தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு முதலான நூல்களில் உள்ள எந்தச் சொல்லையும் தமிழ்த்துளி Tamil-drops'-யில் உள்ள தேடு பகுதியில் தட்டச்சு செய்து சொல்லாட்சிகளையும், விளக்கத்தையும், சிற்சில படங்களுடன் கண்டுகொள்ளலாம்.
செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.
முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிவந்த முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.
டாக்டர் மு. வரதராசனார் - ஆற்றுப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டுவந்தவர். அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குப் பரிந்துரைத்து, அவர் ஆணையின் பேரில், தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்துக்கொண்டிருந்த பணியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றும் பொறுப்பினை அளித்தவர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தில், அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர்., பாவலர் முத்துசாமி பரிந்துரையின் பேரில் பணியமர்த்தம் செய்து, அரசு வெளியிட்ட "தமிழர் விளையாட்டு மடல்" என்னும் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றச் செய்தார்.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் பல வரலாற்று நூல்களையும், சிற்றிலக்கிய மரபுக்கவிதை நூல்களையும், சங்கநூல் பத்துப்பாட்டு முழுமைக்கும் ஆய்வுநோக்குச் செய்தியுரை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்களுக்குப் பல பேரறிஞர்கள் மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.
இப்போது இவர் தம் கருத்துகளை இணையதளத்தில் உலகுக்குப் படைத்துக்கொண்டிருக்கிறார்.