பயனர்:Sengai Podhuvan
     
பயனர்:Sengai Podhuvan/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Sengai Podhuvan
     
பயனர்:Sengai Podhuvan/பயனர் திட்டம்
     
பயனர்:Sengai Podhuvan/போற்றி வழங்கப்பட்டுள்ள பொன்மீன்கள்
     
பயனர்:Sengai Podhuvan/படிமம்
     
Special:Emailuser/Sengai Podhuvan
   
பயனர்:Sengai Podhuvan/மணல்தொட்டி
     
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
போற்றி வழங்கப்பட்டுள்ள பொன்மீன்கள்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     


சங்கநூல் சொல்லடைவு

தொகு
'சங்கநூல் சொல்லடைவு' [1] நூலின் மூன்று தொகுதிகள் என்னிடம் இருந்தன. அவற்றின் உதவியைக் கொண்டே கட்டுரைகளை எழுதிவந்தேன. அவற்றை இப்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக உலகுக்கு அளித்துள்ளேன. எல்லாரும் பயனபடுத்திக்கொண்டு முதல்-நிலை மேற்கோள் சான்றுகளுடன கட்டுரைகளை உருவாக்கலாம். இதனால பிறர் எழுதியுள்ள சங்ககால வரலாற்றில் காணப்பட்டும் செயதிகளாகிய இரண்டாம்-நிலைச் சான்றுகளின் வன்மை மென்மைகளை எல்லாரும் மதிப்பட இயலும். பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு ஆக்கம் சேர்ப்போம். தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைய தள வெளியீடுகளைப் பயன்படுத்திக்கொண்டு தெளிவு பெறுவோம்.
 1. Index des mots de la literature tamoule ancienne, PUBLICATIONS DE L’INSTITUT FRANCAIS D’INDOLOGIE N0.37. PONDICHERY: INSTITUT FRAFRANCAIS D’INDOLOGIE. 1967.

--Sengai Podhuvan (பேச்சு) 22:56, 2 சூலை 2013 (UTC)Reply

சொல் - சொல்லாட்சி - பொருள்

தொகு

தமிழ்த்துளி என்னும் அடியேன் இணைய வலையைச் சொடுக்குங்கள்
அதில் தேடும் பகுதி மேல்-வலப்புறம் இருக்கும்
அதில் தேட விரும்பும் சொல்லை இடுங்கள்
சங்க நூல்களில் உள்ள அனைத்து ஆட்சிகளும் உள்ள கட்டுரை கிடைக்கும்
கட்டுரையில் சொல்லைத் தேட Conl+F செய்து வரும் கட்டத்தில் மீண்டும் அந்தச் சொல்லில் சில எழுத்துக்களைப் பதிவு செய்யுங்கள்
சொல்லும், தொடரும், பொருள் விளக்கமும் பெறலாம்

பயனர் பாராட்டு

தொகு

ஒரே பயனர் குறித்த தொடர் பாராட்டை, பல்வேறு பேச்சுப் பக்கங்களில் தெரிவிப்பதற்குப் பதில் பயனரின் பேச்சுப் பக்கத்திலேயே குறிப்பிடலாமே? விக்கிப்பீடியா:விக்கியன்பு மூலம் ஒரு பதக்கம் அளிப்பது கூட சிறப்பாக இருக்கும். அதே போல் ஒரே மாதிரியான சிக்கலையும் ஒரு பகுப்பின் பேச்சுப் பக்கத்திலோ பயனரின் பேச்சுப் பக்கத்திலோ இட்டு கவனம் ஈர்க்க முனையலாம். நன்றி.--இரவி (பேச்சு) 07:15, 6 மார்ச் 2013 (UTC)

 • அன்புப் பெருந்தகை இரவி! யாரைப் பாராட்டுவது, யாரை விடுவது? எல்லாரும் உதவுகிறார்கள். எல்லாரும் நல்லவர்கள். எல்லாரும் பாராட்டுக்கு உரியவர்கள். எறும்பும் தன் கையால் எண்சாண். எளியேன் ஒரு சிற்றெறும்பு. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 10:27, 6 மார்ச் 2013 (UTC)
பிரபாகரனின் நேற்றைய தொகுப்புகள் தொடர்பாக உங்கள் தொடர் பாராட்டுகளைக் குறித்துச் சொன்னேன். நன்றி :) --இரவி (பேச்சு) 12:33, 6 மார்ச் 2013 (UTC)

நிர்வாகப் பெருமக்களுக்கு வேண்டுகோள்

தொகு

நிர்வாகிகள் குண்டு போட அன்று.
கூட்டாகத் தமிழை வளர்க்க.
புதியவர்களுக்கு ஊக்கம் தந்து உதவி செய்ய.
subject தொடர்பு இல்லாத இடங்களில் விளக்கம் கேளுங்கள்.
தெரிந்து எழுதும் எளியவர்களைப் புண்படுத்தாதீர்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:38, 13 மார்ச் 2013 (UTC)

தமிழுக்கு நாம்

தொகு
 • தன்முனைப்பு வேண்டாம். விட்டுக் கொடுப்போம். ஒன்றுபடுவோம். ஒத்துழைப்போம்.
 • எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.
 • வல்லவனுக்கு வல்லவன் உண்டு.
 • என் கை என் கண்ணைக் குத்தாது. தன்னை அறியாமல் தடுமாறிக் குத்திவிடும். அப்படித்தான் சிலர்.
 • அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:27, 23 மே 2013 (UTC)Reply

காணிக்கை

தொகு
 • எளியேனுக்கு 2013 விக்கியேனியா கருத்தரங்கம் செல்ல முழு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
 • இது ஒரு நல்வாய்ப்பு.
 • "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்."
 • வரவேற்றவர் நற்கீரன்
 • சங்க காலப் புலவர்கள் கட்டுரையில் தலைப்புப் பிரிப்பு செய்து வழிகாட்டியவர் கனகசீர்
 • விக்கியில் அடிக்குறிப்பு இடக் கற்றுத்தந்த இறைவன் பாலா.
 • பகுப்புக் குறிப்பு சேர்க்கக் கற்றுக்கொடுத்த இறைவன் தென்காசியார்.
 • இவர்களுக்கு இந்த நல்வாய்ப்பைக் காணிக்கை ஆக்கி நிறைவடைகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:59, 27 மே 2013 (UTC)Reply
சங்கத்துக்கும் இணையத்தும் பாலம் அமைத்தவர் நீங்கள். வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 19:27, 27 மே 2013 (UTC)Reply
உங்கள் பயணம் சிறப்படைய வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:11, 27 மே 2013 (UTC)Reply
பயணம் வெற்றிகரமாய் அமைய வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:03, 30 மே 2013 (UTC)Reply

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Sengai Podhuvan!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 07:17, 2 சூன் 2013 (UTC)Reply

சங்ககாலச் சோழர் / முற்காலச் சோழர்கள்

தொகு

வணக்கம், சங்ககாலச் சோழர், முற்காலச் சோழர்கள் ஆகிய கட்டுரைகளை ஒன்றான இணைப்பது பொருத்தமா? அவ்வாறாயின் இணைத்தலுக்கான வார்ப்புருவை இட்டுவிடுங்கள். நன்றி. --Anton (பேச்சு) 03:54, 14 சூலை 2013 (UTC)Reply

 • இரண்டு கட்டுரைகளையும் சீர்தூக்கிப் பாருங்கள். சங்ககால வரலாற்றை முழுமையாக ஆராய்ந்த முன்னோர்களின் கருத்து அடங்கிய சங்ககாலச் சோழர்கள் கட்டுரை வேண்டுமா வேண்டாமா? வேண்டும் என்றால் எழுதவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 06:25, 14 சூலை 2013 (UTC)Reply

1, 2, 3, 4, 5, 6 ஆம் நூற்றாண்டுகள் (பகுப்பு:கால வரிசைப்படி தமிழ் நூல்கள்)

தொகு

ஆகப் பழைய காலத் தமிழ் நூல்கள் சங்க இலக்கிய நூல்கள் என்ற வகைக்குள் அடங்குகின்றன. சங்க காலம் கிபி 3 நூற்றாண்டு வரை எனில், துல்லியமாக சில குறிப்பிட்ட நூல்களின் காலம் அறியக் கூடியதாக உள்ளதா. எ.கா கிபி 1, 2, 3 காலப் பகுதியில் தோன்றிய நூல்கள். கிபி 4, 5 நூற்றாண்டுகளில் (களப்பிரர் ஆட்சியில்) சில நூல்கள், குறிப்பாக சமண நூல்கள் எழுந்ததாக அறிகிறோம். அவை பற்றி குறிப்புக்கள் எதோனும் கிடைக்கிறதா. கிபி 6 நூற்றாண்டு பக்தி இலக்கிய தொடக்க காலம், இந்த நூற்றாண்டைச் சார்ந்த நூல்கள் எதுவும் உள்ளனவா. அறிய ஆவல். நன்றி. --Natkeeran (பேச்சு) 03:58, 7 ஆகத்து 2013 (UTC)Reply

விரைவில் விளக்குகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:34, 13 ஆகத்து 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:57, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

உச்சைனி

தொகு

ஐயா, தாங்கள் எழுதிவரும் உச்சைனி என்ற ஊர் ஏற்கனவே உஜ்ஜைன் என்று பரவலாக அறியப்பட்ட ஊர் என நினைக்கிறேன். அங்கு இதன் வரலாற்றுப் பெயர் என்று உட்தலைப்பில் எழுதுதல் சிறப்பாக இருக்குமா? சிறப்பெனில் ஒரே பக்கத்தில் எழுதுங்கள். --நீச்சல்காரன் (பேச்சு) 18:37, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி. பழைய கட்டுரையுடன் இணைத்துவிடுகிறேன். உற்றுழி உதவி என்பது இதுதான். தங்கள் அரவணைப்பு தொடரட்டும். --Sengai Podhuvan (பேச்சு) 18:53, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

சங்ககால மலர்கள்

தொகு

வணக்கம், சங்ககால மலர்கள் பற்றிய கட்டுரைகளுக்கு நன்றி. சில கட்டுரைகளில் பெயர் மலர் பற்றியிராது தாவரம் பற்றி இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். எடுத்துக்காட்டடாக தாழை மலர் என்றில்லாது தாழை. ஆனால் வழிமாற்று இருக்கட்டும். 99 கட்டுரைகளையும் மேம்படுத்துகிறேன். ஏதும் ஐயம் இருப்பின் கட்டுரைப் பேச்சுப்பக்கத்திலோ அல்லது இங்கேயோ குறிப்பிடுவேன். {{சங்ககால மலர்கள்}} என்ற வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். இதனை சங்ககால மலர்கள் உட்பட்ட தேவையான கட்டுரைகளில் பயன்படுத்தலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:58, 20 சனவரி 2014 (UTC)Reply

 • மிகச் சிறந்த பணி. செய்யுங்கள். இப்படித்தான் தமிழ்-விக்கியின் தரம் மேம்பட வேண்டும். --117.193.211.154 07:08, 20 சனவரி 2014 (UTC)Reply

வர்மம்‎

தொகு

வர்மம்‎ கட்டுரையில் உள்ள தற்காப்புக் கலை பற்றிய கருத்துக்களை வர்மக்கலை கட்டுரைக்கு நகர்த்திவிட்டு, வர்மம் என்றால் என்ன, வரலாறு, வர்ம மருத்துவம், தற்காப்பு பற்றிய விடயங்களை வர்மம்‎ கட்டுரையில் எழுதலாமா எனப்பாருங்கள். இதுவும் உதவலாம்: [வர்மம்] --Anton·٠•●♥Talk♥●•٠· 03:24, 29 சனவரி 2014 (UTC)Reply

en:Pressure point இக்கட்டுரை வர்மம் பற்றியது. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:27, 29 சனவரி 2014 (UTC)Reply

நல்ல தொண்டு.
சாத்தன் கட்டுரையை மேற்கோள் காட்டி அவரது கருத்துக்களைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்தலாம்.
செய்யுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 04:49, 29 சனவரி 2014 (UTC)Reply

மயிலையார் - பகவான் புத்தர் வாழ்க்கை வரலாறு

தொகு

பகவான் புத்தர் வாழ்க்கை வரலாறு என்னும் நூலை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதினாரா? அந்த நூல் இங்கு உள்ளது. [1] எனக்குத் தெரிந்து அவர் இப்படி நூல் எழுதியதாகத் தெரியவில்லை. அந்த தளம் கொடுத்தத் தகவலை உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறேன். நீங்கள் மயிலையாரிடம் உடன் இருந்து சில உதவிகளைச் செய்ததாக தென்காசிக்காரன் சொன்னான். ஐயத்தை தெளிவுப்படுத்தவும்.--நக்கீரன் (பேச்சு) 11:32, 10 பெப்ரவரி 2014 (UTC)

ஆகிய நூல்கள் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதியவை.

இவரது இல்லத்தில் இவருடன் பல நாள் பல மணி நேரம் தங்கி இவர் அரசுக்கு அளித்த தமிழக வரலாற்றுக் கட்டுரைகளை நேரில் பேசிச் செப்பம் செய்திருக்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:42, 10 பெப்ரவரி 2014 (UTC)

ஆகா. நக்கீரனார் மிகத் தீவிரமாக களத்தில் சான்று சரிபார்க்க இறங்கி விட்டார் போலும். மகிழ்ச்சி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:09, 12 பெப்ரவரி 2014 (UTC)

அர் விகுதியுடன் ஒற்று

தொகு

[2] பாண்டியர்த் துறைமுகங்கள் த் ஒற்று தவறானது என்பதற்கு ஏதோ இலக்கண விதி என்னிடம் முன்பு கூறியிருந்தீர்கள். அதை தேடிப்பார்த்து கிடைக்காததால் மீண்டும் அது என்ன விதி எனக் கூறுமாறு வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:09, 12 பெப்ரவரி 2014 (UTC)

திடுத்த வரலாற்றில் இருந்து கண்டுவிட்டேன் நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:10, 12 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரை-தொகுத்தல்

தொகு

பார்க்க: பயனர் பேச்சு:Sengai Podhuvan/கட்டுரை-தொகுத்தல். நன்றி.--Kanags \உரையாடுக 06:50, 25 பெப்ரவரி 2014 (UTC)

ஏறு என்பதற்கு கட்டுரைகளில் மாறுபட்ட பொருட்கள்

தொகு

ஏறு என்பதற்கு கட்டுரைகளில் மாறுபட்ட பொருட்கள்

குட்டுவர் கட்டுரையில் குட்டுவர் ஏறு எனப் போற்றப்படும் பொறையனை குட்டுவனை என்றான் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனில் பஞ்சவர் ஏறு என்று குறிப்பிடப்படும் பெருவழுதி பஞ்சவரை வென்றவனா? ஏறு என்றால் வெல்தல் என்பது பொருளா? அல்லது அந்த குலத்தைச் சேர்ந்தவன் என்பது பொருளா?--நக்கீரன் (பேச்சு) 21:08, 27 பெப்ரவரி 2014 (UTC)

விளக்கம்

தொகு
 • படை குடி கூழ் அமைச்சு, நட்பு, அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்பது திருக்குறள் இங்கு ஏறு என்றால் சிங்கம்
 • பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம்(மாடு), கடல்வாழ் சுறா ஆகியவற்றில் ஆண்பால் விலங்கை ஏறு என்பர். - தொல்காப்பியம் மரபியல் நூற்பா 40, 41, 42
 • ஏறுகோள் - காளைப்போர். ஆண்பெற்றத்தோடு போரிடுதல்

இவற்றை எண்ணுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 21:32, 1 ஏப்ரல் 2014 (UTC)

நீங்கள் மேற்கூறியது நான் அறிந்ததே. ஆனால் அதை நான் கேட்கவில்லையே.

 1. பஞ்சவர் ஏறு - பஞ்சவரில் (பாண்டியரின் பெயர்) ஏறு போன்றவன்.
 2. குட்டுவர் ஏறு - குட்டுவரில் (சேரரின் பெயர்) ஏறு போன்றவன்.

இப்படித்தானே பொருள் வரும். பஞ்சவர் ஏறு என்று குறிப்பிடப்படும் பெருவழுதி பாண்டியரில் ஏறு போன்றவன் என்றால் குட்டுவர் ஏறு என்று குறிக்கப்படும் சேரல் மட்டும் எப்படி குட்டுவனை அழித்தவன் ஆவான்? இதுதான் என் குழப்பத்துக்கு காரணம்.--நக்கீரன் (பேச்சு) 11:23, 2 ஏப்ரல் 2014 (UTC)

குட்டுவருள் ஏறு போன்றவன் - என்று திருத்திவிடுங்கள். நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 11:46, 2 ஏப்ரல் 2014 (UTC)

நடுகள்

தொகு

வணக்கம். பார்க்கவும்: பேச்சு:நடுகல் (வெல்லாளன் கோட்டை).

 • நடுகல் (வெல்லாளன் கோட்டை) இக்கட்டுரையில் ’கடுவன்’ என்றால் ஆண்குரங்கு என்று விளக்கம் தந்திருக்கிறீகள். எங்கள் ஊர்ப் பேச்சு வழக்கில் (கயத்தாறு, கழுகுமலை) ஆண்பூனையைக் கடுவன் என்றழைப்போம் என்பதையும், புலி பூனையினத்தைச் சேர்ந்தது என்பதையும் உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:50, 1 ஏப்ரல் 2014 (UTC)

நடுகல்
தங்கள் கருத்து கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆண்குரங்கைக் குறிக்கும் என்பதற்கான சான்றும் குறிக்கப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 21:15, 1 ஏப்ரல் 2014 (UTC)

புறம்

தொகு

வணக்கம், ஆ.வி.யில் Puram என்ற கட்டுரையினை எழுதியுள்ளேன். இதில் மாற்றங்கள் தேவையென்றால் செய்துவிடுங்கள். புறப்பொருள் கட்டுரையில் இருந்த புறப்பொருள் வெண்பாமாலை 12 எனப் பகுத்துக் காட்டுகிறது என்பதற்கேற்ப அங்கும் ஓர் வரி இணைத்துள்ளேன். ஆயினும் எனக்கு புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் 12 புறத்திணைகளும் தெரியாது. புறம் பற்றி த.வி.யிலும் கட்டுரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி. --AntonTalk 07:53, 15 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி

தொகு
  அரிய பணிகள் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியா புலவர் கால மன்னர் கட்டுரையின் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 20:17, 26 ஏப்ரல் 2014 (UTC)
 • பயனுணர்ந்த பண்புடையாளர் வழங்கிய பதக்கம். பாடு பெற்றேன். பணிவுடன் ஏற்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 22:07, 27 ஏப்ரல் 2014 (UTC)

கட்டுரையை விரிவாக்க உதவி தேவை

தொகு

வணக்கங்க, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் மடைப்பள்ளி, மூவாதியார், பெயர் உரிச்சொல் ஆகிய கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 12:31, 16 மே 2014 (UTC)Reply

மிகச் சிறப்பாக விரிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றிங்க !--இரவி (பேச்சு) 07:40, 21 மே 2014 (UTC)Reply

தொல்காப்பிய பண்டை உரைகளின் ஓலைச்சுவடிகள் படி(தி)க்கப்பட்ட காலங்கள் பற்றிய பட்டியல் தேவை

தொகு
 1. இளம்பூரணர்-எழுத்து, சொல், பொருளதிகாரத்திற்கு
 2. பேராசிரியர்- பொருளதிகாரத்திற்கு
 3. சேனாவரையர்- சொல்லதிகாரத்திற்கு
 4. நச்சினார்க்கினியர்
 5. தெய்வச்சிலையார்
 6. கல்லாடனார்

மேலுள்ளவற்றுக்கு காலம் தந்தால் நல்லது. கலாடனார் உரை கண்டறியப்படவில்லை என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:35, 24 அக்டோபர் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Sengai Podhuvan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--aathavan|talk 07:08, 30 திசம்பர் 2014 (UTC)Reply

இன்னும் ஒரு சில தொகுப்புகள் மட்டும் செய்தாலேயே இத்திட்டப் பணியின் இலக்குக் கோட்டான மாதம் 100 தொகுப்புகளை எட்டி விடுவீர்கள். இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளதால், இதனைக் கருத்தில் கொண்டு இலக்குக் கோட்டை எட்ட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 02:03, 30 சனவரி 2015 (UTC)Reply

மங்கலம்

தொகு

மங்கலம் என்பது ஒரு பொருளா? அது எப்படி? யாரால் கூறப்பட்டது?--Kanags \உரையாடுக 11:34, 21 சனவரி 2015 (UTC)Reply

மங்கலம் தரும் பொருள் எனக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 11:56, 21 சனவரி 2015 (UTC)Reply

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:33, 7 மே 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 7 சூலை 2015 (UTC)Reply

 • விக்கியில் பதிவேற்றத்தக்க தமிழ் இலக்கியச் செய்திகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
எடுத்துக்கொண்டுள்ள பணி இன்றியமையாதது
ஓரளவேணும் முடிந்த பின்னர் தொடர்வேன்.
அது விக்கி எனக்கு அளித்துள்ள பேறு.
இப்போது மாரத்தான் போட்டியில் இளைஞர்கள் ஓடட்டும் --Sengai Podhuvan (பேச்சு) 05:26, 8 சூலை 2015 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

தொகு


செய்திகளை முன்னிலை அறிமுகத்துக்குக் கொண்டுவந்த ஆட்சிப் பெருமகனார்க்கு எளியேன் வணக்கம் --Sengai Podhuvan (பேச்சு) 22:10, 19 சூலை 2015 (UTC)Reply

தற்காவல்

தொகு
 

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 16:31, 15 அக்டோபர் 2015 (UTC)Reply

 • எளியேன் கட்டுரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினைத் தக்கவைத்துக்கொள்வது என் கடமை. வழங்கியவரை வணங்கிப் போற்றுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 01:52, 16 அக்டோபர் 2015 (UTC)Reply

உதவி வேண்டல்: சொற்றொடர்

தொகு

@Sengai Podhuvan: தங்கள் பணிக்கு இடையூறு செய்வதற்கு மன்னிக்கவும் ! தங்களின் உதவியை வேண்டுகின்றேன்.

 1. பல விக்கி வார்ப்புருக்களில் பயன்படும் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம் என்ற தொடருக்கு மேலான மாற்று என்னவென்று அறிய உதவுங்கள் (வளர்ச்சியில் / வளர்ச்சிக்குப் பங்களிக்கலாம் / பங்கேற்கலாம்...) !!?
 2. இலக்கியவாதி, அரசியல்வாதி போன்ற சொற்களில் உள்ள வாதி என்பதற்குச் சரியான/இணையான தமிழ்ச்சொல் என்ன?
  நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 22:07, 18 திசம்பர் 2015 (UTC)Reply

அன்புள்ள வருண்

 1. நீங்களும் இதில் பங்களித்துத் தமிழை வளர்க்கலாம் என்று இருக்கலாம்.
 2. வாதி என்னும் பின்னொட்டு தங்களை மயக்கியிருக்கிறது என எண்ணுகிறேன்.
 • வாய் < வாய்மை
 • வா[யில் வருவ]து > வாது மரூஉ மொழி
 • வாது செய்பவன் வாதி
 • ஒப்புநோக்குக அரும[ரு]ந்த[ன்ன] பிள்ளை > அருமந்த பிள்ளை | பூ[தன் த]ந்தை > பூந்தை
 • எனவே வாதி என்னும் இடைச்சொல்லைத் தமிழ் என்போம்
 • பூதி < பூதியார் | ஆதி | நாதி - நாதியற்றவன் | வேறு < வேதி < வேதியல் | பா < பாதி - முதலான சொற்களை எண்ணுவோம் --Sengai Podhuvan (பேச்சு) 23:01, 18 திசம்பர் 2015 (UTC)Reply

வாதி

தொகு

வாதம் செய்பவர் வாதி \ வழக்கு மன்றத்தில் முதலில் வாதிடுபவர்
வாதம் = வாய்ப்போர்
வாதம் > வாது = சொற்போர்
வாது > வாய்+து = வாய்ப்பற்றுக்கோடு \ து = ‘துப்பாய’ பற்றுக்கோடாகிய – திருக்குறள்.
வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் \ வாதாடும் திறமுள்ளவன் பிழைத்துக்கொள்வான்
வாய் < வாய்து < வாது < வாதம் < வாதி \ அரசியல்வாதி
தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற சொல்
வாதி என்னும் பெயர்ச்சொல் பின்னொட்டாக மாறும்போது இடைச்சொல் --Sengai Podhuvan (பேச்சு) 19:25, 15 அக்டோபர் 2019 (UTC)Reply

பூதி, நாதி

தொகு

பூதி > பூழ்தி > புழுதி \ ஒப்புநோக்குக - அகழி - ஆழி \ அகலமரம் - ஆலமரம்
பூதி - கந்தர் அனுபூதி - பூதி = புழுதி, திருநீறு

நாதி - நான்+து \ [து] - மேலே விளக்கம் \ நாதி - எனக்குத் துணை - நாதியற்றுக் கிடக்கிறேன் -- இப்படித் தமிழ் வளரும் --Sengai Podhuvan (பேச்சு) 19:44, 15 அக்டோபர் 2019 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்

தொகு


 • கடப்பாடு

கண் மருத்துவம்

தொகு
விரைந்து குணமடையப் பிரார்த்திக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:36, 27 ஏப்ரல் 2016 (UTC)
கனகசீர் அவர்களுக்குக் கடப்பாடு. --Sengai Podhuvan (பேச்சு) 19:04, 27 ஏப்ரல் 2016 (UTC)

Participate in the Ibero-American Culture Challenge!

தொகு

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:53, 10 மே 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:41, 28 சூலை 2016 (UTC)Reply

ஐயா, தங்களின் பெயரை பதிவு செய்தமைக்கு நன்றி! அளவிட இயலாத ஊக்கம் பெறுகிறோம்!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:31, 29 சூலை 2016 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:24, 22 ஆகத்து 2016 (UTC)Reply

சிறிய தகவல்

தொகு
 • காயா என்ற கட்டுரைக்கு MEMECYLON UMBELLATUM என்ற ஆங்கில வார்த்தையை இணைத்துள்ளீர்கள். அப்படியெனில் MEMECYLON TINCTORIUM என்ற ஆங்கில வார்த்தைக்கு எந்த தமிழ் வார்த்தையை சேர்க்கலாம். நீங்கள் இணைத்திடுப்பதை இந்த [3] சரிபார்க்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 09:52, 7 திசம்பர் 2016 (UTC)Reply
 • memecylon tinctorium மிகப் பொருத்தமான சொல். சேர்க்கலாம். பரிந்துரைக்குப் பாராட்டுக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 06:11, 8 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை

தொகு
 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:37, 8 திசம்பர் 2016 (UTC)Reply

ஐயம்-திரினிப் பழம் என்பது..

தொகு

ஐயா! வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். திரினிப்பழம் என்ற கட்டுரையை நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தேன். அது பற்றிய ஒரு ஐயம். சேலம், திருச்சி, ஈரோடு, கோவை போன்ற பெரும்பான்மையான தமிழக மாவட்டங்களில், இதனை மொலாம் பழம் என்று அழைப்பார்களா? ஏனெனில், நீங்கள் ஏற்றியுள்ள படம் அதுபோலவே உள்ளது. --உழவன் (உரை) 01:35, 22 பெப்ரவரி 2017 (UTC)

நன்றி ஐயா!. இதன் தாவரவியல் பெயரைத் தேடிக் கொண்டிருந்தேன். அதற்கு உங்களின் இந்த உதவி, பேருதவியாக அமையும். மீண்டும் மற்றொரு இழையில் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 02:46, 22 பெப்ரவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:39, 6 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

தொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

Translating Ibero-America is back! Come and join us :)

தொகு

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 00:34, 12 சூன் 2017 (UTC)Reply

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள செங்கைப் பொதுவன், உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:39, 10 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:46, 13 மார்ச் 2018 (UTC)

விக்கித்தாய்

தொகு

விக்கிப்பீடியா எனக்கு இணையப்பால் ஊட்டி வளர்த்த தாய்.
தாயைப் பேணுவது மகன் கடமை.
கடமையைச் செய்யும்போது வேறு கடமைகள் உந்தின.
அவற்றில் கவனம் செலுத்திய நான் அரிதாகவே விக்கியில் நுழைந்துவந்தேன்.
தங்களின் அரவணைப்பு எனக்கு ஆறுதல் தருகிறது.
கவனத்தைத் திருப்புகிறேன்.
போட்டி இளைஞர்களை ஊக்குவிக்கட்டும்.
நான் என் கடமைகளைச் செய்வேன். --Sengai Podhuvan (பேச்சு) 11:26, 10 மார்ச் 2018 (UTC)

மாவு சியாங்

தொகு

மா சே துங் பற்றி கட்டுரை உள்ளது. மேலதிக தகவல்களை அக்கட்டுரையில் தாருங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 23:57, 17 மார்ச் 2018 (UTC)

உதவி

தொகு

வணக்கம். அளவு + விகிதம் எவ்வாறு புணரும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:09, 2 மே 2018 (UTC)Reply

அளவுவிகிதம் என இயல்பாகப் புணரும். --Sengai Podhuvan (பேச்சு) 21:35, 2 மே 2018 (UTC)Reply

மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:29, 3 மே 2018 (UTC)Reply

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

போட்டி இளைஞர்களை ஊக்குவதாக அமையவேண்டும் என்பது அடியேன் விழைவு --Sengai Podhuvan (பேச்சு) 05:01, 3 அக்டோபர் 2018 (UTC)Reply

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

தொகு

வணக்கம்.

 
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:14, 3 நவம்பர் 2018 (UTC)Reply

Community Insights Survey

தொகு

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

தொகு

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

தொகு

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

உதவி

தொகு

இக்கட்டுரையில், தகவற்பெட்டியில் (Infobox) உள்ள Body என்னும் வார்த்தைக்கு, சரியான தமிழ்ப் பெயரை சொல்லுங்கள். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:02, 15 அக்டோபர் 2019 (UTC)Reply

We sent you an e-mail

தொகு

Hello Sengai Podhuvan,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

தமிழ் காக்க

தொகு
அறிவை வளர்க்க ஆங்கிலம் இருக்கிறது
தமிழை வளர்க்கத் தடங்கல்கள்
நம் நிலையைப் பாருங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 18:47, 24 நவம்பர் 2020 (UTC)Reply
விக்கிப்பீடியா ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று - தமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையோ, பிறமொழி கலப்பு நடையோ கட்டுரைகளில் ஆள்வதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும். --AntanO (பேச்சு) 19:04, 24 நவம்பர் 2020 (UTC)Reply
தமிழர்களுக்குக் காட்டவேண்டியவை விக்கிப்பீடியா விதிகள், வழிகாட்டல் ஆகியவற்றுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவற்றை மீறி எவரும் செயற்பட முடியாது. --AntanO (பேச்சு) 02:44, 25 நவம்பர் 2020 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

கட்டுரைச்சிக்கல்கள்

தொகு

கட்டுரை தொகுக்கையில் பின்வருவனவற்றைத்தவிர்க்க வேண்டும்.

 • 1, 1 இவ்வித மேற்கோள்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
 • கட்டுரையின் மேற்கோள்கள் / சான்றுகள் முதல்நிலை மூலங்களில் தங்கியிராது. இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை மூலங்களை இணைக்க வேண்டும். தாலி (மகளிர் அணி) - இங்கு திருத்தத்தைக் காணலாம்.
 • இலக்கியம் மட்டும் அல்லாத பொதுவான கட்டுரைகள் முதலில் பொதுக்கருத்தை உள்வாங்கிய பின்பே இலக்கியக் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். தாலி (மகளிர் அணி) - இங்கு திருத்தத்தைக் காணலாம்.

--AntanO (பேச்சு) 03:57, 28 சூலை 2022 (UTC)Reply

நன்றி. வாழ்த்துக்கள். Sengai Podhuvan (பேச்சு) 18:45, 28 சூலை 2022 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

தொகு

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Help us organize!

தொகு

Dear Wikimedian,

You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

தொகு

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022

தொகு

Dear Wikimedian,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Organizing team

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

Reminder to vote now to select members of the first U4C

தொகு
You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Dear Wikimedian,

You are receiving this message because you previously participated in the UCoC process.

This is a reminder that the voting period for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) ends on May 9, 2024. Read the information on the voting page on Meta-wiki to learn more about voting and voter eligibility.

The Universal Code of Conduct Coordinating Committee (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. Community members were invited to submit their applications for the U4C. For more information and the responsibilities of the U4C, please review the U4C Charter.

Please share this message with members of your community so they can participate as well.

On behalf of the UCoC project team,

RamzyM (WMF) 22:54, 2 மே 2024 (UTC)Reply

நல்ல கட்டுரை- அழைப்பு

தொகு
 

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,66,013 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sengai_Podhuvan&oldid=3957640" இலிருந்து மீள்விக்கப்பட்டது