புலவர் கால மன்னர்

புலவர் கால மன்னர் என்னும் இந்தப் பகுதியில் சங்க காலப் புலவர்களும் அவர்களது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர் முதலானோரும் தொகுப்பாகக் காட்டப்பட்டுள்ளனர். இதில் சங்கப்பாடல்கள் முழுமையிலும் கண்டறியப்பட்ட செய்திகள் உள்ளன. இதன் வழியே சான்றுகளுடன் சங்ககால வரலாற்று நிரலை அறிந்துகொள்ளலாம்.

மன்னர் முதலானோரை நேரில் கண்டு பாடிய புலவர்களும், மன்னரைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்ட புலவர்களும் உள்ளனர். இவை இங்குப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதனால் காலம் உறுதிப்படும். மன்னர் முதலானோர் என்னும் குறியீட்டில் புலவரால் காட்டப்பட்டுள்ள வேந்தர், குறுநில மன்னர், புரவலர், புலவர், குடியின மக்கள் கோசர் வடுகர் முதலானோர் அடங்குவர்.

புலவர்களின் பெயர்கள் அடைமொழி பின்னாக்கப்பட்டு அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன. அவை அட்டவணை செய்யப்பட்டுள்ளன. மன்னர் முதலானோர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளனர். சான்றுகளும் விளக்கங்களும் அடிக்குறிப்பாக்கப்பட்டுள்ளன.

செய்தி விளக்க அட்டவணை - பகுப்பமைதி

தொகு

இந்தச் செய்தித் தொகுப்பில் விளக்கம் தரும் அட்டவணை 4 பிரிவுகளைக் கொண்டது.

  • மேலே புலவர் பெயர்
  1. முதல் கட்டம் - புலவர் நேரில் கண்டு பாடிய வேந்தர் பெயர். வேந்தர் என்போர் சேர சோழ பாண்டியருள் ஒருவர்
  2. இரண்டாம் கட்டம் - புலவர் நேரில் கண்டு பாடிய வள்ளல், குறுநில மன்னர் முதலானோர்
  3. மூன்றாம் கட்டம் - புலவர் தம் பாடலில் குறிப்பிடும் வேறு செய்தி - வேந்தர், மன்னர், குடியின மக்கள், நூல்கள் முதலானவை
  4. நான்காம் கட்டம் - புலவர் கூறும் செய்தி

இப்பகுப்பு இவ்வாறு காட்டப்பட்டுருக்கும்

புலவர் பெயர்

நேரில் கண்ட வேந்தர் நேரில் கண்ட புரவலர் குறிப்பிடப்படுவோர் செய்தி

அடைநெடுங்கல்வியார்

தொகு
- - கோசர், அழும்பில் வலம்புரி கோசர் அழும்பில் என்னும் ஊரில் வாழ்ந்தனர்

அம்மூவனார்

தொகு
- - கோவல், காரி, பெண்ணை கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி, கோவலூர்ப் பெண்ணையாற்று மணல்படிவு போல் அவள் கூந்தல் (அகம் 35)
- - தொண்டி, குட்டுவன் தொண்டிப் பத்து (ஐங்குறுநூறு 171-180) கடலொலித் திரை முழக்கம் - நெய்தல், முண்டகம் பூக்கள் - அணங்குடைப் பனித்துறை - குட்டுவன் தொண்டி - அலவன் விளையாடும் - முதுகுருகு இருக்கும்.

அரிசில் கிழார்

தொகு
பெருஞ்சேரல் இரும்பொறை - தோட்டி, கொல்லி, புகார், பூழியர், கொடுமணம், பந்தர், கொங்கர், தகடூர், அயிரை, கோதைமார்பன், பதிற்றுப்பத்து – 8 ஆம் பத்து - ஆர் எயில் தோட்டி நகரைக் கைப்பற்றினான். (71), மாலைக்காலத்துச் செவ்வானத் தீ போன்றவன் (72), புகார் நகரச் செல்வ வளம் மிக்கவனாக விளங்கினான். பூழியர் குடி மக்களுக்குப் பாதுகாவலனாக விளங்கினான். (பூழியர் மெய்ம்மறை) (73), கொடுமணம் துறைமுகத்தில் கலம் என்னும் பெருங்கப்பல் கொண்டுவந்த அணிகலன்களையும், பந்தர் என்னும் துறைமுகத்து முத்துக்களையும் இவன் தனதாக்கிக்கொண்டான். அரசாண்டுகொண்டிருந்த மகன் ஒருவன் இவனுக்கு உண்டு.(74), வேந்தரும் வேளிரும் பணியாவிட்டால் விடமாட்டான். பல்வேல் போலந்தார் யானை இயல்தேர்ப் பொவறையன் (75) இரந்தோர் வாழக் குதிரை வழங்கினான் (76), கொங்கர் பசுக்கூட்டம் போல் செல்லும் பெரும்படை கொண்டவன் (77, 78), தகடூரை அழித்தான் (78), பாடலில் அரிசில் கிழார் இவனைக் கோதை மார்பன் எனக் குறிப்பிடுகிறார். (79) வேந்தரை வென்று அவரது பட்டத்து யானையின் கொம்பை அறுத்து அரசுக்கட்டில்(அரியணை) செய்துகொண்டான் (79), போரில் பிறக்கடி ஒதுங்கா மன்னர்களிடம் திறை வாங்கிக்கொண்டு விட்டுவிடுக - எனப் புலவர் இவனுக்கு அறிவுரை வழங்குகிறார். (80)
- - செல்வக் கடுங்கோ, பதுமன், நீர்கூர், அதிகன், தகடூர், பதிகம் - செல்வக் கடுங்கோ இவன் தந்தை. வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி(மகள்) இவன் தாய். கொல்லிக் கூற்றத்து ஊர் நீர்கூர். இங்கு நடந்த போரில் அதிகன், இருபெரு வேந்தர் ஆகியோரை வென்றான். அவர்களின் முரசையும், வெண்கொற்றக் குடையையும் கைப்பற்றிக்கொண்டான். போர்க்கள வேள்வி செய்தான். தகடூர் நொச்சி(கோட்டை)யைச் கைபட்டினான். பன்னைப் பாடிய புலவர் அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் (900,000) காணம் பணமாகத் தந்தபின், தானும் தன் மனைவியும் வெளியே வந்து நின்றுகொண்டு அரியணை ஏறுமாறு வேண்டினான். 17 ஆண்டு நாடாண்டான்.
- வையாவிக் கோப் பெரும்பேகன் கண்ணகி மனைவி கண்ணகியைப் பிரிந்திருந்தவனை நேரில் கண்டு அறிவுரை கூறினார் (புறம் 146)
- எழினி (அதியமான்), (தகடூரில் பொருது வீழ்ந்தவன்) - விலங்கு-பகை கடிந்தவன். கலங்காச் செங்கோல் மன்னன். இறந்தான். (புறம் 230)

ஆசனார் (சாகலாசனார்)

தொகு
- - குட்டுவன், கழுமலம் 'நல்தேர்' என்னும் அடைமொழியுடன் குறிப்பிடப்படும் இந்தக் குட்டுவன் நாட்டு ஊர் கழுமலம். இது சேரநாட்டு ஊர். தலைவி இந்த ஊர் போல் அழகுடையவளாம். (அகம் 270)

ஆத்திரையனார் (கள்ளில்)

தொகு
- ஆதனுங்கன் மோரியர், உலக-இடைக்கழி, அறத்துறை-அம்பி மோரியர் வெற்றி வேலுடன் வந்தபோது தேர் வருவதற்காக வெட்டி அமைத்த வழி உலகவிடைக்கழி. இங்கு அறத்துறை (அறம் செய்யும் மடம்) இருந்தது. அந்த அறத்துறை போல ஆதனுங்கன் அறம் செய்தான். ஆற்றுத்துறையில் இருக்கும் அம்பி(பரிசல்) மக்களை அக்கரையிலும் இக்கரையிலும் சேர்ப்பது போல இவன் பல்வேறு மக்களுக்குப் பாலமாக விளங்கினான் (புறம் 175)

ஆலத்தூர் கிழார்

தொகு
நலங்கிள்ளி (சோழன்) - சேட்சென்னி நலங்கிள்ளி சேட்சென்னியின் மகன். நடுகல் ஆயினான். (புறம் 225)
கிள்ளிவளவன் [1] திருக்குறள் - செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்று [2] கருவூர் அரசனின் காவல்மரத்தை வெட்டினான். சேரன் பயந்துபோய்க் கோட்டைக்குள்ளேயே பதுங்கியிருந்தான். கோழையோடு போரிடுவது சோழன் நாணவேண்டிய செயல் என்கிறார் புலவர். இது கேட்ட கிள்ளி போரைக் கைவிட்டான்.[3]
கிள்ளிவளவன் [4] கொடை [5]

ஆலம்பேரி சாத்தனார்

தொகு
- - செழியன், சிறுமலை கைவண் செழியன் சிறுமலை அரசன் (அகம் 47)
- - கடலன், விளங்கில் கடலன் ஆண்ட விளங்கில் நகரம் போல் அவள் அழகி. (அகம் 81)
- - வானவன்-மறவன், பிட்டன், குதிரை குதிரைக் கவாண் எனப்படும் மலைப்பிளவுப் பகுதியை ஆண்ட அரசன் பிட்டன். இவன் வானவன் மறவன் எனக் குறிப்பிடப்படுவதால் சேரமன்னனின் படைத்தலைவன் எனத் தெரிகிறது. (அகம் 143)
- - செழியன், ஆலங்கானம் கடுந்தேர்க் கைவண் செழியன் தலையாலங்கானப் போரில் வென்றான் (அகம் 175)

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

தொகு
- - வானவன், கொடுமுடி, ஆமூர் குறும்பொறைக்குக் கிழக்குப்பக்கம் இருந்த ஆமூரை அரசன் கொடுமுடி ஆண்டுவந்தான். இந்த ஆமூர்க் கோட்டையை யானைப்படையுடன் சென்று தாக்கி வானவன் வென்றான் (அகம் 159)

ஆவூர் மூலங்கிழார்

தொகு
- சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் இமயம், காவிரி, பூச்சாற்றூர் [6] விண்ணத்தாயனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். நெய் வழங்கி வேள்விகள் பல செய்தான். புலவர் காவிரிப்படுகை ஊரினர். விண்ணத்தாயன் இமயம் போல வாழவேண்டும் எனப் புலவர் வாழ்த்துகிறார் (புறம் 166)

இடைக்காடனார்

தொகு
கிள்ளிவளவன் [7] மெலிவு இல்லாமல் செங்கோல் நடத்தியவன் [8]

இடைக்குன்றூர் கிழார்

தொகு
நெடுஞ்செழியன் {தலையாலங்கானம் வென்றவன்) எழுவர் எழுவரை ஒரு பகலில் வென்றவன் [9] இளைஞன் [10] எழுவர் ஊருக்குத் துரத்திச் சென்று அழித்தான் [11] யானைமீது இருந்து போரிட்டான் [12]

இடையன் சேந்தன் கொற்றனார்

தொகு
- - இளம்பெருஞ்சென்னி, பாழி, வடுகர், இளம்பெருஞ்சென்னி சோழர் பெருமகன் எனப் போற்றப்படுகிறான். அவன் பாழி நகர்க் கோட்டையை அழித்தான். அந்தக் கோட்டை செம்பு போல் தோற்றம் கொண்டது. அந்தக் கோட்டையைத் தாக்கும்போது அங்குப் புதியவராகக் காக்க வந்த வம்ப வடுகர் தலைகளைக் மிதித்துத் துவட்டினான். (அகம் 375)

இடையன் செடுங்கீரனார்

தொகு
- - வேளூர், காவிரித்துறை, வேளூர் (புள்ளிருக்கு வேளூர்) நெல் விளையும் நிலம் சூழ்ந்தது. அங்குள்ள தெய்வத்துக்கு மக்கள் பொங்கலிட்டுப் படைப்பார்கள். உயர் பலி பெறூஉம். அங்குள்ள காவிரி நீர்த்துறையில் தலைவன் புதியவளோடு நீராடினானாம். (அகம் 166)

இரும்பிடர்த் தலையார்

தொகு
பெரும்பெயர் வழுதி [13] - - இரவலர் இன்மை தீர்த்தவன் [14]

இளங்கடுங்கோ (மருதம் பாடியவர்)

தொகு
- - அஃதை, சோழர், பருவூர், இருபெரு வேந்தர் பருவூர் வெண்ணெல் விளையும் நிலம் கொண்டது. இவ்வூர்ப் பறந்தலைப் போர்களத்தில் இருபெரு வேந்தரும் சேர்ந்து தாக்கினர். அஃதை 'குறுமகள்' என்றும் அழகிய மாமைநிறம் கொண்டவள் என்றும் பாடலில் காட்டப்பட்டவள். இவளது தந்தை (அஃதை தந்தை) இவன் அவர்களை எதிர்த்துத் தாக்கி இருவரையும் வீழ்த்தினான். இது பல ஊர்களிலும் பேசப்பட்டது போல அலர் தூற்றப்பட்டதாம். (அகம் 96)

இளங்கீரனார் (பொருந்தில்)

தொகு
இரும்பொறை (சேரன் மாந்தரஞ்சேரல்) கபிலன் கபிலன் உன்னைப் பாடியது போல நானும் உன்னைப் பாடுவேன் - எனகிறார் புலவர் (புறம் 53)
- - பொறையன் கொல்லிமலை அரசன் (நற்றிணை 346)
- - உதியன் ஞாட்புப் போரில் வயவர் குழல் ஊதினர் (நற்றிணை 113)
- - சோழன், உறந்தை, சோழன் ஆண்ட உறையூரை அடுத்த ஆற்றுமணல் படிவு போன்ற கூந்தலை உடையவள். (குறுந்தொகை 116)

இளங்கௌசிகனார் (மதுரை)

தொகு
- - வானவன் வானவன் போரிட்ட அவனது பகைவரின் மதில் போலத் தலைவி தலைவன் பிரிவால் சீரழிந்து கிடக்கிறாளாம். (அகம் 381)

இளவெயினி [15]

தொகு
- ஏறைக்கோன் கோடல்-கண்ணி கொலைவேல் கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் … ஏறை - தம்மவர் தவறு செய்தால் தாங்கிக்கொள்வான். பிறர் வறுமையில் வாடுவதைப் பார்த்துத் தான் நாணுவான். படையைக் கண்டு அஞ்சமாட்டான். வேந்தர் அவையில் வேறுநடை போட்டுத் தூது செல்வான். (புறம் 157)

இளவெயினி [16]

தொகு
பாலைபாடிய பெருங்கடுங்கோ [17] - - வஞ்சி வேந்தன்
பாடிய பாணனுக்குக் கழஞ்சு நிறையளவு பொன்னணி, பாடினிக்குப் பொன்னால் செய்த தாமரை வழங்கினான் [18]

உருத்திரங் கண்ணனார் (கடியலூர்)

தொகு
- தொண்டைமான் இளந்திரையன் கச்சி என்னும் காஞ்சிபுரம், நீர்ப்பெயற்று, காஞ்சி இறைவன் கோயில், அரசன் கோயில், பெரும்பாணாற்றுபடை - முந்நீர் வண்ணன் (திருமால்) வழிவந்தவன் (30), நீர்ப்பெயற்று என்னும் பட்டினம் நாவாய்க் கப்பல்கள் வந்துபோகும் கடல்துறை. (319), காஞ்சி இறைவன் அருந்திரல் கடவுள் (391), திருமால் வயிற்றில் தோன்றிய தாமரை மேல் பிரமன் வீற்றிருப்பது போல காஞ்சியில் தொண்டைமான் அரண்மனை இருந்தது (404), காஞ்சி விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் (411), பரிசிலை நான்கு குதிரை பூட்டிய தேரில் ஏற்றி அனுப்புவான் (488)அருவிய மலை கிழவோன் (500)
கரிகாற் பெருவளத்தான் (சோழன்) - காவிரிப்பூம் பட்டினம், சோணாடு (29), இருங்கோவேள், திருமாவளவன் (299), பட்டினப்பாலை - அரசன் கரிகால் பெருவளத்தான் தமிழ்மொழி வளர விழாக் கொண்டாடி வந்தவருக்கெல்லாம் உணவு வழங்கினான். (42) புலிப்பொறித்தல் (135), ஆசிரியர் கருத்துப் பரிமாற்றம் (170), நாவாய் மிகுதி (175), கடல்வழி வந்த குதிரை, வண்டியில் வந்த மிளகு மூடை, வடமலை பிறந்த மணி, பொன், குடமலை பிறந்த ஆரம், அகில், தென்கடல் முத்து, குணகடல் பவளம், ஈழத்து உணவு, காழகத்து (கடாரம், பர்மா), ஆக்கம், கங்கை விளைச்சல், காவிரி விளைச்சல், - முதலானவை ஏற்றுமதி இறக்குமதி (191), வரிப்புலி கூட்டில் வளர்ந்தது போல வளர்ந்தான். குழியில் பட்ட ஆண்யானை குழியை அழித்துவிட்டு ஏறித் தன் பெண்யானையை அடைந்தது போல அரியணை ஏறினான் (227), உழிஞைப்போர் (235), ஒளியர், அருவாளர் பணிந்தனர், வடவரும் குடவரும் வாடினர் தென்னவன் ஒடுங்கல், பொதுவர் அடங்கல், இருங்கோவேள் தோற்றல் (283), காடு கெடுத்து நாடாக்கல், குளம் தொட்டு வளம் பெருக்கல் ((284),

உலோச்சனார்

தொகு
பெருநற்கிள்ளி (சோழன், இராச-சூயம் வேட்டவன்) - - நாடன், வேந்தன் என்றெல்லாம் அவனைப் புகழ்கின்றனர். கனவில் கண்டது போல் நனவில் வழங்குபவன் - எனக் கூறிப் புலவர் இவனை வாழ்த்துகிறார் (புறம் 377)
- - பெரியன், புறந்தை, புறந்தை என்னும் ஊர் நாரை ஒலிக்கும் 'புன்னையங்கானல்' கடற்கரை ஓரத்தில் இருந்தது. அதன் அரசன் 'பெரியன்' என்னும் பெயர் கொண்டவன். இவன் வள்ளல். குதிரை பூட்டிய தேரில் செல்லும் பாங்கினை உடையவன். (அகம் 100)
- - பெரியன், பொறையாறு, அரசன் பெரியனின் ஊர் பொறையாறு. இது 'கள் கமழ் பொறையாறு' எனப் போற்றப்படுகிறது. (நற்றிணை 131)

ஊன்பொதி பசுங்குடையார்

தொகு
இளஞ்சேட் சென்னி [19] - தென்பரதவர், வடவடுகர், இராமன், சீதை, தென்னாட்டுப் பரதவர் வலிமையைக் குறைத்தான். வடநாட்டு வடுகரைப் போரில் வென்றான். இவன் இப் புலவரின் குடும்பத்துக்குப் பரிசாலாகத் தந்த அணிகலன்களை எங்கே அணிவது என்று தெரியாமல் கால், கை, தோள், மார்பு, இடுப்பு முதலான இடங்களில் மாறி மாறி அணிந்துகொண்டனர். இராமன் மனைவி சீதையை அரக்கன் கவர்ந்து சென்றபோது அவள் வழி காட்டும் அடையாளமாக வழியில் போட்டுச் சென்ற அணிகலன்களைப் பார்த்த குரங்குக் கூட்டம் அவற்றை எடுத்து விருப்பம் போல் விரும்பிய உறுப்பில் அணிந்துகொண்டது போல அணிந்துகொண்டனர் - என்று புலவர் சுவைபடக் கூறுகிறார். (புறம் 378)
இளஞ்சேட் சென்னி [20] - - போர்களத்தில் மன்னனைக் கண்டு பரிசில் வேண்டுகிறார் (புறம் 370)
இளஞ்சேட் சென்னி [21] - - வழிபடுவோர், பழி கூறுவோர் யார் என அறிக. உரிய தண்டனை தருக (புறம் 10)
இளஞ்சேட் சென்னி [22] - - வெல்வதற்கு முன்பே வெற்றி நம்பிக்கையுடன் கோட்டையை இரவலர்களுக்கு வழங்குவான் (புறம் 203)

எயிற்றியனார் [23]

தொகு
கோப்பெருஞ்சோழன் - - தன் மக்கள்மீது போருக்கு எழுந்தான். புலவர் 'உனக்குப் பின் உன் நாட்டை யாருக்குத் தருவாய்' என்று கூறித் தடுத்து நிறுத்தினார். (புறம் 213)

ஒருசிறைப் பெரியனார்

தொகு
நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில்நாடு புறம் 137 - நாஞ்சில் நாடு ஆற்று வளத்தால் கரும்பு விளையும் நிலம். புலவர் வேந்தர்களை அறிந்ததில்லை எனவும், இவன் மட்டுமே அறிமுகமானவன் என்றும் குறிப்பிட்டுப் பரிசில் வேண்டுகிறார்.

ஓடைகிழார் (துறையூர்) [24]

தொகு
ஆய் துறையூர் முன்றுறை, கூளியர் நினக்கு ஒத்தது நீ நாடி நல்கினை விடுமதி - என்று புலவர் வேண்டுகிறார். தனக்குத் தலையில் பேன்பகை, வயிற்றில் பசிப்பகை, வழியில் கூளியர் பகை முதலானவை தனக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். 'நின்னது தா' என்று குரங்கு போல் காட்டில் வழிப்பறி செய்பவர் கூளியர். (புறம் 136)

ஓரம்போகியார்

தொகு
- - ஆதன், அவினி வாழி ஆதன் வாழி அவினி எனப் போற்றப்படும் இவர்கள் ஓரம்போகியார் வாழ்ந்த நாட்டு அரசர்கள். ஆதன் மகன் அவினி எனக் கொள்ளத் தக்கவர்கள். (ஐங்குறுநூறு 1-10)
- - தேனூர், ஆமூர், இரும்பை, விரான், மத்தி, கழார், வேனில் காலத்திலும் புனல் ஒழுகும் அருவி உள்ள ஊர் தேனூர். இது கரும்பாலை ஓசை கேட்கும் ஊர். ஆம்பல் பூக்கும் குளங்களைக் கொண்ட ஊர். தேர்வண் கோமான் இதன் அரசன்(ஐங்குறுநூறு 54, 55, 57) - ஆமூர் வெல்போர்ச் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. (ஐங்குறுநூறு 56) - இரும்பை கரும்பு களம் மிக்க ஊர். இதன் அரசன் தேர்வண் விராஅன். (ஐங்குறுநூறு 58) - கழார் நகர அரசன் கைவண் மத்தி. (ஐங்குறுநூறு 61).

ஔவையார் [25]

தொகு
மாரி வெண்கோ [26], உக்கிரப் பெருவழுதி [27] பெருநற்கிள்ளி [28] - - மூவரும் ஓரிடத்தில் இருந்தாரைக் கண்டு என்று இவ்வாறு ஒன்றுபட்டு நண்பர்களாக இருக்க வேண்டும் என வாழ்த்தினார் (புறம் 367)
- அஞ்சி [29] தொண்டைமான், கோவலூர், பரணர், மழவர், தொண்டைமான் கோவலூரை இவன் அழித்ததைப் பரணர் பாடினார் (புறம் 99) அஞ்சி ஆற்றல் (புறம் 87), மழவர் பெருமகன் (புறம் 88, 90) நெல்லிக்கனி (புறம் 91) கடிமதில் அரண் பல கடந்தவன் (புறம் 92) போரில் புண்பட்டு நின்றான் (புறம் 93) அவன் புலவர்க்கு குளிப்பாட்டும் யானை போன்றவன். பகைவர்க்கு மதம் கொண்ட யானை போன்றவன் (புறம் 94) தொண்டைமானிடம் தூது (புறம் 95) பணிந்து இறை தருக எனப் பகைவர்க்கு உரைத்தல் (புறம் 97) பகைநாடு அழியும் (புறம் 98) கோவலூரை அழித்தான் (புறம் 99) இழை அணி யானை இயல் தேர் அஞ்சி (புறம் 101) பல்வேல் அஞ்சி (புறம் 193) முதலை போல் ஈர்க்கும் வலிமை மிக்கவன் (புறம் 104), நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தான் (புறம் 206), அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தான் (புறம் 131), நடுகல் ஆயினான் (புறம் 232), அஞ்சி நெஞ்சில் பாய்ந்த வேல் புலவர் நாவில் பாய்ந்தது (புறம் 235), போரடிக்கும் களத்தில் நெல்லின் குவியலை அப்படியே வழங்கினான் (புறம் 390)
- பொகுட்டு-எழினி [30] அதியர் கோமான் மகளிர் பார்வை எழினிக்குப் பகை,இவன் யானைப்படை மற்றவர்களுக்குப் பகை (புறம் 96) நிறைமதி போல் ஒளி மிக்கவன். பள்ளத்திலும் மேட்டிலும் பாரவண்டி இழுக்கும் காளை போன்றவன் (புறம் 102) கரும்பு இவண் தந்தோன் பிறங்கடை கரும்பைக் கொண்டுவந்து முதன்முதலில் பயிரிட்டவன் மரபில் வந்தவன். ஔவை விறலியருடன் வந்து பாடியபோது புத்தாடையும் நல்லுணவும் தந்து பேணினான் (புறம் 392)
- மகன் மகன் பிறப்பு கண்டும் அஞ்சியின் சிவந்த கண் மாறவில்லை (புறம் 100)
- நாஞ்சில் வள்ளுவன் - ஔவையார் தன்னிடமிருந்த அடகுக் கீரையோடு சேர்த்துச் சமைத்து உன்பதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டார். அவனோ யானை ஒன்றைப் பரிசாக வழங்கினான். இதனைத் தேற்றா ஈகை(தெளிவில்லாத கொடை) என ஔவை குறிப்பிடுகிறார் (புறம் 200)

ஔவையார் - தொடர்ச்சி

தொகு
- - வெள்ளிவீதி வெள்ளி வீதியார் (புலவர்) தன் காதலனுடன் சென்றத் போலத் தானும் செல்ல விரும்புவதாக ஒரு தலைவி குறிப்பிடுகிஇறாள். (அகம் 147)
- - பொறையன், கொல்லி, பாரி, பறம்பு பசும்பூண் பொறையன் கொல்லிக்கு அரசன். பாரிநின் பறம்புமலையில் குருவிகள் காலையில் சென்று நெல்லங்கதிர்களைக் கிள்ளிக் கொண்டு மாலையில் திரும்பும். அதுபோல பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்புவான் என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். (அகம் 203)
- - கோசர் நாலூர்க் கோசர் பறை, சங்கு முழக்கத்துடன் அரசனுக்கு இறை(வரி) தண்டினர். அது போலத் தலைவன் தலைவி உறவு உடன்போக்கால் தெளிவாகிவிட்டது. (குறிந்தொகை 15)
- - எழினி பல்வேல் எழினி ஆனிரைகள்க் கவர்ந்துவந்து எதிர்ப்போர் பலரை வென்றவன். (குறுஉந்தொகை 80)
- - அஞ்சி யானைப்படையை உடைய நெடுயதேர் அஞ்சி ஓயாமல் கொடை வழங்குபவன். அவன் ஆனிரை கவந்த ஊர்மக்கள் போல தலைவி உறங்கும் நாள் மிகச் சிலவே. (குறுந்தொகை 91)
- - கிள்ளி, வெண்ணி, முடியன் வெண்ணி அரசன் கைவண் கிள்ளி. - வாய்மொழி முடியன் என்பவன் மலைபோல் யானையை உடையவன். இவன் ஆண்ட மலைநாட்டைப் போல் அழகுள்ளவள் தலைவி. (நற்றிணை 390)

கடுவன் இள எயினனார்

தொகு
- - கபிலர் கபிலர் பதினோரு பேர்.[31] (பரிபாடல் 3)
- - நாவலந்தண்பொழில், வடபொழில், குருகுமலை நாவலந்தண்பொழில் என்றும் வடபொழில் என்றும் பாகுபட்டுக் கிடக்கும் நாட்டின் நடுவே இருந்த குருகொடு பெயர் பெற்ற மால்வரையை முருகப்பெருமான் உடைத்தான். (விந்தியமலை) (பரிபாடல் 5)

கடுவன் மள்ளனார்

தொகு
- - கவுரியர், கோடி, இராமன் தொன்முது கோடி எனப் போற்றப்படும் தனுஷ்கோடி வெல்போர்க் கவுரியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இங்கிருந்த கடல்கானல் துறையில் ஞாழல், புன்னை மலர்க்கொத்துகளைக் கொண்டு தழையணி செய்து மகளிர் விளையாடுவர். இந்தத் துறையில் இருந்த ஆலமரத்தடியில் இருந்துகொண்டு இராமன் தன் வெற்றிக்குப் பின்னர் அருமறை ஓதினான். அந்த ஓசையைக் கேட்டதும் எங்கும் எதிலும் ஒலி அடங்கி அமைதியாயிற்று. தலைவன் தன்னைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் அலர் தூற்றும் ஊரார் வாய் இவ்வாறு அடங்கிவிடும் என்கிறாள் தலைவி. (அகம் 70)
- - கள்ளூர் பெரும்பெயர்க் கள்ளூர் எனப் போற்றப்படும் இந்த ஊரில் மரும்பு மிகுதி. (அகம் 256_)

கணக்காயனார் (மதுரை)

தொகு
- - பசும்பூட்பாண்டியன், வென்வேற்பொறையன், கொல்லி, நொகுபோர்ச்சோழர் பசும்பூண் பாண்டியன் பெரும்படையையும், செங்காலையும், வலிமை மிக்க தோளையும் நாடே போற்றியது. அவனது மலைக்கவாண் (பொதியில்) பகுதியில் மலரும் காந்தள் மணம் போலத் தலைவியின் நெற்றி கமழுமாம். - பகைவரை அழிக்கும் வலிமை மிக்க வென்வேல் பொறையன் நட்பைப் போல் தலைவியைத் தலைவன் பிரியாமல் இருக்கவேண்டுமாம். - தொகுபோர்ச் சோழன் பாக்கத்துக் (புகார் நகரத்துப் பட்டினப்பாக்கம்) கடலலை போல் அலர் தூற்றப்பட்டதாம். (அகம் 338)
- - கள்வர்-பெருமகன், தென்னன், கவுரியர், 'வெல்போர்க் கவுரியர்' ஆட்சிப் பகுதியில் தெற்குப்பக்கம் உள்ளது 'புழை'க் கதவம். இதனைத் திறந்து சென்றால் 'நீரிழி மருங்கு' (நீர் வீழ்ச்சி) ஒன்றை அடையலாம். அங்கு 'வரையர மகளிர்' வாழ்தனராம். தலைவி இந்த வரையர மகளிர் போல் அடைய முடியாதவளாம். - 'ஏவல் இளையர்' பலரைக் கொண்ட 'கள்வர் பெருமகன்' ஒருவன் இந்தப் புழைக்கதவத்தைக் காத்துவந்தான். இதனைப் பல போர்களில் வெற்றி கண்ட 'தென்னன்'கூடத் தொட முடியவில்லை. (அகம் 342)

கண்ணகனார்

தொகு
கோப்பெருஞ்சோழன் - - பொன்னும் மணியும் வெவ்வேறு இடத்தில் பிறந்தாலும் ஓரணியில் பொலிவது போல வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனுடன் சேர்ந்து பலர் வடக்கிருந்தனர் (புறம் 218)

கண்ணனார் (காட்டூர் கிழார் மகனார்)

தொகு
- - திரையன், வேங்கடம், வேங்கட நாட்டை வென்வேல் திரையன் எனப் போற்றப்பட்ட மன்னன் ஆண்டுவந்தான். (அகம் 85)

கண்ணனார் (குமட்டூர்க்கண்ணனார்)

தொகு
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - அக்குரன், கடம்பு, கூளியர், பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து - கடம்பு காவல்மரத்தை வெட்டி முரசு செய்துகொண்டான் (11, 12), நல்லாட்சியால் நாடு வளம் பெற்றிருந்தது (13), கன்னன் போல் கொடை வழங்கியவன் (14), நெடுயோன் (திருமால்) போல் புகழ் (15), நீண்டநாள் பாசறையில் இருந்தான் (16), கடல் கடந்து கடம்ப மரத்தை வெட்டினான் (17), மாரி பொய்த்தாலும் சேரலாதன் பொய்த்தல் இல்லாமல் கொடை வழங்குவான் (18) கூளியர் காட்டு வழியில் பாதை உண்டாக்கித் தந்தனர் (19), கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன் (20)
- - உதியஞ்சேரல் (தந்தை), வெளியன் வேண்மாள் நல்லினி (தாய்), இமயம், தமிழகம், ஆரியர், யவனர், வஞ்சி பதிகம் - உம்பற்காடு பகுதி 500 ஊர், 38 ஆண்டு தென்னாட்டு வருவாயில் காகம் - இவை புலவருக்கு வழங்கப்பட்ட பரிசில், 58 ஆண்டு நாடாண்டான். இமயத்தில் வில் பொறித்தான். தமிழகம் முழுமையையும் தனதாக்கிக்கொண்டான். ஆரியரை வணங்கும்படிச் செய்தான். யவனரில் நன்றி கெட்டவரைக் கைதியாக்கி அவர் தலையில் வெயிலில் உருகும் நெய்யை வைத்து இழுத்துவந்தான். அவர்களது கைகளில் இருந்த அரிய செல்வ வகைகளைக் கைப்பற்றித் தன் வஞ்சி மூதூர் மக்களுக்கு வழங்கினான்.

கண்ணனார் (கொல்லி)

தொகு
- - குட்டுவன், மாந்தை அரசன் குட்டுவன் நாட்டுத் துறைமுகம் மாந்தை. அதன் கடற்கரைக் கானலில் குருகுகள் மிருதி. அவை மிகப் பெரியவை. அவற்றை 'யானையங்குருகு' என்றனர். [அங்கிருந்த வயல்களில் அவை மேய்ந்து பாழ் படுத்தின போலும்] அதனால் அங்குள்ள மள்ளர்கள் (உழவர்கள்) அவற்றை அழித்தனர். அவை மள்ளரின் ஓசையைக் கேட்டாலே நடுங்கும். என்றாலும் என் செய்வது? வயலை உழுது பயிரிட்டு அவற்றிற்கு உணவளிப்பவர்கள் அந்த மள்ளர்கள் தானே. தலைவன் பரத்தையிடம் வாழ்ந்தாலும் அவன்தான் எனக்குத் தலைவன் - என்கிறாள் தலைவி. (குறுந்தொகை 34)

கதப்பிள்ளை (கருவூர்)

தொகு
- நாஞ்சில் வள்ளுவன் வல்வேல் கந்தன், நாஞ்சில் பொருநன் தென்கடல் முத்தும், வடகுன்றத்துச் சந்தனமும் இவன் அணிகலன். தென்னவன் வயமறவன் எனப் போற்றப்படுகிறான். இதனால் இவன் பாண்டியனின் படைத்தலைவன் எனத் தெரிகிறது. பாடலில் இவன் பெயர் வல்வேல் கந்தன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர்களின் வறுமையைப் போக்குபவன் (புறம் 380)

கதப்பிள்ளை சாத்தனார் (கருவூர்)

தொகு
- பிட்டங்கொற்றன் குதிரைமலை, வேங்கைக்கண்ணி, தமிழகம், ஊராக் குதிரைக் கிழவன் - வேங்கைப்பூவைக் குடிப்பூவாகச் சூடிக்கொள்ளும் 'வில்லோர்' என்னும் குடிமக்களின் தலைவன். கைவள் ஈகை கடுமான் கொற்றன். பரிசிலர் இவன் புகழைத் தமிழகம் முழுவதும் கேட்கும்படிப் பாடிக்கொண்டு செல்வார்களாம். (புறம் 168)
- - வானவன் வானவன் குதிரைப்படை மிகுதியாக உடையவன். கோடியர் என்னும் யாழ்ப் பாணர்கள் அவனைப் பாடிக்கொண்டு செல்வர். அவர்கள் செல்வது போலத் தலைவன் புகழைப் பாடிக்கொண்டு அவன் இருக்கும் ஊருக்கு நாமும் செல்லலாமா என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் (அகம் 309)

கபிலர் [32]

தொகு
செல்வக் கடுங்கோ வாழியாதன் பாரி, கொடுமணம், பந்தர், நேரி, பதிற்றுப்பத்து 7 ஆம் பத்து - பாரி இறந்தான் என்று பாட வரவில்லை. ஈத்தொறும் மாவள்ளியன் எனச் சொல்லக்கேட்டு வந்தேன் (61) ஆனிரை வளம் மிக்க நாடு இவன் நாடு (62), பார்ப்பார்க்கு அல்லது பணியமாட்டான். பகை வென்று கொண்டுவந்த செல்வந்த செல்வமெல்லாம் தண்டமிழ் செறித்து (தமிழ் திண்மை பெற) உதவினான். (63), அறம் சொல்லும் அந்தணரைக் கொண்டு வேள்விகள் பல செய்தான் (64) காமனை எரிக்கும் கற்புநலம் கொண்டவள் இவன் மனைவி (65), செம்பொன் முரம்பு மண்ணில் மணிக்கற்கள் எடுக்கும் நாடு இவன் நாடு (66), கொடுமணம், பந்தர் ஊர் வாழ் பாணர் வந்து இவனைப் பாடினர். நேரிமலை நாட்டை வென்று இவன் தனதாக்கிக் கொண்டான். (67), மகளிரைக் கவரும் அழகு மிக்கவன் (68), மழைவளம் சுரக்க நல்லாட்சி புரிந்தவன் (69), வேள்வியில் கடவுளை அருந்தச் செய்தவன். இவனுக்கு இளந்துணைப் புதல்வர் (ஆண் இரட்டைக் குழந்தைகள்) (70)
- - அந்துவன், பொறையன் பெருந்தேவி, மாயவண்ணன், நன்றா குன்று, பதிகம் - வேள்வி செய்த அந்துவன் இவனது தந்தை. ஒருதந்தை என்பவன் பெற்ற பெருந்தேவி என்பவள் இவனது தாய். பொறையனை மணந்ததால் பொறையன் பெருந்தேவி எனப்பட்டாள். இவன் அறத்துறை வேள்வி செய்தான். மாயவண்ணன் என்னும் புரோகிதன் இவனது அமைச்சன். பாடிய கபிலருக்குச் 'சிறுபுறம்' என்று சொல்லி 100 ஆயிரம் காணம் (அக்கால நாணயம்) கொடுத்தான். அத்துடன் நன்றா என்னும் குன்றின்மீது ஏறி நின்று, தன் கண்ணுக்கும், புலவர் கண்ணுக்கும் தெரிந்த நாட்டையெல்லாம் பரிசாக வழங்கினான். 25 ஆண்டு நாடாண்டான்.
கடுங்கோ வாழியாதன் [33] - - பாடலில் குறிப்பிடப்படும் பெயர் சேரலாதன் (புறம் 8)
செல்வக் கடுங்கோ வாழியாதன் [34] - - புலவர் கை மெல்லிது என்றவனுக்கு விளக்கம் (புறம் 14)

கபிலர் - தொடர்ச்சி 1

தொகு
வேள் பாரி விறலிக்குச் சேயிழை வழங்குவான் (புறம் 105) எருக்கம்பூவையும் கடவுள் ஏற்பது போல எல்லாரையும் ஏற்று வழங்குவான் (புறம் 106) மாரி போல் தரம் பார்க்காமல் வழங்குவான் (புறம் 107) கேட்டால் தன்னையே கொடுத்து அவர்பின் சென்றுவிடுவான் (புறம் 108) தேர் வீசு இருக்கை நெடியோன் (புறம் 114) பேந்தர்க்கு இன்னான். பாணர்க்கு இனியான் (புறம் 115)
பாரி மூவர் முற்றுகை மூங்கில் நெல், பலா, வள்ளிக்கிழங்கு, தேன் ஆகிய உணவு-வளம் இருப்பதால் மூவர் பயன் அற்றது [35] பறம்பு நாட்டு 300 ஊர்களையும் பரிசிலர்க்குத் தந்துவிட்டான். மூவேந்தர் பாரியை வென்று எதனைப் பெறுவர்? (புறம் 110) பறம்பு நாட்டை வேந்தர் வெல்ல முடியாது. கிணை முழக்கும் விறலியர் வென்றுப் பெறலாம். (புறம் 111)
பாரி மகளிர் மணப்போர் தேடி அழைத்துச் செல்கிறேன் (புறம் 113) அன்று வீட்டுக் கூரை ஏறி உமணரின் உப்புவண்டி எண்ணினர். இன்று வேந்தர் படை குதிரைகள் எண்ணி விளையாடுகின்றனர் (புறம் 116) பாரி மகளிரைப் பார்ப்பாரிடம் ஒப்படைத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் (புறம் 236)
நாடு சான்றோர் மிகுந்தது. முல்லை முகைக்கும் (புறம் 117) அறை, பொறை, தெண்ணீர்ச் சிறுகுளம் கொண்டது (புறம் 118) வேந்தர் கைப்பற்றிக்கொண்ட பிறகும் 'தெறுழ்' என்னும் மலர் பூத்து, தினை வழங்கிக்கொண்டிருக்கிறது (புறம் 119) பகைவர் ஓடும் ஓசை கேட்ட நாடு. தினை, கவ்வை(கம்பு), அவரை, நறுநெய்க் கடலை, தேன் விளையும் நாடு (புறம் 120)
காரி [36] புலவரைப் பொதுவாகப் பார்க்காமல் தகுதி அளந்து அவன் பார்க்க வேண்டும். (புறம் 121) தீ வளர்க்கும் அந்தணரை மிகுதியாக உடைய அவன் நாட்டைத் தனக்குத் துணை நிற்கும்படி எப்போதும் மூவேந்தருள் ஒருவர் நாடி நிற்பர் (புறம் 122) காரி வழங்கிய தேர் அவனது முள்ளூர் நகரில் பெய்த மழைத்துளியை விட அதிகம் (புறம் 123) மலைநனைப் பாடியவர் வறிது மீள்வது இல்லை (புறம் 124)
- வையாவிக் கோப் பரும்பேகன் கண்ணகி கடுமான் பேகன் என இவன் போற்றப்படுகிறான. கபிலர் இவன் அரண்மனைக்குச் சென்று அவன் மலைச்சிறப்பைப் பாடினார். அவன் மனைவி கண்ணகி கண்ணீரோடு கலங்கி நின்றாள். பேகனிடம் வந்து நிலைமையை விளக்கி மனைவியிடம் செல்லுமாறு அறிவுறுத்தினார் (புறம் 143)
- விச்சிக்கோன் - பாரிமகளிரை மணக்க வேண்டியது (புறம் 200)
- இருங்கோவேள் துவரை, வேளிர் பாரிமகளிரை மணக்க வேண்டியது (புறம் 201)
- இருங்கோவேள் எவ்வி. கழாஅத்தலை, புலவர் கழாத்தலையார் அறிவுரையை ஏற்காததால் எவ்வி அரசனின் குடியே அழிந்தது. அது போல் பாரிமகளிரை மணந்துகொள்ள வேண்டிய என் சொல்லை ஏற்காவிட்டால் 'உன்' குடி அழியும் (புறம் 202)

கபிலர் - தொடர்ச்சி 2

தொகு
_ - ஆரிய அரசன் பிரகத்தன் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் (தமிழ்நெறியின் மாண்பு) அறிவித்தற்குக் கபிலர் பாடிய பாட்டு குறிஞ்சிப்பாட்டு
- - நள்ளி நள்ளி அரசன் கழல்தொடித் தடக்கைக் கடுமான் நள்ளி எனப் போற்றப்பட்டுள்ளான். இவன் காலில் வீரக் கழலும், கையில் வீர வளையலும் அணிந்திருந்தான். குதிரை வீரனாக விளங்கினான். இவன் நாடு நறுங்கார் அடுக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்அடுக்கம் என்பது நீலமலை (நீலகிரி). (அகம் 238)
- - பாரி வள்ளல் பாரியின் குன்றம் போல அவள் காப்பு மிகுதியாயிற்று. (நற்றிணை 253)
- - ஓரி, கொல்லி, ஓரி ஆண்ட கொல்லிமலைக் குடவரைப் பாவை போல் அவள் அழகியாம். (குறுந்தொகை 100)
- - ஓரி, காரி, ஓரியைக் கொன்ற காரி உலவும்போது ஊர் கலக்கம் உற்றது போல தலைவன் பரத்தையுடன் வாழும்போது ஊர் கலங்கியது. (நற்றிணை 320)
- - மலையன், முள்ளூர், மலையன் கானத்துச் சந்தனமரம் போல அவன் மார்பு மணந்ததாம். (குறிந்தொகை 198) - மலையன் முள்ளூர் போல அவள் நெற்றி அழகியதாம். (குறுந்தொகை 312) - புவையர் துடி முழக்ககத்துடன் மலையன் குதிரையில் சென்று சிற்றூர்களை அழித்தான் (நற்றிணை 77)- குதிரையில் சென்று முள்ளூர் மன்னன் ஆனிரைகளைக் கவர்ந்துவந்தான். (நற்றிணை 291)
- - நன்னன் மாரித் தூவல் போல் நன்னன் காப்பாற்றுவான். (ஐங்குறுநூறு 206)
- - கிடங்கில் கிடங்கில் என்பது புலிகள் திரியும் கான்யாறு (காட்டாறு) (நற்றிணை 65)
- - மாயோன், வாலியோன் மாயோன் நிறம் போல் மலை. அதில் வாலியோன் (பலராமன்) மிறம் போல் அருவி. (நற்றிணை 32)
- - பார்ப்பனக் குறுமகன் பார்ப்பன மகன் குடுமித் தலையுடன் கானப்படுவான். தலைவனின் குன்றமும் குடுமித்தலை கொண்டதாக உள்ளது. (ஐங்குறுநூறு 202)
- - மனையுறை கடவுள், நிலையுயர் கடவுள், சிறுமுத்தன்,பேஎமுதிர் கடவுள், மகளின் திருமணத்தின்போது குன்றக்குறவர் தம் மனையுறை கடவுளை வாழ்த்துவர். (ஐங்குறுநூறு 259) - வீட்டுக் கதவு நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கட0வுளைத் திருமணத் தலைவி வழிபடுவாள். (கலித்தொகை 46) சிறுமியர் சிறுசோறு (பொய்ச்சோறு) சமைத்து தாம் விரும்பும் சிறுமுத்தன் தெய்வத்துக்குப் படைத்த பின் அனைவருக்கும் வழங்குவாக நடித்து விளையாடுவர். (கலித்தொகை 59) - ஊர்மன்னறத்து மரத்தில் பேயாகக் கடவுள் வாழுமாம். குறுந்தொகை 87)
- - பார்ப்பான் வாழ்க்கை அதுவாகக் கொண்ட முதுபார்ப்பான் வாழ்க்கைப் பெருங்கூத்து என்று தகாத முறையில் தெருப்பெண்ணிடம் நடந்துகொள்ளும் பார்ப்பான் நிகழ்ச்சி ஒன்று காட்டப்படுகிறது. (கலித்தொகை 65)

கயமனார்

தொகு
- - அன்னி, குறுக்கைப் பறந்தலை, திதியன், குறுக்கைப் பறந்தலையில் போர். திதியனின் காவல்மரம் புன்னையை அன்னி வெட்டி வீழ்த்தினான்.[37] தலைவி தன் காதலனுடன் சென்றுவிட்டாள். முன்பு தலைவியை அடித்த தன் கை அன்னியின் காவல்மரம் புன்னை போல் துன்புறவேண்டும் என்று தலைவியை வளர்த்த செவிலித்தாய் கூறுவநாக இந்தச் செய்தி வருகிறது. (அகம் 145)

கருங்குழல் ஆதனார்

தொகு
கரிகால் பெருவளத்தான், சோழன் - - ஊர் சுடு விளக்கம் (புறம் 7), அவையில் முறை அறிந்து பகன்றான். வெற்றித்தூண் (எருவை நுகர்ச்சி யூபம்) நாட்டி வேள்வி செய்தான். நடுகல் ஆனான் (புறம் 224),

கருவூர்க் கண்ணம்பாளனார்

தொகு
_ - கோதை, வஞ்சி, வேல்வீரன் கோதை (ஒளிறுவேல் கோதை) வஞ்சி நகரைக் காத்துவந்தான். தலைவி அந்த வஞ்சி போல் அழகு மிக்கவள். (அகம் 263)

கல்லாடனார்

தொகு
நெடுஞ்செழியன் [38] பகைநாட்டை அழித்தது (புறம் 23) ஒன்றுமொழி வேந்தரை வென்றான் (புறம் 25), போர்க்களத்தில் அரசனைக் கண்டு யானைப் பரிசில் வேண்டுகிறார் (புறம் 371)
- அம்பர் கிழான் அருவந்தை அம்பர் கிழவோன் காவிரி பாயும் அம்பர் ஊரினன். வேங்கட மலையில் பெய்த மழையைக் காட்டிலும் பலவாகப் பெருகி இவன் வாழவேண்டும் எனப் புலவர் இவனை வாழ்த்துகிறார். (புறம் 385)
- பொறையாற்று கிழான் வேங்கடம் தன் வேங்கட நாடு பசியால் வருந்தியது என்று சுற்றத்தோடு வந்த புலவர்களை இவன் பாதுகாத்தான். (புறம் 391)

கல்லாடனார் - தொடர்ச்சி

தொகு
- - புல்லி, வேங்கடம் புல்லி அரசன் இளையர் பெருமகன் எனப் போற்றப்படுபவன். இந்த இளையர் தம் வேங்கட நாட்டு யானைக் கன்றுகளைப் பிடித்து வந்து நறவுக்கள்ளுக்காக விற்பார்களாம். (அகம் 83)
- - அஃதை (அகுதை?), கோசர், பாணன், பிடிகளைப் பழக்கி ஆண்யானைகளைப் பிடிக்கும் இனத்தவர் அகவுநர். அஃதை அகவுநர் பெருமகன் எனப் போற்றப்படுகிறான். இவனுக்குக் காப்பாக இருந்தவர் பல்வேல் கோசர். - பாணன் நெடுவேல் பாணன் எனப் போற்றப்படுகிறான். இவன் நாட்டு விழாக் கொண்டட்டத்தில் பல்வேறு வகையான திற்றி (புலால் உணவு) விருந்தாக வழங்கப்படும். அவன் நாட்டில் அந்த வகை விருந்தைப் பெற்றாலும் பிடிந்த தலைவர் காலம் நீட்டித்துத் தங்கமாட்டார் - என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். (அகம் 113)
- - நன்னன், நார்முடிச்சேரல், வாகைப் பெருந்துறை நாட்டை ஆண்டுகொண்டிருந்த நன்னனை வென்று களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் தன் நாட்டை மீட்டுக்கொண்டான். (அகம் 199)
- - செழியன், எழுவர், ஆலங்கானம், புல்லி, வேங்கடம், முள்ளூர், காரி, ஓரி, கொல்லி, சேரலர் தென்னர் கோமான், இயல்தேர்ச் செழியன் ஆலங்கானப் போரில் எழுவரை வென்றான். அப்போது எழுந்த ஆரவாரம் போல அலர் தூற்றினார்களாம். - புல்லி ஆண்ட வேங்கடத்தைக் கடந்து சென்றிருந்தாலும் தலைவன் தலைவியைப் பிரிந்து தங்கமாட்டானாம். - காரி முள்ளூரை ஆண்ட மன்னன். ஓரி கொல்லியை ஆண்ட மன்னன். பாரி ஓரியைக் கொன்று ஓரியின் கொல்லி நாட்டைச் சேரலர் குடி அரசனுக்கு வழங்கினான். (அகம் 209)
- - தொண்டையர் வண்தேர்த் தொண்டையர் எனப் போற்றப்படும் மன்னர்களின் தொண்டைநாட்டு மலையடுக்குகளில் வழை, ஓமை ஆகிய மரங்கள் மிகுதி. (குறுந்தொகை 260)

கழாத்தலையார்

தொகு
நெடுஞ்சேரலாதன் [39]
பெருவிறல் கிள்ளி [40]
திருப்போர்ப்புறம் போர் போர்க்களத்தில் இருவரும் மாண்டனர் (புறம் 62) நெடுஞ்சேரலாதன் இறப்பதற்கு முன்பு அவன் மார்பில் அணிந்திருந்த முத்தாரத்தைக் கேட்டுப் புலவர் பெறுகிறார் (புறம் 368)
கரிகாற் பெருவளத்தான் [41]
பெருஞ்சேரலாதன் [42]
போரில் ஏற்பட்ட புறப்புண்ணுக்கு நாணிப் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தான் (புறம் 65)

கழார்க் கீரன் எயிற்றியார்

தொகு
- - சோழர், கழார் கழார் நகரில் சோழர் ஆரவாரத்துடன் புலவுப்பெருஞ்சோறு வழங்குவர். நல்வகை மிகுபலி அம்பல் யாணர் விடக்குடைப் பெருஞ்சோறு

கழைதின் யானையார்

தொகு
- ஓரி - ஈ என இரத்தல் இழிந்தன்று ஓரி அரசன் விசும்பின் வானம் போலச் சுரக்கும் வள்ளல் (புறம் 204)

கள்ளில் ஆத்திரையனார்

தொகு
- ஆதனுங்கன் வேங்கடம், முதியன், ஆனிரை கவர்ந்து வந்து வழங்குபவன். வேங்கடங் கிழவன், நல்லேர் முதியன் ஆதனுங்கன் (புறம் 389)
- - ஆதி அருமன் ஆதி அருமன் நாட்டு மக்கள் பனை நுங்கும் கள்ளும் வழிப்போக்கர்களுக்கு விருந்தாகப் படைப்பது போலப் பரத்தை தலைவனுக்கு விருந்து படைப்பாளாம். (குறுந்தொகை 293)

காப்பியாற்றுக் காப்பியனார்

தொகு
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் - கடவுள் அஞ்சி, தூங்கெயில் கதவம், வண்டன், நெடுமிடல், கொடுமிடல், நெல்-நாடு, தோட்டி, நார்முடி, எழுமுடி, நேரியோன், பதிற்றுப்பது - நான்காம் பத்து - கடவுள் அஞ்சி என்பவன் வானத்தில் தொங்கும் கதவு ஒன்றைக் கொண்டு தன் கோட்டையை உருவாக்கினான். அதனைப் பாதுகாக்க வண்டன் என்பவனை அமர்த்தியிருந்தான். இந்த வண்டன் போன்றவன் நார்முடிச்சேரல் (31) நெல்நாட்டை (சாலியூர்,பெரிப்ளசு குறிப்பிடும் நெல்சிந்தா) இரு பகுதிகளாக்கி ஆண்டுவந்த நெடுமிடல், கொடுமிடல் என்னும் என்னும் இருவரை வீழ்த்தினான் (32), பிற வேந்தர் இவனைக்கண்டு வெருவி நடுங்கினர் (33, 34, 35, 36 37), துளங்கு குடி திருத்தினான் (குடிபெயர்ந்த நாட்டு மக்களை திரும்பச் செய்தான்) (37), களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (38), தோட்டி மலை நாட்டைக் கைப்பற்றினான் (38), நார்முடி என்பது அவன் அணிந்திருந்த திருமுடி (கிரீடம்). அது சிலந்திப் பூச்சி வலைநூல் போன்றதொரு நூலில் மணிகளைக் கோத்துச் செய்யப்பட்டிருந்தது (39), மார்பில் தான் வென்ற ஏழு மன்னர்களின் கிரீடங்களைக் கோத்து எழுமுடி அணிந்திருந்தான் (40) நேரிமலை ஆட்சி இவன் பொறுப்பில் இருந்தது (40)
- - - சேரலாதன் (தந்தை), பதுமன் தேவி (தாய்) பூழி நாடு, நன்னன், பதிகம் பூழி நாட்டை வென்று தனதாக்கிக்கொண்டான். நன்னனின் காவல்மரமான கடம்ப மரத்தை வெட்டித் தன் யானைகளைக் கொண்டு அவற்றை இழுத்துவரச் செய்தான். 25 ஆண்டு அரசாண்டான். பாடிய புலவருக்குப் பரிசாக 100 ஆயிரம் பொன் கொடுத்தான். அத்துடன் தன் நாட்டின் ஒரு பகுதியை ஆளுமாறும் செய்தான்.

காரிக் கண்ணனார் (காவிரிப்பூம்பட்டினத்தார்)

தொகு
நன்மாறன் (பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்) மாயோன் புகழ்ந்தவருக்கெல்லாம் வழங்கும் மாயோன் போல் வழங்குபவன். பகைநாட்டைச் சுட்டழித்தவன் (புறம் 57)
பெருந் திருமாவளவன் (சோழன் குராப்பள்ளித் துஞ்சியவன்), பெருவழுதி (பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்) பனைக்கொடியோன், நேமியோன் பலதேவனும், கண்ணனும் சோர்ந்திருந்தது போல இவர்கள் கூடி இருந்தனர் (புறம் 58)
- பிட்டங்கொற்றன் கோசர், திருந்துவேல்-கொற்றன் கோசர் முருக்கமரக் கட்டையை நிறுத்தி அதன்மீது அம்பு எய்து பழகுவர். அந்த முருக்கமரம் போலப் பிட்டன் மகன் கொற்றன் போர்முகத்தில் எதிரிகளின் தாக்குதல்களை முன்னே நின்று தாங்கிக்கொள்வான் - சிறந்த வள்ளல் (புறம் 169) இவன் தன் அரசனுக்காகப் போரிடுபவன். எருதும்-நிலமும், களிறு, நெல்குவியல் என எது கேட்டாலும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் கேட்ட அளவு வழங்குவான் (புறம் 171),
- - வடுகர் கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர் என இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.[43] (அகம் 107)
- - சோழர் சோழரின் காவிரி கடல் மண்டு பெருந்துறையில் அலை இறால் மீனோடு வந்து மகளிர் விளையாடி எறிந்த கோதை மாலையோடு மீண்டு ச்ல்லுமாம். (அகம் 123)

காரிகிழார்

தொகு
முதுகுடுமிப் பெருவழுதி [44] - - முக்கண் செல்வனை (சிவனை) திருவிழா ஊர்வலம் வரச்செய்,
நான்மறை முதல்வரை வணங்குக [45]

காவட்டனார்

தொகு
- அந்துவன் கீரன் - தேர் வழங்கிய மன்னர் போல இவனும் இறந்தான் (புறம் 359)

கிள்ளிவளவன் [46]

தொகு
- சிறுகுடி கிழான் பண்ணன் பசிப்பிணி மருத்துவன் வழிப்போக்கர்களுக்குக் கட்டுச்சோற்று மூட்டையும் வழங்கியவன் (புறம் 173)

கீரத்தனார் (குடவாயில்)

தொகு
- ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் ஒல்லையூர் [47] வல்வேல் சாத்தன் மாய்ந்தான் என்று ஒல்லையூர் நாட்டு மக்கள் யாருமே முல்லைப் பூவைச் சூடவில்லையாம் (புறம் 242)

கீரத்தனார் (குடவாயில்) - தொடர்ச்சி

தொகு
- - நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன், பழையன், கழுமலம், பெரும்பூட்சென்னி, அழும்பில், குடவாயில், பெரும்பூண் சென்னி சோழ மன்னன். பழையன் அவனது ஆட்சிக்கு உட்பட்ட குறுநில மன்னன். பழையனை எழுவர் கூட்டணி ஒன்று தாக்கியது. அதில் நன்னன், ஏற்றை, (நறும்பூண்)அத்தி, (துன் அரும் கடுந்திறல்)கங்கன், கட்டி, (பொன் அணி வல்வில்)புன்றுறை, (திண்தேர்க்)கணையன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போரில் பழையன் கொல்லப்பட்டான். இதனைக் கண்ட சோழன் வெகுண்டான். தானே படை நடத்தி எழுவரையும் வென்றான். அறுவர் ஓடிவிட்டனர். கணையன் அகப்பட்டுக்கொண்டான். அவனைப் பிடித்துவந்து கழுமலச் சிறையில் அடைத்தான். சென்னியின் தலைநகர் அழும்பில். இந்த அழும்பில் வளம் சுரப்பது போலத் தலைவி நலம் சுரப்பவள். அத்துடன் அவன் நாட்டுக் குடவாயில் நகரம் போலப் பண்பும் உள்ளவள். (அகம் 44)
- - சோழர், குடந்தை, வென்வேல் கொற்றச் சோழர் தம் நாடுதரு நிதியத்தைக் குடந்தையில் (கும்பகோணம்) வைத்துப் பாதுகாத்தனர். இந்தப் பாதுகாப்புப் போலத் தலைவி கட்டுக்காவலோடு பாதுகாக்கப்பட்டாளாம். (அகம் 60)
- - வழுதி, கூடல் பெஎரும்பெயர் வழுதி கூடல் நகரம் போல் தலைவி காப்புச் செறிப்புக் கொண்டிருந்தாள். (அகம் 315)
- - எவ்வி எவ்வி அரசன் நுளையர் எனப்படும் மீனவர்களுக்கு முதியோர் இல்லம் அமைத்துப் பாதுகாத்துவந்தான்.[48] இவனது ஆட்சி நிழல் போலப் பரத்தை தலைவனுக்கு இன்பம் தருபவளாம். (அகம் 366)
- - சோழர், உறந்தை, கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர் உறையூர்ப் பொன்நிதியத்தைப் புரையோர் (மேன்மக்கள்) துந்ப்பது போலத் தன் செல்வத்தைப் பிறர் துய்க்கவேண்டும் என்பதற்காகத் தலைவன் பொருள்தேடச் சென்றானாம். (அகம் 385)
- - சோழர், குடந்தைவாயில், பொதியில், குடந்தைவாயில் (குடவாயில்) நகர அகழியில் பூக்கும் நீலம் என்னும் மலர் போன்ற கண்களை உடையவள் தலைவி. மேலும் பொதியில் சிலம்புக்காட்டில் மலரும் காந்தள் போல் விரல்களை உடையவளாம். (நற்றிணை 379)

குடபுலவியனார்

தொகு
நெடுஞ்செஎழியன் [49] நீர்நிலைகளைப் பெருக்குக [50] எழுவரை வென்றான் [51]

குட்டுவன் கீரனார்

தொகு
- ஆய் - ஆய் உடல் எரிக்கப்பட்டது. புலவர் பசியோடு வாடும் நிலை ஆயிற்று (புறம் 240)

குண்டுகட்பாலியாதனார்

தொகு
செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான், சிக்கற்பள்ளித் துஞ்சியவன் - பூழியர் பகைமன்னர் தந்த திறைப் பொருள்களால் புலவர் வறுமை போக்கினான். தன் பெருமையை நினைத்துப் பெரிதாக வழங்குவான். பூழியர் பெருமகன். (புறம் 387)

குமரனார் (சல்லியம்)

தொகு
- - பாண்டில், கிள்ளி, அம்பர், பாண்டிலொடு (பாண்டியனோடு) போரிட்டுக் கிள்ளி வென்றான். இசைவெங்கிள்ளி எனப் போற்றப்படும் இவன் யானைமீது வந்து வென்றான். இவன் ஊர் அம்பல் போல் தலைவியின் கூந்தல் இருந்ததாம். (நற்றிணை 141)

குறுங்கோழியூர் கிழார்

தொகு
நெடுஞ்செழியன் [52]
மாந்தரஞ்சேரல் இரும்பொறை [53]
இரும்பொறை, செழியன் சிறையைத் தகர்த்துக்கொண்டு சென்று தன் நாட்டு அரியணையில் ஏறினான் (புறம் 17)
இரும்பொறை [54][55] மக்கள் பகை அறியாதவண்ணம் செங்கோல் நடத்தினான் [56] கொல்லிமலை நாட்டை வென்றான் (புறம் 22)

கூகைகோழியார்

தொகு
- தந்துமாறன் - மாண்டான் (புறம் 364)

கூடலூர் கிழார்

தொகு
மாந்தரஞ்சேரல் இரும்பொறை (கோச் சேரமான் யானைக்கட் சேய்) - - அளந்து கொடை அறியா ஈகையாளன். இன்ன நாளில் துஞ்சும்(இறப்பான்) எனக் கணித்து அந்த நாளில் அவன் துஞ்சியமை கண்டு வருந்திப் பாடியது (புறம் 229)

கொற்றனார் (கொற்றங்கொற்றனார்)

தொகு
- - பண்ணன், சிறுகுடி, 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' எஎனப் போற்றப்படும் பண்ணன் சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் ஊர்ச் சிறுகுடியில் காய்த்த நெல்லிக் காயைத் தின்றபின் தண்ணீர் குடித்தால் இனிப்பது போலத் தலைவி தனக்கு இனிப்பதாகத் தலைவன் கூறுகிறான். (அகம் 54)

கோதமனார்

தொகு
- தருமபுத்திரன் - அறவோன் மகன், மறவோர் செம்மல் - என இவன் போற்றப்பட்டுள்ளான் புறம் 366

கௌதமனார் (பாலை [57])

தொகு
பல்யானைச் செல்கெழு குட்டுவன் - பெரும்பெயர் ஆவுதி, அடுநெய் ஆவுதி, கொங்கர், அகப்பா, பேரியாறு, பதிற்றுப்பத்து பத்து 3, அமரர்க்குப் பெரும்பெயர் ஆவுதி செய்தான். மக்களுக்குப் பெருஞ்சோறு வழங்கும் அடுநெய் ஆவுதி செய்தான். (21), கல்லில் தோண்டிய கேணி இருக்கும் கொங்கர் நாட்டைக் கைப்பற்றினான். தொங்கும் வில், மதில், அகழி கொண்ட அகப்பா என்னும் கோட்டையைக் கைப்பற்றினான் (22), பொலந்தார்க் குட்டுவன் (23), விடா ஏணி இயல் அறைக் [அகப்பா] குரிசில் (24) தேரில் சென்று போரிட்டான். வென்ற நாட்டு நிலத்தில் கழுதை ஏர் பூட்டி உழுதான் (25), இவனது படைவீரர்கள் முருகன் குரும்பில் கூற்றத்தை அழித்தது போல அழித்தனர் (26), மக்கள் பூசல் இல்லாமல் மகிழ்ந்திருந்தனர் (27), மழை இல்லாக் காலத்தும் பேரியாற்று (பெரியாறு) நீர் வளம் மிக்க நாடு (28), பெரும்பல் தானைக் குட்டுவன் (29), வேந்தரும் வேளிரும் அஞ்சிக் கடலிலும் காட்டிலும் ஒளிந்துகொள்ளும்படி போரிட்டான் (30)
- - இமயவரம்பன் தம்பி, உம்பற்காடு, அகப்பா, முதியர், அயிரைத் தெய்வம் பதிகம் - புலவர் விருப்பப்படி அரசன் செய்த வேள்வியில் பார்ப்பனப் புலவரும், அவரது மனைவியும் சுவர்க்கம் புகுந்தனர். 25 ஆண்டு நாடாண்டான். உம்பற்காடு நிலப்பகுதியில் தன் ஆட்சியை நிலைநாட்டினான். அகப்பாக் கோட்டையைப் பகலிலேயே நீயிட்டுக் கொளுத்தினான். (மதியம் பாண்டியர் குடிக்கு உரியது) இந்த மதியக் குடியோடு மாறுபட்டிருந்த முதியர் குறியினரை தழுவி நட்பாக்கிக்கொண்டு தன் நாட்டுப் பகுதியை அவர்களது ஆளுகைக்கு உட்படுத்தினான். யானை நிரை பூட்டி இருகடல் நீரையும் ஒரேபகலில் கொண்டுவந்து நீராடிந பின் அயிரை தெய்வத்தை வழிபட்டான்.

கோப்பெருஞ்சோழன்

தொகு
- - பிசிரோன் பிசிராந்தையார் என் உயிர் ஓம்புநன். செல்வக் காலை வாரான் ஆயினும் அல்லல் காலை வருகுவன் (புறம் 215) பிசிராந்தையார் வடக்கிருக்கத் தன் அருகில் இடம் ஒதுக்கி வைக்குமாறு கோப்பெருஞ்சோழன் வேண்டினான் (புறம் 216),

கோவூர் கிழார்

தொகு
நலங்கிள்ளி (சோழன்)
நெடுங்கிள்ளி (காரியாற்றுத் துஞ்சியவன்)
இளந்தத்தன் (புலவர்) உறையூர் முற்றுகையின்போது, இளந்தத்தன் என்னும் புலவர் நலங்கிள்ளியிடமிருந்து நெடுங்கிள்ளியிடம் சென்றார். இளந்தத்தனை ஒற்றன் எனக் கருதி நெடுங்கிள்ளி கொல்ல முற்பட்டான். புலவர்கள் கொடையாளிகளிடம் செல்வர். பெற்றதைப் பேணாமல் மற்றவர்களுக்கு வழங்கிச் செம்மாப்பர் என்று கோவூர் கிழார் கூறி இளந்தத்தனைக் காப்பாற்றினார் (புறம் 47)
நலங்கிள்ளி (சோழன்) கொடை (புறம் 68, 383)
நலங்கிள்ளி (சோழன்) - நல்லூர் இவனது நல்லூர் துறைகளில் பல வங்கங்கள் (கப்பல்கள்) பிணிக்கப்பட்டிருந்தன. போர் வெள்ளிக்குப் பின் வேள்வித்தூண் நட்டான். சிறந்த வள்ளல் (புறம் 400)
நலங்கிள்ளி (சோழன்) ஏழெயில் வெற்றி வடபுல அரசு இவன் படையெடுப்பை எண்ணி நடுங்கியது (புறம் 31) பரிசாக வஞ்சி நகரையும் மதுரை நகரையும் தரவல்லவன் (புறம் 32) பாண்டி நாட்டிலுள்ள ஏழெயில் கதவம் என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக்கொண்டு அதன் அடையாளமாக தன் புலிச்சின்னத்தை (பேழ்வாய் உழுவை)யைப் பொறித்தவன். (புறம் 33)
நலங்கிள்ளி (சோழன்), நெடுங்கிள்ளி ஆவூர் முற்றுகை நலங்கிள்ளி ஆவூரை முற்றுகை இட்டிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். புலவர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார். 'அறவை ஆயின் நெடுங்கிள்ளிக்ககு விட்டுக்கொடு. மறவை ஆயின் போரிடு. இரண்டுமின்றி அடைத்துக்கொண்டு இருத்தல் நாணத்தக்க செயல்' என்கிறார் (புறம் 44)
உறையூர் முற்றுகை நலங்கிள்ளி முற்றியிருந்தான். நெடுங்கிள்ளி அடைத்திருந்தான். புலவர் இருவருக்கும் அறிவுரை கூறுகிறார். இருவரும் ஆத்திப்பூக் கண்ணி சூடிய சோழர். போரில் இருவரும் வெற்றி காண முடியாது. தோற்றால் சோழர் குடி தோற்கும். இது பிறர் நகைக்க ஏதுவாகும். எனவே போரைக் கைவிடுக என்றார். விளைவு போர் நின்றது. (புறம் 45)
கிள்ளிவளவன் (சோழன், குராப்பள்ளித் துஞ்சியவன்) - கருவூர் கருவூரை எறிந்தான் (வென்றான்) போர்க்களத்தில் புலவர் பரிசில் வேண்டுகிறார் (புறம் 373)
கிள்ளிவளவன் (சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்) தீப் போலப் பரவி அவன் விம்பும்போதெல்லாம் பகைவரை அழிப்பவன் (புறம் 41)
கிள்ளிவளவன் (சோழன் குளமுற்றத்துத் துஞ்சியவன்) மலையமான் மக்கள்,
சிபி
மலையான் குழந்தைகளை வளவன் யானைக் காலால் மிதித்துக் கொல்லும்படி செய்துகொண்டிருந்தான். யானையைக் கண்டவுடன் குழந்தைகள் அழுகையை மறந்து மருண்டு பார்த்துக்கொண்டிருந்தனர். இவர்களைப் புறாவுக்காகத் தன்னையே கொடுத்த சோழன் [சிபி] வழிவந்த சோழன் கொல்லலாமா என வினவிப் புலவர் காப்பாற்றினார். குழந்தைகளும் பிழைத்தன. சோழனுக்கும் பழி இல்லை (புறம் 46)
கிள்ளிவளவன் (சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்) கொடை (புறம் 70), வேண்டியது உணர்ந்து தானே வழங்குவான் (புறம் 386)

சாத்தந்தையார்

தொகு
பெருநற்கிள்ளி [58]
ஆமூர் மல்லன் தித்தன் மல்லனை வெல்வதைத் தித்தன் காண்க [59] ஆத்தி சூடிப் கோரிட்டான் [60] ஊர் கொள வந்த பொருநன் [உறையூரில்] போரிட்டான், கிள்ளியின் கைத்திறம் [61]

சிறுகருந்தும்பியார் [62]

தொகு
- வல்லார் கிழான் பண்ணன் வலாஅர், வாய்வாள்-பண்ணன் வலாஅர் என்னும் வல்லார் இவன் ஊர். இந்த ஊர் வில்வீரர்களின் குடியிருப்பு. இவன் வாள்மறவன். போருக்குச் செல்வதற்கு முன் இவனைக் கண்டால் பசிப்பகை போக்கலாம். (புறம் 181)

சிறுவெண்-தேரையார் [63]

தொகு
- தந்துமாறன் - முரசம் கொண்டு நான்மறை வேள்வி செய்தவன் (புறம் 362)

சீத்தலைச் சாத்தனார் [64]

தொகு
நன்மாறன் [65] பகைவரைக் காய்வதில் ஞாயிறு போன்றவன். மற்றவர்களுக்குத் திங்கள் போல் தண்ணளி வழங்குபவன் [66]

செங்கண்ணனார் (காவிரிப்பூம்பட்டினத்தார்)

தொகு
- - அவியன் மழை தவழ் குன்றத்துத் தலைவன். (அகம் 271)

சேரமான் (கோட்டம்பலத்துத் துஞ்சியவன்)

தொகு
- - குழுமூர், உதியன், ஆனிரை மேயும் குன்று தழுவிய ஊர் குழுமூர். அரசன் உதியன் இவ்வூரில் உணவு சமைத்து வழங்கும் அட்டில் (மடம்) வைத்து வந்தவருக்கெல்லாம் உணவு வழங்கிவந்தான். அந்த அட்டிலில் மக்கள் ஆரவாரம் கேட்பது போல அங்குள்ள அருவி ஒலிக்கும் வழியில் இரவு வேளையில் தலைவன் தலைவியை அடைய வருவானாம். (அகம் 168)

தத்தங்கண்ணனார் (மதுரை)

தொகு
- - செழியன் 'அடுபோர்ச் செழியன்' தலைநகர் 'மாடமூதூர்' மதிலின் புறத்தைத் தழுவிக்கொண்டு மலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையைத் தலைவி அணிந்திருந்தாளாம். (அகம் 335)

தத்தனார் (விற்றூற்று வண்ணக்கன்)

தொகு
- - செழியன், கூடல் 'நற்றார்ப் பொற்றேர்ச் செழியன்' எனக் குறிப்பிடப்படும் செழியனின் கூடல் நகரில் பூத்த முல்லையைச் சூடியவள் அவள் (நற்றிணை 298)

தாமப்பல்கண்ணனார்

தொகு
மாவளத்தான் [67] புலவரும் மாவளத்தானும் வட்டு ஆடினர். புலவர் காயை மறைத்து ஏமாற்றினார். சோழன் வட்டால் எறிந்தான். 'சோழன்மகன் அல்லை' எனப் புலவர் திட்டினார். சோழன் தன் செயலுக்காக நாணினான். பிழை செய்தது புலவர். திட்டியது புலவர். நாணவேண்டியது புலவர். நாணியதோ சோழன். இதனைப் புலவரே உணர்ந்து பாடியுள்ள பாடல் இது. இருவரும் பண்பாளர்கள் [68]

தாமோதரனார் (உறையூர் மருத்துவன்)

தொகு
பெருந் திருமாவளவன் [69] இவன் குடை போல் இருக்கிறதே என்று எண்ணிப் புலவரும் விறலியரும் பிறை நிலாவை வணங்கினார்களாம் (புறம் 60)
- பிட்டங்கொற்றன் இழிபிறப்பாளன், கூர்வேல்-பிட்டன் இழிபிறப்பாளன் துடி முழக்குவான் - பிட்டன் விறலியர்க்கு யானைத்தந்தமும், பாணர்க்குத் தேறலும் வழங்குவான். கொல்லன் உலைக்களத்தில் இரும்பைத் தாக்கும் சம்மட்டி போலப் பகைவரைத் தாக்குவான் - (புறம் 170)

தாமோதரனார் (வடம வண்ணக்கன்)

தொகு
- பிட்டங்கொற்றன் கோதை, குதிரைக்கொடை வழங்கும் கொற்றன் பிட்டங்கொற்றனின் இறை(அரசன். பிட்டங்கொற்றன் வேல்வீரன். வள்ளல். (புறம் 172)

தாயங்கண்ணனார்

தொகு
- - எழினி 'பல்வேல் எழினி' எனப் போற்றப்படும் இவன் பந்தடிக்கும் ஒலி போல் தாவி நடக்கும் குதிரை மேல் செல்பவன். இவனது மறவர் பசுக்கூட்டங்களைக் கவரும் வேற்றுப்புலம் வழியாகத் தலைவன் பொருள் தேடச் சென்றானாம். (அகம் 105)
- - செழியன், கூடல் 'நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்' கூடல் நகருக்கு மேற்கில் முருகனின் திருப்பரங்குன்றத்துச் சுனையில் பூத்த நீல மலர் போன்ற கண்களை உடையவளாம் தலைவி. (அகம் 149)
- - தொண்டையர், வேங்கடம், வடுகர், வானவன், கொல்லி, சோழர், காவிரி தொண்டையர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வேங்கட நாட்டுக்கு அப்பால் பூத்திருந்த அதிரல் மலர்களைச் சூடிக்கொண்டு நெய் ஊற்றிய சோற்றைப் படையல் செய்யும் மக்கள் வடுகர். இவர்களின் இருப்பிடத்தைத் தாண்டித் தலைவன் பொருள் தேடச் சென்றானாம். - 'வெல்போர் வானவன்' ஆட்சிக்கு உட்பட்டிருந்த கொல்லிமலை மூங்கில் போன்ற தோளை உடையவளாம் தலைவி. - சோழரின் காஆவிரியாற்று மணல் அறல் போல் கூந்தலை உடையவளாம் தலைவி. (அகம் 213)
- - உறந்தை உறையூர் மக்கள் பச்சைநெல் இடித்துச் செய்த அவலில் பால் ஊற்றி விருந்து படைப்பார்களாம். (அகம் 237)

தாயங்கண்ணனார் (எருக்காட்டூர்)

தொகு
கிள்ளிவளவன் (சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்) - - எழுமதி துயில் எனப் புலவர் தெண்கண் மாக்கிணை முழக்கிப் பாடினார். எழுந்து வந்ததும் புத்தாடை, உணவு முதலியன வழங்கினான். பொலம்பூண் வளவன் எனப் போற்றப்பட்டவன். கோள்நிலை திரியினும் கொடை வழங்குவதில் இவன் தவறுவதில்லை. வெற்றிவேல் வேந்தன். (புறம் 397)
- - உம்பற்காடு 'உம்பல் பெருங்காடு' [70] வழியாகப் பொருள் தேடச் செல்வர். (அகம் 357)

திருத்தாமனார்

தொகு
வஞ்சன் (சேரமான்) - பாயல் பாயல் கோ எனப் போற்றப்படும் இவனது ஊர் பாயல். வாய்மொழி வஞ்சன் எனப் போற்றப்பட்டவன். இனிய முகத்துடன் புலவரின் வரிசை(தரம்) அறிந்து வழங்குபவன். பன்னிற மணி வயிரமாலை அணிந்திருப்பான். (புறம் 398)

தேவனார்

தொகு
- - சோழர், ஆர்க்காடு, யானையில் வரும் 'பசும்பூண் சோழர்' ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர் ஆர்க்காடு. இவ்வூரில் கொடி கட்டிக் கள் விற்பர். அந்தத் தெருவில் கேட்கும் பறவையின ஒலி போல அலர் தூற்றினார்களாம். (நற்றிணை 227)

நக்கண்ணையார்

தொகு
- - சோழர், அழிசி அழிசி 'வெல்போர்ச் சோழர்' ஆட்சிக்கு உட்பட்ட மன்னன். அழிசி ஆண்ட ஊரிலுள்ள காட்டில் நெல்லி மரங்கள் மிகுதி. (நற்றிணை 87)

நக்கண்ணையார் (பெருங்கோழி நாய்கன் மகள்)

தொகு
பெருநற்கிள்ளி [71] நக்கண்ணையார் காதல் [72] கிள்ளி வீரம் [73] கிள்ளிக்குப் போரிடும் இடம் அவன் ஊரும் அன்று, நாடும் அன்று [74]

நக்கீரனார் [75]

தொகு
- - முருகு திருமுருகாற்றுப்படை
நன்மாறன் [76] ஞாலம் காக்கும் கால முன்பின் தோலா நல்லிசை நால்வர் (மணிமிடற்றோன், பனைக்கொடியோன், புள் கொடியோன், பிணிமுக ஊர்திச் செய்யோன், யவனர் சினத்தில் கூற்றாகிய சிவன் போன்றவன். வலிமையில் பலதேவன் போன்றவன். புகழில் திருமால் போன்றவன். எண்ணியதைச் செய்து முடித்தலில் முருகன் போன்றவன். யவனர் நன்கலத்தில் தேறல் தந்தனர். அதை இவன் பொன்கிண்ணத்தில் வாங்கிப் பருகினான் (புறம் 56)
- பெருஞ்சாத்தன் (சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன்) தித்தன், உறந்தை, பிடவூர், பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் எனவும், நெடுங்கை வேண்மான் எனவும் போற்றப்பட்டவன். பிடவூர் தித்தன் என்பவன் ஆண்ட உறையூர் நகருக்குக் கிழக்குப் பக்கம் இருந்த ஊர். இவன் தித்தன் காலத்தவன். புலவரைப் பார்த்ததும் சற்றும் காலம் தாழ்க்காமல் அருங்கலம் நல்கினானாம். புலவரை மனைவியிடம் காட்டி இவனை என்போல் போற்று' என்றானாம். (புறம் 395)

நக்கீரனார் தொடர்ச்சி

தொகு
- - நெடுஞ்செழியன் (பாண்டியன்) நெடுநல்வாடை இவன் பெயர் பாடலில் இல்லை
- - கொடித்தேர்ச் செழியன், ஆலங்கானம், சேரல், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் (எழுவர்) ஆலங்கானப் போரில் செழியன் எழுவரையும் ஒரே பகலில் வென்றான் (அகம் 36)
- - கொடித்தேர்ச் செழியன், முசிறி செழியன் முசிறித் துறைமுகத்தை முற்றுகையிட்டுப் புண்படுத்தினான் (அகம் 57)
- - கபிலன், பாரி கபிலன் நெற்கதிர் உதவியதால் பாரி நெடுங்காலம் போரிட்டு முற்றுகையிட்ட வேந்தர்களை விட்டோடும்படிச் செய்தான் (அகம் 78)
- - சோழர், உறந்தை, வழுதி, கூடல், கோதை, கருவூர், சோழர் உறந்தை போல் தலைவி பெறமுடியாதவள். வழுதி கூடல் பூக்கடை போல் தலைவி நெற்றி மணக்கும். நெடுந்தேர்க் கோதை கருவூர் அரசன். அவ்வூர்த் தண்ணான் பொருநை ஆற்று மணல் போல் பலமுறை தலைவன் நெஞ்சு தலைவியைத் தழுவத் துடிக்கிறது. (அகம் 93)
- - எவ்வி, திதியன், அன்னி நெல்லும் முத்தும் விளையும் காவிரி நாட்டை எவ்வி ஆண்டுவந்தான். இவன் சொன்னதைக் கேளாமல் புன்னை மரத்தைக் காவல்மரமாக உடைய திதியனை அன்னி அரசன் தாக்கி மாண்டான்.[77] தலைவன் நெஞ்சம் தலைவியை அடைய அன்னி போல் முயல்கிறதாம். (அகம் 126)
- - கரிகால், இடையாறு, கரிகாலன் செல்வத்துக்கு இடையாறு கருவூலம். இந்தக் கருவூலம் போலத் தலைவி பெறமுடியாதவள். (அகம் 141)
- - கோசர், பெரும்பூட்கிள்ளி, பட்டினம் வாய்மொழிக் கோசர் படையைத் துகளாக்கி, அவர்களது நாட்டைப் பொலம்பூண்-கிள்ளி கைப்பற்றிக்கொண்டான். அவனது காவிரிப்பூம் பட்டினம் போலத் தலைவி விருந்து இருக்கும் (அகம் 205)
- - கோசர், பெரும்பூட்கிள்ளி, பட்டினம் வாய்மொழிக் கோசர் படையைத் துகளாக்கி, அவர்களது நாட்டைப் பொலம்பூண்-கிள்ளி கைப்பற்றிக்கொண்டான். அவனது காவிரிப்பூம் பட்டினம் போலத் தலைவி விருந்து இருக்கும் (அகம் 205)
- - தழும்பன், ஊணூர், மருங்கூர்ப்பட்டினம், தூங்கல் ஊணூர் அரசன் தழும்பன். இவன் பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன் எனப் போற்றப்பட்டவன். தூங்கல் என்னும் பெயர் கொண்ட புலவர் இவனைப் பாடியுள்ளார். (இந்தப் பாடல் இப்போதுள்ள சங்கப்பமாடல் தொகுப்பில் இல்லை) இந்த ஊணூர்க்கோட்டைக்கு அப்பால் மருங்கூர்ப்பட்டினம் இருந்தது. இப் பட்டின ஆவணத்தில் (கடைத்தெருவில்) எப்போதும் ஆரவாரம் இருந்துகொண்டே இருக்கும். இந்த ஆரவாரம் போல ஊரார் அலர் தூற்ற விட்டுவிட்டுத் தலைவன் சென்றுவிட்டான் (அகம் 227)
- - முசுசடை, வேம்பி, மழவர், கோடை வள்ளல் முசுண்டையின் வேம்பூர் போல எழில்நலம் மிக்கவள் தலைவி. கொடும்பூண் பல்வேல் முசுண்டை என இந்த அரசன் பாராட்டப்பட்டுள்ளான். மயில் தோகை நுனி அம்பு எய்யும் மழவர் வாழும் கோடை மலையில் புலியைக் கண்டு மான் பிரிந்து ஓடும் பல்முனை வழிகள் போன்றது தலைவன் சென்ற காட்டுவழி. (அகம் 249)
- - கொங்கர், பசும்பூண் பாண்டியன், கூடல், வடுகர், எருமை, அயிரியாறு கொங்கரை ஓட்டிவிட்டு, நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் தன் கூடல் நகரில் இன்னிசை முழக்கத்துடன் விழாக் கொண்டாடியபோது எழுந்த ஆரவாரத்தை விட அலர் தூற்றும் ஆரவாரம் பெரிதாக உள்ளது. தலைவனோ வடுகர் பெருமகன் எருமை [ஒப்புநோக்குக - மையூர் கிழான்] நன்னாட்டில் பாயும் அயிரி ஆறு தாண்டிப் பொருள் தேடச் சென்றுவிட்டான். (அகம் 253)
- - குட்டுவன், தொண்டி விறல்போர்க் குட்டுவன் தொண்டியில் மலர்ந்த தாமரை போன்றது அவள் கண். (அகம் 290)
- - திரையன், பவத்திரி பசும்பூண் திரையன் எனப் போற்றப்படும் திரையனின் பவத்திரி நகரம் போலத் தலைவி தொலையா நல்லெழில் மிக்கவள். (அகம் 340)
- - பழையன்மாறன். கூடல், கிள்ளிவளவன், கோதைமார்பன் கூடல் நகரில் போர். பழையன்மாறன் வென்றான். கிள்ளிவளவன் படை தோற்றது. இதனைக் கண்ட கோதைமார்பன் பெரிதும் மகிழ்ந்தான். (அகம் 346)
- - வானவரம்பன், வேங்கடம் வானவரம்பன் நன்னாட்டைத் தாண்டிச் சென்றால் வேங்கடம். தலைவன் வேங்கடத்தைத் தாண்டிப் பொருள் தேடச் சென்றான். (அகம் 389)
- - மருங்கூர்ப்பட்டினம் கடற்காக்கை தன் இரையை மருங்கூர்ப் பட்டினத்தில் நிற்கும் வங்கக் கப்பலின் கூம்பில் பதுக்கி வைக்குமாம். (நற்றிணை 258)
- - செழியன், பெருங்குளம், வாணன், சிறுகுடி கடுந்தேர்ச் செழியனுக்கு உரியது பெருங்குளம் [இக்காலத்துப் பெரியகுளம் என்னும் ஊர்]. இதன் மடைநீர் சிறுகுடி வயலில் பாயும். சிறுகுடி அரசன் வாணன். (நற்றிணை 340)
- - வழுதி, மருங்கை பசும்பூண் வழுதியின் துறைமுகம் மருங்கூர்ப்பட்டினம். (நற்றிணை 358)
- - அருமன், சிறுகுடி பெரும்புகழ் பெற்ற சிறுகுடி என்னும் ஊர் அருமன் என்னும் மூதில் குடிமகன் வாழ்ந்த ஊர். தலைவி இந்தச் சிறுகுடி போல் நல்லழகு பெற்றவள் (நற்றிணை 367)

நச்செள்ளையார் [78][79]

தொகு
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - போந்தை, கானலம்பெருந்துறை, வானவரம்பன், நறவு ஊர், பதிற்றுப்பத்து 6 ஆம் பத்து - கூற்றம் வலை வித்தது போலப் போந்தை(பனம்பூ) சூடிய படை உடையவன் (51), மனைவி மக்களை விட்டுவிட்டு வங்கக் கப்பல் கடலில் திரிவது போலப் போர்க்களத்திலேயே திரிந்தான் (52), பகைவரை வென்று கொண்டுவந்த பொருள்கள் உன் முன்னோர் உன் கோட்டையில் மிகுதியாக உள்ளன. இன்னும் கொண்டுவந்து எங்கே வைப்பாய். எனவே, போர்க்கோட்பாட்டை மாற்றிக்கொள்க எனப் புலவர் இவனுக்கு அறிவுரை கூறுகிறார் (53), விறலியர் பாட மனைவியோடு மகிழ்ந்திரு - என்கிறார் புலவர் (54), இரவலர் வராவிட்டால் தேரில் சென்று தேடி அழைத்துவந்து பரிசில் நல்குவான். பரிசிலர்க்கு வழங்குவதற்கென இவனது கானலம்பெருந்துறைப் பகுதியில் பொருள்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன (55), ஊர்த் திருவிழாவில் கோடியர்(யாழிசைப் பாணர்) ஆடுவது போல இவன் போர்களத்தில் வெற்றி முழக்கத்துடன் ஆடுவான். (56) மனைவியின் ஊடல் கண்ணுக்கு அஞ்சுவதை விட இரவலரின் வாடும் கண்களுக்குப் பெரிதும் அஞ்சுவான். அத்தகைய கொடையாளி (57), வானவரம்பன் எனப் போற்றப்பட்டான் (58), போர் வீரர்களாகிய சான்றோர் மெய்ம்மறை (மெய்ம்மறை என்பது கவசம்) (58), வில்லோர் மெய்ம்மறை (59), நறவு என்பது இவன் நாட்டுத் தலைநகரம். இது துவ்வா நறவு எனப் போற்றப்பட்டது. (60)
குடக்கோ நெடுஞ்சேரலாதன், பதுமன், தண்டாரணியம், தொண்டி, மழவர், பதிகம் - குடக்கோ நெடுஞ்சேரலாதன் இவனது தந்தை. வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி(மகள்) இவனது தாய். தண்டாரணியம் (தெக்கணப் பீடபூமி) காட்டில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பார்ப்பார்க்குக் கபிலையாக(பசுவாக) வழங்கினான். குடநாட்டில் ஓர் ஊரையும் பார்ப்பார்க்குக் கொடுத்தான். இந்தக் கொடையால் இவன் வானவரம்பன் என்னும் பெநரைப் பெற்றான். மழவரோடு போரிட்டு வென்றான். எதிர்த்த மன்னர்களை வென்றான். தன்னைப் பாடிய பெண் புலவர் நச்செள்ளையாருக்கு அணிகலன்கள் செய்துகொள்வதற்காக ஒன்பது கா நிறையளவு பொன் கொடுத்தான். அத்துடன் 100 ஆயிரம் காணம் பணமும் கொடுத்து அவைக்களத்தில் வைத்துக்கொண்டான். (அவைக்களப் புலவர்). 38 ஆண்டு அரசாண்டான்.

நத்தத்தனார் [80]

தொகு
- நல்லியக்கோடன் ஓய்மான் நாடு, ஓவியர், இலங்கை, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், சிறுபாண்-ஆற்றுப்படை - எழுவர் மாய்ந்தபின் வாழ்ந்த வள்ளல் (115), ஓவியர் பெருமகன் (122) தொன்மா இலங்கை என்பது இலங்கைத் தீவு. இதன் பெயரைக் கொண்டு அமைந்த ஊர் நன்மா இலங்கை. இது நல்லியக்கோடனின் தலைநகரம் (120), மதிலொடு பெயரிய பட்டினம் [81] இவன் நாட்டுத் துறைமுகம் (153), வேலூர் முல்லைநிலப் பகுதியில் வேல் நுனியால் தோண்டிய 'கேணி' பல உண்டு (173), ஆமூர் அந்தணர் அருகா மருதநிலம் (168), அன்றே பரிசில் வழங்குவான் (261), குறிஞ்சிக் கோமான் (267)
- - குட்டுவன் வடபுல இமயத்து வாங்குவில் பொறித்தவன், வஞ்சி (49)
- - கடுந்தேர்ச் செழியன் கொற்கைக் கோமான் மதுரை (65)
- - தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் உறந்தை (82)
- - பேகன் ஆவியர் பெருமகன், மயிலுக்குப் போர்வை அளித்தவன்(87)
- - பாரி பறம்பின் கோமான், முல்லைக்குத் தேர் நல்கியவன் ((91)
- - காரி நெடுவேல் கழல்தொடி கொண்டவன், ஈர நன்மொழியும் புரவியும் நல்கியவன் (95)
- - ஆய் நீல நாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு [குற்றால நாதருக்கு] வழங்கியவன் (99)
_ - அதிகன் ஔவைக்குக் கனி தந்தவன் (103)
- - நள்ளி மழைக்காற்று தூங்கும் நெடுங்கோட்டு நளிமலை [82] நாடன், நண்பர்கள் மகிழ நடைப்பரிகாரம் [83] வழங்கியவன் (107)
- - ஓரி நாகமலை [84] நாட்டை யாழிசைக் கலைஞர்களுக்குத் தந்தவன் (111)

நப்பசலையார் [85]

தொகு
கிள்ளிவளவன் [86] சிபி - புறா
தூங்கெயில் எறிந்த தொடிதோள் செம்பியன் (புறம் 39)
இடி விழுந்து ஐந்தலை நாகம் சாவது போலக் கிள்ளி செம்புக்கோட்டையை செம்பு உறழ் புரிசையை அழித்தான். (புறம் 37) திண்தேர் வளவனைக் கூற்றம் கொண்டது. (புறம் 226)
- காரி [87] (கபிலர்) புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், குட்டுவன் நாவாய் வணிகம் கபிலர் காரி புகழைப் பாடினார். குட்டுவன் பொன் கொண்டுவரும் நாவாய்க் கப்பலைக் குடகடலில் ஓட்டிய பிறகு பிறரது கலமாகிய சிறுகப்பல்கள் செல்லமுடியா நிலை ஏற்பட்டது போல கபிலன் பாடிய புகழைக் கேட்டபிறகு காரியை நாடி வந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார். பெண்ணையம் படப்பை நாடு கிழவன். பகைவரையும் காப்பாற்றுபவன். (புறம் 126)
- மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் கபிலன், முள்ளூர், புலிச்சின்னம், பெருவிறல்-வளவன், சுடர்ப்பூண், அவுணர் மறைத்த ஞாயிற்றை அஞ்சன உருவன் மீட்டுத் தந்தது போல திருக்கண்ணன் வளவனின் வெண்கொற்றக் குடையை மீட்டுத்தந்தான். இந்தத் திருக்கண்ணன் வளவனைத் தன் முள்ளூர்க் கோட்டையில் இருக்கச் செய்துவிட்டுப் பகைவருடன் போரிட்டு மீட்டுத் தந்தான். முள்ளூர் புலிச்சின்னம் பொறித்த கோட்டை. கபிலன் பாடிப் புகழ் சேர்த்த கோட்டை. இந்தத் திருக்கண்ணனின் அண்ணன் (நும் முன்) சோழனுக்கு வெற்றி தேடித் தந்தவன். முள்ளூர் புலிச்சின்னம் தாங்கச் செய்தவன். அவனது வழிவந்தவன் இந்தத் திருக்கண்ணன். இவனது வெற்றி இந்தப் பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. (புறம் 174) இங்குக் குறிப்பிடப்படும் வளவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். மலையமான் மக்களை யானைக்காலில் கொல்ல முயன்றவன்.
- - அவியன் மனைவியுடன் தோன்றி பாம்புரி போன்ற நல்ல ஆடைகள் வழங்கிச் சிறப்பித்தான் (புறம் 383)

நப்பாலத்தனார்

தொகு
- - மழவர், ஓரி வள்ளல் ஓரி 'மழவர் பெருமகன்' எனக் குறிப்பிடப்படுகிறான். (நற்றிணை 52)

நப்பாலத்தனார் (மதுரைக் காமக்கனி)

தொகு
- - வாணன், சிறுகுடி, சிறுகுடி நெல்வயல்கள் மிக்க ஊர். இதன் அரசன் வாணன். (அகம் 204)

நரிவெரூஉத்தலையார்

தொகு
பெருஞ்சேரல் இரும்பொறை [88] - - மன்னனைக் கண்டதும் நோய் நீங்கியது (புறம் 5)

நல்லிறையனார்

தொகு
கிள்ளிவளவன் (சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்) - வாய்வாள் வளவன் புத்தாடை நல்கிப் போற்றினான் (புறம் 393)

நல்லுருத்திரனார்

தொகு
- - தென்னவன் தன் நாட்டுப் பகுதியைக் கடல் கொண்டது என்பதற்காக அதனை ஈடு கட்டிக்கொள்ள புலி, கெண்டை பொறித்த சோழர் சேரர் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றிக் தன் கெண்டைமீனைப் பொறித்துக்கொண்டவன் 'வாடாச் சீர்த் தென்னவன்'. நல்லினத்து ஆயர் (பசு வளர்க்கும் ஆயர்) [89] அந்தத் தென்னவன் குடியில் பிறந்தவர்களாம். (கலித்தொகை 104)

நன்முல்லையார் (அள்ளூர்)

தொகு
- - அள்ளூர், செழியன், }} நெல்வளம் மிக்க ஊர் அள்ளூர். இதன் அரசன் கொற்றச் செழியன். (அகம் 46)

நன்னாகனார் [90]

தொகு
- கரும்பனூர் கிழான் வேங்கடம் வேங்கட நாடன் எனப் போற்றப்படும் இவனது ஊர் வேங்கட நாட்டுக் கரும்பனூர். ஊனும் ஊணும் உண்டு சலிக்கும்போது பாலில் செய்த உணவுப்பண்டங்கள் தருவான். பெரியவர்களையும், சிறுவர்களையும் அக்கரையிலும், இக்கரையிலும் சேர்க்கும் அம்பி போல் இவன் அறத்துறை அம்பி. (புறம் 381) நெய்ச்சோறு போட்டுப் பேணினான் (புறம் 384)
- ஒய்மான் நல்லியக்கோடன் [91] பெருமாவிலங்கை, பாரி, வில்லியாதன், இலங்கை-கிழவன், இவன் தலைநகர் பெருமாவிலங்கை. பாரியின் பறம்புமலையில் பனிச்சுனை ஒன்று இருந்தது. அதன் நீர்ந் தெளிவை நாள்தோறும் சுவைப்பது போல நல்லியக்கோடனைப் புலவர் நேரில் கண்டு அவனது வளங்களைத் துய்த்தாராம். (புறம் 176), இரவிலேயே பலவரின் வறுமையைப் போக்கினான். (புறம் 376) நெல் மலிந்ததும், அகழ், மதில் கொண்டதுமான இலங்கை மக்களுக்கு இவன் உரியவன். இவன் புலவர் குடும்பத்துக்குப் பன்றிக்கறியும் சோறும் தந்து பரிசில் வழங்கினானாம் (புனம் 379)

நாகரியார் [92]

தொகு
- தந்துமாறன் - நுண்ணுணர்வினால் பெருங்கொடையாளியாக விளங்கிய தந்துமாறன் மாண்டான் (புறம் 360)

நாகனார் (வெள்ளைக்குடி)

தொகு
கிள்ளிவளவன் [93] பாடிய இந்தப் புலவரின் நிலக்கடனைத் தள்ளுபடி செய்தான் [94]

நாகன் குமரனார் (எழூஉப்பன்றி)

தொகு
- - தென்னவன், பொதியில், தென்னவன் நாட்டுப் பொதியில் மலையில் அருவி அருவி முழக்கம் போல் இசை முழங்க முருகு விழாக் கொண்டாடினர். (அகம் 138)

நெடும்பல்லியத்தனார்

தொகு
முதுகுடுமிப் பெருவழுதி [95] குடுமிக் கோமான் – கொடை [96]

நெட்டிமையார்

தொகு
முதுகுடுமிப் பெருவழுதி (பாண்டியன் பல்யாகசாலை) முந்நீர் விழவின் நெடியோன் அறத்தாறு சொல்பவன் ஆ, பார்ப்பார், பெண்டிர், பிணி-உடையோர், மகப்பேறு வேண்டிக் காத்திருப்போர் பாதுகாப்பான இடம் செல்க (புறம் 9)
முதுகுடுமிப் பெருவழுதி (பாண்டியன் பல்யாகசாலை) - இன்னா ஆக பிறர் மண் கொண்டு உன் நாட்டு மக்களுக்கு இனிய செய்தல் அறநெறியா (புறம் 12)
முதுகுடுமிப் பெருவழுதி (பாண்டியன் பல்யாகசாலை) - யூபம் [97] நட்டுப் பெரும்பெயர் ஆவுதியும் [98], அடுயெய் ஆவுதியும் [99] செய்தவன் (புறம் 15) செய்த வேள்விகளில் வானவர்க்கு உணவளித்த வேள்வியா, மக்களுக்கு உணவளித்த வேள்வியா, எது அதிகம் (யா பலகொல்) என்பது புலவர் வினா

பரங்கொற்றனார் (உமட்டூர் கிழார் மகனார்)

தொகு
- - மோரியர், ஆஆய், நெடுங்குடை இயல்தேர் மோரியர் (தென்னாடு) வந்தபோது வண்டியின் இரும்புச் சக்கரம் பள்ளம் செய்த வழியின் வழியே செனிருந்தாலும் தலைவன் குறித்த காலத்தில் திரும்பிவிடுவான். - ஆய் அரசன் கானம் போல் தலைவியின் மார்பகம் மணக்குமாம். (அகம் 69)

பரணர் [100][101]

தொகு
சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் - - வேழ முகவை யானைப்பரிசில் நல்கும்படிக் குட்டுவனை வேண்டுகிறார் (புறம் 369)
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் - அறுகை, குராலம் பறந்தலை, காஞ்சியம்பெருந்துறை, மோகூர், காவிரி, பூவிரி புனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் பதிற்றுப்பத்து - 5 ஆம் பத்து - கடல் நீர்த்திவலை விசிறக் குதிரையில் சென்றான் (41, 42), இமயம் முதல் குமரி வரை நாடாண்ட அரசர் பலரை வென்றான் (43) வண்கை (கொடை) வேந்தன் (43), இவனை மதில்-போரில் எதிர்கொண்ட அறுகை என்பவன் தொலைநாட்டினன் என்றாலும் அவனை நண்பன் எனக் கொண்டான். அறுகையைத் தாக்கிய மோகூர் மன்னனின் முரசைக் கைப்பற்றி அடக்கினான். குராலம்பறந்தலைப் போரில் முரசுடை வேந்தர்களை வென்றான் (44), தன் கோட்டையை வெல்ல ஏணிப்போரில் ஈடுபட்டவர்களை வென்றான் (45), எழுமுடி மார்பின் எய்திய சேரல் (தான் வென்ற 7 மன்னர் கிரீடங்களைக் கோத்து மார்பில் அணிந்துகொண்டான்.(45), கடல்-போரில் ஈடுபட்ட பகைவர்களைக் கடலலை (குருதியால்) கலங்கும்படி வேலிட்டு வென்றான் (46), வென்று பெற்ற பொருள்களை யெல்லாம் மகளிர் துணங்கை ஆடும் விழாவில் கொடையாக வழங்கினான் (47), பாணர்க்குப் பொன்தாமரைப் பூவும், விறலியர்க்கு ஆரமும் வழங்கினான். சேரநாட்டு மலையில் பிறந்து, சேரநாட்டுக் கடலில் புகும் ஆற்றின் (பேரியாறு, பெரியாறு) மணல்நீர்த் துறை காஞ்சியம்பெருந்துறை எனப்பட்டது (48), மோகூர்ப் போரில் வேந்தரும் வேளிரும் ஒன்றுகூடித் தாக்கினர். பாண்டியனின் காவல்மரம் அப் போரில் வெட்டி வீழ்த்தப்பட்டது (49), புனல்வளம் தரும் காவிரி போலவும், குமரிமுனை போலவும் விளங்கியவன் (50)
- - குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் (தந்தை), சோழன் மணக்கிள்ளி (தாய்), கடவுள் பத்தினி, ஆரிய அண்ணல், வியலூர், கொடுகூர், பழையன், சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர், உம்பற்காடு, குட்டுவனை சேரல், கங்கை, இடும்பில்புறம், பதிகம் - கண்ணகி சிலைக்குக் கல் கொண்டுவந்து கங்கையில் நீராட்டினான். அப்போது ஆரிய அண்ணலை வீழச் செய்தான். ஆனிரைகளைக் கவர்ந்துவந்து இடும்பில்புறம் என்னுமிடத்தில் நிறுத்தினான். வியலூர் நகரை அழித்தான். வியலூருக்கு மறுகரையில் இருந்த கொடுகூர் நகரை அழித்தான். பழையன் என்பானது காவல்மரம் வேம்பை வெட்டி வீழ்த்தினான். அப் போரில் மாண்ட அவ்வூர் வீரர்களின் மகளிர் தாமே மழித்துக்கொண்ட கூந்தலால் கயிறு திரித்து வெட்டிய வேப்பமரத்தில் கட்டி யானையோடு பிணித்து இழுத்து வந்தான். (தாயின் சோழர் குடிக்கு உரியோர் 9 பேர் போட்டி போட்டுக்கொண்டபோது வாயில்புறம் என்னுமிடத்தில் போரிட்டு வென்றான். பாடிய புலவர் பரணருக்கு உம்பற்காடு நாட்டு வருவாய் முழுவதும் வழங்கினான். அத்துடன் தன் மகன் குட்டுவன் சேரல் என்பவனையும் பணியாளனாக வழங்கினான். 55 ஆண்டு அரசாண்டான்.
இளஞ்சேட் சென்னி (உருவப் பஃறேர்) - - போர்க்கோலம் (புறம் 4)
நெடுஞ்சேரலாதன் (சேரமான், குடக்கோ, பெருவிறல் கிள்ளி (சோழன், வேல்பஃறடக்கை) திருப்போர்ப்புறம் போர் போர்க்களத்தில் இருவரும் மாண்டனர். அவர்களின் நாடு என்ன ஆகுமோ (புறம் 63)
- வையாவிக் கோ பெரும்பேகன் கண்ணகி மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்தான். மனைவியிடம் சென்று சேர்ந்து வாழுமாறு பரணர் அறிவுறுத்துகிறார். உடுத்திக்கொள்ளாது, போருத்திக்கொள்ளாது என்பதை அறிந்திருந்தும் தன் போர்வையை மயிலுக்குப் போர்த்திவிட்டவன். இவனது கொடை தனக்கு மறுமை இன்பம் நோக்கிச் செய்யப்படுவது அன்று. பிறரது வறுமையைப் போக்கச் செய்யப்படுவது (புறம் 141), நீர் இல்லாத குளம், விளையும் வயல், விளையாத களர் நிலம் எனப் பார்க்காமல் எங்கும் பெய்யும் மழை போல எல்லாருக்கும் கொடை வழங்குவான் (புறம் 142) பேகன் வேறொருத்தியோடு வாழ்ந்துவந்தான் (புறம் 144) மயில் குளிரால் நடுங்குகிறது என்று பேகன் போர்த்திவிட்டானாம் (புறம் 145),

பரணர் தொடர்ச்சி 1

தொகு
- - ஐயை, தித்தன், உறந்தை, பூழியர், மத்தி, கழார் ஐயை தந்தை தித்தன். அவன் தலைநகர் உறந்தை. உறந்தைக் காவிரி வெள்ளத்தில் தலைவன் தான் விரும்பிய ஒருத்தியோடு விளையாடினானான். பூழியர் பழக்கும் யானை குளத்தில் நீராடுவது போல விரும்பி நீராடினான். இதனால் மத்தி என்பானது கழாஅர்த்துறை போன்ற தலைவியின் இளமை கழிந்துபோயிற்று. (அகம் 6)
- - பொறையன், கொல்லி பொறையனுக்கு உரிய கொல்லிமலையில் இருந்த பாவை போல் தலைவி மட-உணர்வு கொண்டவள் (அகம் (62)
- - அஃதை, ஆதிமந்தி அஃதை யானைப் பரிசில் வழங்கும்போது பொருநர் பறை முழங்குவது போல அலர் தூற்றினர். சுருள்முடிப் பொருநனை (ஆட்டனத்தியை)க் கண்டீரோ என்று பித்தேறி காவிரி ஆற்று வழியில் தேடிச் சென்று காதலனைப் பெற்ற ஆதிமந்தி போலப் பிடிவாதம் பிடிக்கும் சூழ்ச்சித் திறனும் தனக்கு வேண்டும் எனத் தலைவி கூறுகிறாள். (அகம் 76)
- - செழியன், கூடற்பறந்தலை கூடல் நகரப் போர்க்களத்தில் செழியனிடம் தோற்றோடிய இருபெரு வேந்தரைக் கண்டு வென்றவர் செய்த ஆரவாரம் போல் அலர் தூற்றுகின்றனர். (அகம் 116)
- - தித்தன், உறந்தை தித்தன் தலைநகர் உறந்தைக்கு அமைந்துள்ள காவல்காட்டு அரண் போலக், களவு-வாழ்க்கை பல முட்டுப்பாடுகளை உடையது (அகம் 122)
- - கரிகால், வாகைப்பறந்தை, ஒன்பது குடை வாகைப்பறந்தலை என்னும் போர்க்களத்தில் கரிகாலனை எதிர்த்த ஒன்பது சோழர் குடைகளும் தோற்றோடியது போல, வாடையே! தலைவன் வந்ததும் நீ ஓடிவிடுவாய். [பதிற்றுப்பத்து ஐந்து பதிகம் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழச் செங்குட்டுவன் உதவினான் எனக் கூறுவது இங்கு ஒப்பிட்டு எண்ணத்தக்கது] (அகம் 125)
- - ஆதிமந்தி, ஈரெழு வேளிர், கழுவுள், காமூர், தலைவன் பிரிந்து சென்றபோது ஆதிமந்தி போல அறிவு பிரிதானேன். காமூர் அரசன் கழுவுள். ஈரெழு வேளிர் (14 வேளிர் குடியினர்) ஒன்று கூடிக் கழுவளை வென்றபோது அவனது காமூர் மக்கள் கலங்கியது போலத் தலைவியின் நெஞ்சம் கலங்கியதாம். (அகம் 135)
- - மாந்தரம் பொறையன் கடுங்கோ, நன்னன் பாழி, மிஞிலி, அதிகன், மாந்தரஞ்சேரல் இரும்பொறை [102] மன்னனைப் பாடிச்சென்றவர் கொள்கலம் நிறைந்துவிடுவது போல தலைவியைத் துய்த்த தான் நிறைவு பெற்றுவிட்டதாகத் தலைவன் கூறுகிறான். நன்னன் தலைநகர் பாழி. நன்னன் படைத்தலைவன் மிஞிலி. அதிகன் வெள்ளம் போல் படை கொண்டவன். மிஞிலி அதிகனைக் கைதியாக்கிக் கொண்டுவந்தான். மறைவாக அழைத்துச் சென்று பாழி நகரப் பேய்க்குப் பலியிட்டான். என்றாலும் இது இழிதகு செயல். இந்தச் செயலைச் செய்யும்போது மிஞிலி தலைநிமிர்ந்து நடந்துசெல்ல முடியவில்லை. நாணித் தலைகுனிந்து நடந்து அழைத்துச் சென்றான். தலைவி தலைவனிடம் புணர்ச்சி இன்பம் மறைவாகத் துய்க்க நாணத்தோடு சென்றாள். இது மிஞிலி நடை போல் இருந்ததாம். தலைவி கண்டதும் இன்பம். மிஞிலி கண்டதும் இன்பம். (அகம் 142)
- - ஆஅய் எயினன், மிஞிலி ஆய்எயினன் குதிரை வீரன். மிஞிலி தேரில் சென்று எயினனைத் தாக்கிப் போரில் கொன்றான். [ஆய்எயினன் பறவைகளின் நண்பன்] எனவே பிணம் தின்னும் கூகை கூட அவனைத் தீண்டப் பகலில் பகலில் செல்லவில்லை. (இரவில் சென்றது) தோழி தலைவனிடம் சொல்கிறாள். 'தலைவி இன்பம் பகலில் வேண்டாம். மாலைக்குப் பின் வருக'. (அகம் 148)
- - தித்தன் வெளியன், கானலம்பெருந்துறை, பிண்டன், பாரம், நன்னன், ஏழில் நெடுவரை, பாழிச்சிலம்பு, நள்ளி, ஆஅய் தித்தன் வெளியனின் கடல் துறைமுகம் கானலம்பெருந்துறை. [இது புகார்த் துறைமுகம்] அங்கு நிற்கும் கலம் என்னும் கப்பல்களில் உள்ள செல்வ வளத்தை இறால் மொய்த்துத் தாக்குமாம். அதுபோலப் பிண்டன் (பிட்டன்?) நன்னன் அரசனுக்குப் போர்த்துன்பம் கொடுத்துவந்தான். இந்த நன்னனின் தலைநக் பாரம். குடிப்பூ ஆரம் என்னும் சந்தனம். இந்தச் சந்தனம் அவனது ஏழில்மலைக் காடாகிய பாழிச்சிலம்பில் விளைந்தது. இந்தப் பாழிச்சிலம்பின் மயில்தோகை போன்றதாம் தலைவியின் தோள். (தலைவன் அரவணைக்கும்போது மயில்தோகை போன்றது) வண்டு தேன் உண்ணும்போது காந்தள் மலர் விரிந்து கிடப்பது போலத் தலைவி தலைவனிடம் விரிந்து கிடந்தாளாம். நள்ளி காட்டில் (நளிமலை என்னும் உதகைக் காட்டில்) பூத்திருக்கும் காந்தள் மலர் போல விரிந்து கிடந்தாளாம். ஆய் அரசன் வந்தவர் வல்லவர் ஆயினும் வல்லவர் அல்லர் ஆயினும் யானைகளை மிகுதியாக வழங்குபவன். தலையாறு பாயும் கானம் ஆய் அரசனின் காடு. அந்தக் கானத்து மூங்கில் போன்றது தலைவியின் தோள். (அகம் 152)

பரணர் - தொடர்ச்சி 2

தொகு
- - அதிகன், பசும்பூண் பாண்டியன் வள்ளல் அதிகனின் வேங்கைமலையில் பசும்பூண் பாண்டியன் தன் யானைப்படையின் கொடி-அணிவகுப்பை நடத்தினான். அவனது கொடிப்படை போல அங்கு அருவி. அங்கு அருவியில் நீராடும் சூரரமகளிர் போல் தலைவி பெறுதற்கு அரியவள். (அகம் 162)
- - மிஞிலி, ஆஅய் எயினன், முக்கட்செல்வன், ஆலமுற்றம், புகாஅர் மிஞிலி தாக்கத்தில் ஆய்-எயினன் வீழ்ந்தான் என்று எயினன் வளர்த்த புள்ளினம் வானத்தில் பறந்து அவனது உடலுக்கு நிழல் தந்தன. அத்துடன் காவிரி ஆற்றிலிருந்து மணல் கொண்டுவந்து அவன் உடலை மூடின. அது போல ஆலமுற்றத்தில் சிவபெருமானுக்காகப் பாவை விழாக் கொண்டாடும் மகளிர் பாவையைப் பொய்கையிலிட்டனர். இந்த ஆலமுற்றம் இருக்கும் புகார்நன்னாடு போல் வளம் மிக்க தோளினை உடையவள் தலைவி. (அகம் 181)
- - பழையன், போஒர், போர் [103] என்னும் ஊரில் இருந்துகொண்டு [சோழனுக்கு உட்பட்ட சிற்றரசனாக] அரசாண்டுவந்தவன் பழையன். இவன் வெற்றிவேல் வீரன், மாரிபோல் அம்பெய்யும் ஆற்றல் மிக்கவன். இவன் போரில் இறந்தபோது அவன் மனைவி வளையளை உடைத்துக்கொண்டாள். தலைவி சொல்கிறாள். 'நான் வளையலை உடைக்கவேண்டியதில்லை. என் கணவன் வேறொருத்தியுடன் வாழ்கிறான்' - என்கிறாள். (அகம் 186)
- - கோசர், திதியன், அழுந்தை, அன்னி மிஞிலியன் திதியன் அழுந்தை [தேரழுந்தார்] நகரில் இருந்துகொண்டு நாடாண்டான். திதியனது தந்தையின் கண்ணைக் கோசர்கள் தோண்டிவிட்டனர். திதியன் வெகுண்டெழுந்தபோது சோசர் அனைவரும் ஒன்றுதிரண்டு கங்கணம் கட்டிக்கொண்டு தாக்கினர். அவர்கள் ஒன்றுமொழிக் கோசர். இவர்கள் அனைவரையும் திதியன் கொன்றான். கொல்வதற்கு உதவியவன் அன்னிமிஞிலியன். இந்த மிஞிலியன் அழுந்தூர்த் தெருவில் வீறுநடை போட்டு நடந்து சென்றான். அதுபோலப் 'பரத்தையரை விட்டுவிட்டு வந்து உன்னுடன் வாழ்வேன்' என்று ஊடும் மனைவியிடம் தலைவன் உறுதிமொழி கூறுகிறான். (அகம் 196)
- - ஆய்நாடு, கவிரம் கவாஅன் தெற்கில் இருந்த ஆய் நன்னாட்டில் கவிரம் என்னும் பெயர் கொண்ட கணவாய் (மலையிடைவெளி) இருந்தது. அந்தக் கணவாயில் இருக்கும் அணங்கு போல் பெறுதற்கு அரியவள் தன் காதலி என்று தலைவன் கூறுகிறான். (அகம் 198)
- - வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், பாழிப் பறந்தலை, மிஞிலி, நன்னன், அகுதை, ஓரி, கொல்லி வெளியன்வேள் என்பவனின் மகன் ஆய்எயினன். பாழி என்னும் போர்க்களத்தில் போர். மிஞிலி யானைப் படையுடன் தேரில் வந்து தாக்கினான். எயினன் புண் பட்டு வீழ்ந்தான். அப்போது எயினன் வளர்த்த பறவைகள் வானில் பறந்து நிழல் செய்தன. இந்தப் போருக்குக் காரணமாக இருந்தவன் நன்னன். பறவைகள் நிழல் செய்த காட்சியை எல்லாரும் சென்று கண்டு வியந்தனர். நன்னன் அக் காட்சியைக் காணாமல் ஒளிந்துகொண்டான். எயினனின் வேளிர் குல மகளிர் பூசலிட்டுக் கதறினர். இதனை அறிந்த அகுதை பெரும்படையுடன் வந்து நன்னனை வீழ்த்தி வேள்மகளிரின் கவலையைப் போக்கினான். வேள்மகளிரின் பூசலை அகுதை நீக்கியது போலத் தலைவன் தலைவியின் நாணத்தை நீக்கினானாம். நீக்கித் தழுவியபோது அவள் கூந்தல் ஓரி அரசனின் கொல்லிமலையில் மணக்கும் கார்த்திகை (காந்தள்) மலர் போல் மணம் வீசிற்றாம். (அகம் 208)
- - தகடூர், குட்டுவன் மறப்போர்க் குட்டுவன் [கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்] பெரும்படை கொண்டு தகடூரைத் தாக்கினான். எதிர்த்துப் போரிட யாரும் இல்லை. அப்போது சினம் மாறாத குட்டுவன் கடலில் வேலை வீசித் தன் சினத்தைத் தணித்துக்கொண்டான். (அகம் 212)
- - கழார் விழா, ஆட்டனத்தி, காவிரி, ஆதிமந்தி, மருதி கழார்த் துறையில் நீர்த்திருவிழா. ஆட்டனத்தி விளையாடிக் காண்ணினான். காவிரி என்பவளும் உடன் ஆடினாள். காவிரிக்கு நீண்ட கூந்தல். ஆட்டனத்தியை விரும்பிய காவிரி தன் கூந்தலில் மறைத்து அவனை நீரோட்டத்தில் இழுத்துச் சென்றனாள். ஆட்டனத்தி ஆதிமந்தியின் காதலன். காதனைக் காணாமல் ஆதிமந்தி தேடிச் சென்றாள். (இடைநிகழ்வு - காவிரி என்ன ஆனாள் என்பது தெரியவில்லை. ஆட்டனத்தி மருதி என்பவளோடு வாழ்ந்துவந்தான்) தேடிவந்த ஆதிமந்தியிடம் தன் காதலன் ஆட்டனத்தியை ஒப்படைத்துவிட்டு மருதி கடலில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். பாடல் சால் சிறப்பின் மருதி என இவள் போற்றப்பட்டாள். (காதலன் காத்திருந்தான். அதனை அறியாதவள் போலத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். அவர் வரவில்லை. மருதி போல் கடலில் புகுவோம் வா - என்றாள். ஒளிந்திருக்கும் காதலன் வெளிப்பட்டு வரத் தோழி கூறிம் கூற்று இது. (அகம் 222)
- - மத்தி, கழாஅர், தித்தன் வெளியன், உறந்தை, கட்டி கழார்த்துறை அரசன் மத்தி. புதுவெள்ளம் வரும்போது கழார்துறையில் நீராட்டுவிழா நடைபொறும். தலைவன் தான் விரும்பிய புதிநவளோடு இங்கு நீராடினானாம். உறையூரைத் தலைநகராகக் கொண்டு தித்தன் என்பவன் சிலகாலம் ஆரசாண்டுவந்தான். அவனுக்குப் புறகு அவன் மகன் வெளியன் ஆண்டுவந்தான். இந்த வெளியன் ஆட்ஃசிக்காலத்தில் கட்டி என்பவன் உறையூரைத் தாக்க வந்தான். விடியற்கால அடையாள ஓசையாக அரண்மனையில் நாள்தோறும் எழுப்பப்படும் கிணை முழக்க ஒலியைப் போர்முரச ஒலி என உணர்ந்துகொண்ட கட்டி போரிடாமலேயே ஓடிவிட்டான். நகைப்புக்கு உரிய இந்தச் செயல் போன்றது தலைவன் கழார்த்துறையில் புதியவளோடு நீராடிவிட்டு ஓடிவந்துள்ள செயல் என்கிறாள், தலைவி. (அகம் 226)
- - ஆட்டனத்தி, ஆதிமந்தி ஆட்டனத்தி சந்தனம் பூசிக்கொண்டு தன்னைக் காவிரியில் காப்பாற்றிய புதியவளோடு [மருதியோடு] நன்றி உணர்வுடன் வாழ்ந்துவந்தான். மருதிக்கு ஆதிமந்தியின் காதல் பற்றித் தெரியாது. ஆட்டனத்தி சுருள்முடியில் சிண்டு போட்டிருப்பான். சுரியல் மணந்த பித்தை ஆட்டன் அத்தியைக் காணீரோ எனக் கூவிக்கொண்டே ஆதிமந்தி வந்தாள். அவனைக் கடல் கொள்ளவில்லை; புனல் ஒளித்துக்கொள்ளவில்லை - என்றும் சொல்லிக்கொண்டே வந்தாள். தலைவன் புதியவளோடு நூராடியபோது, ஆதிமந்தி பித்தேறிக் கதறியது போல தானும் கதறப்போவதாகத் தலைவி கூறுகிறாள். (அகம் 236)

பரணர் - தொடர்ச்சி 3

தொகு
- - கரிகால், வெண்ணிவாயில் போர், பதினொரு வேளிர், அழுந்தார் வேளிர் மன்னர் பதினொருவர் இணைந்து கரிகாலனை வெண்ணிவாயில் என்னுமிடத்தில் தாக்கினர். கரிகாலனை எதிர்த்து நிற்கமுடியாமல் தம் போர்முரசுகளைப் போர்க்களத்திலேயே பாட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதனைப் பார்த்த அழுந்தூர் [திதியன் தலைநகர்] மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தது. (அகம் 246)
- - நன்னன் உதியன், பாழி, வேளிர், மாய்கன், நன்னன் மகன் உதியன் ஆட்சிக் காலத்தில் பண்டைய வேளிர் (தொன்முதிர் வேளிர்) தம் செல்வத்தைப் பாழி நகர்க் கருவூலத்தில் வைத்துப் பாதுகாத்தனர். இச் செல்வம் பிறரால் கொள்ளப்படாதது போல தலைவி பெறற்கு அரியவள் என்கிறான் தலைவன். மாய்கன் என்பவன் இருண்ட குகை ஒன்றில் வாழ்ந்து மடிந்தானாம். இந்த மாய்கன் போலத் தன் நெஞ்சு மாயும் என்று எண்ணித் தலைவன் கலங்குகிறான். (அகம் 258)
- - கோசர், திதியன், அன்னி மிஞிலி, பேகன், கொண்டல்மலை, உழுத எருது அதற்கு இடப்பட்ட வரகு வைக்கோலைத் தின்ற பின்னர் அங்கே வயலில் பசுமையுடன் காணப்பட்ட பயிரை விதி வயத்தால் மேய்ந்த தவற்றுக்காக எருதுக்கு உரியவனின் கண்ணை ஊர்முது கோசர் குடுடாக்கிவிட்டனர். இந்தக் கொடுமையை தாங்காமாட்டாமல் குடுடு பட்டவனின் மனைவி அன்னிமிஞிலி வெள்ளாடை உடுத்திக்கொள்ளாமல் சினம் கொண்டவளாகத் திதியனிடம் முறையிட்டுக்கொண்டாள். திதியன் 'கொற்றக் குறும்பியன்' எனப் போற்றப்பட்டவன். (அதாவது இவன் தேடித் தந்த வெற்றிக்காகக் குறும்பு (ஊர்) வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவன்) திதியன் கண் களைந்த ஊர்முதுகோசரைக் கொன்றான். அன்னிமிஞிலி மகிழ்ந்தாள். இரவில் தலைவி வீட்டுக்கு வந்து அவளிடம் இன்பம் துய்த்துவிட்டு மீளும் தலைவன் தான் அன்னிமிஞிலி போல் மகிழ்வதாக நினைக்கிறான். பேகன் கொண்டல்மலை அரசன்.[104] கொண்டல்மலை மணஅருவி போல் தலைவன் தலைவியிடம் இன்பம் கண்டானாம். (அகம் 262)
- - பசும்பூண் பொருந்தலர், அரிமணவாயில் உறத்தூர், நெடுமிடல், அலைவாய் பசும்பூண் பொருந்தலர் போரில் நெடுமிடல் என்பவனைச் சாய்தனர். இந்த மகிழ்ச்சியை அரிமணவாயில் [இக்கால அரிமளம் போலும்] பகுதி உறத்தூர் என்னுமிடத்தில் விருந்துண்டு கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டம் ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டது போல தலைவன் புதியவளோடு வாழ்வது ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டதாம். முன்பு தலைவன் பிறரோடு உறவு கொள்ளமாட்டேன் என்று அலைவாய் (திருச்செந்தூர்) முருகன் முன் சூள் (சத்தியம்) செய்தானே அதனால் துன்புறுவானோ எனத் தலைவி கலங்குகிறாள். (அகம் 266)
- - ஆரியர் ஆரியர் பழக்கி வைத்திருக்கும் பிடி(பெண்யானை) பெரிய களிறுகளைப் பிணையாக்கிக் கொண்டுவருவது போலத் தலைவனை இழுத்துக்கொண்டு வருவேன் என்று பரத்தை ஒருத்தி சூள் உரைக்கிறாள். (அகம் 276)
- - திதியன், பொதியில் திதியன் பொதியில் என்னும் உயர்மலை அரசன். பிறரால் கைப்பற்ற முடியாத அவன் பொதியில்நாடு போல் அடையமுடியாதவள் என் காதலி எனத் தலைவன் கலங்குகிறான். (அகம் 322)
- - அட்டவாயில், போஒர், பழையன் கதிர் விளையும் நிலம் சூழ்ந்த அட்டவாயில் தேரோடும் தெருக்களைக் கொண்டது. தலைவி இந்த ஊர் போல நலம் மிக்கவள். போர் என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்ட மன்னன் பழையன். இவன் உயர்த்திய வேல் பகைவரை வீழ்த்தியே தீரும். அதுபோல அந்தப் புதியவளிள் பார்வை தலைவனை வீழ்த்தும். (அகம் 326)
- - நன்னன், நன்னன் ஆய், பறம்பு, வல்லம், நல்லடி நன்னன் ஊர் பறம்பு. அங்குக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் அதாவது பட்டை தீட்டுபவன் அரக்கில் ஒட்டவைத்துள்ள கல். தெருவில் வந்த அவன் அவள் கையைப் பற்றினான். அவள் 'அன்னோ' எனக் கூச்சலிட்டாள். அவன் கையை விட்டுவிட்டான். அவன் விட்டுவிட்டானே என்பது அவள் ஏக்கம். அவள் சொல்கிறாள்; அன்னையை அழைத்த என் நாக்கு பட்டை தீட்டும் கல் போல் தேயட்டும். - நல்லடி என்பவன் வல்லம் (சோழநாட்டு ஊர்) என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்டான். சோழன் மருகன் எனப் போற்றப்படும் சோழர்குடி வழிவந்தவன். அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவனது பகைவர் அவனது கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுநனர். அதுபோலப் புதியவளின் வாயில் திறக்கப்பட்டதாம். - நன்னன் ஆய் என்பவன் நன்னன் ஒருவளின் மகன். இவன் நாட்டில் பிரம்பு மிகுதி. புதியவளின் இந்தப் பிரம்பு போன்ற கூந்தல் ஆண்களைப் பிணிக்குமாம். (அகம் 356)

பரணர் - தொடர்ச்சி 4

தொகு
- - கடவுள், பாழி, வேண்முதுமாக்கள் (தொன்றுமுதிர் வேளிர்), குதிரைமலை, அஞ்சி வேளிரின் முதுகுடி மக்கள் தங்கள் செல்வத்தைப் பாழி நகர்க் கருவூலத்தில் வைத்துப் பாதுகாத்தனர். அணங்கும் (பேய்) கடவுளும் அவற்றைக் காப்பதாக நம்பினர். அந்தக் காப்பகம் போலத் தலைவி பெறுதற்கு அரியவளாம். - அஞ்சி அரசன் குதிரைமலைப் பகுதியை ஆண்டுவந்தான்.கூர்வேல் அஞ்சி எனப் போற்றப்பட்ட இவனை வில்லாளர் பலர் அலைக்கழித்து வென்றனர். இந்தப் பூசலின்போது அஞ்சி வருந்தியது போல ஊர் தூற்றும் அலரால் தலைவி வருந்தினாளாம். (அகம் 372)
- - கழாஅர், கரிகால், அத்தி, காவிரி, குட்டுவன், மரந்தை காவிரி ஆற்றில் கழார் என்னும் துறை. அதில் நீராட்டு நீச்சல் விழா. அத்தி (ஆட்டனத்தி) நீச்சல் நடனம் ஆடினான். கரிகாலன் கண்டுகொண்டிருந்தான். விழாவின்போது இசை முழங்கியது. காலை மேலே தூக்கிப் புரட்டி ஆட்டிக் காட்டினான். வயிற்றில் அணிந்திருந்த பாண்டில் என்னும் அணிகலனில் இருந்த மணியை வயிறு மேலே வரும்படி உருளும்போது ஆட்டிக்காட்டி தான் உருள்வதை எண்ணிக்கையால் அளக்கும்படி செய்தான். அவனோடு நீராடிய காவிரி என்பவள் அவனது ஆட்டத்திறனில் மயங்கினாள். அவனை இழுத்துக்கொண்டுபோய் ஒளித்துக்கொண்டாள். காவிரி செய்தது போலத் தலைவனை ஒளித்து வைப்பேன் என்று அவனுடன் நீராடிய காதல்பரத்தை கூறிகிறாள். - குட்டுவன் நாட்டு மரந்தை நகரம் போல் அழகுள்ளவளாம் அந்தப் புதியவள். (அகம் 376)
- - பாணன், ஆரியப் பொருநன், கணையன் பாணன் மற்போரில் வல்லவன். ஆரியப் பொருநன் அவனோடு மற்போர் செய்தான். ஆரியப் பொருநன் கையும் தோளும் இற்று வீழ்ந்தான். இதனைப் பார்த்துக் கணையன் நாணினான். தலைவனோடு உறவு கொண்டிருக்கும் புதியவள் தலைவிசிடம் வந்தாள். நானும் உனக்குத் தங்கை ஆவேன் என்று சொல்லிக்கொண்டு தலைவியின் கையைப் பற்றினாள். பார்த்துக்கொண்டிருந்த தலைவன் நாணினான். வரலாறு அகப்பொருள் செய்திக்கு உவமை (அகம் 386)
- - நன்னன், புன்னாடு, பாழி, ஆஅய் எயினன், மிஞிலி, மந்தி, அத்தி, காவிரி, ஆரியர், வடவரையில் வில் பொறித்தது, வஞ்சி புன்னாடு ஆய் எயினனின் தோழன் ஒருவன் ஆண்ட நாடு. பொலம்பூண் நன்னன் புன்னாட்டைத் தாக்கினான். புன்னாட்டு மக்களை அஞ்ச வேண்டாம் என்று கூறி ஆய்எயினன் நன்னனை எதிர்த்துப் போரிட்டான். நன்னனின் படைத்தலைவன் மிஞிலி. மிஞிலி தாக்குதலில் எயினன் உயிரிழந்தான். மிஞிலி தாக்கி எயினன் உயிர் இழக்க நேர்ந்தது போல் என் கணவன் புதியவள் உறவால் வாழ்க்கையை இழக்க விடமாட்டேன் - என்று தலைவி கூறுகிளாள். - ஆதிமந்தியைப் புலம்பிக்கொண்டு திரியும்படி காவிரி என்னும் பெயர் கொண்ட பெண் ஆதிமந்தியின் காதலன் ஆட்டன் அத்தியை மறைத்தது போலப் புதியவள் தலைவனை மறைத்து வைத்திருக்கிறாம். - தலைவி சொல்கிறாள். தலைவன் புதியவளிடம் போகட்டும். தலைவியின் பொலிவழகை அவளிடமே தந்துவிட்டுப் போகட்டும். தலைவியின் பொலிவழகு வஞ்சி நகரம் போல் பொலிவு பெறவேண்டும். ஆரியரை அலரத் தாக்கி அவர்களது மலையில் வணங்கு வில்லைப் பொறித்தவன் வஞ்சி போல் பொலிவு பெறட்டும். (பரத்தையை வென்று தலைவி வஞ்சி போல் பொலிவு பெறட்டும்). (அகம் 396)

பரணர் - தொடர்ச்சி 5

தொகு
- - எவ்வி எவ்வி வள்ளலை இழந்த பாணர் பூச்சூடுவதை விட்டுவிட்டார்களாம் (குறுந்தொகை 19)
- - நன்னன், கோசர் ஒன்றுமொழிக் கோசர் நன்னனின் காவல்மரமான மா மரத்தை வெட்டி வீழ்த்தி போரிலும் நன்னனை வென்றனர். இவை சூழ்ச்சியால் நிறைவேற்றப்பட்டன. (குறுந்தொகை 73)
- - பொறையன், கொல்லி பெரும்பூண் பொறையன் ஆண்ட கொல்லிமலைப் குடவரையில் பெண்தெய்வ உருவம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை. தலைவன் இந்தப் பாவை போன்ற மகளின் வலையில் வீழ்வான். (குறுந்தொகை 89)
- - மொறையன், தொண்டி திண்தேர்ப் பொறையன் ஆண்ட நாட்டில் தொண்டி இருந்தது. மேற்குக் கடலோரம் இந்தத் துறையில் இருந்த அயிரை மீனை உண்ணக் கிழக்குக் கடல் நாரை விரும்புவது போலத் தலைவன் தலைவியை விரும்புவதாகத் தனக்குள் நினைத்துக்கொள்கிறான். (குறுந்தொகை 128)
- - ஓரி, கானம் கைவள் ஓரி [கை வளம் மிக்க ஒரி] எனப் பாராட்டப்படும் ஓரி அரசனின் மலைக்காட்டிலிருந்த வந்த காற்றால் மணக்கும் கூந்தலை உடைய தலைவியை இம்மையிலும் மறுமையிலும் பெற்று வாழ விரும்புகிறான், தலைவன். (குறுந்தொகை 199)
- - சேந்தன், அழிசி, ஆர்க்காடு [தஞ்சை மாவட்ட] ஆர்க்காட்டு அரசன் சேந்தன். அவனது தந்தை அழிசி. அழிசி ஒள் வாள் இளையர் பெருமகன் எனப் போற்றப்படுகிறான். இவனது ஆர்க்காடு போல் அழகுள்ளவளாம் தலைவி. (குறுந்தொகை 258)
- - நன்னன் (பெண்கொலை புரிந்தவன்) அந்தப் பெண் நீராட ஆற்றுக்குச் சென்றாள். மாங்காய் என்று நீரில் வந்தது. அதனை அவள் எடுத்துத் தின்றாள். (நன்னன் மரத்து மாங்காய் அது; எடுத்து நன்னனிடம் தரவேண்டும்; என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.) இந்தத் தவறுதலுக்காக அரசன் நன்னன் அவளுக்குக் கொலைதண்டனை விதித்தான். அவளது குடும்பத்தினர் அவள் செய்த தவறுதலுக்காக 81 யானைகளும், அவள் எடை அளவு தங்கச்சிலை தண்டமாகத் தருவதாகவும், அவளை விட்டுவிடும்பட்டியும் நன்னனிடம் வேண்டினர். நன்னன் ஒப்புக்கொள்ளவில்லை. கொலை தண்டனையை நிறைவேற்றிவேற்றிவிட்டான். பெண்ணைக் கொலை செய்த்தால் அவன் நிரையம் (நரகம்) அடைந்தது போலத் தன் தாய் நிரையம் புகவேண்டும் எனத் தலைவி சபிக்கிறாள். (குறுந்தொகை 292)
- - அகுதை குறிசொல்லும் அகவல் மகளிர் அகுதைக்குப் பெண்யானை ஒன்றைப் பரிசாகத் தந்தனர். அவன் அவர்களுக்குப் வெள்ளிப்பூண் போட்ட கோல் ஒன்றைப் பரிசாகத் தந்தான். இவன் கொடுத்த கோலின் நோக்கம் வேறு. [பெண்கொலை புரிந்த நன்னனைக் கொன்று செங்கோலை நிலைநாட்டுவேன் - என்பது அதன் உட்பொருள்] அதுபோல, தலைவன் நாள்தோறும் தலைவி வாழ் சேரிக்கு வந்து போவது அவளை மணக்க விரும்பியே. (குறுந்தொகை 298)
- - விச்சியர் பெருமான்,குறும்பூர், விச்சிக்கோ வேந்தரை எதிர்த்துப் போரிட்டான். அது புலியை எதிர்த்துச் சிறுவன் ஒருவன் போரிடுவது போல இருந்ததாகக் குறும்பூர் [105] மக்கள் பேசிக்கொண்டனர். (குறுந்தொகை 328)
- - வாகைப்பறந்தலை, பாண்டியன், அதிகன், கொங்கர் வாகை என்பது ஓர் ஊர். கூகைக்கோழி என இதனை வழங்கினர். [கோழி அல்லது கோழியூர் என்பது உறையூர்]. வாகைப்போர்க்களம் வாகைப்பறந்தலை எனப்பட்டது. இங்கு அதிகன் பசும்பூண் பாண்டியன் அரசனோடு மோதியபோது பாண்டியன் அதிகனை அவனது களிற்றோடு வீழ்த்தினான். இதனைக் கண்டு கொங்கர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். (குறுந்தொகை 393)

பரணர் - தொடர்ச்சி 6

தொகு
- - வல்வில் ஓரி இந்த ஓரியின் காட்டிலிருந்து வந்த காற்று மோதி அவள் கூந்தல் மணந்ததாம். (நற்றிணை 6)
- - தேர்வண் மலையன் இவன் பறை முழக்கத்துடன் பகைவரின் ஆனிரைகளைக் கவர்ந்து வருபவன். (நற்றிணை 100)
- - கொல்லிப்பாவை குடவரை ஆற்றங்கரையில் இருந்த இந்தப் பாவை வெள்ளம், மழை, இடி ஆகிய எதனாலும் அழியாத மாயா இயற்கைப் பாவையாம் (நற்றிணை 201)
- - வயவன், இரும்பை அரசன் செவ்வேல் வயவன் ஊர் இரும்பை. இது ஆற்றங்கரையில் இருந்தது. தலைவி இந்த இரும்பை நகரம் போல் அழகு உள்ளவளாம். (நற்றிணை 260)
- - வில்லோர் பெருமகன், மிஞலி, பாரம், சென்னியர், சேறறு ஓரி, கொல்லி, மிஞிலி வில்லோர் பெருமகன் எனப் போட்டப்படுகிறான், இவன் [நன்னன் ஆண்ட] பாரம் நகரைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டிருந்தான். இந்தப் பாரம் நகரில் சந்தணம் மிகுதி. இந்தச் சந்தனம் போன்ற மார்பினை உடையவர் சென்னியர். அவர்களின் ஊர் சேறறு. இந்தச் சேறறு நகரம் போல் நலம் மிக்கவள் தலூவி. மாரி போல் வழங்கி மகிழ்பவன் ஓரி. ஓரி கொல்லிமலை அரசன். கொல்லிமலை தயில் போல் கூந்தலை உடையவள் தலைவி. (நற்றிணை 265)
- - நன்னன், வேந்தர் நன்னன் குதிரைவீரன். வேந்தர்களை ஓடும்படி விரட்டியவன். இவனது குதிரை முடி போல் தலைவனின் விறல்தகைமை (வீறாப்பு) கொடிது. இதனைத் தலைவி மறக்கமுடியவில்லை என்கிறாள். (நற்றிணை 270)
- - வேளிர், குன்றூர், குன்றூரில் வாழ்ந்தவர் தொன்றுமுதிர் வேளிர். இவர்கள் கழனிகளில் சுரினம் (வாய்க்கால்-மடை)களைத் துடைக்கும் பணியைச் செய்துவந்த காவல் பெருமக்கள். (நற்றிணை 280)
- - தழும்பன், ஊணூர், தழும்பன் மார்பு புண்பட்ட அழகிய தழும்பினை உடையது. அவன் பாணர் கூட்டத்துத் தலைவன். இவன் ஊர் ஊணூர். இங்குக் களிறு தனக்குப் பிச்சை போட்டவர் தலையைத் தொட்டு மகிழ்விக்கும். அதுபோலத் தலைவியின் தலையைத் தொட்டுத் தலைவன் மகிழ்விக்க வேண்டும் என்கிறாள் தோழி. (நற்றிணை 300)
- - விராஅன், இரும்பை அரசன் விரான் ஆண்ட இரும்பை நகரம் போல் அழகுள்ளவளாம் தலைவி. (நற்றிணை 350)
- - இமயம் தென்கடல் பரப்பில் மென்தூவி அன்னங்கள் மிகுதி. பொன்படு நெடுவரை எனப் போற்றப்படும் இமயமலை உச்சியில் வாழும் வானரமகளிர் இந்த அன்னங்களை விரும்புவால்களாம். (நற்றிணை 356)

பாண்டரங்கண்ணனார்

தொகு
பெருநற்கிள்ளி (சோழன் இராச்சூயம் வேட்டவன்) யானைப் படையால் பகைவர் நாட்டைப் பாழாக்கினான் (புறம் 16)

பாவைக்கொட்டிலார்

தொகு
- - சோழர், வல்லம், ஆரியர் வல்லம் என்னும் ஊரை ஆரியர் தாக்கினர். அவர்களை எதிர்த்துப் போரிட்டுச் சோழர் விரட்டி அடத்தனர். (அகம் 336)

பிசிராந்தையார்

தொகு
கோப்பெருஞ்சோழன் கோழியோன் குமரித்துறை, கோழியோன்,பிசிர் (ஊர்) கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு (புறம் 67, 212)
- - சான்றோரிடம் நரை இன்மைக்குக் காரணம் கூறல் (புறம் 191)
பாண்டியன் அறிவுடை நம்பி - - வரி கொஞ்சம் கொஞ்சமாக வாங்கவேண்டும் என அறிவுரை கூறல் (புறம் 184)

பூதநாதனார் (கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்)

தொகு
கோப்பெருஞ்சோழன் - வடக்கிருத்தல் உடல், உள்ளம் ஆகியவற்றின் உரமெல்லாம் உலர்ந்துபோகும்படி உண்ணாமல் இருந்து உயிர் துறத்தல். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது அவனுடன் சேர்ந்து பலர் இவ்வாறு வடக்கிருந்தனர் (புறம் 219)

பூதப்பாண்டியன் (ஒல்லையூர் தந்தவன்)

தொகு
- - பொதியில், திதியன். பொதியில் நாட்டு அரசன் திநியன். பொதியில் அருவியைத் தாண்டித் தமிழர் பொருள் தேடச் செல்வர். (அகம் 25)
- மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் - பூதப்பாண்டியன் அவைக்களத்தில் இருந்த இந்த நண்பர்களோடு இவன் மகிழ்ந்திருந்ததை இவனே பெருமையாக எடுத்துரைக்கிறான். வையை பாயும் மையல் நகரச் சிற்றரசன் மாவன். மன் எயில் ஆந்தை எனப் போற்றப்படும் ஆந்தை இவனது கோட்டையைக் காத்த படைத்தலைவன். உரைசால் என்னும் அடைமொழியுடன் சிறப்பிக்கப்படும் அந்துவஞ்சாத்தன் ஒரு புலவர் பெருமகன் போலும். ஆதன் மகன் அழிசி மற்றொரு நண்பன். இயக்கன் சினம் மிக்கவன். இவன் படைத்தலைவன் ஆகலாம். (புறம் 71)

பூதன் தேவனார் (ஈழம்)

தொகு
- - பாண்டியன், கூடல், வெண்குடைப் பசும்பூண் பாண்டியன் கூடலில் வண்டு மொய்ப்பது போல் மொய்க்கும்ஃ கூந்தலை உடையவள். (அகம் 231)

பெருங்குன்றூர் கிழார் [106]

தொகு
குடக்கோச்சேரல் இரும்பொறை [107] பரிசில் நீட்டித்தான் (புறம் 210, 211)
இளஞ்சேரல் இரும்பொறை - வஞ்சி, நிலந்தரு திருவின் நெடியோன், பூழியர், சென்னியர்-பெருமான், நறவு-ஊர், கபிலன், வானி-ஆறு, கொங்கர், பெரியாறு, மாந்தரன், அயிரை, பாண்டில், பதிற்றுப்பத்து – 9 ஆம் பத்து - வஞ்சி (வஞ்சிமுற்றம் என்னும் கருவூர்) இவனது கோட்டை (81), புலவர் இவனை நிலந்தரு திருவின் நெடியோய் என விளிக்கிறார் (82), இவன் போருக்குச் செல்லும்போது யானைப்படையுடன் தோல்படை(காலாள்படை)யும் மிடைந்து செல்லுமாறு இயக்குவான் (83), பூழியர் என்னும் குடிமக்கள் இவன் படையில் மிகுதியாக இருந்தனர் (84), பொலந்தேர்ப் பொறையன் என இவன் போற்றப்படுகிறான். காஞ்சிப்போர்(தாக்கியவர்களை எதிர்த்துத் தாக்கும் போர்) பலவற்றில் வெற்றி கண்டான் (84), இவனது முன்னோர் போரிட்ட காலத்தில் பெரும்பூண் சென்னியர் பெருமான் தன் வேல்களைப் போர்க்களத்திலேயே எறிந்துவிட்டு ஓடினானாம். சூடாநறவு எனப் போற்றப்பட்ட நறவு இவனது முன்னோர் தலைநகர். இங்கிருந்து ஆண்ட மன்னனைக் கபிலன் பாடி ஊர்கள் பலவற்றைப் பரிசாகப் பெற்றார்.(85), இவன் இவனது வானி-ஆற்று(சிறுவானியாறு) நீரைக் காட்டிலும் இனிமையானவன். (86), சந்தனமும், பூழிலும் சுமந்துவந்து கொடுக்கும் இவனது ஆற்றுப்படுகையில் விளையும் கரும்பைக் காட்டிலும் இனியன பல வழங்குவான். (87), கொங்கர் கோ எனப் போற்றப்பட்டவன் (88), பேரியாறு பாய்வதும், தண் கடல் படப்பை நிலம் கொண்டதுமான நாடு இவனது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது (88), பல்வேல் பொறையன் என இவனும், வடமீன் போன்ற கற்பினள் என இவனது மனைவியும் போற்றப்படுகின்றனர் (89), மாந்தரன் மருகன், கொங்கர் கோ, குட்டுவர் ஏறு, பூழியர் மெய்ம்மறை, விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்து, ஒண்டொடி கணவன் என்றெல்லாம் போற்றப்படுகிறான். அயிரை தெய்வத்தை வழிபட்டான் (90) இவனது வயவர்(போராளிகள்) மணி பதித்த பாண்டில் வண்டியிலும், கவரிமாக் குதிரை மீதும் செல்வர் (90)
- - மருகன்(வழித்தோன்றல்) கடவுள் பெயரிய கானத்திலிருந்து கல் கொண்டுவந்தும், குட்டம் தொலைய வேல் இட்டும், கடம்பு மரத்தை வெட்டியும், கழுவுள் மன்னனை வென்றும், அண்டர் குடியினரை ஓடும்படிச் செய்தும், நன்னன் அரசனின் புகழைத் தேய்த்தும், அயிரை நெய்வத்தை வழிபட்டும், வேந்தரையும் வேளிரையும் பணியும்படிச் செய்தும் நாடாண்ட சேரர்களின் வழிவந்தவன் (88)
- - குட்டுவன் இரும்பொறை, மையூர் கிழான் வேள், விச்சி, ஐந்தெயில், பெருஞ்சோழன், இளம்பழையன் மாறன், பதிகம் - இவனது தந்தை குட்டுவன் இரும்பொறை, தாய் மையூர்(மைசூர்) கிழான் வேண்மாள் (வேள் மகள்), கல்லகம் என்னுமிடத்தில் இருந்த ஐந்தெயில் கோட்டைப் போரில் விச்சி என்னும் அரசனையும் அவனுக்குத் துணைவந்த வேந்தரையும் வென்றான். பொத்தியார் என்னும் புலவரின் நண்பனான அரசன் கோப்பெருஞ்சோழனையும், வித்தை என்னும் ஊர் அரசன் இளம்பழையன் மாறனையும் தனித்தனியே போரிட்டு வென்றான். வென்ற பொருள்களை வஞ்சி மூதூருக்குக் கொண்டுவந்து பிறருக்கு வழங்கினான். மந்திரம் சொல்லித் தெய்வ-வழிபாடு செய்தான். (மாமனார்) மையோர் கிழானை அமைச்சன் ஆக்கினான். புரோகிதரைக் கொண்டு சாந்தி-வேள்வி செய்தான். இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை எனப் போற்றப்பட்டவன். தன்னைப் பாடிய இக் கிழாருக்கு 32,000 காணம் பணம் தந்தான். மற்றும் அவருக்குத் தெரியாமல் ஊர், வீடு, வளம், ஏர் முதலாவற்றையும் அவற்றைப் பாதுகாக்கக் காப்புமறம் என்று காத்துதவும் மறவர்களையும் கொடுத்தான். இவன் 16 ஆண்டு நாடாண்டான்.
- வையாவிக் கோப் பெரும்பேகன் கண்ணகி, ஆவியர், இவனை ஆவியர் பெருமகன் எனப் போற்றுகிறார். மனைவி கண்ணகியுடன் சேர்ந்து வாழுமாறு பேகனுக்கு அறிவுரை கூறினார் (புறம் 147)

பெருங்கடுங்கோ (பாலை பாடியவர்)

தொகு
- - ஐவர் ஐவர் உள்ளே இருக்கும் அரக்கு இல்லம் தீப்பட்டபோது வீமன் காப்பாற்றியது போல காட்டுத்தீயை மிதித்து யானை தன் இனத்தைக் காப்பாற்றும் காட்டு வழியாக அவர் சென்றார். (கலித்தொகை 25)
- - கூடல், விழா கூடலில் சிவன் (உயர்ந்தவன்) நடக்கும்போது திரும்பி வந்துவிடுவேன் என்று தலைவன் கூறினானாம் (கலித்தொகை 30) வில்லவன் விழா [108] நடைபெறும்போது வந்துவிடுவேன். புலவர்கள் கூடிப் புதுப் பாடல்களைப் பாடும்போது [109] வந்துவிடுவேன். - என்றும் சொன்னான் (கலித்தொகை 35)
- - நன்னல், கொண்கானம், ஏழில்குன்றம் அரசன் நன்னன் ஆண்ட நாடு 'பொன்படு கொண்கானம்'. இந்த நாட்டு மக்கள் காரான் எனப்படும் எருமை அகற்றிய இலைகளைக் க்கொண்டு தழையாடை செய்துகொள்வர். இந்த நாட்டு ஏழில்குன்றம் நகரையே பெறுவதாக இருந்தாலும் பொருள் தேடச் சென்ற தலைவன் தலைவியைப் பிரிந்து காலம் மடந்து தங்கமாட்டானாம் (நற்றிணை 361)

பெருங்கௌசிகனார் [110]

தொகு
- நன்னன் சேய் நன்னன் [111] பெரும்பூண் நன்னன் சேய் நன்னன் (64), நவிரம், காரி உண்டிக் கடவுள், ஆரிப் படுகர் பாக்கம் (163), பழையர், சேயாறு (476), மலைபடுகடாம் - வல்லாராயினும் அல்லாராயினும் நன்னன் சுற்றத்தாரும் பேணுவர் (79), நாட்டில் நவிரம் என்னும் ஊரில் காரி(நஞ்சு) உண்டிக் கடவுள்(சிவன்) கோயில் உண்டு (83), காடு காத்து உறையும் கானவர் உளர் (279), மலைபடுகடாம் (248), தேர்க்கொடை (400), பழையர் மக்களின் குடிப்பூ பகன்றை (459), திண்-தேர் நன்னன் (467), வெல்போர்ச் சேஎய் (493), உரும்பில் சுற்றம் (550), தலைவனுக்குத் தாமரை, விறலியருக்கு அணிகலன் நல்குவான். தேர், வேழம், புரவி நிதியம் நல்குவான் (575)

பெருஞ்சாத்தன் [112]

தொகு
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி
மலையன் சோழன் பக்கம் மலையன் வெற்றி மலையன் நம் பக்கம் இருந்திருந்தால் வென்னிருக்கலாமே என்று சேரன் வருந்துகிறான் (புறம் 125)

பெருஞ்சித்திரனார்

தொகு
- அதியமான் நெடுமான் அஞ்சி கண்டு தராமல் காணாமல் கொடுத்தனுப்பிய பரிசிலைப் புலவர் ஏற்கவில்லை (புறம் 208)
- வெளிமான் தம்பி இளவெளிமான் வெளிமானூர் வள்ளல் வெளிமான் துஞ்சிய பின் சென்றபோது அவன் தம்பி சிறிது கொடுப்ப, அதனைப் பெற மறுத்தார் (புறம் 207, 237, 238), குமணனிடம் சென்று பாடி யானைப் பரிசில் பெற்றுவந்து வெளிமான் தலைநகரம் வெளிமானூர்க் காவல்மரத்தில் யானையைக் கட்டி வைத்துவிட்டு 'இரவலர்க்குப் புரவலர் இருக்கிறார் என்பதைக் காண்' என்று பாடினார் (புறம் 162)
- குமணன் பாரி, ஓரி, காரி, மலையன், எழினி, பேகன், ஆய், முதிரம், பறம்புமலை அரசன் பாரி, கொல்லிமலை அரசன் ஓரி, காரிக்குதிரை மறவன் மலையன், குதிரைமலைத் தலைவன் எழினி, கடவுள் வாழும் பெருங்கல் நாடன் பேகன், மோசி கீரனார் பாடிய ஆய், வந்தவருக்கெல்லாம் வழங்கிப் பகைவரை ஓட்டிய நள்ளி, ஆகிய எழுவரும் மாய்ந்த பின் வாழ்ந்த வள்ளல். முதிரத்துக் கிழவன் (புறம் 158), தவிர்ந்து விடு பரிசில் கொள்ளமாட்டேன், இன்புற விடுதி ஆயின் குன்றியும் கொளவேன் (புறம் 159), பொன்னணிகள் தந்து நண்பனாக்கிக்கொள்வான் (புறம் 160), செல்வத்துடன் யானைமீது ஏறிச் செம்மாந்து செல்லும்படி வழங்கவேண்டும் (புறம் 161), குமணன் தந்த பரிசிலை எல்லாருக்கும் கொடுத்துதவும்படி புலவர் தன் மனைவிக்குக் கூறினார் (புறம் 163)

பெருந்தலைச் சாத்தனார்

தொகு
- மூவன் - பரிசில் நீட்டித்தான் (புறம் 209)
- இளங்கண்டீரக்கோ, இளவிச்சிக்கோ கண்டீரக்கோன், நன்னன், இருவரும் ஓரிடத்தில் இருந்தனர். புலவர் கண்டீரக்கோவின் தம்பி இளங்கண்டீரக்கோவைத் தழுவினார். காரணம் வள்ளலின் தம்பி என்பதால், என்று புலவரே விளக்குகிறார். இளவிச்சிக்கோ நன்னனின் மருமகனாம். நன்னன் பாடி வருபவர்களுக்கு வழங்காமல் கதவை அடைக்கும் பழக்கம் உள்ளவனாம். அவனது மருகனாக இல்லாதிருந்திருந்தால் இளவிச்சிக்கோவையும் புலவர் தழுவியிருப்பாராம் (புறம் 151)
- குமணன் - தம்பியால் நாடுகடத்தப்பட்டுக் காட்டில் வாழ்ந்த குமணனைக் கண்டு 'பரிசில் பெறாமல் செல்லமாட்டேன்' என்கிறார் புலவர் (புறம் 164)
- இளங்குமணன் குமணன் 'குமணன் தன் தலையை வெட்டிக்கொள்ளும்படி தன் வாளைத் தந்தான். அந்த வாள் இது' எனக் காட்டிப் புலவர் பாடினார் (புறம் 165)
- கடியநெடுவேட்டுவன் கோடை, கோடைமலை (கோடைக்கானல் <> கொடைக்கானல்) அரசன். கதநாய் வேட்டுவன். பரிசில் நீட்டித்தான். 'களிறு பெறாமல் திரும்பமாட்டேன்' என்கிறார் புலவர் (புறம் 205)
- - பண்ணி, கோடை, தென்னவன் பண்ணி 'கோடைப்பொருநன்' எனக் கூறப்படுவதால் இவன் கொடைக்கானல் எனப்படும் கோடைமலை அரசன் எனத் தெரியவருகிறது. இவன் சிறுவரை எனப்படும் சிறுமலை [113] நாட்டுக்கும் அரசன். 'தென்னவன் மறவன்' எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் யானைகளைப் பரிசாக வழங்கும் பயங்கெழு வேள்வி செய்து பெருமை பெற்றவன். (அகம் 13)

பேராலவாயார் (மதுரை)

தொகு
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு - - இளமைக் கோலப் பொலிவுடன் நீராடிய தலையோடு கண்ணீர் மல்க வந்து தீப்பாய்ந்தாள் (புறம் 247) ஈமத்தீ தனக்குத் தாமரைப்பொய்கை போன்றது என்றாள் (புறம் 246)
- - கொற்கை, செழியன், மதுரை 'வென்வேல் கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்' எனப் போற்றப்படும் பாண்டியன் கொற்கைப் பகுதியை ஆண்டுவந்தான். கொற்கை மக்கள் மீன் பிடிக்கையில் வந்த இப்பிகளை விற்றுக் கள் வாங்குவர். இந்தச் செழியன் கூடல் என்னும் மதுரை நகரில் ஆரவாரம் (கம்பலை) செய்தான். (அகம் 296)

பேரி சாத்தனார் [114][115]

தொகு
நன்மாறன் [116] - - பரிசில் நீடித்தான் (புறம் 198)

பொத்தியார்

தொகு
கோப்பெருஞ்சோழன் - தேர்வண் கிள்ளி பிசிராந்தையார் வந்து கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்ததைக் கண்டு வியந்தார் (புறம் 217) உறையூர் திரும்பிய புலவர் யானை இல்லாத கட்டுத்தறி போல் உறையூர் பாழாய்க் கிடப்பதாக எண்ணிக் கலங்கினார். சோழனைத் தேர்வண் கிள்ளி என்று குறிப்பிடுகிறார் (புறம் 220) வள்ளல் நடுகல் ஆனது கண்டு கலங்கினார் (புறம் 221), உடன் வடக்கிருக்கச் சென்றபோது புதல்வன் பிறந்தபின் வா என்று கோப்பெருஞ்சோழன் எண்ணிக் கலங்கினார் (புறம் 222) நடுகல் ஆன பின்பும் தனக்கு இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனின் வள்ளணமையைப் பாராட்டினார். (புறம் 223)

பொய்கையார்

தொகு
கோக் கோதைமார்பன் [117] தொண்டி தொண்டி அரசன், வள்ளல்.[118] நாட்டில் காட்டில் எங்கு இருந்தாலும் வழங்குவான்.[119]

மருதனார் (குறுங்குடி)

தொகு
- - உறந்தை 'குறும்பொறை நாடன்' ஆட்சிக் காலத்தில் உறையூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த உறந்தைக்குக் கிழக்கில் 'நெடும்பெருங்குன்றம்' (உச்சிப்பிள்ளையார் கோயில் மலை). அதில் பூக்கும் காந்தள் மலர் போல் தலைவி மேனி மணம் கமழுமாம். (அகம் 4)

மருதன் இளநாகனார்

தொகு
மாறன் வழுதி (பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சியவன்) வடபுல மன்னர் வாடப் போரிட்டான் (புறம் 52)

மருதன் இளநாகனார் - தொடர்ச்சி 1

தொகு
- - தொழுநை, அண்டர், மால், முருகன், அந்துவன், யமுனை ஆற்றில் இருந்த துறை தொழுநை. அண்டர் (ஆயர்) மகளிர் அதில் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்களது ஆடையை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. ஆடை இழந்த மகளிர்க்கு மாஅல் (கண்ணன்) ஆடையாக உடுத்திக்கொள்ள அங்கிருந்த மரத்தை மிதித்து வளைத்துக் கொடுத்தான். மகளிர் இலைக்கிளை ஒடித்தெடுத்து தழையாடை புனைந்துகொண்டனர். - சூரனைக் கொன்ற முருகக்கடவுள் இருக்கும் திருப்பரங்குன்றத்தைப் புலவன் அந்துவன் பாடினான். (இந்தப் பாடல் இப்போது கிடைக்கவில்லை). (அகம் 59)
- - வானவன், பிட்டன், குடவோலை முறைமை, பிட்டன் என்பவன் வானவன் மறவன் எனப் போற்றப்படுகிறான். இவன் வேலைக் கொண்டு வானவச்சேரரின் பகைவர்களை வென்றான். பெயர் எழுதிய ஓலைகளைக் குடத்தில் போட்டுக் கட்டிக் குலுக்கிக் குடக்கட்டைப் பிரித்து ஒரு ஓலை எடுத்து அதில் எழுதப்பட்டிருக்கும் பெயருக்கு உரியவரை ஆட்சிப் பொறுப்பாளராக ஏற்பர். (அகம் 77)
- - செல்லூர், கோசர் செல்லூரில் கோசர்குடியினர் வாழ்ந்துவந்தனர். அவ்வூரைக் கொடியவரைத் தண்டிக்கும் தெய்வம் காத்துவந்ததாம். இந்த ஊருக்குக் கிழக்கில் கடல். ஊர் செல்வ-வளம் மிக்கது. பாசிழை விலை என்று மணமகளுக்கு மணமகன் வீட்டிலிருந்து சீர் தருவது அக்கால வழக்கம். இது பெண்ணுக்கு அணிகலன்கள் செய்துகொள்வதற்காக வழங்கும் செல்வம். செல்லூரில் கோசர் வைத்திருந்த செல்வத்தையே பாசிழை விலையாகத் தருவதாயினும் தலைவி வீட்டார் ஏற்கமாட்டார்களாம். [ஒன்றிய காதலையே விரும்புவர்] (அகம் 90)
- - மழவர் மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் பாலைநிலச் சுரத்தில் ஆனிரைகள் மேய்த்து வருவர். (அகம் 131)
- - வேளிர், வீரை 'வீரை முன்றுறை' என்னும் ஆற்றுத்துறையில் நீராட்டு விழா நடைபெறுவது வழக்கம். தலைவன் இத் துறையில் நீராடியதை எண்ணித் தலைவி ஒருத்தி நொந்துபோனாளாம். இங்கு முழவு முழங்கத்துடன் நீராட்டுவிழா நடைபெறுமாம். இத் துறையை அடுத்த உப்பளத்தில் மழை பெய்யும்போது உப்பு அழிவது போல் நொந்துபோனாளாம். (அகம் 206)

மருதன் இளநாகனார் - தொடர்ச்சி 2

தொகு
- - செல்லூர், நெடியோன், வேள்வி, ஊணூர், சாய்க்கானம் 'மழுவாள் நெடியோன்' என்பவன் சிவன். செல்லூரில் யானையோடு போரிட்டு மன்னனை வென்றவன் 'மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்'. இது இவனது மறக்கள வேள்வி. இந்த வேள்வியின்போது இவன் 'நெடுந்தூண்' ஒன்றைச் செல்லூரில் நாட்டினான். அது நாற்புறமும் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. இதன் கண்கொள்ளாக் காட்சி போன்றது தலைவனின் மார்புக்கட்டு. (இப்போது தலைவன் தலைவியிடம் வராமையால்) தலைவனின் நெஞ்சை நினைக்கும்போதெல்லாம் தலைவி வருந்துகிறாளாம். - ஊணூர் நெல்வயல் மிக்க ஊர். அங்குப் பெரும்பெரும் பறவைகள் கூடித் திளைக்கும்.[120] இங்கு இருப்பது 'சாய்க்கானம்' (இதனைச் சாய்க்காடு எனவும் கூறுவர்) சாய் என்பது மூங்கில். சாய்க்கானம் என்பது மூங்கில்காடு. சாய்க்கான மூங்கில் போலத் தலைவியின் தோள் அழகுடையதாம். (அகம் 220)
- - வாணன், சிறுகுடி, சிறுகுடி கடலோரத்து ஊர்.[121] இங்கு உள்ள நீர்த்துறையில் மகளிர் தழையாடை [122] 'வண்டற்பாவை' விழா-ஆட்டம், குரவை-ஆட்டம் என்றெல்லாம் ஆடி மகிழ்வர். அங்குக் கதிர் வாங்கியிருக்கும் நெல்வயலில் பூத்திருக்கும் நெய்தல் மலர் போல் கலங்கிய கண்ணை உடையவளாம் தலைவி. (அகம் 269)
- - கழுவுள், காமூர் 'வென்வேல் மாவண் கழுவுள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இவன் சிறந்த வேல்வீரனாகவும், கொடை வழங்கும் வள்ளலாகவும் விளங்கியவன். இவனது ஊர் காமூர். காமூர் வேங்கைமரத்து மலர்மணம் தலைவி கூந்தலில் வீசியதாம். (அகம் 365)
- - வையைப் புனலூர் (கூடல்) புலவர் வாய் சிறப்பு எய்திய ஊர். (கலித்தொகை 67) - பொதுமொழி, புதுமொழி, மதிமொழி, முதுமொழி, செதுமொழி என மொழியை வளர்த்த ஊர். (தமிழ்ச்சங்கம்) (கலித்தொகை 68)
- - (கண்ணகி) 'ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி' பற்றிக் கேட்டிருந்தாலும் உலகில் எல்லாரும் திருமணம் செய்துகொள்ளத்தான் செய்கிறார்கள். (நற்றிணை 216)

மருதன் இளநாகனார் (மதுரை)

தொகு
நன்மாறன் (பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்) கறைமிடற்று அண்ணல்(சிவன்) சிவன் போல் தலைமையானவன். அறநெறி முதற்றே அரசின் கொற்றம் - எனப் புலவர் இவனுக்கு அறிவுரை கூறுகிறார் (புறம் 55)
- நாஞ்சில் வள்ளுவன் - கிளி ஓட்டும் புனத்தில் விளைந்திருக்கும் கதிர் போல் எல்லாருக்கும் உதவுபவன் (புறம் 138), வேந்தருக்காகப் போரிடுபவன் (புறம் 139),

மள்ளனார் (மதுரை, அளக்கர் ஞாழலார் மகனார்)

தொகு
- பண்ணன் (சிறுகுடி கிழான்) தென்னன் தென்னன் மருகன், வள்ளல் (புறம் 388)
- - வானவன், கொல்லி கொல்லிமலைப் பகுதியை 'வெல்போர் வானவன்' கைப்பற்றினான். அந்தக் கொல்லிமலையின் மூங்கில் போன்றன, தலைவியின் தோள்கள். (அகம் 33)
- - முருகன், வள்ளி, முருகனைப் புணர்ந்த பின் தோன்றும் வள்ளி போல நிற்கும் தலைவியைக் காணத் தோழிக்குக் கண் கூசுகிறதாம். (நற்றிணை 82)

மாக்கோதை (சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியவன்)

தொகு
- பெருங்கோப்பெண்டு - இந்தச் சேரன் தன் பட்டத்தரசி பெருங்கோப்பெண்டு இறந்தபோது வருந்திப் பாடினான். அவளைத் தீயில் வைத்துவிட்டு இன்னும் உயிர் வாழ்கிறேனே என்று அரற்றுகிறான் (புறம் 245)

மாங்குடி கிழார்

தொகு
நெடுஞ்செழியன் [123] எவ்வி எவ்வி ஆண்ட மிழலை நாட்டு முத்தூறு என்னும் ஊரைக் கைப்பற்றினான். (புறம் 24) நான்மறை முதல்வரைக் கொண்டு களவேள்வி செய்தான் (புறம் 26) நெடுஞ்செழியன் போர்க்கள வேள்வி செய்தவோது அவன் கழுத்திலிருந்த முத்தாரத்தைப் பரிசாகப் புலவர் கேட்டுப் பெறுகிறார் (புறம் 372)
- வாட்டாற்று எழினியாதன் கோசர், வாட்டாறு, வளநீர் வாட்டாற்று எழினி ஆதன் எனவும், வெல்-வேல்-வேள் எனவும் போற்றப்பட்டவன். இவன் நாடு மழைவளமும் ஆற்றுமீன் வளமும் மிக்கது. புலவர் இருளைப் போக்கும் வெண்ணிலாவாக விளங்கினான். (புறம் 396)

மாங்குடி மருதனார்

தொகு
நெடுஞ்செழியன் (பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்றவன்) - இருபெரு வேந்தர், வேளிர், நிலந்தரு திருவின் நெடியோன், நெல்லினூர், (ஐம்பெருங்குழு, எண்பேராயம்), குட்டுவர், முதுவெள்ளில், ஆலங்கானம், கொற்கை, தென்பரதவர், முதுபொழில் மண்டிலம், கோசர், ஓணம், நன்னன், மதுரை (699), மாறன், கூளியர், மதுரைக்காஞ்சி நூலிலுள்ள செய்திகள் - குற்றாலம் (தென்னவன் = சிவன் ஊர்) அவன் நாட்டுப் பகுதி [124] (42), இருபெரு வேந்தரையும் வேளிரையும் சாய்த்தான் (55), முதுகுடிப் பெருவழுதி வேள்வி, நிலந்தரு திருவின் நெடியோன் இவனது முன்னோன் (61), நிலந்தரு திருவின் நெடுயோன் நல்லாசிரியர்களைக் கூட்டிய செய்தி (தமிழ்ச்சங்கம்) (763), தென்குமரி, வடபெருங்கல், இருபுறக்கடல் இடைப்பட்ட நிலப்பகுதி அரசர்கள் இவனை வழிமொழிந்து செயல்பட்டனர் (72), நாவாய் வந்துபோகும் நெல்லின் ஊரைக் (சாலியூர்) கைப்பற்றினான் (87), இருபெயர்ப் பேளராயம் நிறுவியிருந்தான் (101), குட்டுவர் பலரை வென்றான் (105), முதுவெள்ளில் மக்கள் இவனைப் புகழ்ந்தனர் ('பல்குட்டுவர் வெல்கோ')(119), ஆலங்கானப் போரில் வெற்றி கண்டான் (127) கொற்கை இவன் நாட்டுப்பகுதி (138), தென்பரதவரைப் போரிட்டு வென்றான் (144), முதுபொழில் மண்டிலம் (தமிழகம்) முழுவதும் ஆண்டான் (190), வெற்றிவிழாவை அந்திவிழா என்னும் பெயரில் ஏழு நாள் கொண்டாடினான். (427-430, 460) நான்மொழிக் கோசர் (மொழிபெயர்ப்பாளர்கள்) அவையில் இடம் பெற்றிருந்தனர் (509), ஓணத் திருநாள் கொண்டாடப்பட்டது (591), நன்னன் (திருமால்) பிறந்தநாள் கொண்டாடப்பட்டது (618) மாறன் தலைமையில் இளம்பல் கோசர் படை வைத்திருந்தான் (772) வெற்றிக்குப் பின்னர் செயல்படும் படையினர் கூளியர் எனப்பட்டனர். வென்ற நாட்டைத் தீயிட்டுக் கொளுத்துவதும் அந்நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டுவருவதும் இவர்கள் பணி. நெடுஞ்செழியனுக்கு இவர்கள் இந்தப் பணியைச் செய்து உதவினர். (691)

மாசாத்தனார் (ஆடுதுறை)

தொகு
கிள்ளிவளவன் [125] - - விதையை உண்பது போலக் கூற்றுவன் இவனது உயிரைப் பறித்துக்கொண்டானாம் (புறம் 227)

மாடலன் மதுரைக் குமரனார் [126]

தொகு
குட்டுவன் கோதை [127] பகைவர் இவன் நாட்டை நெருங்கமுடியாது (புறம் 54)
நலங்கிள்ளி சேட்சென்னி [128] இயல்தேர்ச் சென்னி - வெற்றி - நல்லாட்சி (புறம் 61)
பெருந்திருமாவளவன் [129] - - பரிசில் நீட்டித்தான் (புறம் 197)
- ஏனாதி திருக்கிள்ளி - கடுமான் கிள்ளி எனப் போற்றப்படுகிறான். வாள் தழும்பு நிறைந்த யாக்கை உடையவன் (புறம் 167)
- சோழிய ஏனாதி திருக்குட்டுவன் வெண்குடை வெண்குடை என்பது இவன் ஊர். வாய்வாள் குட்டுவன் எனப் போற்றப்படுகிறான். இவனைப்ஃ புலவர் பாடியபோது புலவருக்கு போர்களிறு என்றைப் பரிசாக வழங்கினானாம். புலவர் அதனைக் கண்டு அஞ்சி விலகி நின்றாராம். பரிசு போதவில்லை என்று புலவர் விலகுகிறார் எனக் கருதி அதைவிடப் பெரிய மற்றொரு களிற்றையும் சேர்த்துக் கொடுத்தானாம். (புறம் 394)
- ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் [130] ஈர்ந்தை [131] பாண்பசிப் பகைஞன் இரவலர் இவனிடம் பரிசில் வேண்டினால் இவன் உண்ணா வயிற்றைக் கொல்லனிடம் காட்டி வேல் வடித்துத் தரும்படி வேண்டுவானாம். (புறம் 180)

மாமூலனார்

தொகு
- - முருகன், பொதினி, குதிரைமலை, மழவர், பொதினி [பழனி] அரசன் முரிகள். இவன் நெடுவேள் ஆவி எனப் போற்றப்பட்டவன். ஆவியர் குடி அரசன். குடிரைமலைக் குடிமக்கள் மழவரை ஓட்டியவன். அதாவது துரத்தி வென்றவன். பொதினியில் கல்லுக்குப் பட்டை தீட்டுவோர் வைத்திருக்கும் அரக்கும் கல்லூம் பிரிக்க முடியாதவாறு ஒன்றை ஒன்று இறுக்கிப் பிடித்துக்கொண்டு இருப்பது போல் இணைந்திருப்பேன்; பிரியமாட்டேன்; என்று சொன்ன தலைவன் பிரியும்போது தலைவி கலங்குகிறாள். (அகம் 1)
- - கோசர், துளுநாடு, நன்னன், பாழி துளு நாட்டில் பாகல்காய்களும் அதனை விரும்பி உண்ணும் மயில்களும் மிகிதி. துளு நாட்டில் வாழ்ந்த கோசர் பெரும்பூண் செம்மல் கோசர் எனப்பட்டனர். இவர்கள் வெறுங்கையோடு வரும் புதிய வழிப்போக்கர்களைப் பேணிப் பாதுகாக்கும் பண்புடையவர்கள். - பாழி அரசன் 'சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்'. இவனது பாழி நகரம் போலத் தலைவி செறிவு மிக்க பாதுகாப்பு உடையவளாம். (அகம் 15)
- - கரிகால் வளவன், வெண்ணிப்பறந்தலை, சேரலாதன் வெண்ணிப்பறந்தலைப் போரில் கரிகாலனோடு போரிட்டபோது சேரலாதனைச் சிலர் பின்புறமிருந்து தாக்கி முதுகில் புண் படுத்தினர். சோழரின் இந்த அடாத செயலுக்காகச் சேரலாதன் வருந்தினான். தன் புறப்புண்ணுக்காக நாணினான். போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான். இவன் சார்பில் சான்றோர் பலரும் சேர்ந்து வடக்கிருந்து உயிர் விட்டனர். என் மகள் தன் தலைவனுடன் சென்றபிறகு, சேரலாதனுடன் உயிர் துறந்த சான்றோர் போல நான் உயிர் துறக்காமல் வாழ்கிறேனே என்று செவிலி கூறி வருந்துகிறாள். (அகம் 61)
- - கள்வர் கோமான், புல்லி, வேங்கடம், நெடுவேள் ஆவி, பொதினி, புல்லி அரசன் வீரக்கழல் அணிந்தவன். கள்வர் கோமான் எனப் போற்றப்படுபவன். மழபுலம் நாட்டை அடிபணியச் செய்தவன். விழாக்கோலம் பூண்ட இவனது வேங்கட நாடே கிடைப்பதாயினும் தலைவன் தலைவியைப் பிரிந்து அங்குத் தங்கி வாழமாட்டான் என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். - அரசன் நெடுவேள் ஆவி ஊர் பொன்வளம் மிக்க பொதினி (பழனி) தலைவி பொதினி போல் வொலிவு மிக்கவள். (அகம் 61)
- - உதியஞ்சேரல் உதியஞ்சேரலைப் பாடிச் சென்றவர் கொள்கலன் போல நிறைவுடன் வாழுமாறு தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான். (அகம் 65)
- - சேரலாதன், மாந்தை, இமயம், நெடுஞ்சேரலாதன் கடல் போரில் வென்று கடம்பரின் காவல்மரம் கடம்பை அறுத்தான். இமய மலையில் வில்லைப் பொறித்தான். அவனது சிற்றரசர்கள் அவனது மாந்தை முற்றத்தில் அவனைப் பணிந்து திறை தந்தனர். அவற்றில் அணிகலன், வயிரம், பொன்னால் செய்த பாவை முதலானவை இருந்தன. அவற்றை அவன் முழுமையாக எடுத்துச்செல்லவில்லை. அவன் எடுத்துச் செல்லாத நிதியம் நிலத்தில் கிடந்து மக்கலாயிற்று. இந்த அளவு பெருஞ் செல்வத்தை ஒரு நாள் ஒரு பகலிலேயே பெறுவதாக இருந்தாலும் பொருள் தேடச் சென்ற தலைவன் காலம் கடந்து அங்குத் தங்கமாட்டானாம். (அகம் 127)
- - எருமை, குடநாடு, எவ்வி, அரசன் எருமை ஆண்ட குடநாடு போலத் தலைவி அழகு மிக்கவள். - எவ்வி இறந்தான் என்று பாணர் தம் யாழ்களை நிலத்தில் போட்டுவிட்டுத் தொழுதார்கள். யாழ்கள் கிடப்பது போலக் கொன்றைக் காய்கள் பாலை நிலத்தில் உதிர்ந்து கிடந்தன. (அகம் 115)
- - மழவர் மழவர் பூந்தொடை விழா கொண்டாடிய மறுநாள் மணல் முற்றம் வெறிச்சோடிக் கிடப்பது போல, தலைவன் பிரிந்தால் வீடே வெறிச்சோடிவிடும். (அகம் 187)
- - கண்ணன் எழினி, தேமுது குன்றம் எதிர்த்து நின்ற அனைவரையும் ஓட்டியவன் கண்ணன் எழினி. அவன் நாடு தேமுது குன்றம். பொருள் தேடச் சென்ற காதலர் நெடுந்தொலைவில் இருந்த இந்தக் குன்றத்தைத் தாண்டி சென்றாலும் காலம் கடந்து தங்கமாட்டார் என்றஃ கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். (அகம் 197)

மாமூலனார் - தொடர்ச்சி 1

தொகு
- - பாண்டியன், கொற்கை, பழையர், யானைப்படை கொண்ட விறல்-போர்ப் பாண்டியனின் துறைமுகத்தில் கழங்குக்காய் போன்ற பெரிய முத்துக்களையும், சங்குமணிகளையும் கொட்டிப் பழையர் குடி மகளிர் பனிக்காலத்தில் துறைவிழா கொண்டாடுவர். அவர்கள் கொண்டாடும் மாலைக் காலத்தில் கடல்-அலை பொங்கி ஆரவாரிப்பது போல ஊர் அலர் தூற்றியதாம். (அகம் 201)
- - வேங்கடம், எழினி, வெண்மணி வாயில், மத்தி, வேங்கடத்தைத் தாண்டினால் மொழிபெயர் தேயம். அங்குச் சென்றாலும் காதலர் காலம் தவறாமல் மீள்வாராம். - மத்தி என்பவன் வேந்தன் ஆணைப்படி தொலைதூர நாட்டுக்குச் சென்று கல்லா எழினி என்னும் அரசனை வென்று அவனது பல்லைப் பிடுங்கிக் கொண்டுவந்து தன் வெண்மணிவாயில் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான். இந்த மத்தி நாட்டுப் பனித்துறை நீரொலி போல அலர் பரவிற்றாம். (அகம் 211)
- - உதியஞ்சேரல் போரில் மாண்டு துறக்கம் எய்திய தன் முன்னோருக்காகப் பெருஞ்சோறு வழங்கினான். கூளிச் சுற்றம் உண்டு மகிழ்ந்தது. இந்தக் கூளிச்சுற்றம் வாழும் குன்றத்தைத் தாண்டிச் சென்றிருந்தாலும் பிரிந்தவர் காலத்தில் திரும்பிவிடுவார் என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். (அகம் 233)
- - நந்தன், கோசர், மோகூர், மோரியர் புனைதேர்க் கோசர் பொதியில் போரில் பகைவர்களைச் சிதைத்தனர். அப்போது மோகூர் அரசன் பணியவில்லை. கோசருக்குத் துணையாக மோரியர் வந்தனர். அவர்கள் தேக்கமல் சோலை மலையில் தேர்க்காலுக்குப் பாதை உண்டாக்கிக்கொண்டு வந்தனர். அதனேத் தாண்டிக் காதலர் பொருள் தேடச் சென்றுள்ளார். - அங்கு, நந்தன் (பாடலிபுரத்துத் தனநந்தன்) போல் செல்வம் பெறுவதாயினும் காலம் கடந்து தங்கமாட்டார். (அகம் 251)
- - நந்தர், பாடலி, நந்தர் பாடலிபுரத்தில் கூடித் தம் செல்வத்தைக் கங்கை ஆற்று நீரோட்டத்துக்கு அடியில் மறைத்துப் பாதுகாத்தனர். தலைவியைப் பிரிந்து தலைவன் தேடும் பொருள் இந்தப் பொருள் போன்றதோ, அல்லது, இமயமலை அளவு பெரியதோ என வினவப்பட்டுள்ளது. (அகம் 265)
- - வடுகர், மோரியர் வடுகர் சிறந்த வில்லாளிகள். மோரியர் தென்திசையில் முன்னேறும்போது அவர்களுக்கு உதவும் வகையில் வடுகர் அவர்களுக்கு முன்னதாக வந்தனர். பனிக் குன்றத்தில் தேர்ச்சக்கரம் உருள வழியமைத்துத் தந்தனர். (அகம் 281)
- - புல்லி, வடுகர் புல்லி அரசன் நாட்டு மக்கள் வடுகர். இவர்கள் சிறந்த வில்லாளிகள். இவர்களின் மொழிபெயர் தேயத்தைக் கடந்து தமிழர் பொருளீட்டச் சென்றனர். (அகம் 295)
- - புல்லி நாடு புல்லி நாட்டு வழியாகப் பொருளீட்டச் செல்பவர்களுக்கு அந் நாட்டு மக்கள் தம் ஆனிரைகளின் கழுத்தில் கட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கும் புளிக் கட்டுச்சோறு வழங்கி விருந்தோம்புவர். (அகம் 311)
- - அள்ளன், அதிகன், பாணன் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்ட அள்ளன் அரசனை, அரசன் அதிகன் பணியும்படிச் செய்தான். - வடதிசையில் உள்ள பாணன் நன்னாட்டைத் தாண்டிப் பொருளீட்டச் சென்றனர். இந்தப் பாணன் நல்வேல் பாணன் எனப் போற்றப்பட்டவன், (அகம் 325)
- - திதியன், வேளிர், திதியன் தன் நாளவையில் இருந்துகொண்டு யாழிசைப் பாணர்களுக்குப் பரிசில் வழங்கிவந்தான். வேளிர் குடி அரசர்களை வென்றவன் இவன். (அகம் 331)

மாமூலனார் - தொடர்ச்சி 2

தொகு
- - சேரலாதன் கடம்பரை வென்று அவர்களது கடம்ப மரத்தை அறுத்துத் தனக்கு முரசு செய்துகொண்டான். அந்த மிரசொலி போல ஊர் அலர் தூற்றுகிறது. (அகம் 347)
- - நன்னன், ஏழில்-குன்றம் நன்னன் ஏழில் குன்ற நாட்டுக்குத் தலைவன். இவன் தன்னைப் பாடிக்கொண்டு வருபவர்களுக்குப் பிற ஊர்களில் அவன் கைப்பற்றிய செல்வ வளங்களை வழங்கி மகிழ்வானாம். (அகம் 349)
- - வானவரம்பன், வெளியம், புல்லி அவள் வானவரம்பனின் ஊர் வெளியம் போல் அழகி. - புல்லி ஆளும் நாட்டைத் தாண்டி அவர் சென்றுள்ளார். (அகம் 359)
- - குடவர், புல்லி, வேங்கடம் புல்லி ஆண்ட வேங்க நாட்டில் குடவர் குடிமக்கள் வாழ்ந்தனர். அவர்கள் பொங்கல் சோறும், பாலும் வழிப்போக்கர்களுக்கு விருந்தாகத் தருவார்கள். (அகம் 393)
- - வடுகர், கட்டி வடுகர் நாட்டு முனையில் இருப்பது கட்டி நாடு. இதனைத் தாண்டிச் சென்றால் மொழி பெயர் தேயம். (குறுந்தொகை 11)
- - குட்டுவன், அகப்பா, செம்பியன் குட்டுவனின் கோட்டை அகப்பா. செம்பியன் இதனைப் பட்டப்பகலில் தீயிட்டுக் கொளுத்தினான். நற்றிணை 14)

முடத்தாமக் கண்ணியார்

தொகு
சோழன் கரிகால் பெருவளத்தான் - மாயோன், உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் வெண்ணிப் போர், பொருநராற்றுப்படை - யாழின் திவவு மாயோன் முன்கையில் உள்ள திவவு போல இருக்கும் (9), கரிகாலனின் அரண்மனை வாயில் எப்போதும் திறந்தே இருக்கும் (68), கரிகாலனே ஈரும் பேனும் வாங்கி விடுவான். புத்தாடை அணிவிப்பான். மகளிரைக் கொண்டு பொற்கலத்தில் உணவளிப்பான். அரண்மனையின் ஒருபக்கம் உறங்கச்செய்வான்.(95), காலையில் சுடச்சுட ஆட்டுக்கறி சூப் பருகலாம் உண்ண மறுத்தால் தந்திரமாக உண்ணச்செய்வான் (108), போகப்போகிறீர்களா என்று சற்றே கடிந்துகொள்வான் (123), பிடிபுணர் வேழம் நல்குவான்(126), இவன் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (130), தாய் வயிற்றில் இருக்கும்போதே அரசுத்தாய உரிமை பெற்றவன் (132), தவழும்போதே நாட்டைச் சுமந்தவன் (137), வெண்ணிப் போரில் இருபெரு வேந்தரையும் வென்றவன் (147), இவன் பெயர் கரிகால் வளவன் (148), பாணன் பித்தையில் பொன்-தாமரை சூட்டுவான், பாடினி அணிய முத்துமாலையும் வழங்குவான் (160), நான்கு குதிரை பூட்டிய தேரில் ஏற்றிவிட்டு ஏழு தப்படி பின்னே சென்று பேரியாழில் வழியனுப்பும் பண் பாடி அனுப்பிவைப்பான் (168),

முடத்திருமாறன்

தொகு
- - குட்டுவன், குடவரை குட்டுவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த குடவரை (கொல்லிமலை) நீர்சுனையில் பூத்த குவளைமலரின் மணம் தலைவியின் கூந்தலில் வீசிற்றாம். (நற்றிணை 105)

முடமோசியார் [132]

தொகு
பெருநற்கிள்ளி [133]
அந்துவஞ்சேரல் இரும்பொறை
- - கருவூரைத் தாக்க வந்த சோழனை மதம் கொண்ட யானைப் பிடியிலிருந்து விடுபடச் சேரன் வழி உதவியது (புறம் 13)
ஆய் (தாலி) ஈகை அரிய இழை, பொதியில், பொதுமீக்கூற்றம் மனைவி தாலி தவிர அனைத்தையும் வழங்குவான் (புறம் 127) ஆய் பொதியில் நாட்டு அரசன். (புறம் 128) பொதுமீக்கூற்றம் எனலும் இது கூறப்படும். குதிரை தேர் வழங்குவான் (புறம் 135) யானைக் கொடை (புறம் 129, 130) தேர் வேள் ஆய் (புறம் 133) மறுமைக்கு உதவும் என்று அறம் செய்யமாட்டான். சான்றோர் சென்ற நெறி என்று கொடையறம் செய்பவன். (புறம் 134)
ஆய் கொங்கர் கடல்-போர் குடகடலில் கொங்கரை ஓடும்படி செய்தான். அப்போது அவர்கள் ஏராளமான வேல்களை வீசி எறிந்துவிட்டு ஓடினர் (புறம் 130)
ஆய் வழை இவனது குடிப்பூ வழை. அண்டிரன் என்பதும் இவன் பெயர் (புறம் 131)
ஆய் ஆய் குடி ஆய் என்பது குடிப்பெயர். (அண்டிரன் என்பது இவன் பெயர்) வடதிசையில் இமயமலை. தென்திசையில் ஆய்குடி. ஆய் குடி தென்திசையில் இல்லாவிட்டால் உலகம் கவிழ்ந்துவிடும் (புறம் 132) [134]
- அண்டிரன் - இறந்தபின் இவனை வரவேற்க இந்திரன் வானுலகில் காத்திருந்தான் (புறம் 241)

முடவனார் [135]

தொகு
மாறன் வழுதி (கூடகாரத்துத் துஞ்சியவன்) தண்டமிழ் பொது எனப் பொறான் - தமிழ்நாடு தனக்கே உரியது எனப் போரிடுவான் (புறம் 51)
- தாமான் தோன்றிக் கோன் தோன்றி, கிள்ளிவளவன் காவிரி நாட்டுக் கிள்ளிவளவனிடம் செல்லும் வழியில் தோன்றிமலை [136] அரசனை இந்தப் புலவர் கண்டார். தனக்கு வண்டி இழுத்துச் செல்லும் காளை ஒன்றைப் பரிசாக வேண்டினாராம். இவனோ வானத்தில் மீன் பூத்திருப்பது போலப் பல ஆனிரைகளை ஊர்தியோடு வழங்கினானாம். அறவர் அறவன், மறவர் மறவன், மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன் என்றெல்லாம் போற்றப்பட்டவன் (புறம் 399)

முடிநாகராயர் [137]

தொகு
உதியஞ்சேரலாதன் - ஈரைம்பதின்மர், ஐவர் பெருஞ்சோறு [138]

முதுகண்ணன் சாத்தனார் (உறையூர்)

தொகு
நலங்கிள்ளி [139] சேட்சென்னி நலங்கிள்ளி என்று இவன் விளிக்கப்படுவதால் இவனது தந்தை பெயர் சேட்சென்னி எனத் தெரியவருகிறது [140] இவன் பகைவர் எண்பேர் அச்சத்துடன் வாழ்வர் [141] இவன் காலத்தில் புகார் நகரத்திலிருந்து செல்லும் கப்பல் பல நகரங்களில் அரிய பொருள்களை இறக்குமதி செய்யும் [142]

முதுகூத்தனார்

தொகு
- - சோழர், உறந்தை, செழியன், பொருப்பு 'விறல்போர்ச் சோழர்' ஆட்சியில் உறந்தை கள் போல் இனிக்குமாம். அங்குப் பாயும் பேரியாற்று (காவிரி) ஆற்று அறல் (மணல்படிவு) போல் தலைவியின் கூந்தல் இருந்ததாம். செழியனின் பொருப்பு பொதியமலை மூங்கில் போல் அவள் தோள் இருந்ததாம்(அகம் 137)

மூலங்கிழார்

தொகு
- - சாய்க்காடு அன்னம் உறங்கும் தாமரை மிக்க ஊர் சாய்க்காடு. சாய்க்காடு போல் அழகிய அவள் நெற்றியில் பசலை பாய்ந்துவிட்டதாம். (நற்றிணை 73)

மூலங்கிழார் (ஆவூர்)

தொகு
கிள்ளிவளவன் [143] - - எங்கு உள்ளீர் என்றான் அரசன். உன் நாட்டில்தான் என்று அவன் நாட்டைப் புகழ்ந்தார் புலவர் (புறம் 38) இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும (புறம் 40)
- மல்லி கிழான் காரியாதி (காரி ஆதி) பெரும்பெயர் ஆதி, குடநாடு, மல்லி [144] என்னும் ஊர்மக்களின் தலைவன் இவன். இவனைப் பெரும்பெயர் ஆதி எனப் போற்றினர். இவன் நாட்டில் குடநாட்டு எயினர் வேட்டையாடுவர். இங்கு ஓடும் ஆற்றுப்பகுதியில் கிடைக்கும் களா, துடரி, நாவல் பழங்கள் வேட்டையாடுவோருக்கு விருந்தாக அமையும். (புறம் 177)
- பாண்டியன் கீரஞ்சாத்தன் [145] பெரும்பெயர்ச் சாத்தன் 'போரிடாமல் உண்ணமாட்டேன்' எனச் சொல்லும் மறவர் சான்றோரையும், போரிடாமல் கட்டிக் கிடப்பதால் உண்ண மறுக்கும் களிறுகளையும் 'போர் உண்டு' என்று சூளுரை கூறி உண்ணச்செய்யும் பாங்குடையவன் இவன். (புறம் 178)
நன்மாறன் [146] - - பரிசில் நீட்டித்தான் (புறம் 196)

மூலங்கிழார் (ஐயூர்)

தொகு
உக்கிரப் பெருவழுதி [147] வேங்கை மார்பன் வேங்கை மார்பன் தோல்வியுறக் கானப்பேரெயில் கோட்டையைக் கைப்பற்றினான் [148]

மோசி கீரனார்

தொகு
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை முரசுக் கட்டில் பெருமை அறியாமல் ஏறி முரசுக் கட்டிலில் துயின்ற இந்தப் புலவருக்கு அரசன் கவரி வீசினான் (புறம் 50)
- கொண்கானங்கிழான் கொண்பெருங்கானம் கடல்நீரில் இருப்போர் குடிநீரை நாடுவது போல மன்னர் பக்கம் இருந்தாலும் வள்ளலாகிய இவனை நாடி வந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார் (புறம் 154) நெருஞ்சிப்பூ சூரியனை நோக்கி மலர்வது போலப் புலவரின் உண்கலம் இந்த வள்ளலை நோக்கி மலர்ஐந்ததாம் (புறம் 155) இவன் கானம் இரவலரை வளைத்துப் போட்டுக்கொள்ளும், அத்துடன் வேந்தரை வென்று திறை வாங்கும் (புறம் 156)

மோசி கீரனார் - தொடர்ச்சி

தொகு
- - நன்னன் வேந்தன் படையுடன் நன்னனைத் தாக்கினான். நன்னனால் எதிர்த்து நிற்க இயலவில்லை. எனவே காட்டுக்கு ஓடிவிட்டான். இந்தக் 'கானமர் நன்னன்' வேல் வீசும் திறம் மிக்கவன். தாக்கிய வேந்தனால் காட்டில் இவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. நன்னனுக்கு மூங்கில்காடு நலம் தந்தது போலத் தலைவி தலைவனுக்கு நலம் தந்தாளாம். (அகம் 392)
- - அதலைக் குன்றம் பரிசில் வழங்கும் கோமான் நாட்டு மலை அதலைக்குன்றம். இங்குக் குவளைப் பூவோடு சேர்ந்து மலர்ந்திருக்கும் குளவி மலர் போல அவள் நெற்றி மணக்குமாம். (குறுந்தொகை 59)
- - ஆய், பொதியில் ஆய் அரசனின் பொதியமலையில் வேங்கையும், காந்தளும் சேர்ந்து மணப்பது போல் அவள் மணம் கமழ்ந்தாளாம். (குறுந்தொகை 159)

மோசிகீரனார் (படுமரம் என்னும் ஊரினர்)

தொகு
- - சோணை, பாடலி யானை சோணை (யமுனை) ஆற்றில் குளிக்கும். அங்கு உள்ள பாடலி நகரமே கைவரப் பெறுவது ஆயினும் பொருள் தேடச் சென்ற காதலர் காலத்தில் திரும்பாமல் காலம் தாழ்த்தமாட்டார். (குறுந்தொகை 75)

வங்கனார் (ஆலங்குடி)

தொகு
- - சோழர், உறந்தை, உறையூர்ச் சோழர் அரசவையில் அறநெறி பிழைபடுவது இல்லை (நற்றிணை 400)

வடநெடுந்தத்தனார் [149]

தொகு
- நாலை கிழவன் நாகன் நுண்பூட்பாண்டியன் மறவன், திருந்துவேல் நாகன் இவன் பாண்டியனின் படைத்தலைவன். இந்தப் பாண்டியன் திருவீழ் மார்பின் நுண்பூண் மார்பில் அணிந்தவன். போரிட்ட பலரின் முரசை நாட்டுடன் கைப்பற்றியவன். இவனுக்கு மறவனாக விளங்கிய இந்த நாகன் பாண்டியனுக்குப் படை வேண்டும்போது வேலும், வினையாக்கம் வேண்டும்போது தக்க அறிவுரையும் வழங்கியவன். (புறம் 179)

வன்பரணர்

தொகு
- கண்ணீரக் கோப் பெருநற்கிள்ளி தோட்டிமலை நளிமலை, செய்யாதவற்றைக் கூறி மன்னரை வாழ்த்தும் பழக்கம் தனக்கு இல்லை என்று புலவர் இவனிடம் கூறுகிறார் (புறம் 148) இவன் கொடையால் உண்டு மகிழ்ந்து காலையில் பாடவேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாடவேண்டிய செவ்வழிப் பண்ணைக் காலையிலும் பாடிக்குண்டு மயங்கிக் கிடப்பதாகப் பாடுகிறார். (புறம் 149), இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி (தொட்டபெட்டா) இவன் மலை. வல்வில் வேட்டுவன் எனப் பாராட்டப்பட்டவன். இவன் காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது பசியுடன் சென்ற வன்பரணர் குடும்பத்தாரைப் பார்த்து தான் வேட்டையாடிய மானை, தன் காவலர் வருவதற்கு முன் ஞெலிகோலில் நீ மூட்டிச் சுட்டு வழங்கினான். அத்துடன் தன் கழுத்திலிருந்த உயர்ந்த காழாரத்தை (வைரமாலையை)க் கழற்றி வன்பரணருக்கு அணிவித்தான். வன்பரணர் வழங்கியவனைப் பற்றி வினவியபோது ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டான். அவன் போன பின் வந்த காவலரைக் கேட்டு அவன் தோட்டிமலைத் தலைவன் நள்ளி எனப் புலவர் தெரிந்துகொண்டாராம். நளிமலை நாடன் நள்ளி (புறம் 150)
- வல்வில் ஓரி வல்வில் வேட்டம், ஆதன்-ஓரி வேழம், உழுவை, கலை, பன்றி, உடும்பு ஆகியவற்றை யெல்லாம் ஒருவிசை அம்பால் ஓரி தாக்கியது வல்வில் வேட்டம். இவனது வேட்டைத் திறனை நேரில் பார்த்த புலவர் இவன் ஓரி வள்ளலோ என்று எண்ணிப் பண்ணிசைத்துப் பாடினார். பாடல் முடியும்போது பாணர் கூட்டம் கோ என்று கூட்டொலி எழுப்பியது. இதனைக் கேட்ட ஓரி அவ்வொலி தன் பெயரைக் குறிப்பதாக எண்ணி நாணினான். புலவரோடு வந்த பாணர் கூட்டத்துக்குத் தான் வேட்டையாடிய மான் கறியும் தேனும் தந்ததோடு பொன்மணிகளையும் வழங்கினானாம். (புறம் 152) பூக்காத மணிமிடைக்-குவளை(பொன்-குவளை) மலர், வெள்ளை நாரில் தொடுத்த கண்ணி, அணிகலன் ஆகியவற்றோடு யானைகளைப் பரிசாக நல்குவான் (புறம் 153)

வெண்கண்ணியார் (பொதும்பில் கிழார் மகனார்)

தொகு
- - செழியன், ஆலங்கானம் செழியன் போர்ப்பாசறையில் அவனது படைவீரர்கள் உருவும் வாள் போல வானம் மின்னி மழை பொழிகிறது. மழைக்காலத்தில் மீள்வேன் என்ற தலைவர் வந்துவிடுவார் - என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். (நற்றிணை 387)

வெண்ணிக் குயத்தியார்

தொகு
கரிகால் பெருவளத்தான் [150] நாவாய்க் கப்பல் படை
வெண்ணிப் பறந்தலை போர்
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருகன்
கரிகால் பெருவளத்தான்
புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தவன் வென்ற கரிகாலனைக் காட்டிலும் நல்லவன் - என்கிறார் புலவர் [151]

வெள்ளிவீதியார்

தொகு
- - திதியன், அன்னி, ஆதிமந்தி, வானவரம்பன் திதியனின் காவல்மரம் புன்னையை அன்னி வெட்டியபோது வயிரியர் இசை முழக்கி மகிழ்ந்தனர். அதுபோல அலர் தூற்றப்பட்டதாம். - ஆதிமந்தி தன் காதலனைத் தேடிக்கொண்டு அலைந்தது போல நான் அலையமாட்டேன் என்கிறாள் தலைவி ஒருத்தி. - வானவரம்பன் கோட்டை ஒன்றை அழித்தபோது அக் கோட்டை மக்கள் உறக்கமின்றிக் கலங்கியது போலத் தலைவன் பிரிவு உணர்த்தியபோது தான் கலங்கியதாகத் தலைவி குறிப்பிடுகிறாள். (அகம் 45)

வெள்ளெருக்கிலையார்

தொகு
_ எவ்வி அகுதை பெரும்பாண் ஒக்கல் தலைவன். யானைகளைப் பரிசாக வழங்குபவன். அகுதைமீது திகிரி(சக்கரம்) வீசினர். அந்தக் காயத்தால் அவன் சாகவில்லை. எவ்வி போரில் புண் பட்டான். இந்தச் செய்தியும் அகுதை புண்பட்ட எய்தி போல் இருக்கக்கூடாதா என்று புலவர் ஏங்குகிறார். புலவர் ஏமாந்தார். எவ்வி இறந்தான். (புறம் 233) இறந்தவருக்குச் சோற்றுப்பிண்டம் வைத்துப் படைக்கும் சடங்கு இவனுக்கும் நடைபெற்றது (புறம் 234)

ஆசிரியர் பெயர் காணாப் பாடல்

தொகு
பொறையன், தொண்டி இவளைப் பெற்றதால் இவளது தாயின் கண் 'திண்தேர்ப் பொறையன்' தொண்டியில் நெய்தல் மலர்வது போல் மலரட்டும் நற்றிணை 8
போஒர், பழையன் பழையன் தலைநகர் போர் என்னும் ஊர். போர் கிழவ்வோன் என இவன் போற்றப்படுகிறான். அத்துடன் 'வெண்கோட்டு யானை' என்னும் அடைமொழியும் இவனுக்கு உள்ளதால் இவன் யானைமறவன் எனத் தெரிகிறது. நற்றிணை 10
ஆரியர், முள்ளூர். மலையன் ஆரியர் வாட்படை கொண்டு முள்ளூரைத் தாக்கினர். அப்போது முள்ளூர் அரசன் மலையன் வேல் கொண்டு தாக்கினான். வேல் வீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆரியர் ஓடிவிட்டனர். அது போலத் தலைவி விழாக்களத்துக்கு வந்தத்தும் பரத்தையர் அனைவரும் ஓடிவிட்டனராம். நற்றிணை 170
அன்னி, இருபெரு வேந்தர் அன்னி தாக்கினான். இருபெரு வேந்தர் கூடுநின்று அவனை எதிர்த்துப் போரிட்டும் காவல்மரம் புன்னையை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை நற்றிணை 180
பொறையன், கொல்லி பொறையனை நாடி இரவலர் அவனது கொல்லிமலையில் விருப்பமுடன் ஏறுவர். இதன் குடவரையில் பாவை எழுதிய பாறையில் தேன் கூடு கட்டியிருந்தது. இந்தப் பாவை போன்ற அழகி அவள். நற்றிணை 185
சேந்தன், அழிசி, ஆர்க்காடு சேந்தன் வேல்வீரன். கொடையாளி. இவன் தந்தை அழிசி. அழிசி ஆண்ட ஆர்க்காடு போல் அழகு கொண்டவள் அவள். நற்றிணை 190
கொல்லி, பாவை பூதம் காக்கும் புதிது இயல் கொல்லிப்பாவை மீது வெயில் விழுவது போன்ற அழகி அவள் நற்றிணை 192

வாழ்வியல் பாட்டு

தொகு

மன்னர் மனநிலை

தொகு
அறிவுடை நம்பி [152] மக்கட்செல்வம் இல்லாத வாழ்வு பயனறறது புறம் 188
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி உண்டால் அம்ம இவ் உலகம் புறம் 182
கணைக்கால் இரும்பொறை [153] திருப்போர்ப்புறம் போரில் சோழன் செங்கணானிடம் சிறை பட்டு உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் காலம் தாழ்த்தித் தண்ணீர் பெற்றுப் பருகாமல் இருந்து உயிர் துறந்தபோது இரும்பொறை பாடிய பாட்டு புறம் 74
கோப்பெருஞ்சோழன் ஊக்கம் பெரிது, மேல்-உலகம் பெறலாம், பிறவாநிலை எய்தலாம், புகழை நிலைநாட்டலாம். வடக்கிருத்தல் இதற்காகவே. புறம் 214
தொண்டைமான் இளந்திரையன் ஆட்சி என்னும் வண்டியை நன்கு ஓட்டாவிட்டால் பகை என்னும் சேற்றில் புதைந்துகொள்ளும் புறம் 185
நலங்கிள்ளி [154] வெல்லாவிட்டால் விலைமகளிர் மார்பில் என் மாலை குழையட்டும். ஆட்சி சிறியோனுக்குப் பெரிது. விழுமியோனுக்கு அது நீரில் மிதக்கும் வெண்டுத்தூசி. புறம் 73 &75
நல்லுருத்திரன் [155] எலி போல் பதுக்குவோர் நட்பு வேண்டா. இடப்புறம் வீழ்ந்த பன்றியை உண்ணாது ஒதுக்கும் புலி போன்ற உள்ள உரம் கொண்டவர் நட்பு வேண்டும் புறம் 190
நெடுஞ்செழியன் [156] உற்றுழி உதவியும் - கல்வியின் சிறப்பு புறம் 183
நெடுஞ்செழியன் [157] பகைவரை வெல்லாவிட்டால் மாங்குடி மருதன் தலைமையில் புலவர் என் நாட்டைப் பாடாதொழியட்டும் புறம் 72
பூதப்பாண்டியன் [158] வெல்லாவிட்டால் என் மனைவியைப் பிரிவேன் ஆகுக. மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகிய ஐம்பெருங்குழுவினர் நட்பு இல்லாது ஒழியட்டும் புறம் 71
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு இறந்த கணவனை எரிக்கும் தீயில் பாய்ந்து உயிர் துறந்தாள். ஈமத் தீ தனக்குத் தாமரைப் பொய்கை போன்றது என்கிறாள் புறம் 246

புலவர் கண்ட பொருண்மொழி

தொகு
ஓரேர் உழவர் ஒருவன் பிடியிலிருந்து களர்நிலத்திலும் தப்பும் மான் போல தப்பித்துக்கொள்ளவும் முடியும் புறம் 193
ஔவையார் எங்கு நல்லவர்கள் வாழ்கிறார்களோ அந்த நிலந்தான் நல்ல நிலம் புறம் 187
கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே, யாவரும் கேளிர் புறம் 192
காவற்பெண்டு போருக்கு அழைத்தவர்களுக்கு விடை இப்போது எங்கிருந்தாலும் என் மகன் போர்களத்தில் இருப்பான் புறம் 86
தொடித்தலை விழுத்தண்டினார் மகளிருடன் நீரில் விளையாடும்போது, மூழ்கி மண்கொண்ட இளமை தண்டூன்றி நடக்கலாயிற்றே புறம் 243
நக்கீரனார் [159] உண்பது நாழி, உடுப்பது இரண்டே. செல்வத்துப் பயனே ஈதல் புறம் 189
நரிவெரூஉத்தலையார் பல்சான்றீரே (படைவீரர்களே) நல்லது செய்யமுடியாவிட்டாலும் அல்லது செய்யாதிருங்கள் புறம் 195
பக்குடுக்கை நன்கணியார் ஒரே நேரத்தில் ஓர் இல்லத்தில் மணமுழா, மற்றோர் இல்லத்தில் சாப்பறை - இன்னாது அம்ம இவ் உலகம் புறம் 194
பாரி மகளிர் பாரியை மூவேந்தர் வென்ற பின் பாரி மகளிர் பாடியது. அற்றைத் திங்களில் எந்தை இருந்தார். இற்றைத் திங்கள் எந்தையும் இலம். குன்றும் கொண்டனர் புறம் 102
பெரும்பதுமனார் ஆலமரத்தில் நேற்று உண்ட பறவை இன்றும் வருவது போல இரவலர் மீண்டும் மீண்டும் வருவர் புறம் 199
மோசி கீரனார் மக்களுக்கு நெல்லோ, நீரோ உயிர் அன்று. மன்னனே உயிர் என்பதை மன்னன் உணரவேண்டும் புறம் 189
மார்கண்டேயனார் வெற்றி வேந்தர் பலர் செல்லவும், விலைநலப் பெண்டிர் பாராட்டும்படி இன்னும் வாழ்கிறேன் - என்று கூறி வருந்துகிறார் - பெருங்காஞ்சி புறம் 375
வான்மீகியார் [160] வையத்தையும் தவத்தையும் சீர்தூக்கினால் தவமே பெரிது புறம் 358

மன்னர் பெயர் தாங்கிய புலவர்

தொகு
அஞ்சி அஞ்சி அத்தைமகள் நாகையார்
அஞ்சி அஞ்சில் அஞ்சியார்
வழுதி அண்டர்மகன் குறுவழுதியார்
மாறன் மாலைமாறன்
மாவளத்தான் மாவளத்தன்
பெருஞ்சேரலாதன் முடங்கிக் கிடந்த பெருஞ்சேரலாதன்
மாறன் முடத்திருமாறன்

கருவிநூல்

தொகு
  • வையாபுரிப்பிள்ளை. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்). பாரி நிலையம்,.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) இரண்டாம் பதிப்பு 1967, பக்கம் 1369 முதல் 1540
  • புறநானூறு மூலமும் உரையும், உ. வே. சாமிநாதையர் ஐந்தாம் பதிப்பு, 1956, பக்கம் 1 முதல் 104

அடிக்குறிப்பு

தொகு
  1. சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்
  2. புறம் 34
  3. புறம் 36
  4. சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்
  5. புறம் 69
  6. சோழநாட்டில் முடிகொண்டான் ஆற்றங்கரையில் உள்ள ஓர் ஊர்
  7. சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்
  8. புறம் 42
  9. புறம் 76
  10. புறம் 77
  11. புறம் 78
  12. புறம் 79
  13. பாண்டியன் கருங்கை ஒள்வாள்
  14. புறம் 3
  15. குறமகள்
  16. பேய்மகள் இள எயினி
  17. சேரமான்
  18. புறம் 11
  19. சோழன், செருப் பாழி எறிந்தவன்
  20. சோழன், செருப் பாழி எறிந்தவன்
  21. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
  22. சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
  23. புல்லாற்றூர்
  24. அரிசில் கிழார் - வேறு பாடம்
  25. ஔவை ஒரு விறலி. இழையணி பொலிந்த ஏந்துகோட்டு அல்குல் மடவரல் உண்கண் வாள்நுதல் விரலி (புறம் 89)
  26. சேரமான்
  27. பாண்டியன் கானப்பேரெயில் தந்தவன்
  28. சோழன் இராச சூயம் வேட்டவன்
  29. அதியமான் நெடுமான்
  30. அதியமான் நெடுமான் அஞ்சி மகன்
  31. மாயோன் என்னும் திருமாலுக்குள் அடக்கமாக இருக்கும் பலருள் கபிலர் 11 பேரும் அடங்குவர் (பரிபாடல் பரிமேலழகர் உரை, டாக்டர் உ.வே.சா. பதிப்பு, 1956, பக்கம் 18
  32. பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்ததை நேரில் கண்டு பரணரும் பாடியுள்ளார். எனவே கபில-பரணர் சமகாலத்தவர் என்பது தெளிவு
  33. சேரமான்
  34. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்
  35. புறம் 109
  36. மலையமான் திருமுடி
  37. அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
    தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
    நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
    கடு நவைப் படீஇயர்மாதோ
  38. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்றவன்
  39. சேரமான் குடக்கோ
  40. சோழன் வேல்பஃறடக்கை
  41. சோழன்
  42. சேரமான்
  43. வடுகு என்னும் தெலுங்கு தமிழ்ச் சொற்களில் சிறிது நீட்சி கொண்ட மொழி ஆனதால் 'நீண்மொழி' எனக் கூறப்பட்டது. நீர் (தமிழ்) > நீரு அல்லது நீலு வடுகு
  44. பாண்டியன் பல்யாகசாலை
  45. புறம் 6
  46. சோழன் குளமுற்றத்துத் துஞ்சியவன்
  47. புதுக்கோட்டை - திருமெய்யம் - ஒலியமங்கலம்
  48. நரை மூதாளர் கைபிணி விடுத்து நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் பொலம்பூண் எவ்வி
  49. பாண்டியன்
  50. புறம் 18
  51. புறம் 19
  52. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்றவன்
  53. யானைக்கண் சேய்
  54. யானைக்கண் சேய்
  55. யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல்
  56. புறம் 20
  57. பாலக்காடு
  58. சோழன் போர்வைக்கோ
  59. புறம் 80
  60. புறம் 81
  61. புறம் 82
  62. சோணாட்டு முகையலார்ச் சிறுகருந்தும்பியார்
  63. ஐயாதிச் சிறுவெண்-தேரையார் (புறம் 363)
  64. மதுரைக் கூலவாணிகன்
  65. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சியவன்
  66. புறம் 59
  67. சோழன் நலங்கிள்ளி தம்பி
  68. புறம் 43
  69. சோழன் குராப்பள்ளித் துஞ்சியவன்
  70. யானைகளை மிகுதியாக உடைய காடு - முதுமலைக்காடு அல்லது ஆனைமலை
  71. சோழன் போர்வைக்கோ
  72. புறம் 83
  73. புறம் 84
  74. புறம் 85
  75. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரை நக்கீரர் (புறம் 395)
  76. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்
  77. பல் வேல் எவ்வி
    நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
    பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
    திதியனொடு பொருத அன்னி போல
    விளிகுவைகொல்லோ,
  78. காக்கை பாடினியார்
  79. யாத்த செய்யுள் அடங்கிய கொள்கை கொண்டவர் என இவரைப் பதிற்றுப்பத்து 6 ஆம் பதிகம் குறிப்பிடுகிறது
  80. இடைக்கழிநாட்டு நல்லூர்
  81. சோ = அரண் சோபட்டனம், சோபட்னா எனப் பெரிப்ளசு ஏடு குறிப்பிடுகிறது. மதில் = எயில் - எயில்பட்டினம்
  82. நீலமலைத் தோட்டி என்னும் தொட்டபெட்டா
  83. வாழ்துணைப் பொருள்கள்
  84. கொல்லிமலைக் குன்றுகளில் ஒன்று
  85. மாறோக்கம்
  86. சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்
  87. மலையமான் திருமுடி
  88. சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள்
  89. புல்லினத்து ஆயர் என்போர் ஆடு வளர்க்கும் ஆயர்
  90. புறத்திணை
  91. ஓய்மான் நல்லியாதன் என்றும் (புறம் 376), ஒய்மான் வில்லியாதன் என்றும் (புறம் 379) இவனது பெயர் குறிப்பிடப்படுகிறது
  92. சங்கவருணர் என்னும்
  93. சோழன், குளமுற்றத்துத் துஞ்சியவன்
  94. புறம் 35
  95. பாண்டியன் பல்யாகசாலை
  96. புறம் 64
  97. கொடிக்கம்பம்
  98. தீயில் நெய்யை ஊற்றும் வேள்வி
  99. சோற்றில் நெய் ஊற்றிப் பெருஞ்சோறு வழங்கும் வேள்வி
  100. புறம் 144 பாடலை வன்பரணர் பாடினார் என்னும் குறிப்பும் உள்ளது
  101. பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்ததை நேரில் கண்டு கபிலரும் பாடியுள்ளார். எனவே கபில-பரணர் சமகாலத்தவர் என்பது தெளிவு
  102. செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ அவன் மகள் இளங்கடுங்கோ என்று புகழூர் தமிழ்ப்பிராமி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது 'கடுங்கோ' என்பது கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர் சிலருக்கு உரிய குடிப்பபெயர் எனத் தெரியவருகிறது
  103. இக்காலத்துக் கருவூர் மாவட்டம் பேட்டைவாய்தலை
  104. கோடைமலை என்பது கோடைக்கானல். இது மேற்குப்பக்கம் உள்ளது. அதன் கிழக்குப்பக்கம் உள்ளது கொண்டல்மலை என்னும் பழனி(பொதினி)மலை
  105. இக்காலத்துப் பெரம்பலூர் வட்டம் குரும்பலூர் என்னும் குறும்பலூர்
  106. பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்திருந்த நிலையை அரிசில் கிழார், கபிலர், பரணர் ஆகியோரும் நேரில் கண்டு பாடியுள்ளனர்
  107. சேரமான்
  108. காமாண்டி என்னும் காமன் திருவிழா
  109. நீண்மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது
  110. இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்
  111. செங்கண்மாத்து வேள்
  112. வடம வண்ணக்கன்
  113. சிறுமலை வாழைப்பழம்
  114. வடம வண்ணக்கன்
  115. வேறு பாடம் - பெரிய சாத்தன்
  116. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்
  117. சேரமான்
  118. புறம் 48
  119. புறம் 49
  120. நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சி
  121. பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை
  122. நலங்கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர
  123. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்றவன்
  124. தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின் தொன்முது கடவுள் பின்னர் மேய வரைதாழ் அருவிப் பொருப்பு (மதுரைக்காஞ்சி 42)
  125. சோழன் குளமுற்றத்துத் துஞ்சியவன்
  126. கோனாட்டு எறிச்சலூர்
  127. சேரமான்
  128. சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்
  129. சோழன் குராப்பள்ளித் துஞ்சியவன்
  130. வேறு பாடம் - ஈந்தூர் கிழான் கோயமான்
  131. இக்கால ஈரோடு
  132. உறையூர் ஏணிச்சேரி
  133. சோழன் முடித்தலைக் கோ
  134. பொதியம், அகத்தியர், சிவன் அனுப்பியது - புனைகதை
  135. ஐயூர்
  136. கருவூரை அடுத்துள்ள தான்தோன்றி மலை
  137. முரஞ்சியூர்
  138. புறம் 2
  139. சோழன்
  140. புறம் 27
  141. புறம் 28
  142. புறம் 30
  143. சோழன் , குளமுற்றத்துத் துஞ்சியவன்
  144. சேலம் மாவட்டத்து மல்லியகரை
  145. பாண்டிக்குதிரைச் சாக்கையன் என்பது இவன் பெயருக்கு உள்ள வேறு பாடம்
  146. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சியவன்
  147. கானப்பேரெயில் கடந்தவன்
  148. புறம் 21
  149. வேறுபாடம் வடம நெடுந்தத்தனார், வடமநெடுந்தச்சனார்
  150. சோழன்
  151. புறம் 66
  152. பாண்டியன்
  153. சேரமான்
  154. சோழன்
  155. சோழன்
  156. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
  157. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்றவன்
  158. ஒல்லையூர் தந்தவன்
  159. மதுரைக் கணக்காயனார் மகனார்
  160. (வால்மீகியார்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலவர்_கால_மன்னர்&oldid=3294208" இலிருந்து மீள்விக்கப்பட்டது