ஞாயிறு (கதை)

ஞாயிறு பற்றிய கதை ஒன்று பண்டைக்காலத்தில் நிலவிவந்ததைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் இதனைக் குறிப்பிடுகிறார்.

பிறரை வருத்தும் பாங்குடைய அவுணர் கூட்டம் ஒளி தரும் ஞாயிற்றை எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்துக்கொண்டதாம். அதனால் உலகில் இருள் சூழ்ந்துகொண்டதாம். ஒளி இன்மையால் மக்கள் துன்புற்றார்களாம். இந்தத் துன்பத்தைப் போக்க இருள்நிற உருவம் கொண்ட திருமால் அவுணர் ஒளித்து வைத்திருந்த அந்த ஞாயிற்றை எடுத்துக்கொண்டுவந்து உலகுக்கு ஒளியாக வைத்தானாம். [1]

சான்றுக் குறிப்பு தொகு

  1. அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்து எனச்
    சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
    இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
    இடும்பை கொள் பருவரல் தீரக் கடுந்திறல்
    அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு - புறநானூறு 174
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாயிறு_(கதை)&oldid=1649257" இலிருந்து மீள்விக்கப்பட்டது