்திற்கொண்டு அடுத்த கட்டுரையை விரிவாக்குவேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:46, 14 சனவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரையாக்கம்தொகு

தகவலுக்காக: ஆ.வி.யில் சிறப்புக் கட்டுரையாக்கம் பொதுவாக சில முறைகளைத் தாண்ட வேண்டும். அவையாவன Good article > Peer review > Featured article nomination. இதில் Good article கட்டயமில்லை ஆனால் Peer review கட்டாயமானது. இதனை பயனர் வெளியில் வைத்திருக்காது கட்டுரையின் பேச்சு வெளிக்கு நகர்த்துங்கள். பேச்சு:பிலிப்பீன்சு/நக1 என்று இருக்கலாம். (நக = நல்ல கட்டுரை) உதாரணத்திற்கு நான் அண்மையில் செய்த நல்ல கட்டுரைக்கான மதிப்பு GA1. ஆனால் Peer review, Featured article nomination என்பன விக்கியின் பிரதான பக்கங்களிலேயே துணைப்பக்கங்களாக இருக்கும். --AntonTalk 07:59, 8 பெப்ரவரி 2015 (UTC)

தகவலுக்கு நன்றி அன்டன் அவர்களே! ஆங்கில விக்கியில் Peer review அவசியமானது என்பதை அறிவேன். தமிழில் அவ்வாறானதொன்று இல்லாததால் இப்பக்கத்தை உருவாக்கிச் சிறப்புக் கட்டுரையாக்கத்தை மேற்கொண்டேன். கட்டுரையின் பேச்சு வெளியிலும் Peer review செய்யலாம் என்று எனக்குத் தெரியாது. இப்பக்கத்திற்கும் Peer review இற்கும் வித்தியாசம் உள்ளது போல் உள்ளது. இதனைப் பேச்சு வெளிக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்குமா? உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:37, 9 பெப்ரவரி 2015 (UTC)
ஆம், பேச்சு வெளிக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்கும். கட்டுரை முறையான கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமாகவும் இருக்கும். வரைபடங்களைத் தமிழாக்க முயற்சிக்கிறேன். சிபியும் உதவலாம். --AntonTalk 16:08, 10 பெப்ரவரி 2015 (UTC)
Yes check.svgY ஆயிற்று அன்டன் அவர்களே! நீங்கள் கூறியபடி இப்பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன். உதவ முன்வந்தமைக்கு நன்றி.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 19:06, 10 பெப்ரவரி 2015 (UTC)

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - முதற்பக்கக் கட்டுரைகள்தொகு

அன்டன் அவர்களே பாடசாலை பரீட்சைகள் மற்றும் க.பொ.த சா/த காரணமாக என்னால் அதிக நேரம் இங்கு பங்காற்ற முடியவில்லை. இது தொடர்பாக என் பங்களிப்பை அவ்வப்போது தரத் தயாராக உள்ளேன். நன்றி--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:26, 15 ஏப்ரல் 2015 (UTC)

பூட்டிய வார்ப்புருகள்தொகு

சிறீகர்சன், பூட்டிய வார்ப்புருகள் பட்டியல் ஏதும் இருக்கிறதா? இதில் எவற்றை மேம்படுத்த விரும்புகிறீர்கள் என்று தெரிவித்தால், தங்கள் பணி முடியும் வரை திறந்து வைக்க உதவுகிறேன். தங்களைப் போன்று இன்னும் பல வார்ப்புரு உருவாக்குநர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவிக்கும் போது வார்ப்புரு தொகுப்பாளர்களுக்கான அணுக்கத்தை உருவாக்குவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:05, 14 ஏப்ரல் 2015 (UTC)

இரவி அவர்களே முழுமையாகக் காக்கப்பட்ட வார்ப்புருக்களின் பட்டியலை இங்கும் முழுமையாகக் காக்கப்பட்ட Module களின் பட்டியலை இங்கும் காணலாம். இவற்றுள் வார்ப்புரு:Coor dm இல் உள்ள உள்ளடக்கம் அனைத்தையும் எடுத்துவிட்டு காப்பையும் நீக்கிவிட்டு அதனை வார்ப்புரு:Coord இற்கு நீங்களே வழிமாற்றிவிடுங்கள்.
த.வி யில் உள்ள சில சிக்கலான வார்ப்புருக்கள் மற்றும் Module கள் ஆ.வி யில் உள்ளது போல் முழுமையாகக் காக்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக வார்ப்புரு:இவ்வார முதற்பக்கக் கட்டுரை, வார்ப்புரு:Convert, வார்ப்புரு:Userbox, வார்ப்புரு:Coord, வார்ப்புரு:Infobox மற்றும் இவ்வார்ப்புருக்களுடன் இணைந்த Module கள் (Module:Convert/data, Module:Convert/text, Module:Coordinates, Module:Userbox, Module:Infobox மற்றும் பிற) என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றின் பராமரிப்புப் பணியை நான் SEPTEMPLATE திட்டத்தினூடாக மேற்கொள்கின்றேன். ஆனால் இவை முழுமையாகக் காக்கப்படும் பட்சத்தில், ஆர்வமும் நுட்ப அறிவும் இருக்கும் பட்சத்திலும், இவற்றின் பராமரிப்புப் பணியை தொடர்ந்து என்னாலோ நிர்வாகியல்லாத பிற பயனராலோ செய்யமுடியாது போகலாம். ஆ.வி யில் மேம்பாட்டுப் பணிகள் துரிதகதியில் இடம்பெறும் வேளையில் இது த.வி யில் ஒரு தேக்க நிலையை உருவாக்கிவிடும். இதனால் தான் நான் வார்ப்புரு தொகுப்பாளர்களுக்கான அணுக்கத்தை உருவாக்க முன்மொழிந்தேன். இதன்மூலம் நிர்வாகியல்லாத ஆனால் வார்ப்புரு, Module தொடர்பான நுட்ப அறிவும் அனுபவமும் மிக்க பயனர்கள் முழுமையாகக் காக்கப்பட்ட வார்ப்புருக்கள் மற்றும் Module களை இலகுவாகப் பராமரிக்க முடியும்.
தற்போது முழுமையாகக் காக்கப்பட்டுள்ள சில வார்ப்புருக்கள் தேவையற்றவையாகவும் (வார்ப்புரு:Sitesupportpage), காப்பு நீக்கம் செய்யப்பட வேண்டியனவாகவும் (வார்ப்புரு:Coor d) உள்ளன. இவற்றைக் கவனித்து ஆவன செய்ய வேண்டுகின்றேன்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:34, 15 ஏப்ரல் 2015 (UTC)
விவரங்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட விசயங்கள் தொடர்பாக உரிய மாற்றங்களைச் செய்துள்ளேன். சில ஐயங்களையும் கோரி உள்ளேன். உங்கள் பதிலுக்கு ஏற்ப அடுத்து தேவையான மாற்றங்களைச் செய்கிறேன். இப்போது வார்ப்புரு தொகுப்புக்கு என்று சிறப்பு அணுக்க வசதி இல்லாத நிலையில் மேலும் பல வார்ப்புருக்களைப் பூட்டுவது உகந்தது அன்று. ஏதேனும் வார்ப்புருவில் தொடர் விசமம் அல்லது பயனர்கள் அறியாமல் பிழை செய்தால், காப்பிடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:33, 23 ஏப்ரல் 2015 (UTC)

மற்ற மொழி விக்கிப்பீடியாக்களில் நுட்ப உதவி தேவைதொகு

சிறீகர்சன், மற்ற மொழி விக்கிப்பீடியர்கள் சிலருக்கு நுட்ப உதவி தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இங்கு பாருங்கள். அவ்வப்போது இந்த நுட்ப உதவி மன்றத்தைக் கவனித்து உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 06:16, 23 ஏப்ரல் 2015 (UTC)

இரவி அவர்களே நிச்சயமாக முடியும்போது உதவுகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:27, 24 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your helpதொகு

Hello Shrikarsan, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்புதொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:21, 7 மே 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகு

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:10, 8 சூலை 2015 (UTC)

பதக்கம்தொகு

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
சிறீகர்சன் பரிந்துரைத்த திருத்தத்தால் பழைய நிலைக்குத் திரும்பிய விக்கியன்பின் மூலம் இப்பதக்கத்தை வழங்குகின்றேன். மதனாகரன் (பேச்சு) 15:38, 8 ஆகத்து 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--AntanO 15:47, 8 ஆகத்து 2015 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:48, 8 ஆகத்து 2015 (UTC)
மதனாகரன் அண்ணா அன்டன் அவர்கள்,நந்தகுமார் அவர்கள் அனைவருக்கும் நன்றி.
பி.கு - சிறீகர்சன் → ஸ்ரீகர்சன். எழுத்துப்பெயர்ப்பில் (Shift+S)ri=ஸ்ரீ --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:59, 9 ஆகத்து 2015 (UTC)
மறுபடியுமா? ஸ்ரீ, ஶ்ரீ, சிறீ, சிரீ? --மதனாகரன் (பேச்சு) 06:11, 9 ஆகத்து 2015 (UTC)

வார்ப்புரு உதவிதொகு

இந்த வார்ப்புருவைக் கவனிக்க முடியுமா? விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர் பக்கத்தில் கோரிக்கைகளின் கீழுள்ள பயனர் பெயர்களுக்கண்மையில் <dot-separator> எனத் தோன்றுகிறது. --மதனாகரன் (பேச்சு) 10:56, 18 ஆகத்து 2015 (UTC)

மதனாகரன் அண்ணா இப்போதும் விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர் பக்கத்தில் <dot-separator> எனத் தோன்றுகின்றதா? (எனக்குத் தோன்றவில்லை). இம்மாற்றத்தை நேற்றிரவுதான் செய்தேன். வார்ப்புருவில் இயல்பிருப்பாக separator ஆக இருந்த dot இனை tpt-languages ஆக மாற்றியிருந்தேன். dot-separator ஏன் வேலைசெய்யவில்லை என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:12, 18 ஆகத்து 2015 (UTC)

இப்போது சரியாகி விட்டது. நன்றி. --மதனாகரன் (பேச்சு) 11:32, 18 ஆகத்து 2015 (UTC)

கையொப்பம்தொகு

தங்கள் கையொப்பத்தில் தோன்றும் #ifexist, #invoke போன்ற குறிச்சொற்களின் பயன்பாட்டை அறியத் தரமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 12:27, 20 ஆகத்து 2015 (UTC)

மதனாகரன் அண்ணா #ifexist என்பது ஒரு expensive ParserFunction. #invoke என்பது Module களைச் செயற்படுத்துவதற்கான ஒரு Function. பயன்பாட்டினை அறிய நான் தந்துள்ள இணைப்புகளைப் பாருங்கள். விக்கி நுட்பம் தொடர்பில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டதால் கையொப்பத்தில் இவற்றை இணைத்துள்ளேன்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:22, 20 ஆகத்து 2015 (UTC)

முன்னிலையாக்கர்தொகு

Wikipedia Rollbacker.svg

வணக்கம். உங்கள் கணக்கு முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. --AntanO 13:29, 20 ஆகத்து 2015 (UTC)

அன்டன் அவர்களே நன்றி. அணுக்கத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன்:) --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:34, 21 ஆகத்து 2015 (UTC)

ஒரு வேண்டுகோள்தொகு

உங்கள் பக்கத்திலுள்ள பழைய உரையாடல்களைக் காப்பகத்தில் ஏற்றாமல் நிரலைப் பயன்படுத்திச் சுருக்கியுள்ளீர்கள். பழைய உரையாடல்களை ஏற்ற நேரமெடுப்பதால் கைப்பேசியில் புதிய உரையாடல்களைப் படிக்கக் கடினமாக உள்ளது. உங்கள் பழைய உரையாடல்களைக் காப்பகத்தில் ஏற்றினால் உதவியாக இருக்கும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 04:51, 2 செப்டம்பர் 2015 (UTC)

மதனாகரன் அண்ணா முன்னரும் ஏனைய விக்கிப்பீடியர்கள் பரணேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள். பரணேற்ற விருப்பமில்லாததால் நிரலைப் பயன்படுத்திச் சுருக்கினேன். விரைவில் பரணேற்ற முயற்சிக்கின்றேன்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:23, 9 செப்டம்பர் 2015 (UTC)

Module:HtmlBuilderதொகு

ஆ.வி.யில் Module:HtmlBuilder பார்த்தீர்களா? சில நாட்களாக வழு நிலவரங்களைக் கவனிக்கவில்லை. --AntanO 15:48, 10 செப்டம்பர் 2015 (UTC)

அன்டன் அவர்களே கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி. ஆ.வி.யில் தற்போது Module:HtmlBuilder பயன்பாட்டிலில்லை. த.வியில் Module:HtmlBuilder பயன்பாட்டிலுள்ள Module களை முதலில் சரிப்படுத்திவிடுகின்றேன். பின்பு Module:HtmlBuilder ஐ ஆ.வி.யில் உள்ளபடி மாற்றிவிடலாம். இன்றே விரைந்து செய்து முடிக்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:58, 11 செப்டம்பர் 2015 (UTC)
Yes check.svgY ஆயிற்று அன்டன் அவர்களே சரிசெய்துவிட்டேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:35, 11 செப்டம்பர் 2015 (UTC)
நன்றி, ஸ்ரீகர்சன் --AntanO 17:56, 11 செப்டம்பர் 2015 (UTC)

உதவிதொகு

நேரங் கிடைக்கும்போது வார்ப்புரு:Chem ஐச் சரிசெய்து தரமுடியமா? சல்பேற்று என்ற பக்கத்திலும் சிக்கல் எழுந்துள்ளது. SO42- என்று வரவேண்டிய இடத்தில் O4S என்று வருகின்றது. --மதனாகரன் (பேச்சு) 05:25, 14 செப்டம்பர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று ஆண்டன் சரிசெய்துள்ளார். --மதனாகரன் (பேச்சு) 06:22, 14 செப்டம்பர் 2015 (UTC)

விரைந்து உதவியமைக்கு நன்றி அன்டன் அவர்களே தற்போது பாடசாலை ஆரம்பமாகிவிட்டதாலும், இன்னொரு விடயத்தில் (?) மேம்படுத்தல்களைச் செய்துவருவதாலும் அதிகம் பங்களிக்க முடிவதில்லை. முடியும் போதெல்லாம் வார்ப்புருகளை மேம்படுத்தி உதவுகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:38, 14 செப்டம்பர் 2015 (UTC)
மதனாகரன் அண்ணா, அன்டன் அவர்களே வேதியல் வார்ப்புருகளை பகுதி பகுதியாக ஆ.விக்கு ஏற்றபடி இற்றைப்படுத்தி வருகின்றேன். வார்ப்புரு:Chembox Identifiers உடன் தொடர்புபட்ட அனைத்து வார்ப்புருகளையும் சரிசெய்துவிட்டேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:03, 15 செப்டம்பர் 2015 (UTC)

காமன்சுக்குதொகு

தமிழ் விக்கியில் நீங்கள் தரவேற்றிய உங்கள் சொந்தப் படிமங்களை அவற்றைப் பொதுவில் விடுவதாக இருந்தால், நீங்களே பொதுவகத்தில் மீண்டும் தரவேற்றலாம். அவை அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், இங்குள்ள படிமங்களை நீக்க படிமங்களில் {{nowcommons}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:17, 20 செப்டம்பர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று நன்றி கனக்ஸ் அவர்களே--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:34, 20 செப்டம்பர் 2015 (UTC)

நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட வேண்டுகோள்தொகு

வணக்கம். மீடியாவிக்கி தொடர்புடைய நுட்பத்தில் ஆர்வமும் திறமும் உடைய நீங்கள் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயற்பட்டால் நன்றாக இருக்கும். இணைய வேண்டுகிறேன். விவரங்களை இங்கு காணலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:06, 13 அக்டோபர் 2015 (UTC)

@இரவி அவர்களே க.பொ.த சா/த பரீட்சை டிசம்பர் மாதம் வரவுள்ளதால் தற்போது பங்களிக்க முடியாதுள்ளது. டிசம்பர் 17 இன் பின்னர் இணைய வழி ஒருங்கிணைப்பில் முனைப்புடன் ஈடுபட முடியும்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:50, 14 அக்டோபர் 2015 (UTC)
சரி, திசம்பருக்குப் பிறகு இணைந்து கொள்ளுங்கள். தேர்வில் சிறக்க வாழ்த்துகள் :)--இரவி (பேச்சு) 06:47, 14 அக்டோபர் 2015 (UTC)

புதிய வார்ப்புரு சோதனைக்கு அழைப்புதொகு

வார்ப்புரு பேச்சு:Taxobox என்பதில் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். உதவுக! --உழவன் (உரை) 13:04, 1 திசம்பர் 2015 (UTC)

பதக்கம்தொகு

Barnstar - technical works.svg நுட்பப் பதக்கம்
விக்கியன்பு 2.0ஐ வடிவமைத்ததற்காக, அக்கருவியூடாகவே இப்பதக்கம். --மதனாகரன் (பேச்சு) 05:51, 1 சனவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி மதனாகரன் அண்ணா (நிரல் சோதனை மேற்கொண்டமைக்கு) சரியாகவே வேலை செய்கிறது!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:54, 1 சனவரி 2016 (UTC)

👍 விருப்பம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா.-- மாதவன்  ( பேச்சு  ) 06:09, 1 சனவரி 2016 (UTC)
நன்றி மாதவன்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:23, 1 சனவரி 2016 (UTC)
நல்ல கருவி அண்ணா. வாழ்த்துக்கள் :) சிறப்பாக செய்திருக்கிறீர்கள். எனக்கு வாய்ப்பளிக்காமல் தான் பதக்கம் தந்தமைக்கு மதனாகரன் அண்ணாவைக் கடிந்துகொள்ளவே முடிகிறது. :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:57, 1 சனவரி 2016 (UTC)
Face-grin.svg --மதனாகரன் (பேச்சு) 11:23, 1 சனவரி 2016 (UTC)
நன்றி ஆதவன்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:09, 1 சனவரி 2016 (UTC)
சோதித்துப் பார்த்தேன். இது போன்ற நுட்பப் பணிகளில் தாங்கள் காட்டும் ஆர்வம் சிறப்பு. இதனை விருப்பத் தேர்வுகள்->கருவிகள் பகுதியில் வருமாறு செய்யலாமே? பழைய விக்கியன்பு கருவியை நீக்கி விடலாம்.--இரவி (பேச்சு) 13:24, 1 சனவரி 2016 (UTC)
இரவி அவர்களே நன்றி. மீடியாவிக்கி Gadget ஆக்குவதற்கு சிறு மாற்றங்களை மேற்கொண்டு பயனர்:Shrikarsan/Gadget-wikilove2.js, பயனர்:Shrikarsan/Gadget-wikilove2.css ஆகிய பக்கங்களை உருவாக்கியுள்ளேன். இவற்றை முறையே மீடியாவிக்கி:Gadget-wikilove2.js, மீடியாவிக்கி:Gadget-wikilove2.css ஆகிய பக்கங்களுக்கு வழிமாற்றின்றி நகர்த்தி உதவுங்கள். பின்னர் இங்கு wikilove[ResourceLoader]|wikilove.js என்ற வரியை wikilove[ResourceLoader]|wikilove2.js|wikilove2.css என்று மாற்றிவிடுங்கள். பராமரிக்க இலகு என்பதால் கருவிகளின் கடிவாளத்தை என்வசம் வைத்துக்கொள்கின்றேன்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:37, 1 சனவரி 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று. ஆனால், தற்போது பதக்கம் அளிப்பதற்கான விக்கியன்பு இதயம் புலப்படவில்லை. ஒவ்வொரு பக்கம் திறக்கும் போதும் பெயர், அறிவிப்புச் சின்னங்களுக்கு அருகே புதிதாக ஒரு விக்கியன்பு இதயம் தொடர்பாக உள்ள இணைப்புகள் விரிந்து சுருங்குகின்றன. இதனைச் சோதித்துப் பார்த்து சரி செய்ய வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 15:04, 1 சனவரி 2016 (UTC)

இரவி அவர்களே மீடியாவிக்கி:Gadget-wikilove2.css பக்கத்திலுள்ள உள்ளடக்கத்தை @import url('//ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shrikarsan/விக்கியன்பு2.css&action=raw&ctype=text/css'); என்று மாற்றிவிடுங்கள். பின்பு சரியாகிவிடும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:23, 1 சனவரி 2016 (UTC)

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதொகு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:57, 26 மார்ச் 2016 (UTC)

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதொகு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்புதொகு

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:12, 27 சூலை 2016 (UTC)

விக்கியன்பு 2.0 சரி பாருங்கள்தொகு

விக்கியன்பு 2.0 சரி பாருங்கள். பதக்கம் அளிக்கும் போது வழுக்கள்/பிழைகள் தென்படுகின்றன. --இரவி (பேச்சு) 06:59, 15 ஆகத்து 2016 (UTC)

Wikimedia-LKதொகு

WikimediaSrilanka-Usergroup - Logo-Vertical.svg

Hello!

As a member of the Wikimedia Community User Group Sri Lanka, you are invited to join the official Wikimedia-LK mailing list.

The list may be used for both official announcements, as well as community discussions by the editor community in Sri Lanka.

Thank you, Rehman 10:54, 30 ஏப்ரல் 2017 (UTC)

மீளமைக்கும்போது தொகுத்தல் சுருக்கத்தில் காரணம் தெரிவிக்க வேண்டும். --~AntanO4task (பேச்சு) 05:48, 10 மே 2017 (UTC)

Antan அப்போது பேருந்திலிருந்ததால் கைபேசியில் தமிழில் தொகுக்க முடியவில்லை. அதனால் தான் தொகுத்தல் சுருக்கமின்றி முன்னிலையாக்கினேன். ஆனால் பேச்சுப்பக்கத்தில் காரணத்தைத் தெரிவித்திருந்தேனே?--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:25, 10 மே 2017 (UTC)
ஆம், ஆனால் நான் குறிப்பிடுவது மீளமைக்கும்போது தொகுத்தல் சுருக்கத்தில் முறையையாகும். en:Wikipedia:Reverting --AntanO 06:29, 10 மே 2017 (UTC)
👍 விருப்பம் ஆம் எனக்கும் தெரியும். மேலேயே உரிய காரணத்தை வழங்கிவிட்டேன் என நினைக்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:37, 10 மே 2017 (UTC)
மீளமைத்தலுக்கும் பேச்சுப்பக்கத்தில் கருத்திடுவதற்கும் வேறுபாடுள்ளது. --AntanO 06:41, 10 மே 2017 (UTC)
Antan அதைத் தான் முன்னரே எனக்குத் தெரியுமென்று குறிப்பிட்டிருந்தேனே. நான் அப்போது தொகுத்துக்கொண்டிருந்த சூழல் அப்படிப்பட்டது.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:51, 10 மே 2017 (UTC)
உங்கள் சூழல் எப்படிப்பட்டது என்பது பொருட்டல்ல. --AntanO 06:58, 10 மே 2017 (UTC)
Antan நீங்கள் எப்படி அவ்வாறு கூறமுடியும். வார்ப்புருவிலேயே (இவ்வாறு]) கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும் என்று உள்ளது. நீங்கள் தானே பேச்சுப்பக்கதில் தெரிவிக்காமல் முதலில் வார்ப்புருவை நீக்கினீர்கள். ஒரு தடவை கவனித்திருந்து பேச்சுப்பக்கத்தில் தெரிவித்த பின் மீளமைத்திருக்கலாம். நீங்கள் தொகுப்புச் சுருக்கத்தில் as per discussion at village pump எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் அவை புதிய ஆசிரியப் பயனர்களுக்கே என நினைத்தேன். அதனால் தான் அவ்வாறான புதிய ஆசிரியர்களது கட்டுரைகளை ஏதும் செய்யாது பயனர்:Shrikarsan/துப்புரவு இப்பக்கத்தில் அவற்றை பின்னாளில் கண்காணிப்பதற்காக ஒழுங்குபடுத்திவருகின்றேன். எடுத்துக்காட்டாக கல்வி நிலைகள். கட்டுரை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உள்ளது. சில நேரடி கூகுள் தமிழாக்கமாக உள்ளன (எ.கா. தொடக்கப் பள்ளி). இவ்வாறான குப்பைகளுக்கு நான் நீக்கல் வார்ப்புரு இடவில்லையே. நீங்கள் என் சூழ்நிலையை புரிந்துகொள்வீர்கள் என நினைத்தேன். உங்களைப் போலவே பலரும் (நான் உட்பட) வேலைப் பளுவின் மத்தியில் தான் இயன்றவரை பங்களிக்கின்றோம். புதியவர்களை அரவணைப்போம் அதேவேளை பிற பயனர்களது சூழலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:28, 10 மே 2017 (UTC)
இத்தொகுப்பு பற்றியதுதான் என் உரையாடல். விக்கி யாரையும் சிக்கலான சூழலில் இருந்து கொண்டு பங்களிக்க கட்டாயப்படுத்தவில்லை. --AntanO 07:39, 10 மே 2017 (UTC)
இத்தொகுப்பை நீங்கள் செய்யும் போது ஏன் பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவில்லை. நான் முன்னிலையாக்கினதில் ஏதும் தவறுள்ளதா? நான் சூழலுக்கமைய முடிந்தவரை சரியாகவே பங்களித்திருந்தேன். ஏன் பேச்சுப் பக்கத்தில் உரையாடாமல் வார்ப்புருவை முதலில் நீக்கினீர்கள். அதனாலேயே முன்னிலையாக்கினேன். பின்னரும் பேச்சுப் பக்கத்தில் உங்களுக்கு விளக்கவே முனைந்தேன். மன்னிக்கவும் வகுப்பிற்குச் செல்லவிருப்பதால் தற்போது தொடர்ந்து பதிலளிக்க முடியாது.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:49, 10 மே 2017 (UTC)
Antan அப்பயனர் tnse பங்களிப்பாளரும் அல்ல. வேறொருவர் உருவாக்கியதை தவறுதலாக மீண்டும் உருவாக்கவும் இல்லை. தானே இரு முறை இரு பெயரில் கட்டுரையை உருவாக்கியிருந்தார்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:52, 10 மே 2017 (UTC)
உண்மை. ஆலமரத்தடி கருத்துக்களைப்பாருங்கள். tnse இல்லாமலும் பதிவு செய்திருக்கலாம் என்கிறார்கள். தற்போதைக்கு இறுக்கம் வேண்டாம் என்பதால் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. --AntanO 07:58, 10 மே 2017 (UTC)
Antan, சிறப்பு:Contributions/Maruff மார்ச்சிலிருந்து பங்களிக்கின்றார் அதனால் தான் tnse இல்லை என் நினைத்தேன். மன்னிக்கவும் தாங்கள் முதலில் கேட்டதற்கான பதில் - நான் மீளமைக்கவில்லை முன்னிலையாக்கினேன் அதனால் தான் தொகுப்புச் சுருக்கத்தில் விளக்க முடியவில்லை. தானாகவே தொகுப்புச் சுருக்கம் உருவாகிவிடும். அதனால் தான் பேச்சுப் பக்கத்தில் விளக்க முயன்றேன். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:21, 10 மே 2017 (UTC)
@AntanO: மன்னிக்கவும் அன்டன். இங்கு நீங்கள் உரையாடும் பாங்கு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது முற்றிலும் புரிந்துணர்வு (empathy) இன்றி இருக்கிறது. ஒரு பயனர் தீநோக்கோடு விசமத் தொகுப்பில் ஈடுபடாதவரை அவர் பங்களிக்க நேர்ந்த சூழலைக் கருத்தில் கொள்வது தகும். ஆங்கில விக்கிப்பீடியாவின் சின்னச் சின்ன விதிகளையும் நடைமுறைகளையும் இங்கு பின்பற்றக் கோருவது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொள்ளும் போது நல்விளைவைத் தராது. --இரவி (பேச்சு) 13:33, 10 மே 2017 (UTC)

நான் வார்புரு இட்டால் அதனை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் முரண்பட்டதை அறிந்திருக்கலாம். மீளமைப்பதும் மற்ற பயனருக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? தர்க்க ரீதியாக யாரும் உரையாடலாம். இங்கு தர்க்கித்தது யார்? அல்லது உங்களுக்கு வந்தால் இரத்தம். மற்றவருக்கு என்றால்..... என்ற மனநிலையா? நான் என்ன செய்தாலும் குற்றம் காண வேண்டும் என்ற மனநிலையா? நான் என்ன செய்தாலும் அது தவறு. அப்படித்தானே?--AntanO 13:51, 10 மே 2017 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு

அன்புள்ள ஸ்ரீகர்சன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எ