பேச்சு:குறுவழுதி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic மூன்றாம் நிலை மூலம்

இக்கட்டுரையை ஒரு ஆசிரியரே எழுதியிருப்பதால் இங்கிருக்கும் தகவல்களை வெட்டி குறுவழுதி கட்டுரையில் இடுவது சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:07, 23 மே 2013 (UTC)Reply

  • குறுவழுதி கட்டுரை புலவர் குறுவழுதியை அரசன் எனக் கற்பனை செய்யும் கட்டுரை. இருந்துவிட்டுப் போகட்டும். புலவரைப் புலவர் எனவே காட்டும் இந்தக் கட்டுரை வேறு. கற்பனைக்குக் கால் இல்லை.
  • எண்ணிப் பாருங்கள்.
  • கற்பனைச் செய்திகளை வரலாறு எனக் காட்டி விளையாடவேண்டாம்
  • அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 13:23, 23 மே 2013 (UTC)Reply

அது கற்பனைச் செய்தியா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதை எழுதியவர் நிரோஜன் சக்திவேல். அவரின் பேச்சுப்பக்கத்தின் முந்தைய உரையாடல்களில் இருந்து நான் தெரிந்து கொண்டது யாதெனில் அவர் அனைத்து பாண்டிய மன்னர்களை பற்றியும் ஒரே நூலில் இருந்து எடுத்தாண்டுள்ளார் என்பதே. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பாண்டியர் வரலாறு என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை.

நீங்கள் புலவரை புலவர் எனக் காட்டும் இக்கட்டுரை வேறு என்கிறீர்கள் ஆனால் இரண்டிலுமே உள்ள நபர்கள் அகம் 150ஐ பாடியதாக காட்டப்பட்டுள்ளதே? அதனால் இவற்றை இணைத்து தான் ஆக வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:16, 23 மே 2013 (UTC)Reply

விக்கி ஆதாரம் அற்றதா?

தொகு
  • நீங்கள் அரசர் என்கிறீர்கள். அது உங்கள் கற்பனை. சான்று இல்லை என்கிறேன். புரிகிறதோ புரியவில்லையோ தெரியவில்லை. அரசன் என்னும் கற்பனைச் சொல்லையும், அரசன் எனக் காட்டப்பட்டுள்ள கற்பனைக் கட்டத்தையும் நீக்கிவிட்டால் நானே உங்கள் கட்டுரையில் புலவர் எனக் காட்டி இணைத்துவிடுகிறேன். கற்பனைக் கட்டுரையில் வரலாற்றுக் கட்டுரையை இணைக்கச் சொல்லுகிறீர்கள். அடுக்குமா இது?. விக்கி ஆதாரமற்றதா? --Sengai Podhuvan (பேச்சு) 17:54, 23 மே 2013 (UTC)Reply

இது நான் எழுதிய கட்டுரையே இல்லை என்றேன். நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்றே தெரியவில்லை. அப்படியே நான் எழுதியிருந்தாலும் இது நம்முடைய கட்டுரை என்றுதான் கூற வேண்டும். இதில் தவறு எங்கு இருந்தாலும் அனைவராலும் திருத்தப்பட வேண்டுமே தவிர எழுதியவர் மீது பழி போடுவது தேவையற்ற செயல்.

நான் ஏற்கனவே கூறியது போல் விக்கிப்பீடியா என்பது மூன்றாம் நிலை தரவுதளம். இதில் ஒரு ஆய்வாளர் கூறியது உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து கூற விக்கிப்பீடியா சர்வதேச தொல்லியல் துறை அல்ல. இது ஒரு விடயம் பற்றிய பல வல்லுநர்களின் கருத்துக்களை/தகவல்களை தரும் ஒரு கலைக்களஞ்சியம். அதனால் இது உண்மையா பொய்யா கற்பனையா என்பதை பேசுவதை விட இந்த இந்த ஆய்வாளர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்பதே சிறந்தது. சிலர் புலவர் எனவும் சிலர் அரசர்/புலவர் என்றும் கூறுகின்றனர் என்று கூறுவதே சிறந்தது.

//விக்கி ஆதாரம் அற்றதா?//

இந்த அரசரை பற்றி இந்த ஆய்வாளர் இப்படி எழுதினார் எனக் கூறினால் விக்கி ஆதாரமுள்ளது தான். அதை விட்டு விட்டு வரலாற்று ஆசிரியர்கள் கூறியது கற்பனை என்று கூறுவது தான் ஆதாரமற்றது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:16, 24 மே 2013 (UTC)Reply

பேசுங்கள்
தொகு
இரு கட்டுரைகளும் ஒருவரைப் பற்றியனவே என்பது தெளிவு. அண்டர்மகன் குறுவழுதியார் புலவர் என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது. ஏனெனில் இத்தலைப்பிலான கட்டுரை குறிப்பிட்ட பாடல் ஒன்றை எழுதியவரைப் பற்றியதே. ஆனால், குறுவழுதி கட்டுரையில் அவரை அரசராகவும் குறித்திருப்பது ஆய்வின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால் "குறுவழுதி" கட்டுரையில் இதற்கான சான்றுகள் தரப்படவில்லை. இவ்வாறு ஆய்வின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் பல விடயங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவது வழக்கம்தான். விக்கிப்பீடியாவில் இப்படியான விடயங்களைக் கையாள்வதில் தெளிவான கொள்கைகளும், நடைமுறைகளும் உள்ளன. இவ்விரு கட்டுரைகளும் குறித்த பிரச்சினையைப் பின்வருமாறு கையாளலாம் என்பது எனது கருத்து.
இரண்டு கட்டுரைகளும் ஒருவரைப்பற்றியது என்பதால் ஒரே கட்டுரையாக இருப்பதே சரியானது. எனினும், குறுவழுதி என்பவன் பாண்டிய அரசர்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டு குறித்த கட்டுரைக்கு இணைப்பும் கொடுக்கப்பட்டிருப்பதால் இப்போதைக்கு அக்கட்டுரையை அப்படியே விடலாம். ஆனால், கட்டுரையில் இந்தக் கட்டுரை புலவரை வழுதி என்னும் பெயரைக்கொண்டு அரசன் எனக் காட்டுவது கற்பனை என்ற குறிப்பை நீக்கிவிட்டு, "சான்று தேவை" வார்ப்புருவை இடுவது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு அமைவாக இருக்கும். அல்லது குறுவழுதி ஒரு அரசன் அல்ல என்று யாராவது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தி இருந்தால், "குறுவழுதி என்னும் பெயரைக்கொண்டு அரசன் எனக் காட்டுவது கற்பனை என [ஆய்வாளர் பெயர்] கருதுகிறார்" என சான்றுடன் அடிக்குறிப்புத் தரலாம்.
குறுவழுதி அரசன் என்பதற்குச் சான்றாக ஆய்வுச் சான்றுகள் எதுவும் கிடைக்கும்வரை கட்டுரைகளை இணைப்பது சரியல்ல. அண்டர்மகன் குறுவழுதியார் கட்டுரையில் இவரைச் சிலர் பாண்டிய அரசர்களில் ஒருவனாகவும் கருதுகிறார்கள் என்றும் சான்றுகள் இல்லாமல் குறிப்பிட முடியாது. குறுவழுதி கட்டுரை அவன் அரசன் என்பதையே முதன்மைப்படுத்தி எழுதியிருப்பதால் சான்றுகள் இல்லாமல் அதனை முதன்மைக் கட்டுரையாகவும் ஏற்றுக்கொள்வது சரியாகாது.
சான்று கிடைக்கிறதா என்று பார்க்கலாம். சான்று கிடைத்தால் இணைப்பது குறித்துச் சிந்திக்கலாம். சான்று கிடைக்காவிட்டால், அல்லது சான்று பின்னர் பிழையானது என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் "குறுவழுதி" கட்டுரையை நீக்கவேண்டியும் இருக்கலாம்.

---மயூரநாதன் (பேச்சு) 07:32, 24 மே 2013 (UTC)Reply


'அண்டர்மகன் குறுவழுதியார்' என்பவரை ஆறுமுக நயினார் பிள்ளை தான் எழுதிய 'நன்குடி வேளிர் வரலாறு' என்ற நூலில் இருங்கோவேள் என்ற பாண்டிய மன்னனின் பரம்பரையில் 79 ஆவதாக பட்டத்திற்கு வந்தவர் எனக் குறிப்பிடுகிறார். அதாவது சங்க காலத்திற்கு முன் கி. மு. 140 லிருந்து 120 வரை இவன் அரசாண்டதாக அவர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். மேலும் இம்மன்னன் கலிமான் வழுதி எனவும் அழைக்கபப்ட்டுள்ளான்.

கீழ்கண்ட இணைப்புகளில் இது பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:12, 24 மே 2013 (UTC)Reply

வணக்கம் பார்வதி அம்மையாரே. நற்குடி வேளாளர் வரலாறு (நூல்) பார்க்கவும். இந்நூலுக்கு பல பரிமாணங்கள் உண்டு. ஒன்று நீங்கள் கூறும் இருங்கோவேள் வழியில் வந்த 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இருங்கோவேள் பாடியது. இன்னொன்று ஆறுமுக நயினார் உடைந்து போன அந்த இருங்கோவேள் பாடல்களை ஓரளவு கண்டறிந்து அரச்ர்களில் கிடைத்த தலைமுறையை மட்டும் தொகுத்தது. இன்னொன்று ஆறுமுக நயினார் பாதியாக எழுதியதை இரா. மதிவாணன் தன்னுடைய ஆய்வுகள் மூலமும் கருத்துக்கள் மூலமும் முழுமைப்படுத்தியது. இதில் சில குறைகள் இருக்கலாம். அதனால் நூல் முழுமையாக கிடைக்கும் வரை அதை மேற்கோளாக கொடுப்பது குழப்பங்களைத் தரலாம். நான் இன்னும் 2 வாரங்களில் மதிவாணன் ஐயாவை பார்க்க முயற்சி செய்வேன் அப்போது இதைப்பற்றி கேட்டு வருகிறேன். மதிவாணர் ஐயா நிரப்பிய பட்டியலில் ஒரு முக்கிய குழப்பம் உண்டு. அதை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன். பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:32, 24 மே 2013 (UTC)Reply

இப்போதைக்கு ”குறுவழுதி” கட்டுரையில் அரசன் என்பதற்கு “ஆதாரம் தேவை” என்று இட்டிருக்கிறேன். சான்றுகளை ஆராய்ந்த பின்னர் யார் அரசன் என்று கூறுகிறார், அதற்கு மாற்று கருத்து உள்ளதா என்று சேர்த்து விட்டு, இரு கட்டுரைகளை ஒன்றிணைக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:19, 24 மே 2013 (UTC)Reply

இதே சிக்கல் இன்னொரு கட்டுரையில்

தொகு

இதே சிக்கல் இன்னொரு கட்டுரையிலும் உள்ளது. இங்கு பெறும் முடிவையே அங்கும் செயற்படுத்துங்கள்.

பேச்சு:நல்வழுதியார்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:40, 24 மே 2013 (UTC)Reply

செங்கைப்பொதுவனின் இணைப்பு

தொகு

செங்கைப்பொதுவன் ஐயா அண்டர்மகன் குறுவழுதியார் என்ற தனது கட்டுரையின் தகவல்களை குறுவழுதி என்ற இக்கட்டுரையுடன் இணைத்து வழிமாற்றியுள்ளார். இந்த முடிவு சரியானதே என நான் நினைக்கிறேன். கட்டுரையும் நல்ல வகையில் திருத்தப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இம்முடிவு தவறென்றால் அக்கட்டுரையை மீள்விக்கவென வரலாற்றை நான் இணைக்கவில்லை. தேவையானால் பினர் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 23:54, 24 மே 2013 (UTC)Reply

சதாசிவ பண்டாரத்தார் நூலில் சான்றில்லை

தொகு

நான் ஐயப்பட்டது போல் சதாசிவ பண்டாரத்தார் நூலில் நல்வழுதி, குறுவழுதி ஆகிய இருவரும் பாடிய பாடல்கள் தரப்பட்டுள்ளதே அன்றி அவர்களின் ஆட்சி ஆண்டுகள் தரப்படவில்லை. அதனால் ஆட்சியாண்டுகள் கேள்விக்குறி ஆகிறது. மேலும் தற்போதைக்கு இங்கு சேர்கப்பட்டுள்ள ஆட்சியாண்டுககுக்கான மேற்கோள் பக்கம் என் அலுவலகத்தில் திறக்கவில்லை. அதிலுள்ள உள்ளடக்கங்களை எனக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்.

மேலும் நிரோஜன் ஏதோ நூலில் இருந்தே இத்தகவல்களை எழுதியதாக தெரிகிறது. அதனால் அந்த நூலைக் கண்டறிவது முக்கியம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:03, 27 மே 2013 (UTC)Reply

மூன்றாம் நிலை மூலம்

தொகு

விக்கிப்பீடியா என்பது மூன்றாம் நிலை மூலம் இங்கு சொந்த ஒப்பீடுகளை செய்ய இயலாது. ஒருவர் தமிழில் சிறந்த புலமை பெற்றவராயினும் அவர் ஏதும் புதிய வாதங்களை முன் வைக்கிறார் ஆயினும் அது உண்மையே ஆயினும் அதை வேறு ஊடகங்களில் பதியாமல் இங்கு பதிவது தகாது. அந்த விதத்தில் அரசனா? என்னும் உட்தலைப்பின் கீழ் உள்ள உள்ளடக்கங்கள் நீக்கத்தக்கவை. அவை வேறு ஏதாவது நூலில் ஏற்கனவே கூறப்பட்டிட்ருப்பின் அதற்கான மேற்கோள் இல்லாமல் இங்கு சேர்ப்பதுன் தகாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:14, 27 மே 2013 (UTC)Reply

அது பாடலின் உரை. அங்கு எந்த வரலாற்று முடிவும் அரசனா? என்ற தலைப்பின் கீழ் நீங்கள் செய்த முடிவுகள் போல் சுட்டபடவில்லை. ஊனூருக்கு வேற்றரசர் பெண்ணை தேடி படை எடுத்து வந்ததால் இவள் பிறக்காமலே இருந்திருக்கலாமே என்பது பாடலின் பொருள். அது நீங்கள் சேர்த்தது போல் வரலாற்றாராய்ச்சி முடிவல்ல. நான் புறத்துக்கு உரை எழுதியவர்களில் 3 பேர் எழுதிய உரையை படித்துள்ளேன். அதிலிருந்து சேர்த்தது தான் இவை. பாடலுக்கு பொருள் கூறுவது வேறு. அதை வைத்து வரலாற்று முடிவு எடுப்பது வேறு. அதனால் தான் நீங்கள் பாடலக்ளௌக்கு பொருள் சேர்த்ததை நான் நீக்கவில்லை.(எங்கும் நீக்க/மாற்றவில்லை)

நீங்கள் சங்க இலக்கிய ஆய்வாளர் என்பதால் இதைப் போல் முடிவுகளை ஏதேனும் இதழ்களில் வெளியிடுங்கள் அதன்பிறகு இங்கு சேர்த்துவிடலாம். இதனால் ஒரு தமிழ் இதழ், தமிழ் விக்கி, இலக்கியங்களை கொண்டு வரலாறு எழுதுதல் என்ற அனைத்து துறைகளுக்கும் நன்மை பயக்கும். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:17, 28 மே 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறுவழுதி&oldid=1429315" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குறுவழுதி" page.