வாழ்த்துகள் ஐயா

தொகு

தங்களுடைய பேட்டி தி ஹிந்து நாளிதளில் வெளிவந்திருப்பது குறித்து பார்வதி அவர்களின் பக்கத்தில் கண்டேன். மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களது பணிகளும், பெருமைகளும் பல்மடங்கு பெருக ஈசன் அருள்செய்யட்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:32, 27 மே 2013 (UTC)Reply

தங்களைக் குறித்த இந்து நாளிதழ் செய்தியை கண்டநாளே மிக்க உவகையுற்றேன். விக்கி விடுப்பில் இருந்தமையால் இந்த தாமதம். தங்கள் தமிழ்ப்பணி காலத்தை வெல்லும் நற்பணியாம். இதனைத் தொடர இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் வழங்கிட இறைஞ்சுகிறேன். தங்கள் பயணம் நலமாக அமைய வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:38, 30 மே 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:05, 24 சூன் 2013 (UTC)Reply

நீங்கள் வர விரும்புவது குறித்து மகிழ்கிறேன். இருவருக்குமான தங்குமிடம் ஏற்பாடு ஒரு பிரச்சினையாக இருக்காது.--இரவி (பேச்சு) 12:53, 24 சூன் 2013 (UTC)Reply
நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 13:00, 24 சூன் 2013 (UTC)Reply

கட்டுரைக் வேண்டுதல்

தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில் ஒன்று:

  • தமிழ் விக்கிப்பீடியாவில்/விக்கியூடகங்களில் சங்க இலக்கியங்கள்
  • தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழர் விளையாட்டுக்கள் பற்றிய கட்டுரைகள்
  • தமிழ் விக்கிச் சமூகம்
  • தமிழ் விக்கிப்பீடியாவில் ஆய்வாளர்களின் பங்கு

உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)Reply

அன்புப் பெருந்தகைக்கு வணக்கம்.

அன்புக்குக் கடப்பாடு. --Sengai Podhuvan (பேச்சு) 22:02, 18 ஆகத்து 2013 (UTC)Reply

கற்பனை உயிர்கள் கட்டுரை வேண்டுதல்

தொகு

வணக்கம் ஐயா, தாங்கள் சரபம் என்ற கற்பனை உயிரினத்தினைப் பற்றி மிக அருமையான கட்டுரையை விக்கியில் உருவாக்கியிருக்கின்றீர்கள். அது போல மகரம் - ஆண் ஆட்டின் உடலும் மீன் போன்ற பின்புற அமைப்பும் கொண்ட கற்பனை உயிரினம் பற்றியும், புருசா மிருகம் - சிங்க உடலும், மனித தலையும் உடைய கற்பனை உயிரினம் பற்றியும் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்புகள் இருப்பின் கட்டுரைகளில் இணைத்து உதவ வேண்டுகிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:41, 3 செப்டம்பர் 2013 (UTC)

  • நன்றி. ஆய்வாளர் கருத்து கிட்டும்போது மேற்கோள் காட்டி எழுதுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 06:23, 3 செப்டம்பர் 2013 (UTC)

உதவி - தொண்டி

தொகு

ஐயா. தொண்டி என்ற பெயர் கொண்ட துறைமுகங்கள் மூவெந்தர் நாட்டிலும் உண்டு. அம்மூன்று தகவல்கலையும் அக்கட்டுரையில் சேர்த்துதவுமாறு வேண்டுகிறேன். மூவேந்தர் நாட்டிலும் ஒரே பெயர் கொண்ட ஊர்கள் எனில்ம் இது காரணப்பெயரா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:17, 18 சனவரி 2013 (UTC)Reply

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். அவ்வப்போது நற்பணிக்கு ஆற்றுப்படுத்திவருகிறீர்கள். இப்போது தொண்டி பாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:31, 20 சனவரி 2013 (UTC)Reply

கட்டுரைகளை இணைத்தல்

தொகு

ஐயா. இரு கட்டுரைகளை இணைக்கையில் முதலில் எழுதப்பட்ட கட்டுரையுடன் இரண்டாவது எழுதப்பட்ட கட்டுரையை இணைப்பது தான் வழக்கம். அதனால் வெட்சிக்கரந்தை மஞ்சரி கட்டுரையை வெட்சிக்கரந்தைமஞ்சரி கட்டுரையுடன் இணைப்பதெ சரி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:40, 16 சனவரி 2013 (UTC)Reply

ஈழத்து உணவு

தொகு

ஐயா உங்களின் குறிப்பில் "கரிகாலன் ஆட்சிக் காலத்தில், புகார் நகரச் சந்துபொந்துகளிலெல்லாம் குவிக்கப்பட்டிருந்த செல்வ வளங்களில் ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவை. இவற்றில் ஈழத்து உணவு என்பது தேயிலையாக இருக்குமோ என எண்ணவேண்டியுள்ளது." என இருப்பதைக் கண்டேன். சங்க காலத்தில் ஈழத்தில் தேயிலை இருக்கவில்லை. தேயிலையை கண்டுப் பிடித்தவர்கள் சீனர்கள். அது 1824ம் ஆண்டளவில் தான் இலங்கையில் தேயிலை ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்க்க: தேயிலை பயிர்ச்செய்கைக்கும் தென்னிந்தியர்களே கொண்டுவரப்பட்டு இன்றளவிலும் பணியாளர்களாக உள்ளனர். எனவே "ஈழத்து உணவு என்பது தேயிலையாக இருக்குமோ என எண்ணுதல்" சரியானதல்ல. மேலும் இலங்கை வடக்கிழக்கு பிரதேசங்களில் தேயிலை இல்லை. --HK Arun (பேச்சு) 14:38, 11 சனவரி 2013 (UTC)Reply

அன்புள்ள அருண், தேயிலை எனக் குறிப்பிடுவது பிழை என்பது தெளிவாகிவிட்டது. ஈழத்து உணவு யாதாக இருக்கலாம் என் எண்ணிப் பேசுங்கள். திருத்திக்கொள்ளலாம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:11, 11 சனவரி 2013 (UTC)Reply

தேயிலை என்பது பிழை என்பதை எடுத்துக்காட்டவே கருத்திட்டிருந்தேன். //ஈழத்து உணவு யாதாக இருக்கலாம் என் எண்ணிப் பேசுங்கள்.// யாதாக இருக்கும் என்று என்னால் கூறமுடியவில்லை. சங்க கால இலக்கியங்களுக்கு சங்க கால இலக்கியங்களே சான்று என எங்கோ வாசித்த நினைவு. இருப்பினும் ஒரு யூகமாக வேண்டுமானால் எனது எண்ணத்தை முன்வைக்கலாம் (சான்றாக அல்ல) இலங்கையில் கறுத்த கொலம்பான், வெள்ளை கொலம்பான் எனும் மாம்பழங்கள் மிக பிரசித்திப்பெற்றது. இது தமிழர் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்திலேயே அதிகம் விளைகிறது. (இதனை யாழ்ப்பாண மாம்பழம் என்றும் கூறுவர்.) இன்னும் பனங்கிழங்கு, ஒடியல், பினாட்டு போன்ற ஈழத்தின் தனித்துவமான உணவு வகைகள் பழங்காலம் தொட்டே பிரசித்திப்பெற்றவை அவையாகவும் இருக்கலாம். --HK Arun (பேச்சு) 06:59, 12 சனவரி 2013 (UTC)Reply
இங்கே கொலம்பான் எனும் சொல் தொடர்பில் தேடியப் போது கொழும்பு என்பதற்கான ஒரு சிறப்பான விளக்கமும் கிடைத்தது. பாருங்கள் நன்றி! --HK Arun (பேச்சு) 07:01, 12 சனவரி 2013 (UTC)Reply
  • அன்புள்ள அருண்! இப்பொது கட்டுரையைப் பாருங்கள். சங்ககாலச் சான்றுடன் தெளிவான ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அன்புள்ள --117.193.205.101 18:17, 12 சனவரி 2013 (UTC)Reply

தேனியாரும் தென்காசியாரும்

தொகு

ஐயா நீங்கள் என்னை பல தடவை தேனியார் என்ற பெயரில் அழைத்து உள்ளீர்கள். பெயரில் உள்ள எதுகை மோனை குழப்பம் என நினைக்கிறேன். பொதுவாக தேனியார் உங்கள் தொடர்பான உரையாடல்களில் கலந்து கொள்ளாதலால் இது வரைக்கும் குழப்பம் வந்ததில்லை. இனி மேல் இரண்டு பேரும் உங்கள் உரையாடல்களில் கல்ந்து கொள்ள வாய்ப்பு அதிகம் என்பதால் குழப்பம் நேராமல் இருக்க தேனியார், தென்காசியார் என்று கவனித்து அழைக்கவும் நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:06, 7 சனவரி 2013 (UTC)Reply

குறிஞ்சியின் தொழில்கள்

தொகு

ஐயா குறிஞ்சி நிலக்கட்டுரையில் குறிஞ்சி மக்களின் தொழில் கிழங்கெடுத்தலும், தேனெடுத்தலும் உள்ளது. வேட்டையாடுதலும் இவர்களின் தொழில் அல்லவா!?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:46, 7 சனவரி 2013 (UTC)Reply

தமிழ்ப் பெயர்கள்

தொகு

ஆண்பாற் பெயர்கள் அன் என்றும் பெண்பாற் பெயர்கள் இ அல்லது ஐ என்றும் பெயர் விகுதியில் முடிய அறிந்திருக்கிறேன். இது தமிழ் விதிப்படி தானா? அல்லது பெரும்பான்மையினர் அப்படி வைத்துக் கொண்டதால் நான் தமிழ்ப் பெயர் இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேனா? விளக்குங்கள் ஐயா!. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:25, 8 திசம்பர் 2012 (UTC)Reply

  • அன்புள்ள தமிழ்க்குரிசில்!

னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல். தொல்காப்பியம் கிளவியாக்கம் 5
ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல். தொல்காப்பியம் கிளவியாக்கம் 6
என்னும் நூற்பாக்கள் செய்தான் எனின் ஆண்பால், செய்தாள் எனின் பெண்பால் என்று குறிப்பிடுகின்றன. செய்தான் ஒருவன், செய்தாள் அவள், செய்தாள் ஒருத்தி என்றுதானே இருக்கவேண்டும். எனவே தங்கள் எண்ணம் முற்றிலும் சரி. இடுகுறிப் பெயர்களில் இந்த நெறியைக் காணமுடியாது. பாரி, காரி, நள்ளி, ஆய் என்னும் பெயர்களைக் காண்க. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 10:43, 8 திசம்பர் 2012 (UTC)Reply

தற்காலத்தில் வழங்கும் பெயர்களில் பல சமற்கிருதச் சொற்களாய் உள்ளனவே! தமிழ்ப் பெயர்கள் கட்டுரையில் மேலும் பல தமிழ்ப் பெயர்களை சேர்க்குமாறு வேண்டுகிறேன். குறிப்பு:ஐரோப்பியர்களின் பெயர்களும் அன் என்று முடிவது வியப்பளிக்கிறது. தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:55, 8 திசம்பர் 2012 (UTC)Reply

அன்புள்ள சிபி,
நீங்களே தெளிவு பெற்றிருக்கிறீர்கள். நீங்களே சேருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:05, 8 திசம்பர் 2012 (UTC)Reply

விக்கிப்பீடியா நிர்வாகிகளுக்கு

தொகு

வணக்கம். சங்ககாலச் சிற்பங்கள் எனது 2030-ஆவது கட்டுரை. ஏதோ காரணங்களால் இது தங்கள் கவனத்துக்கு வரவில்லை போலும். ஈராயிரவர் பதக்கப்பூ?


பாராட்டுக்கு நன்றி.
என்கடன் பணிசெய்து கிடப்பதே
நின்கடன் அடியேனையும் தாங்குதல் (அப்பர் வாக்கு) --Sengai Podhuvan (பேச்சு) 03:00, 24 நவம்பர் 2012 (UTC)Reply

+1 வணக்கம் ஐயா, மன்னிக்கவும், தற்போதுள்ள மின்தடை காரணமாக என்னால் பங்களிப்புகளை சரியாக பின் தொடர முடிவதில்லை, உங்கள் பணி மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழத்துகள். மேலும் உங்கள் சிறப்பு:Preferences-ல் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் தவறு என வருகிறது, சரி பார்க்கவும். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 05:02, 24 நவம்பர் 2012 (UTC)Reply
அன்புள்ள சண்முகம்! திருத்திக்கொண்டேன். தவறு நேர்ந்த காரணத்தைத் தங்கள் தொடர்புப் பகுதியில் விளக்கியுள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:14, 25 நவம்பர் 2012 (UTC)Reply

2001

தொகு

தமிழ் முனைவோர் திருவடிகளுக்கு வணக்கம். உங்களில் ஒருவன் 2001 கட்டுரைச் சுவடுகளை நம் விக்கியில் பதித்துள்ளேன். ஊக்கமும் உதவியும் நல்கும் நல்லுள்ளங்களைப் பின்தொடர்வது எளியேனின் கடப்பாடு. சங்கநூல், தொல்காப்பியம், 18-ம் நூற்றாண்டு வரை உள்ள தமிழ்நூல்கள் முதலானவற்றிலுள்ள செய்திகளையும், புலவர், அரசர், மக்கள், ஊர்கள் பற்றிய வரலாறுகளையும் அவற்றில் பதிவாக்கியுள்ளேன் என்பதைக் கோடிட்டுக்காட்டித் தொடர்கிறேன். வணக்கம்.

அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:11, 19 நவம்பர் 2012 (UTC)Reply

Chera emblem.jpg

தொகு

Chera emblem.jpg படிமத்தை சேரர் கட்டுரையில் சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும். மற்றபடி, அனைத்துச் சேரர்கள் பற்றிய கட்டுரைகளிலும் சேர்ப்பது தேவையில்லை என்று கருதுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 09:50, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

கட்டுரையைத் திறந்தவுடன் இவன் பண்டைய சேர மன்னன் என உணர்த்தும் அல்லவா? எண்ணிப்பாருங்கள். முடிவு தங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 10:24, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

இல்லை, இதே அணுகுமுறையில் பல கட்டுரைகளில் தேவையற்ற படிமங்களை இணைக்க முடியும். எனவே, இதனைத் தவிர்க்க வேண்டுகிறேன். ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள படிமங்கள் பரவாயில்லை--இரவி (பேச்சு) 08:56, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

சேரர் வார்ப்புரு ஒன்றை உருவாக்கி அதை ஒவ்வொரு சேர மன்னரைப் பற்றிய கட்டுரையிலும் அடியில் தரலாம். அதில் சேர முத்திரை பொருத்தமாகவும் இருக்கும். எடுத்துக்காட்டு: en:Template:British_monarchs. -- சுந்தர் \பேச்சு 09:13, 17 அக்டோபர் 2012 (UTC)Reply
சீரிய கருத்துகளை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி. தேவையற்ற தலைப்புகளில் சேரர் முத்திரையை நீக்கிவிடுங்கள். சேரர் காலநிரல் முற்றுப் பெற்ற பின்னர் வார்ப்புரு உருவாக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 11:28, 17 அக்டோபர் 2012 (UTC)Reply
நல்ல பரிந்துரை, சுந்தர். அப்படியே செய்வோம். எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே :(--இரவி (பேச்சு) 09:04, 28 அக்டோபர் 2012 (UTC)Reply

குராப்பள்ளி

தொகு

வணக்கம் ஐயா, இம்மாற்றத்தை சரிபார்க்கவும், அவ்விருவரின் கட்டுரையை படித்து மாற்றினேன்--சண்முகம்ப7 (பேச்சு) 10:16, 12 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அன்புள்ள சண்முகம், 'இறுதிக் காலத்தில் இருந்தார்' என்பதில் 'இறுதிக்காலம்' என்பது வாழ்நாளின் இறுதிக் காலத்தை உணர்த்துகிறது. 'இறந்திருக்கிறார்கள்' என்னும்போது இறுதிக்காலம் என்னும் தொடர் தேவையில்லை. 'துஞ்சுதல்' என்பது பிறரால் கொல்லப்படாமல் வருஞ்சாவு வந்து இறத்தல். 'இருந்திருக்கிறார்கள்' என்று எழுதும்போதுதான் மருத்துவம் செய்துகொண்டார்கள் என்னும் கருத்து சரியாகும். நன்கு எண்ணி எழுதிய தொடர். எனவே பழைய நிலைக்கே மாற்றிவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 10:42, 12 செப்டெம்பர் 2012 (UTC)Reply
 Y ஆயிற்று வரியின் முதலில் ஒரு இருந்தபோது இருந்ததனால் சற்று குழம்பி விட்டேன், மன்னிக்கவும்--சண்முகம்ப7 (பேச்சு) 11:11, 12 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தொடர்பால் துலங்குவோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:29, 12 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

தொகு

பேச்சு:சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நீங்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களுக்கு நன்றி. நான் வரைபடம் செய்வதில் அவ்வளவு வல்லவன் இல்லை. எனினும் தகவல்களை துல்லியமாகத் தெரிவித்தால் முயன்று பார்க்கலாம். --Natkeeran (பேச்சு) 14:25, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அன்புள்ள நற்கீரன்! வாழ்க! தஞ்சை, திருச்சி, கரூர், சேலம் ஒகேனக்கல் வரை, காவிரிப் படுகை நிலப்பரப்பை மட்டும் உத்தேசமாக வட்டமிட்டுக் காட்டவேண்டும். இணைத்தால் நலம். --Sengai Podhuvan (பேச்சு) 22:23, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply
முன்பே செய்யப்பட்ட அறிஞர்களின் காலக்கணிப்புகள் சில உள்ளதை அறிவீர்கள். அவற்றில் சில மாற்றங்கள் செய்யவேண்டிய நிலை உள்ளது. அதனை ஒட்டுமொத்தத் தெளிவுக்குப் பின்னர் செய்யலாம்.அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:23, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பொன்னியின் செல்வன் கட்டுரைகளுக்கு உதவி வேண்டும்

தொகு

வணக்கம் ஐயா, பொன்னியில் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து எழுத தொடங்கியதும், அதில் வருகின்ற வரலாற்று நபர்கள் மற்றும் புனைப்பாத்தரங்களிடேயே சிறு குழப்பம் நிலவிவருகிறது. சிறந்த வரலாற்று ஞானம் உள்ளவர்களால் மட்டுமே கல்கியின் புனைவு கதாப்பாத்தரங்கள் எதுவெனவும், உண்மையான வரலாற்று நபர்களை தழுவி செதுக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் எவை எனவும் அறிய முடியும் என்று நம்புகிறேன். தங்களின் வரலாற்று ஞானத்தினை பொன்னியின் செல்வன் கட்டுரைகளுக்கும் தந்து மேம்படுத்தி தர வேண்டுகிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:39, 1 அக்டோபர் 2012 (UTC)Reply

அன்புள்ள ஜகன், தங்களின் பொன்னியின் செல்வன் கதைமாந்தர் பெயர்களையும் கட்டுரைச் செய்திகளையும் பார்த்தேன். கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்களைக் கொண்டு புனையப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள் அவை. தங்கள் கட்டுரைகளில் கல்வெட்டுகளின் எண்ணைக் குறிப்பிட முயல்கிறேன். கட்டுரைகள் சிறப்பாக உள்ளன. நல்ல தமிழ். தொடருங்கள். முழுமைப்படுத்திய பின் நினைவூட்டுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:25, 1 அக்டோபர் 2012 (UTC)Reply
நன்றி ஐயா,. செம்பியன் மாதேவி எனும் பக்கத்தில் வரலாற்று குறிப்புகளுடன் கூடிய கட்டுரையையும், செம்பியன் மாதேவி(பொன்னியின் செல்வன்) பக்கத்தில் பொன்னியின் செல்வனில் கல்கி எழுதிய கதாப்பாத்திரத்தினையும் ஆவனப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளேன். வரலாற்றில் நடந்தவைகளையும், கற்பனையான புதினத்தில் உள்ளவைகளையும் ஒன்றாக இணைத்தல் பெரும் குழப்பம் தருவிக்கும் என்பதால் தனித்தனியாக பிரித்து எழுதுவதற்கு முயல்கிறேன்.

புதினத்தில் வருகின்ற படகோட்டி குடும்பம் முழு கற்பனை என்று நினைக்கிறேன். குந்தவை, அருள்மொழிதேவன், வந்தியத்தேவன் போன்றோர்களுக்கு தனிப்பக்கங்களை பொன்னியின் செல்வன் அடைப்புக்குறிக்குள் இட்டு தொடங்க உள்ளேன். "என்னுடைய சில வரலாற்று ஐயங்கள்" => # படகோட்டி குடும்பமான ராக்கம்மாள், முருகய்யன், தியாகவிடங்கள், பூங்குழலி போன்றவர்கள் புனைவு பாத்திரங்கள் தானா?. எல்லோரும் கல்கியின் முழுமையான கற்பனைதானா?.

  1. சின்ன ஊமைச்சி, சேந்தன் அமுதன் முதலியவர்கள் கற்பனைதானே?.
  2. வீரபாண்டியனின் மனைவியாக வருகின்ற மந்தாகிதேவி உண்மையாக வாழ்ந்தவரா. அவர்களின் பிள்ளைகளான ஆழ்வார்க்கடியான் நம்பியும், நந்தினியும் கற்பனையா உண்மையா?.
  3. சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையர் போன்றோர்கள் வரலாற்று நாயகர்களா.

இந்த ஐயங்களை அந்தந்த எண்ணுடன் தீர்த்து வைத்தால் மேற்கொண்டு சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும். யார் யார் உண்மை, யார் யார் கற்பனை என்று அறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:21, 1 அக்டோபர் 2012 (UTC)Reply

இக்கவிதை என்ன இலக்கண வகை?

தொகு

அய்யா! உங்களைச் சந்திப்பதிலே மகிழ்ச்சி. தமிழிசை என்ற இக்கவிதையின் இலக்கிய வடிவம் குறித்து அறிய ஆவல்.என்ன வகையான பா?விளக்குக.-- உழவன் +உரை.. 19:33, 12 அக்டோபர் 2012 (UTC)Reply

அன்புள்ள உழவ! வணக்கம். காட்டியுள்ள நாமக்கல்லாரின் பாடல்கள் தமிழிசையில் தமிழருக்குப் பொருள் புரியும்படிப் பாடல்களைப் பாடவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றன. கர்நாடக இசையைத் தவிர்க்கும்படி வலியுறுத்துகிறது. தாண்டகம் கட்டுரையைப் பாருங்கள். யாப்பருங்கலக் காரிகை இலக்கணப்படி இது 'எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்'. தேவாரம் இத்தகைய பாடல்களை 'திருத்தாண்டகம்' எனக் குறிப்பிடுகிறது. திருமங்கை ஆழ்வார் பாடிய இத்தகைய பாடல்களைத் திவ்வியப் பிரபந்தம் 'திருநெடுந் தாண்டகம்' எனக் குறிப்பிடுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 20:31, 12 அக்டோபர் 2012 (UTC)Reply
தங்களடி பின்பற்றியதால், தமிழடிகளை அறிந்தேன்.மிக்க நன்றி.வணக்கம்.-- உழவன் +உரை.. 21:52, 12 அக்டோபர் 2012 (UTC)Reply
  விருப்பம் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:23, 8 திசம்பர் 2012 (UTC)Reply

ஐயா, வணக்கம். கர்நாடக சங்கீதம் வழக்கிலுள்ளது. ஆனால் நீங்கள் கூறுவது வழக்கில் உள்ளதா? இருப்பின் அத்தமிழிசை எங்கெங்கு பயிற்றுவிக்கப்படுகிறது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:29, 13 அக்டோபர் 2012 (UTC)Reply

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில். குடந்தை ப சுந்தரேசனார் தமிழிசையைப் பல ஆண்டுகள் பாடிக் காட்டிப் பரப்பிவந்தார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு, சங்ககாலம் என்னும் நூலிலும் தமிழிசை பற்றிய கட்டுரை உள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 10:33, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

தமிழ்நாட்டில் தேர்ப்படை வழக்கிழந்ததன் கால(ரண)ம் என்ன?

தொகு

ஐயா வணக்கம். நானறிந்த வரையில் சங்ககாலத்தில் இடைப்பட்ட காலமொன்றில் தமிழகத்தில் தேர்ப்படை வழக்கிழந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாண்டியரில் தலையாலங்கானத்துச் செழியனும், சோழரில் இளஞ்சேட்சென்னியும் தேர் வைத்துள்ளது சங்கபாடல்கள் தரும் செய்தி. வேறு யார் யார் தேர் வைத்திருந்தனர்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:29, 13 அக்டோபர் 2012 (UTC)Reply

தேர்ப்படை கட்டுரையில் சில இணைத்துள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:33, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

தமிழ்நாட்டில் தேர்ப்படை வழக்கிழந்ததன் கால(ரண)ம் என்ன?

தொகு

ஐயா வணக்கம். நானறிந்த வரையில் சங்ககாலத்தில் இடைப்பட்ட காலமொன்றில் தமிழகத்தில் தேர்ப்படை வழக்கிழந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாண்டியரில் தலையாலங்கானத்துச் செழியனும், சோழரில் இளஞ்சேட்சென்னியும் தேர் வைத்துள்ளது சங்கபாடல்கள் தரும் செய்தி. வேறு யார் யார் தேர் வைத்திருந்தனர்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:29, 13 அக்டோபர் 2012 (UTC)Reply

தேர்ப்படை கட்டுரையில் சில இணைத்துள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:33, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

மோகூர்

தொகு

ஐயா நிங்கள் மோகூர் என்பது காவிரியாற்றின் வடகரையில் அமைந்தது என்ரு எதைவைத்து கூறியிருந்தீர்கள் என்ரு விளக்க முடியுமா? அது பாண்டி நாட்டு எல்லையில் இருந்ததாக படித்ததுண்டு. பாண்டி நாடு காவிரியின் வடகரை வரையா பரவியிருந்தது.

//வெல்கொடி துனைகால் அன்னை, புனைதேர் கோசர், தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின், பகை தலைவந்த மாபெருந்தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.//

மேலுள்ள பாட்டின் படி இது தென் தமிழகத்தில் அமைந்ததாகவே தெரிகிரது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:08, 2 சனவரி 2013 (UTC)Reply

மதுரைக்கு அருகே திருமோகூர் என்று ஒரு ஊர் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 07:05, 4 சனவரி 2013 (UTC) பி.கு. பலவின்பால் கட்டுரையில் சான்றை இணைத்து உதவியமைக்கு நன்றி, ஐயா.Reply

அன்புள்ள சுந்தர்,

பால்பகா அஃறிணைப் பெயர்கள் கட்டுரையையும் பாருங்கள்.
தாங்கள் குறிப்பிடும் மோகூர் வேறு. நான் குறிப்பிடுவது மோகனூர் என்னும் மோகூர்.
அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:20, 4 சனவரி 2013 (UTC)Reply
நன்றி ஐயா. பால்பகா அஃறிணைப் பெயர்கள் கட்டுரையும் மிக நன்று. -- சுந்தர் \பேச்சு 10:55, 6 சனவரி 2013 (UTC)Reply

அய்யா அப்படி எனில் மோகனூர் பற்றிய தகவலும் பாண்டிநாட்டு சீறூர்மன்னன் மோகூர் பழையன் பற்றிய செய்தியும் மோகூர் கட்டுரையில் உள்ளதே. இதைப்படிப்பவர் இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்வாரே?

மேலும் மோரியர் - மோகூர் யுத்தம் நடந்த மோகூர் பற்றி ஏதும் ஆய்வுகள் செய்யப்பட்டுளனவா? அது எங்கே உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:19, 4 சனவரி 2013 (UTC)Reply

  • அன்புள்ள தென்காசியாருக்கு, வணக்கம். செப்பம் செய்யத் தூண்டிய தங்களின் பேச்சுக்குக் கடமைப்பட்டுள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:24, 8 சனவரி 2013 (UTC)Reply
Return to the user page of "Sengai Podhuvan/தொகுப்பு 4".