சி. பாலசுப்பிரமணியன்
சி. பாலசுப்பிரமணியன் (மே 3, 1935 - செப்டம்பர் 10, 1998)[1] தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். தமிழக ஆளுநராக இருந்த கே. கே. ஷாவிற்குத் தமிழ் கற்பித்தவர்.
சி. பாலசுப்பிரமணியன் | |
---|---|
பிறப்பு | செஞ்சி, தமிழ்நாடு | 3 மே 1935
இறப்பு | செப்டம்பர் 10, 1998 | (அகவை 63)
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
பணியகம் | சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | எழுத்தாளர்; சொற்பொழிவாளர். |
பிறப்பு
தொகுசி.பாலசுப்பிரமணியன் செஞ்சி நகரில் 1935 மே 3ஆம் நாள்[2] மளிகைப்பொருள் வணிகர் பொ. சின்னசாமி முதலியார் - பட்டம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[3] [4] இவர் செங்குந்தர் கைக்கோளர் குலத்தைச் சேர்ந்தவர்.[5]
கல்வி
தொகுபள்ளிக்கல்வி
தொகுசி.பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை விக்டோரியா தொடக்கப்பள்ளியில் 1941-1942ஆம் ஆண்டில் முதலாம் வகுப்புப் பயின்றார். பின்னர் கல்வியாண்டு 1942-43 தொடங்கி 1947-48 முடிய கண்டாச்சிபுரம் உயர்தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயின்றார். ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வியாண்டு 1948-49 தொடங்கி 1950-51வரை திருவண்ணாமலை உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். [1][2]
கல்லூரிக்கல்வி
தொகுசென்னை அரசினர் கலைக்கல்லூரியில் 1951-1953ஆம் கல்வியாண்டுகளில் இடைநிலைக்கல்வி (Intermediate) பெற்றார். தொடர்ந்து 1953-1957ஆம் கல்வியாண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழிலக்கியத்தில் கலை இளவர் (சிறப்பு) பட்டம் பெற்றார். 1958ஆம் ஆண்டில் அப்பட்டம் கலைமுதுவர் பட்டமாக உயர்த்தப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் மு.வ., அ.ச.ஞா., க.அன்பழகன். அ.மு.பரமசிவானந்தம், இரா.சீனிவாசன், வடிவேலு நாயக்கர், சுப்பிரமணிய ஆச்சாரியார், இரா. நடேச நாயக்கர், ஏ.ஆர். முத்தையன், த.கு.முருகேசன், அ.க. பார்த்தசாரதி ஆகியோரிடமும் கூட்டுவகுப்பில் மாநிலக்கல்லூரியில் தெ.பொ.மீ., மொ. அ. துரை அரங்கனார் ஆகியோரிடமும் பயின்றார்.[1]
பல்கலைக்கழகக்கல்வி
தொகுகுறுந்தொகை - திறனாய்வு (A Critical Study of Kuruntokai) என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 1963 ஆம் ஆண்டில், ஆய்வு நிறைஞர் (எம்.லிட்.) பட்டமும் சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள் - ஓர் ஆய்வு (A Study of the literature of the Cera Country) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து, 1970 ஆம் ஆண்டில் முனைவர் (பி. எச்டி) பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1]
பணி
தொகுஇவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பயிற்றுநராக 1957ஆம் ஆண்டில் தனது பணியைத் தொடங்கி, விரிவுரையாளராக உயர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நுழைந்து, பேருரையாளராக, பேராசிரியராக உயர்ந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு முதல் [6] 1989ஆம் ஆண்டு வரை தமிழ்மொழித் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
துணைவேந்தர்
தொகு1989 திசம்பர் 4ஆம் நாள் முதல் 1992 திசம்பர் 3ஆம் நாள் வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
எழுதிய நூல்கள்
தொகுவ.எண் | வெளியான ஆண்டு | நூலின் பெயர் | வகை | குறிப்புகள் |
---|---|---|---|---|
01 | 1991 | அலை தந்த ஆறுதல் | சிறுகதைகளும் நாடகங்களும் | |
02 | 1991 | அறநெறி | வானொலிச் சொற்பொழிவு | |
03 | 1986 | அறவோர் மு.வ. | சொற்பொழிவு | |
04 | 1994 | ஆண்டாள் | சொற்பொழிவு | |
05 | 1972 | இலக்கிய அணிகள் | கட்டுரைகள் | தமிழக அரசின் பரிசு பெற்றது |
06 | 1992 | இலக்கிய ஏந்தல்கள் | கட்டுரைகள் | |
07 | 1980 | இலக்கியக் காட்சிகள் | கட்டுரைகள் | |
08 | 1965 | உருவும் திருவும் | கட்டுரைகள் | |
09 | 1966 | கட்டுரை வளம் | கட்டுரைகள் | |
10 | 1985 | கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் | கட்டுரைகள் | |
11 | 1966 | காரும் தேரும் | கட்டுரைகள் | |
12 | 1994 | குறுந்தொகை திறனாய்வு | இலக்கியத்திறனாய்வு | |
13 | 1989 | சங்க இலக்கியம் - சில பார்வைகள் | இலக்கியத் திறனாய்வு | |
14 | 1983 | சங்க கால மகளிர் | கட்டுரைகள் | |
15 | 1981 | சமயந்தோறும் நின்ற தையலாள் | கட்டுரைகள் | |
16 | 1980 | சான்றோர் தமிழ் | கட்டுரைகள் | |
17 | 1985 | சேர நாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள் | ராசா சர். அண்ணமலைச் செட்டியார் பரிசு பெற்றது. | |
18 | 1959 | தமிழ் இலக்கிய வரலாறு 1 | இலக்கிய வரலாறு | |
19 | 1995 | திருப்பாவை விளக்கம் | வானொலிச் சொற்பொழிவு | |
20 | 1987 | திருவெம்பாவை விளக்கம் | வானொலிச் சொற்பொழிவு | |
21 | 1995 | தொல்காப்பியக் கட்டுரைகள் | இலக்கணத் திறனாய்வு | |
22 | 1980 | நல்லோர் நல்லுரை | கட்டுரைகள் | |
23 | 1980 | நெஞ்சின் நினைவுகள் | பழந்தமிழர் வானியல் | |
24 | 1994 | பாட்டும் தொகையும் - ஓர் அறிமுகம் | கட்டுரைகள் | |
25 | 1990 | பாரதியும் பாரதிதாசனும் | கட்டுரைகள் | |
26 | 1990 | பாவைப் பாட்டு | வானொலிச் சொற்பொழிவு | |
27 | 1986 | புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் | சொற்பொழிவு | |
28 | 1976 | பெருந்தகை மு.வ. | வாழ்க்கை வரலாறு | |
29 | 1989 | மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் | கட்டுரைகள் | |
30 | 1980 | மலர் காட்டும் வாழ்க்கை | கட்டுரைகள் | |
31 | 1972 | முருகன் காட்சி | கட்டுரைகள் | |
32 | 1994 | மு.வ.வின் சிந்தனை வளம் | சொற்பொழிவு | டாக்டர் மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு1994, சென்னைப் பல்கலைக் கழகம் |
33 | 1966 | வாழையடி வாழை | கட்டுரைகள் | |
34 | 1990 | வாழ்வியல் நெறிகள் | கட்டுரைகள் | |
35 | 1981 | Papers in Tamil Literature | ||
36 | 1976 | The status of women in Tamilnadu during the Sangam Age | Literary Criticism | Diwan Bahadur K. Krishnaswami Rao endowment lectures delivered on 1971-72 at University of Madras [7] |
37 | 1989 | A Critical Study of Kuruntokai | Literary Criticism | M.Lit. Dissertation |
38 | 1976 | A Study of the literature of the Cera Country | Literary Criticism | Ph.D. Thesis |
பதிப்பித்த நூல்
தொகுபெற்ற விருதுகள்
தொகு- புலவரேறு - குன்றக்குடி ஆதினம் வழங்கியது
- செஞ்சொற் புலவர் - தமிழ்நாட்டு நல்வழி நிலையம்
- சங்கநூற் செல்வர் - தொண்டை மண்டல ஆதினம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 டாக்டர் சி.பா.சேரன், சீர்மிகு சி.பா, முதற்பதிப்பு: 2000 மே, இனியகாவியா பதிப்பகம், சென்னை
- ↑ 2.0 2.1 சி. பாலசுப்பிரமணியன், அறநெறி, நறுமலர் பதிப்பகம் சென்னை, மு.பதி. 1991, நூலட்டை
- ↑ டாக்டர் சி.பா. சேரன். சீர்மிகு சி.பா.
- ↑ பாலசுப்பிரமணியன் சி, பெருந்தகை மு.வ.; கழக வெளியீடு, சென்னை; மு.ப. ஏப் 1976; பக் உ
- ↑ டாக்டர் சி.பா. சேரன். சீர்மிகு சி.பா.
- ↑ About the Department of Tamil Language, Madras University
- ↑ https://trove.nla.gov.au/work/11513917?q&versionId=13522656